ராசாத்துபுரத்தில் அரசு உயர் அதிகாரிகள் குழு : விடிவு காலம் பிறக்குமா?
வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்காவில் உள்ளது மேல்விஷாரம் நகராட்சி. இந்த நகராட்சியில் உள்ள ராசாத்துபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி இந்த http://puduvaisaravanan.blogspot.com/2007_01_01_archive.html வலைப்பதிவில் நீங்கள் படித்திருக்கலாம். இது பற்றி விஜயபாரதத்தில் விரிவான ரிப்போர்ட் வந்த பிறகு மேல்விஷாரம் நகராட்சியை தன் பிடிக்குள் வைத்துள்ள ஜமாத் ராசாத்துபுரம் ஹிந்துக்களுக்கு இழைத்து வரும் கொடுமைகள் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தன. முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதாக் கட்சித் தலைவருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராசாத்துபுரத்திற்கு சென்றார்.
பா.ம.க தலைவர் ஜி.கே.மணி ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தின் நகல்
ராசாத்துபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சுவாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராசாத்துபுரத்தில் சுமார் 10,000 வன்னியர்கள் வசிக்கிறார்கள். தற்போது ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் இளவழகன் ராசாத்துபுரத்தைச் சேர்ந்தவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். இவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியும் ராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக்கக்கோரி
ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மைகாரர்களும் ஊர் மக்களும் பல ஆண்டுகளாக தனி ஊராட்சியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல வழிகளில் போராடி வருகின்றனர்.
ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மைகாரர்களும் ஊர் மக்களும் பல ஆண்டுகளாக தனி ஊராட்சியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல வழிகளில் போராடி வருகின்றனர்.
பா.ம.க தலைவர் ஜி.கே.மணிக்கு ராசாத்துபுரத்தைச் சேர்ந்த இளவழகன்(எம்.எல்.ஏ) எழுதிய கடிதத்தின் நகல்
ஜி.கே.மணியும், இளவழகனும் சட்டமன்ற உறுப்பினர்கள். ராசாத்துபுரம் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இவர்கள் இந்த கோரிக்கைய ஒருபோதும் சட்டமன்றத்தில் எழுப்பியதாகத் தெரியவில்லை. மேல்விஷாரத்தில் சுமார் 25,000 முஸ்லிம்கள் உள்ளனர். பல நூறு கோடிகளை குவிக்கும் தோல் தொழிற்சாலை அதிபர்கள் இந்த ஊரில் உள்ளனர். அ.தி.மு.க, தி.மு.க,பா.ம.க.காங்கிரஸ் என எல்லா அரசியல் கட்சிகளையும் முஸ்லிம் தொழிலதிபர்கள் நன்றாக கவனித்து விடுகின்றனர். இதனால் அரசில் கட்சிகள் மேல்விஷாரம் ஜமாத்தை எதிர்த்து வாய்திறப்பதில்லை. ராசாத்துபுரத்தில் 10,000 வன்னியர்கள் இருப்பதால் அவர்களின் வாக்குகளை தக்க வைப்பதற்காக ஜி.கே.மணி ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பியதோடு மவுனமாகி விட்டார்.
ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மைதாரர்களுக்கு பேரூராட்சிகளின் இயக்குநர் பெ.சண்முகம் எழுதிய கடிதத்தின் நகல்
ராசாத்துபுரம் மக்களுக்கு ஆதரவாக விஸ்வ ஹிந்து பரிஷத் களம் இறங்கியது. வி.இ.பரிஷத் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம், மாநில இணை அமைப்பாளர் வீரபாகு, வி.இ.பரிஷத் இளைஞரணி அமைப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் ராசாத்துபுரத்திற்குச் சென்று அங்கு நடந்த பல போராட்டங்களில் பங்கு கொண்டனர். ராசாத்துபுரம் மக்களின் தொடர் போராட்டம் இப்போதுதான் அரசின் காதுகளை எட்டி இருக்கிறது. ராசாத்துபுரத்தை தனி ஊராட்சி ஆக்குவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய நகராட்சிகளின் கூடுதல் ஆணையர் பிச்சை ஆகஸ்டு 10ம் தேதி ராசாத்துபுரத்திற்கு வந்து முதல் கட்ட விசாரணை நடத்தினார்.
கமிஷனர் பிச்சையின் வருகைக்கு பிறகு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் மார்டி தலைமையில் இணை ஆணையர் சண்முகம், நிதித் துறை ஆலோசகர் லிங்குசாமி, வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப், பயிற்சி கலெக்டர் லட்சுமி பிரியா, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுதர்சன் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்டு 16ம் தேதி மேல்விஷாரம் மற்றும் ராசாத்துபுரத்திற்கு வருகை தந்தனர். ராசாத்துபுரம் கிராமத்தை இக்குழுவினர் சுற்றிப் பார்த்தனர். ராசாத்துபுரம் புவனேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசணைக் கூட்டத்தில் மக்களிடம் இக்குழுவினர் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
கமிஷனர் பிச்சையின் வருகைக்கு பிறகு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் மார்டி தலைமையில் இணை ஆணையர் சண்முகம், நிதித் துறை ஆலோசகர் லிங்குசாமி, வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப், பயிற்சி கலெக்டர் லட்சுமி பிரியா, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சுதர்சன் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆகஸ்டு 16ம் தேதி மேல்விஷாரம் மற்றும் ராசாத்துபுரத்திற்கு வருகை தந்தனர். ராசாத்துபுரம் கிராமத்தை இக்குழுவினர் சுற்றிப் பார்த்தனர். ராசாத்துபுரம் புவனேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசணைக் கூட்டத்தில் மக்களிடம் இக்குழுவினர் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இக்கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள்
கோபால் நாயக்கர்(ராசாத்துபுரம் கிராம நாட்டாண்மை) :
ராசாத்துபுரம் மக்களாகிய நாங்கள் சுகாதார கேட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். உதாரணத்திற்கு அருகில் உள்ள பஜனைக்கோவில், மசூதி ஆகியவை எப்படி உள்ளது என்று பார்த்தாலே ஊர் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும். தோல் தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயம் அறவே இல்லாமல் போய்விட்டது. பீடி சுற்றி பிழைப்பு நடத்தும் ராசாத்துபுரம் மக்களுக்கு பாலாற்று நீர் வழங்காமல் குடிக்க லாயக்கற்ற தண்ணீரை வழங்குகிறார்கள். தீவிரவாத கொள்கை உடையவர்களால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் அதிகாரிகளும் பழிவாங்கப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். இது போன்ற கொடுமைகளை இங்குதான் காணமுடியும்.
ராசாத்துபுரத்தில் நடந்த கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்ற ராசாத்துபுரம் கிராம மக்கள்
ராமகிருஷ்ணன்(ராசாத்துபுரம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்):
எங்கள் கோரிக்கை அரசுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எதிரானதல்ல. 10 வருடங்களுக்கு முன்பு சலீம் என்பவர் தலைவராக இருந்தபோது கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தேர்தலே இல்லாமல் ஜமாத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு வந்த தலைவரும் 90 சதவீத பணிகளை எங்கள் பகுதிக்கு செய்திருப்பதாக தவறான தகவல் கொடுத்தார். இது பற்றி கேட்கச் சென்ற எங்கள் மீது போலீசாரை ஏவிவிட்டு தடியடி நடத்தினார்கள். 21 பேர் சிறை சென்றோம். 3 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் வெற்றி கண்டோம். எனவே எங்களுக்கு தனி ஊராட்சி அவசியம்.
குப்புசாமி நாயக்கர்(காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்) :
செல்வம் கொழிக்கும் பகுதியாக இருந்த எங்கள் கிராமம் இன்று தோல் தொழிற்சாலைகளால் மயான பூமியாக காட்சி தருகிறது. மேல்விஷாரம் என்ற குட்டி பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டு நாங்கள் அடிமைகள்போல வாழ்கிறோம். எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் மலைமேல் 300 வீடுகள் கட்டு சகல வதிகளுடன் வாழ்கின்றனர். எங்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. எனவே தனி பஞ்சாயத்து அவசியம்.
சுந்தரசேன்(முன்னாள் பேரூராட்சி தலைவர்)
ரூ. 6 லட்சம் செலவில் ராசாத்துபுரம் பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ததாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்கள். அது பற்றி கேட்டதற்கு ஜெயிலுக்கு போகனுமா... என்று அதிகாரிகளை விட்டு மிரட்டுகின்றனர். ராசாத்துபுரம் பகுதியில் நான்கு அரிஜன காலனி உள்ளது. இறந்தவர்களை எடுத்துச் செல்லக்கூட வழி இல்லை. அவர்களிடத்தில் மனிதாபிமானம் என்பதே இல்லை. எங்களுக்கு தனி ஊராட்சி அவசியம்.
முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள், ஜெயலட்சுமி, பா.ம.க தலைவர் சம்பத், ரவிச்சந்திரன், மகளிர் சுய உதவிக்குழு தலைவி புவனேஸ்வரி, தி.மு.கவைச் சேர்ந்த வரதராஜி, பழனி, ஆறுமுகம், இளவரசன், மணி, கணேசன், வி.பெருமாள், அமுதா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களுக்கு தனி ஊராட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.
இவர்களுக்கு பதில் அளித்து பேசிய நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிரஞ்சன் மார்டி உங்கள் கருத்துக்ளை கூறியுள்ளீர்கள். விண்ணப்பங்களை கொடுத்துள்ளீர்கள். எற்கனவே எங்களின் நகராட்சி நிர்வாக கூடுததல் இயக்குநர் பிச்சை மேல்விஷாரம், ராசாத்துபுரம் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளார். இது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிப்போம் என்று பதிலளித்தார்.
ராசாத்துபுரம் கூட்டத்தை முடித்துக் கொண்டு அதிகாரிகள் குழு மேல்விஷாரம் சென்றது. அங்கு மெகர் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அப்துல் மசான், கவுன்சிலர்கள் ஜபருல்லா, அப்துல் ரஹிம், மேல்விஷாரம் நகராட்சி தலைவர் முகம்மது கலிமுல்லா உள்ளிட்ட பலர் பேசினார்கள். ராசாத்துபுரத்திற்காக வழக்குபோட சுப்பிரமணிய சுவாமி யார்? ராசாத்துபுரத்தை தனியாக பிரிக்க கூடாது என்று அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசினார்கள்.
அரசு உயர் அதிகாரிகளின் குழு வந்து விசாரித்து இருப்பதே பெரும் வெற்றிதான் என்கிறார்கள் ராசாத்துபுரம் மக்கள். மேல்விஷாரத்திற்கு அரசியல் தலைவர்களோ, அரசு அதிகாரிகளோ வந்தால் மேல்விஷாரத்தில் உள்ள பிரபல தொழில் அதிபர் ஒருவரின் கே.எச்.எம் கெஸ்ட ஹவுஸில்தான் தங்குவார்களாம். ஆனால் இந்த முறை அதிகாரிகள் அங்கு தங்கவில்லை. அதனால் ராசாத்துபுரம் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஆனால் ஒட்டுக்காக முஸ்ஸிம்களா தாஜா செய்யும் கருணாநிதி ஆட்சியில் இது நடக்குமா என்ற சந்தேகமும் ராசாத்துபுரம் மக்களுக்கு இருக்கிறது. பா.ம.க தலைவர் ராமதாஸ் எது எதற்கோ மத்திய அரசை மிரட்டி வருகிறார். ஆனால் இந்தப் பிரச்சினையில் மவுனம் சாதித்து வருகிறார். 10,000 வன்னியர்களைவிட முஸ்லிம்களின் வாக்குகள் அவருக்கு முக்கியமாகத் தெரிகிறது. வன்னியர்கள் எப்படியும் வாக்களித்து விடுவார்கள். ஆனால் இங்கு முஸ்லிம்களை பகைத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காது என ராமதாஸ் கணக்கு போடுவதாக ராசாத்துபுரத்தில் பா.ம.கவினரே கூறுகின்றனர்.
ராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதிய ஜி.கே.மணியும், இளவழகனும் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்பதே ராசாத்துபுரம் மக்களின் கோரிக்கை. முதல்வர் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்த ஜி.கே.மணியும், பா.ம.க மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் இளவழகனும் இதை செய்வார்களா?
No comments:
Post a Comment