December 12, 2007

நந்திகிராம படுகொலைகள் பற்றி சென்னையில் முன்னாள் டி.ஜி.பி பிரச்சாரம்

நந்திகிராமத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய படுகொலைகள் பற்றி விசாரிப்பதற்காக முன்னாள் அசாம் உயர்நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட தன்னார்வ குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி டோக்ராவும் இடம் பெற்றிருந்தார். இக்குழு நந்திகிராமத்திற்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்து அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கை ஜனாதிபதிக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டது.

நந்திகிராம் சென்ற உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் மாநில டி.ஜி.பி டோக்ரா நாடு முழுவதும் நந்திகிராம படுகொலைகள் பற்றி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 12-12-2007 அன்று சென்னையில் Justice on Trail மற்றும் chennai Media Centre தி,நகர் பா.ஜ.க அலுவலகத்தில் நடத்திய நிகழ்ச்சியில் டோக்ராவும், சமூக சேவகர் நபீசா ஹூசனும் நந்திகிராமத்தில் நடந்த படுகொலைகள், கற்பழிப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை விஜயபாரதம் ஆசிரியர் நா.சடகோபன் தொகுத்து வழங்கினார். முன்னதாக டோக்ராவும், நபீசா ஹூசைனும் மாலை 4 மணிக்கு சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.


"நந்திகிராமத்தில் வாழும் பெரும்பாமையான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். மேற்கு வங்கத்தை ஆளும் கம்யூனிஸ்டு அரசு அந்த கிராமத்தில் உள்ள 4,800 ஏக்கர் நிலத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்த முயன்றது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நந்திகிராமத்திற்குள் நுழைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் போலீசார்போல உடையணிந்து பயங்கரமான ஆயுதங்களுடன் கிராம மக்களைத் தாக்கினார்கள். போலீசார் கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் பலர் உயிழந்தனர். பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

நந்திகிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி ரோட்டின் குறுக்கே கம்யூனிஸ்ட் குண்டர்கள் ஆள் உயர பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது சாலையின் நடுவே யாரும் எளிதில் செல்ல முடியாதவாறு கட்டைகள் மற்றும் கற்களை சாலையின் நடுவே குவித்து வைத்துள்ளனர். நீதிபதி ராமகிருஷ்ணன் குழுவினர் எடுத்த படங்கள். " கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவம் பற்றி இதுவரை அப்பகுதி காவல் நிலையங்களில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கொலை, கற்பழிப்புகளில் இறங்கியவர்களில் ஒருவரைக்கூட போலீசார் கைது செய்யவில்லை. முன்னாள் அசாம் உயர்நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட தன்னார்வ குழுவின் ஓர் உறுப்பினர் என்ற முறையில் நந்திகிராம படுகொலைகள் பற்றி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்." என்று செய்தியாளர்களிடம் பேசும்போது டோக்ரா குறிப்பிட்டார். நந்திகிராமத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றி ஊடகங்கள் மவுனம் சாதித்து வரும் நிலையில் டோக்ரா பிரச்சாரம் செய்து வருவது பாராட்டத்தக்கது. நந்திகிராம மக்களுக்கு நீதி கிடைக்க எல்லோரும் குரல் கொடுப்போம்.

No comments: