இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை
இந்து முன்னணி தென்காசி நகரத் தலைவர் குமார் பாண்டியன் 17-12-2006 அன்று படுகொலை செய்யப்பட்டார். அப்போது விஜயபாரதத்தில் வெளியான செய்திக் கட்டுரை.
தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடுமை அரங்கேறி இருக்கிறது. ஹிந்து ஒற்றுமைப் பணிகளிலும் சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வந்த தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன், இஸ்லாமிய வெறியர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மலையன் தெருவைச் சேர்ந்த குமார் பாண்டியன், அந்தப் பகுதியில் மிகப் பிரபலமான சமூக சேவகர். இந்து முன்னணி நகர தலைவராக இருக்கும் அவர், ஹிந்துக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து முஸ்லிம்கள் மசூதி கட்டி வருகின்றனர். அந்த இடத்தில்தான் கார்த்திகை தீபத்தின்போது ஹிந்துக்கள் சொக்கப்பனை கொளுத்தும்போது உற்சவர் வருமிடம். மசூதி வந்துவிட்டால் அந்த வழியாக சாமி ஊர்வலம் வரக்கூடாது, மேளம் அடிக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் பிரச்சினை செய்வார்கள். இதனால் வருங்காலத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் மோதல் ஏற்படும் என்பதால் அங்கு மசூதி கட்டுவதை ஹிந்து இயக்கங்கள் எதிர்த்துப் போராடி வருகின்றன. குமார் பாண்டியனும் ஹிந்துக்களைத் திரட்டி இந்து முன்னணி சார்பில் போராட்டங்களை நடத்தினார். இதனால் முஸ்லிம் வெறியர்களின் பார்வை குமார் பாண்டியன்மீது விழுந்தது.
தென்காசியில் உள்ள பிரபல முஸ்லிம் தொழிலதிபர் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சா, குமார் பாண்டியன் வீட்டிற்கே பல தடவை சென்று, "மசூதி பிரச்சினையில் தலையிடாதே. நாங்க அந்த இடத்துல பெருசா மசூதி கட்டணும்ங்கிறது இறைவனோட விருப்பம். அதற்கு நீ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. பணத்தை வாங்கிட்டு ஒதுங்கிக்கோ" என்று மிரட்டியுள்ளார். செங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக(த.மு.மு.க) கூட்டத்தில் குமார் பாண்டியன் உள்ளிட்ட சில பா.ஜ.க, ஹிந்து இயக்கத் தொண்டர்களின் பெயரைக் கூறி அவர்களின் தலையை எடுத்துருவோம்னு பலர் பேசியுள்ளனர். பல முஸ்லிம் பெருந்தலைகளும் அவரை மிரட்டியுள்ளனர். பலமுறை அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் குமார் பாண்டியன் தொடர்ந்து நீதிக்காகப் போராடி வந்தார். முஸ்லிம்களிடமிருந்து மிரட்டல்கள் தொடர்ந்ததால், குமார் பாண்டியன் தென்காசி இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தியிடம் புகார் மனு அளித்தார். ஆனால் இந்த புகார் மனுவை போலீசார் கண்டு கொள்ளவே இல்லை.
இந்நிலையில் டிசம்பர் 17ம்தேதி குமார் பாண்டியனும், அவரது நண்பர் சேகரும் தென்காசி பஜாரில் சாப்பாடு வாங்கிக் கொண்டு முஸ்லிம் தெரு வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு முஸ்லிம்கள் அவரை வழிமறித்திருக்கிறார்கள். "ஏண்டா எங்களுக்குப் போட்டியா ஆம்புலன்ஸ் விடப்போறியா? எப்படி விடுறேன்னு பார்ப்போம்" என சவால் விட்டிருக்கிறார்கள். இதைக் கேட்ட குமார் பாண்டியன், "உங்க வேலையை நீங்க பாருங்க. நாங்க மக்களுக்காக ஆம்புலன்ஸ் விட்டே தீருவோம்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில் அங்கு மறைந்திருந்த முஸ்லிம் வெறியர்கள் குமார் பாண்டியனை முற்றுகையிட்டு சரமாரியாக அரிவாள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துவிட்டு, தயாராக நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தப்பித்து விட்டனர். குமார் பாண்டியனுடன் வந்த சேகர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டார்.
குமார் பாண்டியன் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மாவட்டம் முழுக்க காட்டுத்தீ போல் பரவியது. 5,000க்கும் அதிகமான ஹிந்துக்கள் தென்காசியில் திரண்டனர். தென்காசி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. "கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இந்தப் படுகொலைக்குக் காரணமான தொழிலதிபர் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சாவையும் கைது செய்ய வேண்டும். அதுவரை குமார் பாண்டியனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுமதிக்க மாட்டோம்." என்று மக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அதுவரை ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை வேடிக்கை பார்த்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து இயக்க நிர்வாகிகளிடம் சமரசம் பேசினார்கள். நெல்லை மாவட்ட எஸ்.பி செந்தாமரைக் கண்ணன் போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கொலையாளிகளைக் கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என ஹிந்துக்கள் அறிவித்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் போராட்டம் தொடர்ந்தது. உடனே போலீசார் அடக்குமுறையில் இறங்கினார்கள். ஹிந்துக்கள்மீது தடியடி நடத்தித் தாக்குதல் நடத்தினார்கள்.
போலீசார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் பணபலம், அரசியல் பலத்திற்கு முன்னால் போலீசார் கைகட்டி நிற்கின்றனர். கடந்த முறை தி.மு.க ஆட்சியின்போது ஹிந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தாக்குதல்கள் ஏராளமாய் நடந்தன. கோவையில் நடந்த குண்டுவெடிப்பையும் அதில் அத்வானி அதிர்ஷ்டவசமாக தப்பித்ததையும் நாம் எளிதில் மறக்க முடியாது. இப்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ஹிந்துக்களுக்கு தாக்குதல்களும், படுகொலைகளும் ஆரம்பித்துள்ளன. தி.மு.க அரசு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் முஸ்லிம் பயங்கரவாதிகள் எல்லாம் அரிவாளைத் தூக்கிக்கொண்டு வீதிக்கு வந்துவிட்டனர்.
பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் கருணாநிதி, ஈராக்கில், பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் கண்டன அறிக்கை வெளியிடும் கருணாநிதி ஒரு தமிழன் முஸ்லிம்களால் ஆடு, மாடுபோல வெட்டிக் கொல்லப்பட்டு பல நாட்களாகியும் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்.சிறுபான்மை மக்கள் தும்மினால்கூட அவர்களுக்கு துணை நிற்போம் என்று அறிவித்த கருணாநிதி, தமிழர்களின் உயிர் போய்க்கொண்டிருக்கும்போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் கருணாநிதியையே பின்பற்றுகிறார்கள். அரசும் அரசியல்வாதிகளும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. ஹிந்துக்கள் தங்கள் ஒற்றுமையின் மூலமே இதுபோன்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள முடியும். ஹிந்து ஒற்றுமைதான் அனைத்திற்கும் தீர்வாக இருக்க முடியும்.
திட்டமிட்ட படுகொலை!
No comments:
Post a Comment