December 21, 2007

WITHOUT COMMENTS



December 14, 2007

நெல்லை தி.மு.க இளைஞரணி மாநாடு : தி.மு.க எம்.பி புறக்கணிப்பு!

திருநெல்வேலியில் தி.மு.க இளைஞரணி மாநாடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆடம்பரமாக நடந்து வருகிறது. இம்மாநாட்டில் தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பயபக்தியுடன் பங்கேற்றுள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின் உட்பட அனைத்து தி.மு.கவினரும் திருப்புமுனை மாநாடு என்று வர்ணிக்கும் இம்மாநாட்டில் தற்போது தி.மு.க எம்.பியாக இருக்கும் ஒருவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? ஆனால் அவரது பெயரைச் சொன்னால் வந்த ஆச்சரியம் எல்லாம் பறந்து போய்விடும். யார் அந்த எம்.பி ? நம்ம கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் தான்.


சானியா மிர்சா மன்னிப்பு : இறுதி வெற்றி வகாபியிசத்துக்குத்தான்!

தினத்தந்தி(14-12-2207) செய்தி. பெரிதாக்கி படிக்கவும்.


இனி இப்படிதான் சானியா காட்சி கொடுக்க வேண்டுமோ?


WITHOUT COMMENTS



December 13, 2007

மலேசியா மீது பொருளாதாரத் தடை : இராமகோபாலன் அறிக்கை

மலேசியாவில் இந்துக்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டு வரும் மலேசியாவிடமிருந்து பாமாயில் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்றும், அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

25.11.07 அன்று மலேசியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற 400 இந்து பக்தர்களை கோயில் வளாகத்திற்குள்ளேயே சுற்றி வளைத்து அடித்து 300 போலீசார் காயப்படுத்தி யிருக்கிறார்கள்.மலேசிய இந்துக்களை பயமுறுத்து வதற்காக அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் போட்டு கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.இனிமேல் இந்துக்கள் தங்கள் உரிமைக்கு போராடக்கூடாது என்பதற்காக அடக்கு முறையைக் கையாண்டு மலேசிய அரசு மிரட்டுகிறது. வழக்கம்போல் மலேசிய போலீசார், பக்தர்கள் தங்களை அடித்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டி இருக்கிறார் கள். சாதாரண இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் வாதாடுவதற்கு மலேசிய நாட்டு அட்டர்னி ஜெனரல் தாமே நீதிமன்றத்திற்கு வந்து ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடி இருக்கிறார்.

காமன்வெல்த் நாடுகளில் மலேசியா ஒரு உறுப்பு நடாக இருப்பதால் பிரிட்டன் மலேசிய அரசைக் கண்டித்து இந்திய வம்சாவளியினரான இந்துக்களை கொடுமைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.பிரிட்டனில் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள பொது மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மலேசியாவுக்கு மூக்கணாங்கயிறு போட வேண்டும். ஐ.நா.சபையும் தனக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லி தப்ப முடியாது.இந்துக்களை அடித்து விரட்ட "பூமி புத்ர' பிரச்சாரம் நடந்து வருவது வெட்கக்கேடு பாரதத்தின் மைய அரசு குரல் எழுப்புவதன் மூலம், மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், பாரதம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை நிறுத்த வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் தான் மலேசிய நாட்டு அரசை வழிக்கு கொண்டு வர முடியும்.இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

சம உரிமை, சமநீதி, சமவாய்ப்புக் கிடைப்பது அத்தியாவசியம்.இந்துக்கள் தன்மானத்துடனும், பாதுகாப்புடனும் வாழவும், மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.இந்த பிரச்சனையில் மலேசிய நாட்டுப் பிரதமரிடம் பேசி நமது பாரதப் பிரதமர் இந்துக்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்திக் கொள்ளும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

மலேசியாவில் அடக்குமுறை : 5 தமிழர் தலைவர்கள் கைது

மலேசியாவில் இந்துக்களின் வாழ்வுரிமையைக் காக்க போராடிய Hindu Raghts Action Force (HINDRAF)அமைப்பின் தலைவர்களான கங்காதரன், வசந்தகுமார், உதயகுமார், மனோகரன், கணபதிராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் 5 பேரும் எங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலைக்கூட அரசு வெளியிடவில்லை. HINDRAF அமைப்பின் போரட்டத்தை முடக்குவதற்காக இதுபோன்ற அடக்குமுறைகளில் மலேசிய முஸ்லிம் அரசு இறங்கியுள்ளது.


HINDRAF அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தமிழகத்திற்கு வந்து தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம்.கோபாலன் ஆகியோரைச் சந்தித்து மலேசியாவில் இந்துக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.


வேதமூர்த்தியின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக மலேசிய பிரதமர் அப்துல்லா அகம்மது படாவி தனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை தமிழகத்திற்கு இன்பச் சுற்றுலா அனுப்பியுள்ளார். இன்பச் சுற்றுலா வந்த இடத்தில் அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரைச் சந்தித்து தமிழக தலைவர்கள் HINDRAF அமைப்பின் போரட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். ராஜேந்திரன் என்பவர் தலைமையில் வந்துள்ள 34 தமிழ் எழுத்தாளர்கள் குழுவும் மலேசிய அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இவர்கள் 34 பேரும் 11-12-2207 தமிழக முதல்வரை சந்தித்தனர்.

தினமலர் நாளிதழில் வந்த செய்தி(14-12-2007)

தமிழரான மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு மலேசிய பிரதமர் அப்துல்லா அகம்மது படாவியின் கைப்பவையாக் செயல்பட்டு வருகிறார். மலேசியாவில் தமிழர்கள் எல்லாவித உரிமைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக மலேசிய அரசுக்கு ஆதரவான சிலர் விரித்த வலையில் தமிழ் நடிகர் நடிகைகள் சிக்கியிருகிறார்கள். மலேசியாவில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது சூது சொரணை உள்ள யாராவது குத்தாட்டம் போடுவார்களா? இந்த குத்தாட்டத்திற்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சொந்த சகோதரர்களுக்கு எதிராக போராடும் அவலத்தை இங்குத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.

ராம சேது புத்தகம் வெளியீடு

சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி முரசொலியில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து `சேது' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்போது "ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கம்" `ராமசேது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகம் ராமர் பாலம் மட்டுமல்ல சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய பல சந்தேகங்களுக்கு தெளிவான விடையளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் திரு.சூர்யநாரயண ராவ், `ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்'தின் அகிலபாரதத் தலைவர் டாக்டர். எஸ். கல்யாணராமன், செயலாளர் வழக்கறிஞர் டி.குப்புராமு, விஜயபாரதம் ஆசிரியர் நா.சடகோபன் ஆகியோர் உதவியுடன் அப்புத்தகத்தை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆசிய வளர்ச்சி வங்கியில் முக்கிய பொறுப்பு வகித்த சரஸ்வதி நதி ஆராய்ச்சியாளர் டாக்டர். எஸ். கல்யாணராமன் வலைப்பதிவில் எனது எழுத்துக்களை படித்துவிட்டு புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அவருக்கு என் நன்றி. இப்புத்தகம் 11-12-2007 அன்று சென்னை தி.நகர் பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் வெளியிடப்பட்டது.டாக்டர். எஸ். கல்யாணராமன் அவர்களும் வழக்கறிஞர் டி.குப்புராம் அவர்களும் புத்தகத்தை வெளியிட பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
விலை ரூ. 5/- பக்கங்கள் : 60
கிடக்கும் இடம் : 1, எம்.வி.நாயுடுத் தெரு, சேத்துப்பட்டு, சென்னை - 600031.