December 31, 2006

சொர்ணத்தேவரின் மகன் தமிழன் இல்லையா?


இராக்கின் அதிபராய் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து உலகத்தையே வியக்க வைத்த சதாம் உசேனை பக்ரீத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு தூக்கிலிட்டு குர்பானி பிரியாணியாக சமைத்து போட்டுள்ளார் ஜார்ஜ் புஷ். சதாம் உசேன் தூக்கலிடப்பட்டதற்கு ஈராக்கில் எதிர்ப்பைவிட ஆதரவே அதிகம். ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி உட்பட பலர் சதாமின் பக்தர்களாகவே மாறி விட்டனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மாறன் சிலைக்கு அருகில் மாவீரன் சதாமுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சதாமுக்காக இரக்கப்பட்டு அறிக்கை விட்ட தமிழினத் தலைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன் குடும்பத்திற்கு இதுவரை ஆறுதலும் கூறவில்லை. தான் முதல்வராக இருக்கும்போது நடந்த இந்த படுகொலையை கண்டிக்கவும் இல்லை. ஒருவேளை தென்காசி சொர்ணத் தேரின் மகன் தமிழன் இல்லை என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து விட்டாரா? சொர்ணத்தேவரின் மகன் தமிழனா? சதாம் உசேன் தமிழனா? தன்னை உலக தமிழர்களின் தலைவர் என்ற கூறிக்கொள்ளும் கருணாநிதிதான் பதில் சொல்ல வேண்டும்.

2 comments:

Anonymous said...

இந்துவாக பிறந்ததை பெருமையாக நினைக்கும் எவரும் தமிழராக முடியாது.

அவர்கள் பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீய அடிவருடிகள்.

Anonymous said...

//இந்துவாக பிறந்ததை பெருமையாக நினைக்கும் எவரும் தமிழராக முடியாது.//

அப்படி என்றால் ஹிந்துவாக பிறந்ததை பெருமையாக நினைத்த மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன் ஆகியோர் யார்? இவர்கள் தமிழர்கள் இல்லையா? மார்க்கத்திற்கு மாறியவன் என்ற பெயரில் மறைந்து கொண்டிருக்கும் அரை வேக்காடுகளுக்கெல்லாம் பதிலளித்து புதுவை சரவணன் போன்றவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.