December 08, 2007

மலேசிய இந்துக்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மலேசிய இந்துக்களுக்கு ஆதரவாக வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தலைமையில் சென்னை மாநகர வியபாரிகள் 8-12-2007-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். "இந்தியர்களை மூன்றாம்தர குடிமக்களாக நடத்தும் மலேசிய அரசை கண்டிக்கிறோம். மலேசிய இந்தியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக முதல்வரைக் கண்டித்த மலேசிய அமைச்சரின் செயலைக் கண்டிக்கிறோம் .
மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் குறிப்பிட்டார்.

நன்றி : தினந்தந்தி(9-12-2007)


இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மோகன், சந்திரன் ஜெயபால், பாலகிருஷ்ணன், தசரதன், சொரூபன், பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த பிரச்னைக்காக இரு துருவங்களாக இருக்கும் பா.ஜ.கவும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டம் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

No comments: