December 06, 2007

மருதாணி வைத்ததால் சஸ்பென்ட் : சென்னையில் கிறிஸ்தவப் பள்ளி அட்டகாசம்!

சென்னை புரசைவாக்கம் தாண்டவன் தெருவில் வசிப்பவர் கணேஷ்ராம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதியும் வழக்கறிஞர்தான். செஷன்ஸ் கோர்ட்டில் கூடுதல் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். இவர்களது மகன் கவுசிக் டவுட்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 3-ம் வகுப்பில் படித்து வருகிறான். கடந்த 19-11-2007 தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற கவுசிக்கிடம் உன்னை சஸ்பென்ட் செய்திருக்கிறோம் என்றுச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசிக்கின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் தியோடர், தாளாளர் வில்கின்ஸ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டனர்.

மருதாணியுடன் கவுசிக்


"உங்கள் மகன் கையில் மருதாணி வைத்துள்ளான். மருதாணி வைத்துக்கொண்டு பள்ளிக்கு வர அனுமதி இல்லை. எனவே அவனை 10 நாட்கள் சஸ்பென்ட் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர். அத்தோடு மருதாணி வைத்தற்காக ரூ. 500 அபராதம் கட்ட வேண்டும் வற்புறுத்தி உள்ளனர். `30-11-2007 அன்று என் மகனுக்கு தேர்வு நடக்க இருக்கிறது. இப்போது சஸ்பென்ட் செய்தால் அவன் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்படும்' என்று கவுசிக்கின் தந்தை கணேஷ்ராம் கெஞ்சியும் பள்ளி நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.

கவுசிக்கின் தாய் வழக்கறிஞர் பிரபாவதி


" என் கணவரும் மாமனாரும் சபரிமலைக்கு செல்லவிருக்கிறார்கள். எனது மாமனார் மலைக்கு செல்வதற்காக கார்த்திகை முதல் நாளன்று அதற்கான பூஜை நடந்தது. அப்போது சாஸ்திரப்படி எல்லோருக்கும் மருதாணி வைத்தோம். என் மகன் கவுசிக்கிற்கும் வைத்தோம். கையில் உள்ள மருதாணியை எப்படி அழிக்க முடியும்? அபராதம் செலுத்தி விடுகிறோம். மகனை சஸ்பென்ட் செய்ய வேண்டாம் என்று கேட்டோம். ஆனாலும் அவர்கள் எங்களை அவமானப்படுத்தும் வகையிலேயே பேசினார்கள். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித உரிமை கமிஷனிலும், பள்ளிக் கல்வி துறையிலும் புகார் செய்துள்ளோம்" என்று வேதனையுடன் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார் கவுசிக்கின் தாய் பிரபாவதி.

"மருதாணி வைத்துக்கொண்டு வந்ததற்காக கவுசிக்கை தலைமை ஆசிரியை ஒரு நாள் சஸ்பென்ட் செய்தார். பள்ளியின் விதிமுறைகளை கடைபிடிப்பதில் தலைமை ஆசிரியை கவனமாக இருப்பார்" என பத்திரிகையாளர்கள் கேட்டபோது டவுட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் வில்கின்சன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ் கலாசாரப்படி மருதாணி வைத்துக்கொண்டு வந்தால் சஸ்பென்ட் செய்வதுதான் பள்ளியின் விதிமுறையா? மாணவன் கவுசிக்கின் தந்தை கணேஷ்ராம் மருதாணி வைப்பது தமிழ் கலாசாரம்தானே என்று கேட்டபோது "இந்து மதப்படி நடக்க விரும்புபவர்கள் ஏன் மகனை கிறிஸ்தவ பள்ளியில் சேர்த்தீர்கள். உங்கள் மத வழக்கங்களை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அதனை பள்ளியில் புகுத்தாதீர்கள்" என்று பள்ளி நிர்வாகம் மிரட்டியுள்ளது. மகன் கவுசிக்கை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார் கணேஷ்ராம். மருதாணி வைத்ததற்கே பள்ளி நிர்வாகம் சஸ்பென்ட் செய்ததால் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்.

90 சதவீத இந்து மாணவர்களுடன் தமிழகத்தில் பள்ளிகூடம் நடத்தி டவுட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்ற பள்ளிகள் இந்துக்களிடம் இருந்து பணத்தைக் குவிக்கிறது. ஆனால் மருதாணி வைக்கக்கூடாது பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, வளையல் அணியக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்து இந்துக்களின் மதநம்பிக்கைகளை சிதைக்கிறார்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை தடுக்கிறார்கள். ஓட்டுக்காக அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த அராஜகத்தை கண்டுகொள்வதில்லை. "இனி கிறிஸ்தவப் பள்ளியில் என் பிள்ளைகளை சேர்க்க மாட்டேன்" என ஒவ்வொரு இந்துப் பெற்றொரும் சபதம் ஏற்றால் இப்பிரச்சினயை ஒரு நொடியில் தீர்த்து விடலாம். .

1 comment:

பனித்துளி said...

ஐயா,

நீங்கள் இப்படி உங்களது பதிவில் சொல்லுகிறீர்கள். ஆனால், கிருத்துவத்தின் அதிகார அமைப்போ கிருத்துவக் குழந்தைகளை கிருத்துவ கல்வி நிலையங்களில் மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதும், அதை நிறைவேற்றுமாறு கிருத்துவர்களை வற்புறுத்தியும் வருவது எத்தனை பேருக்குத் தெரியும்?

இருக்கும் ஆதாரங்களில் இருந்து ஒன்றை கீழே தந்திருக்கிறேன்.
'Christian kids must go to Christian schools'


http://timesofindia.indiatimes.com/Cities/Christian_kids_must_go_to_Christian_schools/articleshow/2593347.cms

THIRUVANANTHAPURAM: Triggering outrage in the state's social and political circles, a senior church functionary in Kerala has asked Christians to send their children to schools run by Christians only. The "advice" came from Archbishop of Changanacherry Mar Joseph Powathil, chairman of the powerful Inter-Religious Church Council and former head of the Catholic Bishops' Conference of India.

Addressing a Sunday gathering, the Archbishop warned against attempts to create a society of non-believers and said it was necessary to send Christian students to Christian schools to educate them about their faith.

His comments evoked protests from politicians and social outfits. Kerala education minister M A Baby said he was at a loss to understand what led the priest to make the statement. "Our constitution enables minorities to set up educational institutions of their own, but it isn't proper to say that members of a particular community should prefer schools set up by their community," Baby told TOI.

"It seems an attempt at bargaining by having all community members under the umbrella of the church schools and will only lead to polarising children along communal lines," warned BJP state vice president V Muraleedharan.

The RSS was unsparing in its criticism, too. "The Archbishop's comment vindicates our stand that minority institutions are misusing their freedom. Schools are supposed to promote education, not religion. This is against our constitutional ethos and secular credentials," said senior Sangh leader Kummanam Rajasekharan. He feared this will only lead to communal divide in society. "Going by the Archbishop's advice, Hindus should prefer schools run by Hindus and Muslims should go for Muslim-run schools. Then what will happen to communal amity?" he asked.