August 22, 2007

சென்னைவாழ் குமரி மாவட்ட ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் : புகைப்படத் தொகுப்பு - 2

சில வரவேற்பு காட்சிகள்....


பாரதமாதாவுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யும் சிறுமி


வந்தோரை வரவேற்கிறார் ஆஞ்சநேயர்தன் மழலை சொல் கேட்டுக் கொண்டே ஏதோ எழுதுகிறார் நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர்விழா மேடையில் சுவாமி சைதன்யானந்தா, கேசவ விநாயகன், முருகப்பன், தர்ம ரக்ஷண சமிதியின் சென்னை மாவட்ட செயலாளர் ராமன்
பங்கேற்பாளர்கள் சில காட்சிகள்....இறைவணக்கம் பாடும் குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஃப் பள்ளி ஆசிரியை

கேசவ விநாயகன் பேசுகிறார். சில காட்சிகள்சென்னைவாழ் குமரி மாவட்ட ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் : புகைப்படத் தொகுப்பு 1

கடந்த ஆகஸ்டு 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஃப் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம் எங்கும் உற்சாகம் நிரம்பி வழிந்தது. சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் நடைபெற்றதையொட்டி பள்ளி வளாகம் கலகலப்பாக காணப்பட்டது. 600க்கும் அதிகமானோர் இந்த சங்கமத்தில் சங்கமித்தனர். தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பு இந்த சங்கமத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி சைத்தன்யானந்த மகராஜ் அவர்களும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முருகப்பன் அவர்களும் குத்து விளக்கேற்றி இந்த சங்கமத்தை துவக்கி வைத்தனர். சேவாபாரதியின் வட தமிழக பொதுச்செயலாளர் ராம.ராஜசேகர் ஒட்டுமொத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சேவாபாரதியின் மாநிலப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் கிருஷ்ண ஜெகந்நாதன், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பலர் இந்த குடும்ப சங்கமத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். சென்னையில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததால் ஒருவருக்கொருவர் உரையாடி மகிழ்ந்தனர். கலந்து கொம்ட அனைவருக்கும் மதியம் குமரி மாவட்ட உணவு பரிமாறப்பட்டது.

விழா அமைப்பாளர்கள் கொடுத்த படிவத்தை ஒரு சிறுவனின் முதுகில் வைத்து பூர்த்தி செய்கிறார் ஒருவர்

சில வரவேற்பு காட்சிகள்...........குத்துவிளக்கேற்றுகிறார் சுவாமி சைத்தன்யானந்தா


குத்துவிளக்கேற்றும் தொழிலதிபர் முருகப்பன்


இறைவணக்கம்


வரவேற்புரையாற்றும் தர்மலிங்கம்


பங்கேற்பாளர்கள்


பூக்களைப் பறிக்கும் பூ(நிகழ்ச்சிக்கு வந்த ஒரு குழந்தை பள்ளி வளாகத்தில் உள்ள மலர்களை பறித்து விளையாடும் காட்சி)சுவாமி சைதன்யானந்தா உரையாற்றுகிறார். சில காட்சிகள்பங்கேற்பாளர் வரிசையில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ வேலாயுதன், ஆர். எஸ். எஸ் பிரமுகர் எஸ்.ராமன்ஜிநிகழ்ச்சியை ஸ்டைலாக அமர்ந்து ரசிக்கும் சிறுமிகள்
பங்கேற்பாளர்கள்குடும்பத்தோடு பங்கேற்றவர்கள்முருகப்பன் பேசுகிறார்ராம.ராஜசேகர் பேசுகிறார்


நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

August 21, 2007

ராசாத்துபுரத்தில் அரசு உயர் அதிகாரிகள் குழு : விடிவு காலம் பிறக்குமா?

வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்காவில் உள்ளது மேல்விஷாரம் நகராட்சி. இந்த நகராட்சியில் உள்ள ராசாத்துபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி இந்த http://puduvaisaravanan.blogspot.com/2007_01_01_archive.html வலைப்பதிவில் நீங்கள் படித்திருக்கலாம். இது பற்றி விஜயபாரதத்தில் விரிவான ரிப்போர்ட் வந்த பிறகு மேல்விஷாரம் நகராட்சியை தன் பிடிக்குள் வைத்துள்ள ஜமாத் ராசாத்துபுரம் ஹிந்துக்களுக்கு இழைத்து வரும் கொடுமைகள் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தன. முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதாக் கட்சித் தலைவருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராசாத்துபுரத்திற்கு சென்றார்.


பா.ம.க தலைவர் ஜி.கே.மணி ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தின் நகல்
ராசாத்துபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சுவாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராசாத்துபுரத்தில் சுமார் 10,000 வன்னியர்கள் வசிக்கிறார்கள். தற்போது ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் இளவழகன் ராசாத்துபுரத்தைச் சேர்ந்தவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். இவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியும் ராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக்கக்கோரி
ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மைகாரர்களும் ஊர் மக்களும் பல ஆண்டுகளாக தனி ஊராட்சியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல வழிகளில் போராடி வருகின்றனர்.

பா.ம.க தலைவர் ஜி.கே.மணிக்கு ராசாத்துபுரத்தைச் சேர்ந்த இளவழகன்(எம்.எல்.ஏ) எழுதிய கடிதத்தின் நகல்


ஜி.கே.மணியும், இளவழகனும் சட்டமன்ற உறுப்பினர்கள். ராசாத்துபுரம் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இவர்கள் இந்த கோரிக்கைய ஒருபோதும் சட்டமன்றத்தில் எழுப்பியதாகத் தெரியவில்லை. மேல்விஷாரத்தில் சுமார் 25,000 முஸ்லிம்கள் உள்ளனர். பல நூறு கோடிகளை குவிக்கும் தோல் தொழிற்சாலை அதிபர்கள் இந்த ஊரில் உள்ளனர். அ.தி.மு.க, தி.மு.க,பா.ம.க.காங்கிரஸ் என எல்லா அரசியல் கட்சிகளையும் முஸ்லிம் தொழிலதிபர்கள் நன்றாக கவனித்து விடுகின்றனர். இதனால் அரசில் கட்சிகள் மேல்விஷாரம் ஜமாத்தை எதிர்த்து வாய்திறப்பதில்லை. ராசாத்துபுரத்தில் 10,000 வன்னியர்கள் இருப்பதால் அவர்களின் வாக்குகளை தக்க வைப்பதற்காக ஜி.கே.மணி ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பியதோடு மவுனமாகி விட்டார்.

ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மைதாரர்களுக்கு பேரூராட்சிகளின் இயக்குநர் பெ.சண்முகம் எழுதிய கடிதத்தின் நகல்


ராசாத்துபுரம் மக்களுக்கு ஆதரவாக விஸ்வ ஹிந்து பரிஷத் களம் இறங்கியது. வி.இ.பரிஷத் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம், மாநில இணை அமைப்பாளர் வீரபாகு, வி.இ.பரிஷத் இளைஞரணி அமைப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் ராசாத்துபுரத்திற்குச் சென்று அங்கு நடந்த பல போராட்டங்களில் பங்கு கொண்டனர். ராசாத்துபுரம் மக்களின் தொடர் போராட்டம் இப்போதுதான் அரசின் காதுகளை எட்டி இருக்கிறது. ராசாத்துபுரத்தை தனி ஊராட்சி ஆக்குவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய நகராட்சிகளின் கூடுதல் ஆணையர் பிச்சை ஆகஸ்டு 10ம் தேதி ராசாத்துபுரத்திற்கு வந்து முதல் கட்ட விசாரணை நடத்தினார்.
கமிஷனர் பிச்சையின் வருகைக்கு பிறகு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் மார்டி தலைமையில் இணை ஆணையர் சண்முகம், நிதித் துறை ஆலோசகர் லிங்குசாமி, வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப், பயிற்சி கலெக்டர் லட்சுமி பிரியா, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுதர்சன் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்டு 16ம் தேதி மேல்விஷாரம் மற்றும் ராசாத்துபுரத்திற்கு வருகை தந்தனர். ராசாத்துபுரம் கிராமத்தை இக்குழுவினர் சுற்றிப் பார்த்தனர். ராசாத்துபுரம் புவனேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசணைக் கூட்டத்தில் மக்களிடம் இக்குழுவினர் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள்

கோபால் நாயக்கர்(ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மை) :

ராசாத்துபுரம் மக்களாகிய நாங்கள் சுகாதார கேட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். உதாரணத்திற்கு அருகில் உள்ள பஜனைக்கோவில், மசூதி ஆகியவை எப்படி உள்ளது என்று பார்த்தாலே ஊர் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும். தோல் தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயம் அறவே இல்லாமல் போய்விட்டது. பீடி சுற்றி பிழைப்பு நடத்தும் ராசாத்துபுரம் மக்களுக்கு பாலாற்று நீர் வழங்காமல் குடிக்க லாயக்கற்ற தண்ணீரை வழங்குகிறார்கள். தீவிரவாத கொள்கை உடையவர்களால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் அதிகாரிகளும் பழிவாங்கப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். இது போன்ற கொடுமைகளை இங்குதான் காணமுடியும்.
ராசாத்துபுரத்தில் நடந்த கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்ற ராசாத்துபுரம் கிராம மக்கள்ராமகிருஷ்ணன்(ராசாத்துபுரம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்):
எங்கள் கோரிக்கை அரசுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எதிரானதல்ல. 10 வருடங்களுக்கு முன்பு சலீம் என்பவர் தலைவராக இருந்தபோது கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தேர்தலே இல்லாமல் ஜமாத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு வந்த தலைவரும் 90 சதவீத பணிகளை எங்கள் பகுதிக்கு செய்திருப்பதாக தவறான தகவல் கொடுத்தார். இது பற்றி கேட்கச் சென்ற எங்கள் மீது போலீசாரை ஏவிவிட்டு தடியடி நடத்தினார்கள். 21 பேர் சிறை சென்றோம். 3 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் வெற்றி கண்டோம். எனவே எங்களுக்கு தனி ஊராட்சி அவசியம்.

குப்புசாமி நாயக்கர்(காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்) :

செல்வம் கொழிக்கும் பகுதியாக இருந்த எங்கள் கிராமம் இன்று தோல் தொழிற்சாலைகளால் மயான பூமியாக காட்சி தருகிறது. மேல்விஷாரம் என்ற குட்டி பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டு நாங்கள் அடிமைகள்போல வாழ்கிறோம். எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் மலைமேல் 300 வீடுகள் கட்டு சகல வதிகளுடன் வாழ்கின்றனர். எங்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. எனவே தனி பஞ்சாயத்து அவசியம்.

சுந்தரசேன்(முன்னாள் பேரூராட்சி தலைவர்)

ரூ. 6 லட்சம் செலவில் ராசாத்துபுரம் பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ததாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்கள். அது பற்றி கேட்டதற்கு ஜெயிலுக்கு போகனுமா... என்று அதிகாரிகளை விட்டு மிரட்டுகின்றனர். ராசாத்துபுரம் பகுதியில் நான்கு அரிஜன காலனி உள்ளது. இறந்தவர்களை எடுத்துச் செல்லக்கூட வழி இல்லை. அவர்களிடத்தில் மனிதாபிமானம் என்பதே இல்லை. எங்களுக்கு தனி ஊராட்சி அவசியம்.

முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள், ஜெயலட்சுமி, பா.ம.க தலைவர் சம்பத், ரவிச்சந்திரன், மகளிர் சுய உதவிக்குழு தலைவி புவனேஸ்வரி, தி.மு.கவைச் சேர்ந்த வரதராஜி, பழனி, ஆறுமுகம், இளவரசன், மணி, கணேசன், வி.பெருமாள், அமுதா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களுக்கு தனி ஊராட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

இவர்களுக்கு பதில் அளித்து பேசிய நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிரஞ்சன் மார்டி உங்கள் கருத்துக்ளை கூறியுள்ளீர்கள். விண்ணப்பங்களை கொடுத்துள்ளீர்கள். எற்கனவே எங்களின் நகராட்சி நிர்வாக கூடுததல் இயக்குநர் பிச்சை மேல்விஷாரம், ராசாத்துபுரம் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளார். இது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிப்போம் என்று பதிலளித்தார்.
ராசாத்துபுரம் கூட்டத்தை முடித்துக் கொண்டு அதிகாரிகள் குழு மேல்விஷாரம் சென்றது. அங்கு மெகர் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அப்துல் மசான், கவுன்சிலர்கள் ஜபருல்லா, அப்துல் ரஹிம், மேல்விஷாரம் நகராட்சி தலைவர் முகம்மது கலிமுல்லா உள்ளிட்ட பலர் பேசினார்கள். ராசாத்துபுரத்திற்காக வழக்குபோட சுப்பிரமணிய சுவாமி யார்? ராசாத்துபுரத்தை தனியாக பிரிக்க கூடாது என்று அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசினார்கள்.

அரசு உயர் அதிகாரிகளின் குழு வந்து விசாரித்து இருப்பதே பெரும் வெற்றிதான் என்கிறார்கள் ராசாத்துபுரம் மக்கள். மேல்விஷாரத்திற்கு அரசியல் தலைவர்களோ, அரசு அதிகாரிகளோ வந்தால் மேல்விஷாரத்தில் உள்ள பிரபல தொழில் அதிபர் ஒருவரின் கே.எச்.எம் கெஸ்ட ஹவுஸில்தான் தங்குவார்களாம். ஆனால் இந்த முறை அதிகாரிகள் அங்கு தங்கவில்லை. அதனால் ராசாத்துபுரம் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஆனால் ஒட்டுக்காக முஸ்ஸிம்களா தாஜா செய்யும் கருணாநிதி ஆட்சியில் இது நடக்குமா என்ற சந்தேகமும் ராசாத்துபுரம் மக்களுக்கு இருக்கிறது. பா.ம.க தலைவர் ராமதாஸ் எது எதற்கோ மத்திய அரசை மிரட்டி வருகிறார். ஆனால் இந்தப் பிரச்சினையில் மவுனம் சாதித்து வருகிறார். 10,000 வன்னியர்களைவிட முஸ்லிம்களின் வாக்குகள் அவருக்கு முக்கியமாகத் தெரிகிறது. வன்னியர்கள் எப்படியும் வாக்களித்து விடுவார்கள். ஆனால் இங்கு முஸ்லிம்களை பகைத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காது என ராமதாஸ் கணக்கு போடுவதாக ராசாத்துபுரத்தில் பா.ம.கவினரே கூறுகின்றனர்.
ராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதிய ஜி.கே.மணியும், இளவழகனும் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதே ராசாத்துபுரம் மக்களின் கோரிக்கை. முதல்வர் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்த ஜி.கே.மணியும், பா.ம.க மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் இளவழகனும் இதை செய்வார்களா?

August 20, 2007

தென்காசி படுகொலை : போலீசாரின் கட்டுக்கதையும் உண்மையும்

தென்காசியில் நடந்த படுகொலைகள் மதமோதல் அல்ல. இரு குடும்பங்களுக்கிடையேயான குழு மோதல் என்று காவல்துறையும் மீடியாவும் திரும்ப திரும்ப கூறி வருகின்றன. தென்காசி படுகொலை தொடர்பாக நான் எழுதிய பதிவில் பின்னூட்டம் இட்ட பலரும் இதை எப்படி மதமோதல் என்று சொல்ல முடியும் என்று வினா எழுப்பி இருக்கிறார்கள். எனது பதிவிலேயே இதற்கான பதில் இருந்தாலும் தொடர்ந்து திட்டமிட்டு சில சக்திகளால் குழு மோதல், குடும்ப மோதல் என்ற செய்தி பரப்பப்படுவதால் இதற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.

தென்காசி படுகொலையில் ஹிந்துக்கள் தரப்பில் கொல்லப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அன்று இரு குடும்பங்கள் மட்டும் மோதிக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தரப்பில் மூவரை வெட்டிக் கொன்றவர்கள் மதத்தின் பெயரில் கொலை செய்ய கூடியவர்கள். இது குழு மோதல் அல்ல. மதமோதல் என்பதற்கு இது ஒன்றே போதும்.


இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல்லா இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவன். நண்பனாக இருந்த குமார் பாண்டியனை இஸ்லாத்திற்காக கொன்றவன். அப்துல்லா முருகேசனாக ஹிந்துவாக இருந்திருந்தால் குமார் பாண்டியனை கொன்றிருக்க மாட்டான். இஸ்லாம்தான் அவனை கொலைவெறியனாக மாற்றியிருக்கிறது.


குமார் பாண்டியன் கொலையின் தொடர்ச்சியாகத்தான் இந்தக் படுகொலைகள் நடந்துள்ளது. குமார் பாண்டியன் கோயில் நிலத்தில் மசூதி கட்டப்படுவதை எதிர்த்ததால்தான் கொல்லப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கோயில் நிலத்தை காப்பாற்ற போராடிய ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இதனை குழு மோதல் என்று எப்படி கூற முடியும்?


குமார் பாண்டியன் கொல்லப்பட்டபோது அதற்கு காரணமானவர் என்று ஹிந்துக்களால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல முஸ்லிம் தொழிலதிபர்கள் வி.டி.எஸ் ரகுமான் பாட்சா, மற்றொரு பிரபல தொழிலதிபர் ஹாஜி மூசா அதிபர் ஆகியோர் மீது போலீசார் எஃப். ஐ.ஆர் போட்டுள்ளனர். இது குடும்ப மோதல் என்ற திரும்ப திரும்ப சொல்லும் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு என்ன காரணம்? இதில் ரகுமான் பாட்சா கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே முன் ஜாமீன் பெற்றுள்ளார். எந்த வழக்கும் தன் மீது இல்லாத ஒருவர், போலீசாரால் தேடப்படாத ஒருவர் ஏன் முன் ஜாமீன் பெற வேண்டும்? ஆகஸ்டு 14ம் தேதி கொலை நடக்கப்போவது அவருக்கு முன்னமே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார் என்று தொன்காசியில் சாதாரணமாகவே மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.ஆகஸ்டு 14-ம் தேதி படுகொலை நடந்த பிறகு ரகுமான் பாட்சாவும் ஹாஜி மூசா அதிபரும் தலைமறைவாகி இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.


இது மத மோதல் அல்ல. குடும்ப மோதல் என்று கூறிவரும் போலீசார் குமார் பாண்டியன் சகோதரர்கள்தான் முதலில் தாக்கினார்கள் என்று மற்றொரு பொய் மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். கொலை நடப்பதற்கு முன்பு ரகுமான் பாட்சா முன் ஜாமீன் பெற்றது. கொலைக்குப் பிறகு அவரும் ஹாஜி மூசா அதிபரும் தலைமறைவானது, போலீசார் மீது அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது போன்ற சம்பவங்கள் இந்த கொலையை முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்தி இருப்பதை உறுதி செய்கிறது.


முஸ்லிம் தரப்பில் மூவர் இறந்திருப்பதோடு 7 பேர் காயமடைந்திருப்பது அவர்கள் தரப்பில் 10க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்திருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் ஆயுதத் தாக்குதலில் ஈடுபட வேண்டுமானால் திட்டமிடாமல் சாத்தியமா? ஆனால் ஹிந்துக்கள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். யாரும் காயமடையவில்லை. ஹிந்துக்கள் தரப்பில் கூட்டமாக சென்று தாக்கியிருந்தால் பலர் காயமடைந்திருக்க வேண்டும். குமார் பாண்டியனின் கசோதரர்கள் கொலை திட்டம் தீட்டி இருந்தால் சகோதரர்கள் மூவறாக நிச்சயம் சென்றிருக்க மாட்டார்கள். ஒரு குழுவாகத்தான் சென்றிருப்பார்கள். மூவர் மட்டுமே சென்றால் மூவருமே இறந்துவிட்டால் குடும்பம் என்னவாகும் என்று யோசிக்க மாட்டார்களா? இவையெல்லாம் இந்த படுகொலை முஸ்லிம் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்கள்.


பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை பலர் சுட்டி காட்டி இருக்கிறார்கள். பொதுவாக கொலை வழக்கு பற்றி செய்திகளை வெளியிடும்போடு பத்திரிகைகள் போலீசார் என்ன செய்தி கொடுக்கிறார்களே அதை அப்படியே வெளியிட்டு விடுவார்கள். ஆகஸ்டு 14 படுகொலை சம்பவத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆகஸ்டு 14ம் தேதி மாலை மலரில் முஸ்லிம்கள் தான் முதலில் தாக்குதல் நடத்திய செய்தி வந்துள்ளது கவனிக்கத் தக்கது. இதை அரவிந்தன் நீலகண்டன் தன் பதிவில் ஆவணப்படுத்தி உள்ளார். இது கொலை நடந்த உடனே வெளியான செய்தி. தொன்காசி நகரம்போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துபிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. போலீசார் சக்தி பாண்டியனோடு சேர்த்து நீதியையும் நேர்மையையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.

குமார் பாண்டினை கொன்ற கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்திருந்தால் இந்த படுகொலைகள் நடந்திருக்காது. கொடூர கொலை குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வரும்போது ஆயுதங்களோடு வந்திருக்கிறார்கள். இதனை போலீசார் கண்டுபிடித்தபோதும் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். இதுபோன்ற போலீசாரின் அலட்சியங்களே இந்தப் படுகொலைக்கு காரணம்.

போலீசார் தங்கள் எஜமான் கருணாநிதியை திருப்திப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்தி படுத்திக் கொண்டிருக்கிறார். ஆக எலோரும் சேர்ந்து ஹிந்துக்களை சுடுகாட்டுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் எப்போது விடிவுகாலம் பொறக்கும்?

August 18, 2007

ஒரு குடும்பத்தையே கருவறுத்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

திருநெல்வேலிமாவட்டம் தென்காசியில் மீண்டும் ஒரு கொடுமை அரங்கேறி இருக்கிறது. ஆகஸ்டு 14ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதிற்குட்பட்ட மூன்று சகோதரர்களைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் இஸ்லாமிய வெறியர்கள். அரை மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் விதவையாக்கப் பட்டிருக்கிறார்கள்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர். கோயில் நிலத்தில் மசூதி கட்டுவதை தென்காசி நகர இந்து முன்னணி நகரத் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடுமையாக எதிர்த்தார். ஹிந்துக்களை ஒன்றுதிரட்டி கோயில் நிலத்தைக் காப்பாற்ற போராடினார். இதனால் குமார் பாண்டியனுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


தென்காசியில் உள்ள பிரபல முஸ்லிம் தொழிலதிபர் வி.டி.எஸ் ரகுமான் பாட்சா, குமார் பாண்டியன் வீட்டிற்கே சென்று மிரட்டல் விடுத்தார். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் குமார் பாண்டியன் தொடர்ந்து போராடி வந்தார். தொடர்ந்து நீதியை நிலைநாட்டப் போராடி வந்த குமார் பாண்டியனை முஸ்லிம் வெறியர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொன்றனர். குமார் பாண்டியன் வெட்டி சாய்க்கப்பட்டபோது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி. (இதுபற்றிய விரிவான செய்திகள் விஜயபாரதம் 05-01-2007 இதழில் வெளியானது.)
குமார் பாண்டியனை இஸ்லாமியர்களின் கொலைவெறிக்கு பறிகொடுத்து ஓர் ஆண்டுகூட ஆகவில்லை. அதற்குள் குமார் பாண்டியனின் மூன்று சகோதரர்களை ஆடு, மாடு வெட்டுவதைப்போல பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் இஸ்லாமிய வெறிபிடித்த மனித மிருகங்கள். நாடு தனது 60ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த ஆகஸ்டு 14ஆம் தேதி நாட்டையே உலுக்கிய இந்த சோக சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் அப்துல்லா, அனீபா ஆகியோர் கடந்த 4ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட இந்தக் கொடூர பயங்கரவாதிகள் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வந்தனர். காவல் நிலையத்திற்கு இவர்கள் தினமும் வாகனங்களில்ஆயுதக் குவியல்களுடன்தான் வருவார்களாம். பலமுறை போலீசார் சோதனையிட்டும் ஆயுதங்களைக்கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள்.
குமார்பாண்டியன் படுகொலைக்குப் பிறகு நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கான் கடந்த மார்ச் மாதம் தாக்கப்பட்டார். ஏற்கனவே அண்ணன் குமார் பாண்டியனை இழந்த சோகத்தில் தவித்துக் கொண்டிருந்த தம்பி செந்தில் உட்பட மூன்று பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்களும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தனர்.
செந்தில் தினமும் காவல் நிலையத்திற்குக் கையெழுத்திட வருவதால் அவரை தீர்த்துக் கட்ட அப்துல்லாவும் அனீபாவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தினமும் பயங்கர ஆயுதங்களுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர். ஆகஸ்டு 14ஆம் தேதி செந்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அந்தக் காரை அப்துல்லா, அனீபா கோஷ்டியினர் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். தன்னை இஸ்லாமிய வெறியர்கள் சுற்றி வளைத்து விட்டார்கள் என்பதை அறிந்த செந்தில் அவர்களை வீரமுடன் எதிர்கொண்டார். அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து தற்காப்புக்காக தாக்கத் தொடங்கினார். இந்த நேரத்தில் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தன் டூ வீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த செந்திலின் அண்ணன் சுரேஷிடம் உன் தம்பியை முஸ்லிம்கள் வெட்டுகிறார்கள் என்று சொல்ல, தம்பியை காக்க விரைந்தார்.


செந்திலின் தந்தை சொர்ணத் தேவர் டீக்கடை நடத்துகிறார். டீக்கடையில் பஜ்ஜி போடுவதற்காக வாழைக்காய் வாங்க மார்க்கெட்டிற்கு வந்திருந்த செந்திலின் மற்றொரு அண்ணன் சேகருக்கும் தம்பிகள் இருவரும் முஸ்லிம் வெறியர்களிடம் மாட்டிக் கொண்ட செய்தியை பொதுமக்கள் சொல்கிறார்கள். அவரும் பதட்டத்தோடு உடனே தம்பிகளைக் காக்க ஓடினார். ஆயுதம் இல்லாமல் தம்பியை காப்பாற்ற சென்ற இருவரும்இஸ்லாமிய வெறியர்களிடம் மாட்டிக் கொண்டனர். அப்துல்லா, அனீபா அவனதுகூட்டாளிகள் அலாவூதீன், பஷீர், அசன் கனி, நாகூர் மீரான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாளால் சகோதரர்கள் மூவரையும் வெட்டிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் பஷீர், அசன் கனி, நாகூர் மீரான் போன்ற பயங்கரவாதிகளும் இறந்தனர்.
இந்தக் கோரத் தாக்குதலில் சேகர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செந்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் காவல் துறையும் அரசு நிர்வாகமும் முஸ்லிம்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டதால் செந்திலைக் காப்பாற்ற முடியவில்லை. தென்காசி நகரில் ஏராளமான ஆம்புலன்ஸ் சர்வீஸ்கள் உள்ளன. ஆனால் காவல் துறையினர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான த.மு.மு.க.வின் ஆம்புலன்ஸைமட்டுமே செயல்பட அனுமதித்துள்ளனர். த.மு.மு.க ஆம்புலன்ஸில் முதலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்திலை ஏற்றியுள்ளனர். யாரோ ஒருவர் அவர் செந்தில் என சொல்ல, அப்படியே நடுரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
அதன்பிறகு மிகவும் காலதாமதமாகவேசெந்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. காயமடைந்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்குத்தான் முதலில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். காவல்துறை முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் செந்திலின் உயிரை வாய்ப்பிருந்தும் காப்பாற்ற முடியவில்லை.
சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை ெசய்துள்ள சொர்ணத் தேவர் தன் மூன்று மகன்களின் பிணத்தைப் பார்த்துக் கதறி அழுத காட்சி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. `அய்யோ என் குடும்பத்தையே கருவறுத்துட்டாங்களே' என்று சொர்ணத் தேவர் கதறி அழுதார். சொர்ணத் தேவரோடு கணவனைப் பறிகொடுத்த மூன்று இளம்பெண்களும் கதறி அழுத காட்சி நெஞ்சை பிளப்பதாக இருந்தது.ஏற்கனவே குமார் பாண்டியனை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்தில் ஒரே நாளில் மூன்று உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இப்படிகூட நடக்குமா என்று ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் ஆகஸ்டு 15ம் தேதி நடந்த இறுதிச் சடங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வல்லநாடு சாதுசிவா சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கொலை நடப்பதற்கு முதல் நாள், அதாவது ஆகஸ்டு 13ஆம் தேதி காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் அப்துல்லா, அனீபா கோஷ்டியை டி.எஸ்.பி மயில்வாகனன் சோதனையிட்டார். அப்போது அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருந்துள்ளன. இருந்தாலும் டி.எஸ்.பி இனி ஆயுதங்கள் கொண்டு வரக்கூடாது என்று மென்மையாக எச்சரித்து அனுப்பி விட்டாராம். இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களை அன்றே போலீசார் கைப்பற்றி இருந்தால் மூன்று இளம்பெண்கள் ஒரே நேரத்தில் விதவையானதைத் தடுத்திருக்கலாம்.
17-12-2006 அன்று குமார் பாண்டியனை அப்துல்லா, அனீபா கோஷ்டியினர் நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். உலகறிந்த கொலையாளிகளுக்கு தண்டனை தராமல் சில மாதங்களில் ஜாமீனில் விட்டதால் துணிவுடன் மீண்டும் பலரைவெட்டிச்சாய்த்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் காவல்துறை மென்மையான போக்கை கடைப்பிடிப்பதால்தான் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நிகழ்கிறது.
6 கொலைகள் நடந்த பிறகும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான த . மு . மு . க . வின் ஆம்புலன்ஸை காவல்துறை செயல்பட அனுமதித்தது தென்காசி மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது. த.மு.மு.கவினர் தங்கள் ஆம்புலன்ஸில் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததை தென்காசி மக்களில் பலர் பார்த்துள்ளனர். சாதாரண மக்களுக்கு தெரியும் விஷயங்கள்கூட காவல்துறையினருக்கு தெரியாதது ஏனோ?
காவல்துறை இனியும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் விஷயத்தில் மென்மையான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு இனி தூக்கமே இருக்காது. காஷ்மீரைப் போல மனைவி மக்களை விட்டுவிட்டு இரவு பகலாக காவல்துறையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமானால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரோடு களைய வேண்டும். பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் சொர்ணத் தேவரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் தென்காசி ஹிந்துக்கள் அமைதியின்றி தவிக்கிறார்கள்.

முதலில் தாக்கியது யார்?

செந்தில், சுரேஷ், சேகர் ஆகிய மூவரும்தான் காரில் சென்று அப்துல்லா, அனீபா கோஷ்டியினரைத் தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் சம்பவத்தில் முஸ்லிம்கள் மூவர் இறந்ததோடு 7 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஹிந்துக்கள் தரப்பில் மூன்று சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வேறு யாரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. முஸ்லிம்கள் தரப்பில் 15க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
செந்தில், சேகர், சுரேஷ் மூவரும் திட்டமிட்டு அப்துல்லா, அனீபா கோஷ்டியினரைத் தாக்க முயன்றிருந்தால் ஒரு குழுவாகச் சென்றிருப்பார்கள். பயங்கரவாதிகளை எதிர்கொள்ள அவர்கள் மூவராக செல்ல வாய்ப்பில்லை. போலீசார் ஏன் உண்மையை மறைக்கிறார்கள்? ஓட்டுக்காக முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த முயலும் அரசியல்வாதிகளின் கட்டளைக்கு ஏற்ப முஸ்லிம்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவது தென்காசியில் அப்பட்டமாகத் தெரிகிறது.

சொர்ணத் தேவரின் குடும்பம்

குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். தென்காசி நகரில் டீக்கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு வெங்கடேசன்(49), சக்தி பாண்டியன்(47), சேகர் பாண்டியன் (43),ரவி பாண்டியன்(41),குமார் பாண்டியன்(40), சுரேஷ் பாண்டியன்(31), செந்தில் பாண்டியன்(27) ஆகிய 7 மகன்களும், சங்கரம்மாள்(47), ஜெயலட்சுமி(39), கனகம்மாள்(37), பவானி(29) ஆகிய நான்கு மகள்களும்உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மனைவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவியின் ஏழு மகன்களில் நால்வரை இஸ்லாமிய வெறியர்கள் கொன்று குவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட சேகர் பாண்டியனுக்கு மாளவி(35) என்ற மனைவியும், புவனேஸ்வரி(11), தங்கராணி(9) என்ற இரு மகள்களும், ஹரிஹரன்(13) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ் பாண்டியனுக்கு திருமணமாகி ஒண்ணரை வருடங்கள்தான் ஆகிறது. சுரேஷின் மனைவி கோகிலா அவரது அக்கா சங்கரம்மாளின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயது செந்திலுக்கு கோமதி(26) என்ற மனைவியும்,சொர்ணபாலா(9), அழகு துவாரகா(4) என்ற இரு மகள்களும், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒன்றே முக்கால் வயது மகனும் உள்ளனர். ரவி, சுரேஷ் இருவரும் கேபிள் டி.வி நடத்தி வந்தனர். மற்றவர்கள் சிறு வியாபாரிகள்.

காவல் துறையினரின் அராஜகம்
ஒரே நாளில் மூன்று உயிர்களைப் பறிகொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் சொர்ணத் தேவர் குடும்பத்திற்கு காவல் துறை மேலும் மேலும் தொந்தரவு கொடுத்து வருகிறது. தம்பிகள் மூன்று பேரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்த சொர்ணத்தேவரின் மகன் இந்து முன்னணி தென்காசி நகரத் தலைவர் சக்தி பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்டு 16-ம் தேதி நள்ளிரவில் சொர்ணத் தேவரின் வீடு அமைந்துள்ள மலையான் தெருவுக்குள் நுழைந்த போலீசார் அங்குள்ள ஹிந்துக்களை வீடுவீடாகச் சென்று மிரட்டி உள்ளனர். உங்கள் வீட்டிலுள்ள ஆண்களை ஒப்படைக்காவிட்டால் உங்களை கைது செய்வோம் என குடும்பப் பெண்களை மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணத் தேவர், கொலை செய்யப்பட்ட சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோரின் மனைவிகள் போலீசாரின் அராஜகத்தை எதிர்த்து தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர்.
மலையான் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உள்ளே சொர்ணத் தேவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு டி.ஐ.ஜி கண்ணப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரவு நேரத்தில் விசாரணை வர மாட்டோம் என்று உறுதி அளித்ததால் சொர்ணத் தேவர் குடும்பத்தின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை


இந்து முன்னணி தென்காசி நகரத் தலைவர் குமார் பாண்டியன் 17-12-2006 அன்று படுகொலை செய்யப்பட்டார். அப்போது விஜயபாரதத்தில் வெளியான செய்திக் கட்டுரை.

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடுமை அரங்கேறி இருக்கிறது. ஹிந்து ஒற்றுமைப் பணிகளிலும் சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வந்த தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன், இஸ்லாமிய வெறியர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மலையன் தெருவைச் சேர்ந்த குமார் பாண்டியன், அந்தப் பகுதியில் மிகப் பிரபலமான சமூக சேவகர். இந்து முன்னணி நகர தலைவராக இருக்கும் அவர், ஹிந்துக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார்.தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து முஸ்லிம்கள் மசூதி கட்டி வருகின்றனர். அந்த இடத்தில்தான் கார்த்திகை தீபத்தின்போது ஹிந்துக்கள் சொக்கப்பனை கொளுத்தும்போது உற்சவர் வருமிடம். மசூதி வந்துவிட்டால் அந்த வழியாக சாமி ஊர்வலம் வரக்கூடாது, மேளம் அடிக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் பிரச்சினை செய்வார்கள். இதனால் வருங்காலத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் மோதல் ஏற்படும் என்பதால் அங்கு மசூதி கட்டுவதை ஹிந்து இயக்கங்கள் எதிர்த்துப் போராடி வருகின்றன. குமார் பாண்டியனும் ஹிந்துக்களைத் திரட்டி இந்து முன்னணி சார்பில் போராட்டங்களை நடத்தினார். இதனால் முஸ்லிம் வெறியர்களின் பார்வை குமார் பாண்டியன்மீது விழுந்தது.தென்காசியில் உள்ள பிரபல முஸ்லிம் தொழிலதிபர் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சா, குமார் பாண்டியன் வீட்டிற்கே பல தடவை சென்று, "மசூதி பிரச்சினையில் தலையிடாதே. நாங்க அந்த இடத்துல பெருசா மசூதி கட்டணும்ங்கிறது இறைவனோட விருப்பம். அதற்கு நீ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. பணத்தை வாங்கிட்டு ஒதுங்கிக்கோ" என்று மிரட்டியுள்ளார். செங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக(த.மு.மு.க) கூட்டத்தில் குமார் பாண்டியன் உள்ளிட்ட சில பா.ஜ.க, ஹிந்து இயக்கத் தொண்டர்களின் பெயரைக் கூறி அவர்களின் தலையை எடுத்துருவோம்னு பலர் பேசியுள்ளனர். பல முஸ்லிம் பெருந்தலைகளும் அவரை மிரட்டியுள்ளனர். பலமுறை அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் குமார் பாண்டியன் தொடர்ந்து நீதிக்காகப் போராடி வந்தார். முஸ்லிம்களிடமிருந்து மிரட்டல்கள் தொடர்ந்ததால், குமார் பாண்டியன் தென்காசி இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தியிடம் புகார் மனு அளித்தார். ஆனால் இந்த புகார் மனுவை போலீசார் கண்டு கொள்ளவே இல்லை.இந்நிலையில் டிசம்பர் 17ம்தேதி குமார் பாண்டியனும், அவரது நண்பர் சேகரும் தென்காசி பஜாரில் சாப்பாடு வாங்கிக் கொண்டு முஸ்லிம் தெரு வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு முஸ்லிம்கள் அவரை வழிமறித்திருக்கிறார்கள். "ஏண்டா எங்களுக்குப் போட்டியா ஆம்புலன்ஸ் விடப்போறியா? எப்படி விடுறேன்னு பார்ப்போம்" என சவால் விட்டிருக்கிறார்கள். இதைக் கேட்ட குமார் பாண்டியன், "உங்க வேலையை நீங்க பாருங்க. நாங்க மக்களுக்காக ஆம்புலன்ஸ் விட்டே தீருவோம்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில் அங்கு மறைந்திருந்த முஸ்லிம் வெறியர்கள் குமார் பாண்டியனை முற்றுகையிட்டு சரமாரியாக அரிவாள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துவிட்டு, தயாராக நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தப்பித்து விட்டனர். குமார் பாண்டியனுடன் வந்த சேகர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டார்.
குமார் பாண்டியன் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மாவட்டம் முழுக்க காட்டுத்தீ போல் பரவியது. 5,000க்கும் அதிகமான ஹிந்துக்கள் தென்காசியில் திரண்டனர். தென்காசி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. "கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இந்தப் படுகொலைக்குக் காரணமான தொழிலதிபர் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சாவையும் கைது செய்ய வேண்டும். அதுவரை குமார் பாண்டியனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுமதிக்க மாட்டோம்." என்று மக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அதுவரை ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை வேடிக்கை பார்த்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து இயக்க நிர்வாகிகளிடம் சமரசம் பேசினார்கள். நெல்லை மாவட்ட எஸ்.பி செந்தாமரைக் கண்ணன் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கொலையாளிகளைக் கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என ஹிந்துக்கள் அறிவித்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் போராட்டம் தொடர்ந்தது. உடனே போலீசார் அடக்குமுறையில் இறங்கினார்கள். ஹிந்துக்கள்மீது தடியடி நடத்தித் தாக்குதல் நடத்தினார்கள்.
போலீசார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் பணபலம், அரசியல் பலத்திற்கு முன்னால் போலீசார் கைகட்டி நிற்கின்றனர். கடந்த முறை தி.மு.க ஆட்சியின்போது ஹிந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தாக்குதல்கள் ஏராளமாய் நடந்தன. கோவையில் நடந்த குண்டுவெடிப்பையும் அதில் அத்வானி அதிர்ஷ்டவசமாக தப்பித்ததையும் நாம் எளிதில் மறக்க முடியாது. இப்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ஹிந்துக்களுக்கு தாக்குதல்களும், படுகொலைகளும் ஆரம்பித்துள்ளன. தி.மு.க அரசு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் முஸ்லிம் பயங்கரவாதிகள் எல்லாம் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வீதிக்கு வந்துவிட்டனர்.பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் கருணாநிதி, ஈராக்கில், பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் கண்டன அறிக்கை வெளியிடும் கருணாநிதி ஒரு தமிழன் முஸ்லிம்களால் ஆடு, மாடுபோல வெட்டிக் கொல்லப்பட்டு பல நாட்களாகியும் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்.சிறுபான்மை மக்கள் தும்மினால்கூட அவர்களுக்கு துணை நிற்போம் என்று அறிவித்த கருணாநிதி, தமிழர்களின் உயிர் போய்க்கொண்டிருக்கும்போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் கருணாநிதியையே பின்பற்றுகிறார்கள். அரசும் அரசியல்வாதிகளும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. ஹிந்துக்கள் தங்கள் ஒற்றுமையின் மூலமே இதுபோன்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள முடியும். ஹிந்து ஒற்றுமைதான் அனைத்திற்கும் தீர்வாக இருக்க முடியும்.


திட்டமிட்ட படுகொலை!
குமார் பாண்டியனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். இதனை நெல்லை காவல்துறையே ஒத்துக்கொண்டுள்ளது.(`குமுதம் ரிப்போர்ட்டர்',24-12-06) பலமுறை இதுபற்றி புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இந்தப் படுகொலை என்கின்றனர் தென்காசி மக்கள். 1990களில் கோவையில் வீரசிவா, கணேசன் போன்றவர்களின் பெயர்களைப் பகிரங்கமாக அறிவித்து கொன்றது போலவே குமார் பாண்டியனையும் கொன்றுள்ளனர்.
"இது ஹிந்துக்களின் மீதான தாக்குதல்"
இந்த மாதிரி சம்பவம் நடக்கும்னு குமார் பாண்டியன் லோக்கல் போலீசிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால் அவர் எஃப்.ஐ. ஆர் போடலை.செங்கோட்டையில் நடைபெற்ற த.மு.மு.க கூட்டத்தில் குமார் பாண்டியன் உள்ளிட்ட சிலரது பெயர்களை அறிவித்து, தலையை எடுப்போம் என்று பேசியுள்ளனர். அதன் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. குமார் பாண்டியன் மசூதி கட்டுவதை எதிர்த்திருக்கிறார். அதனாலேயே இந்தப் படுகொலை நடந்துள்ளது. இதை நான் தனிப்பட்ட கொலையாக பார்க்கவில்லை. இந்த கொலை மூலம் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாதிகள் சவால் விட்டிருக்காங்க. அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நம்மிடம் தெரிவித்தார் பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன்.
சோகத்தில் குமார் பாண்டியன் குடும்பம்
47 வயதான குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத்தேவர், நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக இருக்கிறார். குமார் பாண்டியனுக்கு ஜெயந்தி (32) என்ற மனைவியும், ஒரு வயதான சுவாதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குமார் பாண்டியனின் மனைவி ஜெயந்தி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். "என் கணவர் சாவுக்கு தென்காசி இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்திதான் காரணம். என் வீட்டுக்காரருக்கு அடிக்கடி போனில் மிரட்டல் வரும். இதை அவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வந்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவே இல்லை. வயித்திலிருக்கும் எம்புள்ள பிறந்ததும் அப்பா எங்கம்மானு கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்?" என்று துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் அழுது கொண்டிருக்கிறார் ஜெயந்தி. குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத்தேவர், " இங்குள்ள சில பணக்காரங்க தான் கூலிப்படையை ஏவிவிட்டு என் மகனை கொலை பண்ணியிருக்காங்க. என் பையன் சாவுக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்" என்று கோரிக்கை
விடுத்துள்ளார்.
அல்லாவின் உத்தரவுபடி கொன்றோம்
குமார் பாண்டியனை கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளில் ஹனிபா, அப்துல்லா என்ற இருவரை மட்டும் போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் ஐ.ஜி சஞ்சீவ்குமார் விசாரித்தபோது "டிசம்பர் 6 பிரச்சினை, பள்ளிவாசல் பிரச்சினை இதனால்தான் கொன்றோம் என்று திமிராக பேசியுள்ளனர். இதில் ஹனிபா 6 மாதத்திற்கு முன்புதான் ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதமாறி இருக்கிறான். அவனுக்கு சென்னை மண்ணடியில் பயங்கரவாத பயிற்சி அளித்திருக்கிறார்கள். இத்தகவலை போலீசாரே ஒப்புக்கொண்டுள்ளனர்.