August 18, 2007

ஒரு குடும்பத்தையே கருவறுத்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

திருநெல்வேலிமாவட்டம் தென்காசியில் மீண்டும் ஒரு கொடுமை அரங்கேறி இருக்கிறது. ஆகஸ்டு 14ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதிற்குட்பட்ட மூன்று சகோதரர்களைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் இஸ்லாமிய வெறியர்கள். அரை மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் விதவையாக்கப் பட்டிருக்கிறார்கள்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர். கோயில் நிலத்தில் மசூதி கட்டுவதை தென்காசி நகர இந்து முன்னணி நகரத் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடுமையாக எதிர்த்தார். ஹிந்துக்களை ஒன்றுதிரட்டி கோயில் நிலத்தைக் காப்பாற்ற போராடினார். இதனால் குமார் பாண்டியனுக்கு முஸ்லிம்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


தென்காசியில் உள்ள பிரபல முஸ்லிம் தொழிலதிபர் வி.டி.எஸ் ரகுமான் பாட்சா, குமார் பாண்டியன் வீட்டிற்கே சென்று மிரட்டல் விடுத்தார். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் குமார் பாண்டியன் தொடர்ந்து போராடி வந்தார். தொடர்ந்து நீதியை நிலைநாட்டப் போராடி வந்த குமார் பாண்டியனை முஸ்லிம் வெறியர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொன்றனர். குமார் பாண்டியன் வெட்டி சாய்க்கப்பட்டபோது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி. (இதுபற்றிய விரிவான செய்திகள் விஜயபாரதம் 05-01-2007 இதழில் வெளியானது.)
குமார் பாண்டியனை இஸ்லாமியர்களின் கொலைவெறிக்கு பறிகொடுத்து ஓர் ஆண்டுகூட ஆகவில்லை. அதற்குள் குமார் பாண்டியனின் மூன்று சகோதரர்களை ஆடு, மாடு வெட்டுவதைப்போல பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் இஸ்லாமிய வெறிபிடித்த மனித மிருகங்கள். நாடு தனது 60ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த ஆகஸ்டு 14ஆம் தேதி நாட்டையே உலுக்கிய இந்த சோக சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் அப்துல்லா, அனீபா ஆகியோர் கடந்த 4ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட இந்தக் கொடூர பயங்கரவாதிகள் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வந்தனர். காவல் நிலையத்திற்கு இவர்கள் தினமும் வாகனங்களில்ஆயுதக் குவியல்களுடன்தான் வருவார்களாம். பலமுறை போலீசார் சோதனையிட்டும் ஆயுதங்களைக்கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள்.
குமார்பாண்டியன் படுகொலைக்குப் பிறகு நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கான் கடந்த மார்ச் மாதம் தாக்கப்பட்டார். ஏற்கனவே அண்ணன் குமார் பாண்டியனை இழந்த சோகத்தில் தவித்துக் கொண்டிருந்த தம்பி செந்தில் உட்பட மூன்று பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்களும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தனர்.
செந்தில் தினமும் காவல் நிலையத்திற்குக் கையெழுத்திட வருவதால் அவரை தீர்த்துக் கட்ட அப்துல்லாவும் அனீபாவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தினமும் பயங்கர ஆயுதங்களுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர். ஆகஸ்டு 14ஆம் தேதி செந்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அந்தக் காரை அப்துல்லா, அனீபா கோஷ்டியினர் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். தன்னை இஸ்லாமிய வெறியர்கள் சுற்றி வளைத்து விட்டார்கள் என்பதை அறிந்த செந்தில் அவர்களை வீரமுடன் எதிர்கொண்டார். அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து தற்காப்புக்காக தாக்கத் தொடங்கினார். இந்த நேரத்தில் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தன் டூ வீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த செந்திலின் அண்ணன் சுரேஷிடம் உன் தம்பியை முஸ்லிம்கள் வெட்டுகிறார்கள் என்று சொல்ல, தம்பியை காக்க விரைந்தார்.


செந்திலின் தந்தை சொர்ணத் தேவர் டீக்கடை நடத்துகிறார். டீக்கடையில் பஜ்ஜி போடுவதற்காக வாழைக்காய் வாங்க மார்க்கெட்டிற்கு வந்திருந்த செந்திலின் மற்றொரு அண்ணன் சேகருக்கும் தம்பிகள் இருவரும் முஸ்லிம் வெறியர்களிடம் மாட்டிக் கொண்ட செய்தியை பொதுமக்கள் சொல்கிறார்கள். அவரும் பதட்டத்தோடு உடனே தம்பிகளைக் காக்க ஓடினார். ஆயுதம் இல்லாமல் தம்பியை காப்பாற்ற சென்ற இருவரும்இஸ்லாமிய வெறியர்களிடம் மாட்டிக் கொண்டனர். அப்துல்லா, அனீபா அவனதுகூட்டாளிகள் அலாவூதீன், பஷீர், அசன் கனி, நாகூர் மீரான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாளால் சகோதரர்கள் மூவரையும் வெட்டிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் பஷீர், அசன் கனி, நாகூர் மீரான் போன்ற பயங்கரவாதிகளும் இறந்தனர்.
இந்தக் கோரத் தாக்குதலில் சேகர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செந்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் காவல் துறையும் அரசு நிர்வாகமும் முஸ்லிம்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டதால் செந்திலைக் காப்பாற்ற முடியவில்லை. தென்காசி நகரில் ஏராளமான ஆம்புலன்ஸ் சர்வீஸ்கள் உள்ளன. ஆனால் காவல் துறையினர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான த.மு.மு.க.வின் ஆம்புலன்ஸைமட்டுமே செயல்பட அனுமதித்துள்ளனர். த.மு.மு.க ஆம்புலன்ஸில் முதலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்திலை ஏற்றியுள்ளனர். யாரோ ஒருவர் அவர் செந்தில் என சொல்ல, அப்படியே நடுரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
அதன்பிறகு மிகவும் காலதாமதமாகவேசெந்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. காயமடைந்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்குத்தான் முதலில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். காவல்துறை முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் செந்திலின் உயிரை வாய்ப்பிருந்தும் காப்பாற்ற முடியவில்லை.
சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை ெசய்துள்ள சொர்ணத் தேவர் தன் மூன்று மகன்களின் பிணத்தைப் பார்த்துக் கதறி அழுத காட்சி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. `அய்யோ என் குடும்பத்தையே கருவறுத்துட்டாங்களே' என்று சொர்ணத் தேவர் கதறி அழுதார். சொர்ணத் தேவரோடு கணவனைப் பறிகொடுத்த மூன்று இளம்பெண்களும் கதறி அழுத காட்சி நெஞ்சை பிளப்பதாக இருந்தது.



ஏற்கனவே குமார் பாண்டியனை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்தில் ஒரே நாளில் மூன்று உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இப்படிகூட நடக்குமா என்று ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் ஆகஸ்டு 15ம் தேதி நடந்த இறுதிச் சடங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வல்லநாடு சாதுசிவா சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கொலை நடப்பதற்கு முதல் நாள், அதாவது ஆகஸ்டு 13ஆம் தேதி காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் அப்துல்லா, அனீபா கோஷ்டியை டி.எஸ்.பி மயில்வாகனன் சோதனையிட்டார். அப்போது அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருந்துள்ளன. இருந்தாலும் டி.எஸ்.பி இனி ஆயுதங்கள் கொண்டு வரக்கூடாது என்று மென்மையாக எச்சரித்து அனுப்பி விட்டாராம். இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களை அன்றே போலீசார் கைப்பற்றி இருந்தால் மூன்று இளம்பெண்கள் ஒரே நேரத்தில் விதவையானதைத் தடுத்திருக்கலாம்.
17-12-2006 அன்று குமார் பாண்டியனை அப்துல்லா, அனீபா கோஷ்டியினர் நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். உலகறிந்த கொலையாளிகளுக்கு தண்டனை தராமல் சில மாதங்களில் ஜாமீனில் விட்டதால் துணிவுடன் மீண்டும் பலரைவெட்டிச்சாய்த்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் காவல்துறை மென்மையான போக்கை கடைப்பிடிப்பதால்தான் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நிகழ்கிறது.
6 கொலைகள் நடந்த பிறகும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான த . மு . மு . க . வின் ஆம்புலன்ஸை காவல்துறை செயல்பட அனுமதித்தது தென்காசி மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது. த.மு.மு.கவினர் தங்கள் ஆம்புலன்ஸில் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததை தென்காசி மக்களில் பலர் பார்த்துள்ளனர். சாதாரண மக்களுக்கு தெரியும் விஷயங்கள்கூட காவல்துறையினருக்கு தெரியாதது ஏனோ?
காவல்துறை இனியும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் விஷயத்தில் மென்மையான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு இனி தூக்கமே இருக்காது. காஷ்மீரைப் போல மனைவி மக்களை விட்டுவிட்டு இரவு பகலாக காவல்துறையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமானால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரோடு களைய வேண்டும். பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் சொர்ணத் தேவரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் தென்காசி ஹிந்துக்கள் அமைதியின்றி தவிக்கிறார்கள்.

முதலில் தாக்கியது யார்?

செந்தில், சுரேஷ், சேகர் ஆகிய மூவரும்தான் காரில் சென்று அப்துல்லா, அனீபா கோஷ்டியினரைத் தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் சம்பவத்தில் முஸ்லிம்கள் மூவர் இறந்ததோடு 7 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஹிந்துக்கள் தரப்பில் மூன்று சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வேறு யாரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. முஸ்லிம்கள் தரப்பில் 15க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
செந்தில், சேகர், சுரேஷ் மூவரும் திட்டமிட்டு அப்துல்லா, அனீபா கோஷ்டியினரைத் தாக்க முயன்றிருந்தால் ஒரு குழுவாகச் சென்றிருப்பார்கள். பயங்கரவாதிகளை எதிர்கொள்ள அவர்கள் மூவராக செல்ல வாய்ப்பில்லை. போலீசார் ஏன் உண்மையை மறைக்கிறார்கள்? ஓட்டுக்காக முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த முயலும் அரசியல்வாதிகளின் கட்டளைக்கு ஏற்ப முஸ்லிம்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவது தென்காசியில் அப்பட்டமாகத் தெரிகிறது.

சொர்ணத் தேவரின் குடும்பம்

குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். தென்காசி நகரில் டீக்கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு வெங்கடேசன்(49), சக்தி பாண்டியன்(47), சேகர் பாண்டியன் (43),ரவி பாண்டியன்(41),குமார் பாண்டியன்(40), சுரேஷ் பாண்டியன்(31), செந்தில் பாண்டியன்(27) ஆகிய 7 மகன்களும், சங்கரம்மாள்(47), ஜெயலட்சுமி(39), கனகம்மாள்(37), பவானி(29) ஆகிய நான்கு மகள்களும்உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மனைவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவியின் ஏழு மகன்களில் நால்வரை இஸ்லாமிய வெறியர்கள் கொன்று குவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட சேகர் பாண்டியனுக்கு மாளவி(35) என்ற மனைவியும், புவனேஸ்வரி(11), தங்கராணி(9) என்ற இரு மகள்களும், ஹரிஹரன்(13) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ் பாண்டியனுக்கு திருமணமாகி ஒண்ணரை வருடங்கள்தான் ஆகிறது. சுரேஷின் மனைவி கோகிலா அவரது அக்கா சங்கரம்மாளின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயது செந்திலுக்கு கோமதி(26) என்ற மனைவியும்,சொர்ணபாலா(9), அழகு துவாரகா(4) என்ற இரு மகள்களும், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒன்றே முக்கால் வயது மகனும் உள்ளனர். ரவி, சுரேஷ் இருவரும் கேபிள் டி.வி நடத்தி வந்தனர். மற்றவர்கள் சிறு வியாபாரிகள்.

காவல் துறையினரின் அராஜகம்
ஒரே நாளில் மூன்று உயிர்களைப் பறிகொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் சொர்ணத் தேவர் குடும்பத்திற்கு காவல் துறை மேலும் மேலும் தொந்தரவு கொடுத்து வருகிறது. தம்பிகள் மூன்று பேரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்த சொர்ணத்தேவரின் மகன் இந்து முன்னணி தென்காசி நகரத் தலைவர் சக்தி பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்டு 16-ம் தேதி நள்ளிரவில் சொர்ணத் தேவரின் வீடு அமைந்துள்ள மலையான் தெருவுக்குள் நுழைந்த போலீசார் அங்குள்ள ஹிந்துக்களை வீடுவீடாகச் சென்று மிரட்டி உள்ளனர். உங்கள் வீட்டிலுள்ள ஆண்களை ஒப்படைக்காவிட்டால் உங்களை கைது செய்வோம் என குடும்பப் பெண்களை மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணத் தேவர், கொலை செய்யப்பட்ட சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோரின் மனைவிகள் போலீசாரின் அராஜகத்தை எதிர்த்து தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர்.
மலையான் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உள்ளே சொர்ணத் தேவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு டி.ஐ.ஜி கண்ணப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரவு நேரத்தில் விசாரணை வர மாட்டோம் என்று உறுதி அளித்ததால் சொர்ணத் தேவர் குடும்பத்தின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

7 comments:

Anonymous said...

சரவணன்,


தகவல்களுக்கு நன்றி. நடந்ததைப் படிக்கையில்... என்ன சொல்வதென்று தெரியவில்லை.

Anonymous said...

செய்திகளும்,தகவல்களும் எப்படி திரிக்கப்படுகின்றது என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.ஏனெனில் "குமுதம் ரிப்போர்டரில்" நான் படித்தது வேறு மாதிரியாக இருந்தது. வெடிகுண்டு வீசப்பட்டதை எதிர்தரப்பு செய்ததாக எழுதாமல் விட்டுவிடீர்களே, மற்றபடி தனிப்பட்ட இருவரின் மோதலை மத மோதலாக காட்டியிருப்பது உச்சபட்சமான திரித்தல். நான் படித்த இதழில் தவறாக எழுதியதாக நீங்கள் நினைத்தால் மறுப்பு எழுதுங்கள் அவ்விதழுக்கு. ஊடகங்களில் நேர்மையை கடைப்பிடிக்க இனியாவது முயற்சிக்கலாமே.

உண்மை அடியான் said...

சரவன்ணன் இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா

ஜடாயு said...

சரவணன்,

உண்மை செய்திகளை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி. தென்காசியின் மதமோதல்களின் வரலாற்றுப் பின்னணியையும் இந்தத் தருணத்தில் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.

இஸ்லாமிய வெறியர்களது வன்முறைத் தாக்குதலுக்கு தங்கள் குடும்பத்தின் மூன்று காளையர்களையும் பலி தந்துவிட்டது இந்தக் குடும்பம். அவர்களை எப்படித் தேற்றுவது?? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

குமார் பாண்டியன் மற்றும் அவர்களது சகோதரர்களின் வீரமரணமும், தியாகமும் தமிழ் இந்துக்களின் நெஞ்சில் நீங்காது நிற்கட்டும். தென்காசியை மதவெறியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடக்கும் இந்தப் போரில் களப்பலியாகி விட்ட இந்த வீரர்களுக்கு நடுகல் வைத்து தெந்தமிழக இந்துக்கள் அனைவரும் வழிபட வேண்டும். அவர்களது ஆத்மா சாந்தியடையட்டும்.

Anonymous said...

அன்புள்ள சரவணன்,

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலையும் அதன் வட்டார பின்னணியையும்
நன்றாக விளக்கியுள்ளீர்கள். நன்றி. திமுக அரசின் மெத்தன போக்கு -
குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல் வேலையாக வழக்குகளை வாபஸ்
செய்து இஸ்லாமிய பயங்கரவாதிகளை திருநெல்வேலி மாவட்டத்தில்
விடுவித்துள்ளது -அப்போதே இந்த பயங்கரவாத செயல்களுக்கான முதல் அடியை
எடுத்து வைத்து கொடுத்ததாயிற்று. சொர்ணபாண்டிய தேவர் போன்ற
காந்தியவாதியின் குடும்பத்துக்கு பயங்கரவாதிகளால் இந்த கதி எனும் போது
மதச்சார்பற்ற அரசியல் வாதிகள் திரும்பிக்கூட பார்க்காமல் இருப்பது இந்த
மகானுபாவர்கள் மனிதர்கள்தானா என நினைக்க வைக்கிறது. கோவில் நில
ஆக்கிரமிப்பை எதிர்த்து உயிர் கொடுத்த இந்த குடும்பத்தினர் தென்மாவட்ட
அனைத்து இந்துக்களாலும் குல தெய்வமாக வணங்கப்பட வேண்டியவர்கள். தமிழர்
பண்பாட்டிற்காகவும் சமய நல்லிணக்கத்துக்காகவும் உயிர் கொடுத்த இவர்களின்
நெகிழ்ச்சியான நினைவுகளை தமிழ் உள்ளங்களில் என்றென்றும் நிற்க வைக்கும்
உங்கள் அளப்பரிய உழைப்புக்கு நன்றி. சொர்ண பாண்டிய தேவருக்கும் அவரது
எஞ்சிய குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு இந்துவும் கடமைப்பட்டிருக்கிறார்/
ள். அவரைப் பார்க்கும் போது குரு கோவிந்த சிங் நினைவுக்கு வருகிறார்.
குரு கோவிந்த சிங்கின் பலிதானம் மொகலாய அழிவுக்கு வழி வகுத்தது. அது போல
வகாபியிச அழிவுக்கு சொர்ணதேவர் செய்துள்ள பலிதானம் வழிவகுக்கவும் இந்து
இளைஞர்களை கால்ஸாவாக மாற்றவும் குரு கோவிந்தரே அருள் பாலிக்கட்டும்.

Anonymous said...

//unmaiadiyaan said...
சரவன்ணன் இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா
//


முடிவு உண்டு - எப்போது என்றால், மற்றவர்கள் விழித்துக்கொள்ளும்போது, கேள்வி கேட்கும்போது, விவாதிக்கும்போது - ஒரு பெரிய அளவிலான மனிதக்கூட்டம் இப்படிப்பட்ட வன்முறை மார்க்கத்தில் இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட dialogueஐ விட வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் இஸ்லாமிய சமூகமே இப்படிப்பட்ட விஷயங்களால் பாதிப்படைகிறது. நான் பலமுறை சொல்லியிருக்கின்றது போன்று, உலகில் உள்ள காஃபிர்களில் ஐந்து சதவிகிதத்தார் இஸ்லாமிஸ்டுகளைப் போன்று சிந்திக்க, செயல்பட ஆரம்பித்தால் கூட உலகம் ரணகளமாகிவிடும்.

முன்பிருந்ததுபோன்ற symmetry இப்போது இஸ்லாமியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இல்லை. உலகம் மாறிப்போய்விட்டது, இன்று ஆயுத பலம், புத்திசாலித்தனம், கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் என்று எல்லாவற்றிலும் இன்னும் இஸ்லாமிய சமூகம் நூறு ஆண்டுகள் முயன்றாலும் எட்ட முடியாத உயரத்தில் காஃபிர்களின் சமூகம் நின்று கொண்டிருக்கின்றது.


இந்த சமூகத்தை இது போன்ற செயல்களின் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் எதிரிகளாக்குகின்றனர் அதில் இருக்கும் அடிப்படைவாதிகள். இதன் விளைவு என்னவாக இருக்கும்? - ஊருக்கு ஊர் மோடி, நாட்டுக்கு நாடு குஜராத், சமுதாயத்துக்கு ஒரு ஈராக் போன்றவை ஏற்படும். இஸ்லாமியர்களின் ஜனத்தொகையை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படை எத்தனை சிறியது - என்ன செய்ய முடிகிறது? இஸ்ரேல் எத்தனை சிறியது - எதாவது செய்ய முடிகிறதா? செசன்யா, போஸ்னியா, ஆஃப்கானிஸ்தான், காஷ்மீர் , ஈராக் , பாகிஸ்தான் என்று இஸ்லாமியர்களின் சாவு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. இறக்கும் காஃபிகளின் எண்ணிக்கை இத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. எவ்வளவு நபர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறுகிறார்களோ அதைவிட அதிகமான அளவு இஸ்லாமியர்கள் இந்த சண்டைகளில் இறக்கின்றனர்.


இது போக முஸ்லீம்களே முஸ்லீம்களை அழித்துக்கொள்வதும் மிக அதிகம். இன்று பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் முதல் இவர்களின் ஆதர்ச நாடான சவுதி வரை முஸ்லீம் நாடுகளின் இராணுவமே முஸ்லீம் அடிப்படைவாதிகளை வேட்டையாடுகிறது.

ஒரு வன்முறைச்சுழலில் அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள். அந்த வன்முறை அவ்வப்போது நம்மையும் பதம் பார்க்கிறது - இதிலிருந்து உலகம் மீள வேண்டுமானால், இஸ்லாம் பற்றிய awareness, விழிப்புணர்வு உலக மக்களுக்கு ஏற்படவேண்டும். எப்படி இன்று நாஸி-கடந்த காலத்தைப் பார்த்து ஜெர்மானியர்களே வெட்கித்தலைகுனிகிறார்களோ அவ்வாறே தமது வன்முறைக்கோட்பாடுகளை, கடந்தகால - நிகழ்கால கொடூரங்களைப்பார்த்து இஸ்லாமிய சமூகமும் தலைகுனியும் - இந்த ப்ராஸஸ் ஏற்கெனவே துவங்கிவிட்டது - படித்த, பண்பட்ட முஸ்லீம்களைப் பாருங்கள், காத தூரம் ஓடுகிறார்கள் இப்படிப்பட்ட அடிப்படைவாதிகளைப் பார்த்து. நம்மைவிட இத்தகைய முஸ்லீம்கள் இவர்களைக் கண்டு பயப்படுவதால் ஒட்டுமொத்த சமூகமும் இவர்களின் பின்னால் இருப்பது போன்ற பிம்பம் ஏற்படுகிறது (இதுவும் இஸ்லாமிய சமூகத்துக்கே ஊறு செய்கின்றது என்பது வேறு விஷயம்).

ஹ்ம்ம்... என்று இந்த வன்முறைக்கு விடிவு காலம் வருமோ, நம் வாழ்நாளில் வந்தால் இறைவனுக்கு நன்றி சொல்வோம், இன்ஷா அல்லாஹ்!

புதுவை சரவணன் said...

செய்திகளை நாங்கள் திரிக்கவில்லை. அனானியாக பலர் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலாக நான் அளித்துள்ள பதில் இது http://puduvaisaravanan.blogspot.com/2007/08/blog-post_20.html