December 10, 2007

சென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பக துறைக்கு வயது 100!

பதிப்பகத் துறையில் சாதனை படைத்து வரும் சென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. சுவாமி விவேகானந்தர் ஆற்றிய ஆன்மிக உரைகளின் தொகுப்பான ''The Universe and Man'' என்ற புத்தகம்தான் சென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் வெளியிட்ட முதல் புத்தகமாகும். இப்புத்தகம் 29-3-1908ல் வெளியிடப்பட்டது. அன்று தொடங்கிய மடத்தின் பதிப்பகப் பணி இன்றுவரை 100 ஆண்டுகளாக இடைவிடாது நடந்து வருகிறது. இது பதிப்பகத் துறையில் மிகப்பெரிய சாதனையாகும். இதுவரை 800க்கும் மேலான ஆன்மீக நூல்கள் - ஷ்ரி ராமகிருஷ்ணர்-ஷ்ரி சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாந்தம் ஆகிய தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருத மொழிகளில் வெளிடப்பட்டுள்ளன.



நூற்றாண்டு விழாவையொட்டி

1. ஷ்ரி ராமகிருஷ்ணரின் கதை,

2. ஷ்ரி சாரதாதேவியின் கதை

3. சுவாமி விவேகானந்தரின் கதை

4. ஷ்ரி ராமகிருஷ்ணரின் ஞான முரசு

5. ஷ்ரி சாரதாதேவியின் அன்பு முரசு

6. விவேகானந்தரின் வீர முரசு

7. ஷ்ரி ராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

8. ஷ்ரி சாரதாதேவியின் சிந்தனைத் துளிகள்

9. சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்

10. The Story of Sri Ramakrishna

11. Story of Sri Sarada Devi

12. Story of Sri Vivekananda

13. Thus Spake Sri Ramakrishna

14. Thus Spake the Holy mother

15. Thus Spake Vivekananda

16.Flashes from Sri Ramakrishna

17.Flashes from Sri Sarada Devi

18 .Flashes from Swami Vivekananda

ஆகிய 18 நூல்களை ரூ. 1 விலையில் ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் வெளிடுகிறது. நூற்றாண்டு விழா காணும் ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம். வணங்குவோம்.

No comments: