August 17, 2007

சென்னைவாழ் குமரி ஹிந்துக்களின் குடும்ப சங்கமம்

கன்னியாகுமரி தமிழகத்தின் ஒரு மாவட்டமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. உணவு, உடை, மொழிநடை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் கேரளத்தின் தாக்கம் இருக்கும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தைப்போலவே கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம். கேரளத்தைப் போலவே ஹிந்து அமைப்புகளுக்கும் இங்கு வலுவான தளம் உண்டு.

குத்துவிளக்கும் ஏற்றும் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன்

குடும்பத்தோடு தங்கள் வருகையை பதிவு செய்யும் குமரி மக்கள்

திரண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

சுவாமி சைத்தன்யானந்த மகராஜ் பேசுகிறார்


கிருஷ்ண ஜெகந்நாதன் பேசுகிறார்


கேசவ விநாயகன் பேசுகிறார்


ப.சு.மணிகண்டன் பேசுகிறார்


வரும் ஆகஸ்டு 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை குரோம்பேட்டை எஸ். ஆர்.டி.எஃப் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் சென்னையில் வசிக்கும் குமரி மாவட்ட ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் ஒன்று ஏற்பாடாகி உள்ளது. சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் இயங்கும் தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இரண்டாவது முறையாக சென்னை வாழ் குமரி ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் நடைபெறுகிறது. சென்ற ஆண்டு பெரம்பூரில் நடைபெற்ற குடும்ப சங்கமத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு இதைவிட அதிக அளவில் குமரி மக்களை எதிர்பார்கிறார்கள் அமைப்பாளர்கள். சென்ற ஆண்டு நடந்த சங்கமத்தில் வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி சைத்தன்யானந்த மகராஜ், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தென் தமிழக அமைப்பாளருமான கோ. ஸ்தாணுமாலயன்,
ஆர்.எஸ்.எஸ்ஸின்வடதமிழக அமைப்பாளர் உ.சுந்தர்,சேவாபாரதியின் மாநிலப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், சேவாபாரதியின் வடதமிழக பொதுச் செயலாளர் ராம.ராஜசேகர்,
தர்ம ரக்ஷண சமிதியின் மாநில அமைப்பாளர் ப.சு.மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ்ஸின் வட தமிழக செயற்குழு உறுப்பினர் கிருஷ்ண ஜெந்நாதன், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேடையில் கோ.ஸ்தாணுமாலயன், சுவாமி சைத்தன்யானந்த மகராஜ், எஸ்.ராமன்


பங்கேற்பாளர் வரிசையில் ஆர்.ஆஸ்.எஸ்ஸின் வடதமிழக அமைப்பாளர் உ.சுந்தர்


திரண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

பங்கேற்பாளர் வரிசையில் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன்

திரண்ட பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

சென்னையில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் 19-08-2007 அன்று நடக்கும் இந்த குடும்ப சங்கமத்தில் பங்கேற்கலாம்.
மேலே நீங்கள் பார்த்து ரசித்தது சென்ற ஆண்டு பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்கள்.

No comments: