November 19, 2007

முஸ்லிம் நாட்டின் தூதரகம் நடத்திய ராமாயண நாடகம்!

ராமர் என்று ஒருவரே இல்லை என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஆனால் சென்னை காமராஜர் அரங்கில் 18-11-2007 அன்று இந்தோனேசிய நடன குழுவினர் ராமாயணத்தை நாடகமாக நடித்துக் காட்டினார்கள். ராமர் அவதாரமெடுத்து வாழ்ந்து வழிகாட்டிய இம்மண்ணை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ராமரை வஞ்சித்துக் கொண்டிருக்க இஸ்லாமிய நாடான இந்தோனேசிய தூதரகம் ராமாயண நாடகத்தை நடத்தி உள்ளது கவனித்தக்கது.

ராமர் தான் என் உயிரை காப்பாற்றினார் என்று கருணாநிதியிடம் கூறுகிறார் கிருஷ்ணசாமி



கருணாநிதி ராமர் இல்லை என்று சொன்ன பிறகு அவருக்கு பல இடங்களில் ராமர் காட்சி தந்து வருகிறார். மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை கருணாநிதி பார்க்கச் சென்றார். அப்போது கிருஷ்ணசாமி நான் அணிந்திருந்த ராமர் உருவம் பொறித்த டாலர் தான் எண் மீது வேல் பாயாமல் தடுத்தது. ராமர்தான் என் உயிரை காப்பாற்றினார் என்று பக்தி பெருக்கோடு கூறினார்.


இப்போது இந்தோனேசிய தூதரகம் மூலம் சென்னை காமராஜர் அரங்கில் ராமர் காட்சி தந்திருக்கிறார். கருணாநிதியை தமிழக எல்லைக்கு வெளியே யாருக்கும் தெரியாது. ஆனால் ராமர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பிறகும் உலக மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த உண்மையை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும்.

No comments: