December 21, 2007
December 14, 2007
நெல்லை தி.மு.க இளைஞரணி மாநாடு : தி.மு.க எம்.பி புறக்கணிப்பு!
திருநெல்வேலியில் தி.மு.க இளைஞரணி மாநாடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆடம்பரமாக நடந்து வருகிறது. இம்மாநாட்டில் தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பயபக்தியுடன் பங்கேற்றுள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின் உட்பட அனைத்து தி.மு.கவினரும் திருப்புமுனை மாநாடு என்று வர்ணிக்கும் இம்மாநாட்டில் தற்போது தி.மு.க எம்.பியாக இருக்கும் ஒருவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? ஆனால் அவரது பெயரைச் சொன்னால் வந்த ஆச்சரியம் எல்லாம் பறந்து போய்விடும். யார் அந்த எம்.பி ? நம்ம கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் தான்.

Posted by
புதுவை சரவணன்
2
comments
at 8:14 PM
சானியா மிர்சா மன்னிப்பு : இறுதி வெற்றி வகாபியிசத்துக்குத்தான்!
தினத்தந்தி(14-12-2207) செய்தி. பெரிதாக்கி படிக்கவும்.
இனி இப்படிதான் சானியா காட்சி கொடுக்க வேண்டுமோ?
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 12:40 AM
December 13, 2007
மலேசியா மீது பொருளாதாரத் தடை : இராமகோபாலன் அறிக்கை
மலேசியாவில் இந்துக்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டு வரும் மலேசியாவிடமிருந்து பாமாயில் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்றும், அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
25.11.07 அன்று மலேசியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற 400 இந்து பக்தர்களை கோயில் வளாகத்திற்குள்ளேயே சுற்றி வளைத்து அடித்து 300 போலீசார் காயப்படுத்தி யிருக்கிறார்கள்.மலேசிய இந்துக்களை பயமுறுத்து வதற்காக அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் போட்டு கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.இனிமேல் இந்துக்கள் தங்கள் உரிமைக்கு போராடக்கூடாது என்பதற்காக அடக்கு முறையைக் கையாண்டு மலேசிய அரசு மிரட்டுகிறது. வழக்கம்போல் மலேசிய போலீசார், பக்தர்கள் தங்களை அடித்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டி இருக்கிறார் கள். சாதாரண இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் வாதாடுவதற்கு மலேசிய நாட்டு அட்டர்னி ஜெனரல் தாமே நீதிமன்றத்திற்கு வந்து ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடி இருக்கிறார்.
காமன்வெல்த் நாடுகளில் மலேசியா ஒரு உறுப்பு நடாக இருப்பதால் பிரிட்டன் மலேசிய அரசைக் கண்டித்து இந்திய வம்சாவளியினரான இந்துக்களை கொடுமைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.பிரிட்டனில் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள பொது மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மலேசியாவுக்கு மூக்கணாங்கயிறு போட வேண்டும். ஐ.நா.சபையும் தனக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லி தப்ப முடியாது.இந்துக்களை அடித்து விரட்ட "பூமி புத்ர' பிரச்சாரம் நடந்து வருவது வெட்கக்கேடு பாரதத்தின் மைய அரசு குரல் எழுப்புவதன் மூலம், மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், பாரதம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை நிறுத்த வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் தான் மலேசிய நாட்டு அரசை வழிக்கு கொண்டு வர முடியும்.இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
சம உரிமை, சமநீதி, சமவாய்ப்புக் கிடைப்பது அத்தியாவசியம்.இந்துக்கள் தன்மானத்துடனும், பாதுகாப்புடனும் வாழவும், மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.இந்த பிரச்சனையில் மலேசிய நாட்டுப் பிரதமரிடம் பேசி நமது பாரதப் பிரதமர் இந்துக்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்திக் கொள்ளும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
Posted by
புதுவை சரவணன்
2
comments
at 10:14 PM
மலேசியாவில் அடக்குமுறை : 5 தமிழர் தலைவர்கள் கைது
மலேசியாவில் இந்துக்களின் வாழ்வுரிமையைக் காக்க போராடிய Hindu Raghts Action Force (HINDRAF)அமைப்பின் தலைவர்களான கங்காதரன், வசந்தகுமார், உதயகுமார், மனோகரன், கணபதிராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் 5 பேரும் எங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலைக்கூட அரசு வெளியிடவில்லை. HINDRAF அமைப்பின் போரட்டத்தை முடக்குவதற்காக இதுபோன்ற அடக்குமுறைகளில் மலேசிய முஸ்லிம் அரசு இறங்கியுள்ளது. HINDRAF அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தமிழகத்திற்கு வந்து தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம்.கோபாலன் ஆகியோரைச் சந்தித்து மலேசியாவில் இந்துக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.



தினமலர் நாளிதழில் வந்த செய்தி(14-12-2007)

Posted by
புதுவை சரவணன்
1 comments
at 9:53 PM
ராம சேது புத்தகம் வெளியீடு
சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி முரசொலியில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து `சேது' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்போது "ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கம்" `ராமசேது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகம் ராமர் பாலம் மட்டுமல்ல சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய பல சந்தேகங்களுக்கு தெளிவான விடையளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் திரு.சூர்யநாரயண ராவ், `ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்'தின் அகிலபாரதத் தலைவர் டாக்டர். எஸ். கல்யாணராமன், செயலாளர் வழக்கறிஞர் டி.குப்புராமு, விஜயபாரதம் ஆசிரியர் நா.சடகோபன் ஆகியோர் உதவியுடன் அப்புத்தகத்தை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆசிய வளர்ச்சி வங்கியில் முக்கிய பொறுப்பு வகித்த சரஸ்வதி நதி ஆராய்ச்சியாளர் டாக்டர். எஸ். கல்யாணராமன் வலைப்பதிவில் எனது எழுத்துக்களை படித்துவிட்டு புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அவருக்கு என் நன்றி. இப்புத்தகம் 11-12-2007 அன்று சென்னை தி.நகர் பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் வெளியிடப்பட்டது.டாக்டர். எஸ். கல்யாணராமன் அவர்களும் வழக்கறிஞர் டி.குப்புராம் அவர்களும் புத்தகத்தை வெளியிட பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
விலை ரூ. 5/- பக்கங்கள் : 60
கிடக்கும் இடம் : 1, எம்.வி.நாயுடுத் தெரு, சேத்துப்பட்டு, சென்னை - 600031.
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 5:47 AM
நரேந்திர மோடிக்கு ஆதரவாக இந்திரா காந்தி குடும்பத்தினர் பிரச்சாரம்
நரேந்திர மோடியை ஆதரித்து இந்திரா காந்தியின் மருமகள் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா கந்தியும், அவரது மகன் வருண் கந்தியும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பரோடா நகரில் தாய் மேனகா காந்தியுடன் நரேந்திர மோடிக்காக வாக்குகளை சேகரிக்கும் வருண் காந்தி.
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 5:05 AM
நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவுஞ்சலி : வீரர்களின் உறவினர்கள் புறக்கணிப்பு




அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து அவனது குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் குரல் கொடுத்தன. இந்நிலையில் இன்று(13-12-2007) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உயிரிழந்த வீரர்களின் குடும்பதினர் புறக்கணித்தனர். "சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். அப்சல் குரு விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது" என உயிரிழந்த வீரர்களின் குடும்பதினர் வேதனை தெரிவித்துள்ளனர்.



அப்சல் குருவை தூக்கிலிடக்கோரி பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியினர் அதன் தலைவர் எம்.எஸ்.பிட்டா தலைமையில் நேற்று(12-12-2007) டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஏற்கனவே உயிரிழந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை ஜனாதிபதியிடம் திரும்ப ஒப்படைத்தனர். இதைவிட ஒரு அரசுக்கு கேவலம் இருக்க முடியாது. ஆனாலும் முஸ்லிம்களின் ஓட்டுக்காக அப்சல் குருவுக்கு இத்தாலி சோனியாவின் பிடியில் இருக்கும் அரசு கருணை காட்டி வருகிறது. இப்போது அஞ்சலி நிகழ்ச்சியை புறக்கணித்து மீண்டும் மத்திய அரசிற்கு தங்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். சூடு சொரணையை சோனியாவிடம் அடகு வைத்துள்ள மன்மோகன் சிங் அரசுக்கு இதெல்லாம் உறைக்காது. என்ன செய்வது நம் நாட்டின் தலைவிதி இது.
Posted by
புதுவை சரவணன்
1 comments
at 3:33 AM
December 12, 2007
நந்திகிராம படுகொலைகள் பற்றி சென்னையில் முன்னாள் டி.ஜி.பி பிரச்சாரம்
நந்திகிராமத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய படுகொலைகள் பற்றி விசாரிப்பதற்காக முன்னாள் அசாம் உயர்நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட தன்னார்வ குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி டோக்ராவும் இடம் பெற்றிருந்தார். இக்குழு நந்திகிராமத்திற்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்து அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கை ஜனாதிபதிக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டது.
நந்திகிராம் சென்ற உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் மாநில டி.ஜி.பி டோக்ரா நாடு முழுவதும் நந்திகிராம படுகொலைகள் பற்றி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். 12-12-2007 அன்று சென்னையில் Justice on Trail மற்றும் chennai Media Centre தி,நகர் பா.ஜ.க அலுவலகத்தில் நடத்திய நிகழ்ச்சியில் டோக்ராவும், சமூக சேவகர் நபீசா ஹூசனும் நந்திகிராமத்தில் நடந்த படுகொலைகள், கற்பழிப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை விஜயபாரதம் ஆசிரியர் நா.சடகோபன் தொகுத்து வழங்கினார். முன்னதாக டோக்ராவும், நபீசா ஹூசைனும் மாலை 4 மணிக்கு சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
"நந்திகிராமத்தில் வாழும் பெரும்பாமையான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். மேற்கு வங்கத்தை ஆளும் கம்யூனிஸ்டு அரசு அந்த கிராமத்தில் உள்ள 4,800 ஏக்கர் நிலத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்த முயன்றது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நந்திகிராமத்திற்குள் நுழைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் போலீசார்போல உடையணிந்து பயங்கரமான ஆயுதங்களுடன் கிராம மக்களைத் தாக்கினார்கள். போலீசார் கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் பலர் உயிழந்தனர். பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.





Posted by
புதுவை சரவணன்
0
comments
at 10:49 PM
விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார்
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 10:00 PM
மகாகவி பாரதியாரின் 126வது பிறந்த நாள். சில காட்சிகள்......
பாரதியாரின் நினைவு இல்லம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியின் சிலையை ஜதி பல்லக்கில் வைத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் ஆகியோர் சுமந்து வருகிறார்கள். ஜதி பல்லக்கில் ஊர்வலமாக வரும் மகாகவியின் சிலை முன்பு நடனமாடும் மாணவிகள்.


பாரதி அவதரித்த எட்டையபுரம் யூனியன் அலுவலகத்தில் நடந்த பாரதி விழாவில் பாரதி வேடமணிந்த மாணவர்கள்.
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 8:33 PM
December 11, 2007
மலேசியாவில் நடக்கும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது இந்த பிஞ்சின் கடிதம்.
மலேசியாவில் இந்துக்களின் அடையாளத்தைக் காப்பதற்காக் போராடும் Hindu Rights Action Force (Hindraf) அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து 8 வயது குழந்தை எழுதிய கடிதம். மலேசியாவில் நடக்கும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது இந்த பிஞ்சின் கடிதம்.
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 4:41 AM
மசூதியின் முன்பு ஜீன்ஸ் பேன்ட் - டீ சர்ட் அணிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு முஸ்லிம் இளம் பெண் போஸ் கொடுக்கலாமா?
மசூதியின் முன்பு ஜீன்ஸ் பேன்ட் - டீ சர்ட் அணிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு முஸ்லிம் இளம் பெண் போஸ் கொடுக்கலாமா? பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறது இஸ்லாம். ஆனால் பிரபலமாக இருக்கும் சில இஸ்லாமிய பெண்கள் பர்தாவை துறப்பதோடு உடலை கவர்ச்சியாக காட்டும் உடைகளை அணிந்து சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு பொது இடத்தில் உலா வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி முன்பு 10-12-2007 அன்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஜீன்ஸ் பேன்ட் - டீ சர்ட் அணிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு விளம்பர படத்திற்காக போஸ் கொடுத்துள்ளார்.


டென்னிஸ் ஆடுகளத்தில் சானியா அணிந்திருந்த குட்டை பாவாடை இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக மினி ஸ்கர்ட்டானது. இப்போது முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட பெரிதாக மதிக்கும் மசூதி முன்பு ஜீன்ஸ் பேன்ட்- டீ சர்ட் அணிந்து போஸ் கொடுத்ததை இஸ்லாமியர்கள் எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? முன்பு பலமுறை இஸ்லாமியர்களின் எதிர்ப்பை எதிர் கொண்ட அனுபவம் சானியாவுக்கு இருக்கிறது. தஸ்லிமாவுக்கு நேர்ந்த கதியும் சானியாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தும் சானியா இப்படி துணிவுடன் போஸ் கொடுத்திருக்கிறார். சானியாவுக்கு துணிச்சல் அதிகம்தான்.
Posted by
புதுவை சரவணன்
3
comments
at 3:28 AM
December 10, 2007
தமிழகத்திற்கு சேவையாற்றும் பா.ஜ.க முதல்வர்கள்
சுனாமி அரக்கன் தமிழகத்திற்கு விஜயம் செய்து வரும் டிசம்பர் 26-ம் தேதியோடு மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. சுனாமி வந்ததும் பல மாநில அரசுகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அறிவித்தது. பல கிராமங்களைத் தத்தெடுத்து வீடுகளை கட்டித் தருவதாக பல மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்புகள் எல்லாம் அலையோடு அலையாய் கடலில் கரைந்து போனது. ஆனால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறார்கள்.
சேவாபாரதியின் தமிழக பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், சேவாபாரதி பொறுப்பாளர் சங்கரன் ஆகியோர் சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்கிடம் வீட்டின் மாதிரியை ஒப்படைக்கின்றனர்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

மத்திய பிரதேச முதல்வர் சிவரஜ்சிங் சவுகான்

மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த அரசும்(தமிழக அரசு உட்பட) இதுவரை ஒரு வீட்டைக்கூட கட்டித்தரவில்லை. ஆனால் இந்த மாநில முதல்வர்களோ அமைச்சர்களோ சுனாமி நிவாரணப் பணிக்காக தமிழகம் வந்தால் அவர்களுக்கு புரட்டக்கால்படி தமிழக அரசு வரவேற்பும் மரியாதையும் தருவதில்லை. சத்தீஸ்கர் மாநில அரசு கட்டித் தந்துள்ள வீடுகளின் திறப்பு விழாவிற்கு அம்மாநில முதல்வர் ரமன் சிங்கை சேவாபாரதியின் நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அப்போது இதனைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். ஆனாலும் வீடுகள் திறப்பு விழாவிற்கு வர சம்மதித்துள்ளார். மற்ற மாநில அரசுகள் செய்யாததை பா.ஜ.க மாநில அரசுகள் செய்துள்ளது. தமிழகத்திற்கு நலப்பணிகளை நிறைவேற்றி வரும் நரேந்திர மோடி, ரமன் சிங், சிவராஜ்சிங் சவுகான் ஆகியோருக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்த வேண்டும்.
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 11:53 PM
கேரள கம்யூனிஸ்டு அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு
கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டம் மார்க்கிஸ்டுகளின் வன்முறைக் களம். நீங்கள் பாகிஸ்தானுக்குகூட சுலபமாக சென்று வந்துவிடலாம். கண்ணூர் மாவட்டத்திற்குள் யாரும் அவ்வளவு சுலபமாக சென்று வந்துவிட முடியாது. வானத்து நட்சத்திரங்களைக்கூட எண்ணிவிடலாம். கண்ணூரில் மார்க்கிஸ்டுகளால் கொன்று குவிக்கப்பட்டவர்களை யாரும் எண்ணிவிட முடியாது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. கண்ணூரை பற்றி அறிந்த அனைவருக்கும் இந்த உண்மையை அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்க்கு மாறிவிட்டார்கள் என்பதற்காக மிக நெருங்கிய உறவினர்களைக்கூட கம்யூனிஸ்டுகள் கொன்று குவித்திருக்கிறார்கள்.
9-12-2007 அன்று கண்ணூர் மாவட்டம் கோளாரி என்ற இடத்தில் உள்ள கம்யூனிஸ்டு அலுவலகத்தில் மார்க்கிஸ்ட் தொண்டர்கள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதில் தலசேரியைச் சேர்ந்த ஷஜில்(29)மார்க்கிஸ்ட் தொண்டர் உடல் சிதறி உயிரிழந்தார். பிரபீஷ்(27), தீலிப்(28),ரஜீஷ்(27) ஆகிய மூன்று மார்க்கிஸ்ட் தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குன்டு வெடிப்பின் மூலம் கேரள கம்யூனிஸ்டு அலுவலகங்கள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக செயல்படுவது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
Source : Maalai Malar(Tamil evening daily) 10-12-2007
Posted by
புதுவை சரவணன்
1 comments
at 8:43 AM
முஸ்லிம் பயங்கரவாதிகளின் பார்சல் குண்டுக்கு பலியான இந்துப் பெண்
நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி தலைவராக் இருந்த முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் முத்துகிருஷ்ணன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பயங்கரவாதிகள் பார்சலில் அனுப்பிய குண்டு வெடித்து பலியானார். பயங்கரவாதத்திற்கு பலியான திருமதி. தங்கம் முத்துகிருஷ்ணனின் படம்.
Posted by
புதுவை சரவணன்
1 comments
at 6:12 AM
சென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பக துறைக்கு வயது 100!
பதிப்பகத் துறையில் சாதனை படைத்து வரும் சென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. சுவாமி விவேகானந்தர் ஆற்றிய ஆன்மிக உரைகளின் தொகுப்பான ''The Universe and Man'' என்ற புத்தகம்தான் சென்னை ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் வெளியிட்ட முதல் புத்தகமாகும். இப்புத்தகம் 29-3-1908ல் வெளியிடப்பட்டது. அன்று தொடங்கிய மடத்தின் பதிப்பகப் பணி இன்றுவரை 100 ஆண்டுகளாக இடைவிடாது நடந்து வருகிறது. இது பதிப்பகத் துறையில் மிகப்பெரிய சாதனையாகும். இதுவரை 800க்கும் மேலான ஆன்மீக நூல்கள் - ஷ்ரி ராமகிருஷ்ணர்-ஷ்ரி சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாந்தம் ஆகிய தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருத மொழிகளில் வெளிடப்பட்டுள்ளன.
நூற்றாண்டு விழாவையொட்டி
1. ஷ்ரி ராமகிருஷ்ணரின் கதை,
2. ஷ்ரி சாரதாதேவியின் கதை
3. சுவாமி விவேகானந்தரின் கதை
4. ஷ்ரி ராமகிருஷ்ணரின் ஞான முரசு
5. ஷ்ரி சாரதாதேவியின் அன்பு முரசு
6. விவேகானந்தரின் வீர முரசு
7. ஷ்ரி ராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
8. ஷ்ரி சாரதாதேவியின் சிந்தனைத் துளிகள்
9. சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்
10. The Story of Sri Ramakrishna
11. Story of Sri Sarada Devi
12. Story of Sri Vivekananda
13. Thus Spake Sri Ramakrishna
14. Thus Spake the Holy mother
15. Thus Spake Vivekananda
16.Flashes from Sri Ramakrishna
17.Flashes from Sri Sarada Devi
18 .Flashes from Swami Vivekananda
ஆகிய 18 நூல்களை ரூ. 1 விலையில் ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் வெளிடுகிறது. நூற்றாண்டு விழா காணும் ஷ்ரி ராமகிருஷ்ண மடத்தின் பதிப்பகம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம். வணங்குவோம்.
Posted by
புதுவை சரவணன்
0
comments
at 5:46 AM