January 11, 2007

"அல்லாவுக்காக அம்மாவையும் கொல்வேன்"

"நான் 22 காஷ்மீர் பண்டிட்களை கொன்றிருக்கலாம். என்னால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக கூட இருக்கலாம். எனக்கு சரியாக நினைவில் இல்லை" என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான் பரூக் அகம்மது தர் என்கிற இஸ்லாமிய பயங்கரவாதி. காஷ்மீர் மாநில ஆல் இந்தியா ரேடியோவுக்கு அவன் அளித்துள்ள பேட்டி மனித்தன்மை உள்ள எல்லோரையும் கதிகலங்க வைத்துவிடும். இஸ்லாம் எப்படி ஒரு மனிதனை மிருமாக்குகிறது என்பதற்கு இப்பேட்டியே சாட்சி. இஸ்லாத்திற்காக சொந்த சகோதரனை ஏன் பெற்ற தாயைக்கூட கொல்ல தயங்க மாட்டேன் என்று கொஞ்சம்
கூட இரக்கம் இல்லாமல் சர்வ சாதாரணமாக சொல்கிறான் பரூக் அகம்மது தர். இஸ்லாமை புரிந்து கொள்ள இந்த பேட்டி உதவும் என்று நம்புகிறேன்.


நீ ஏன் பயங்கரவாதி ஆனாய்?
உள்ளூர் நிர்வாகத்தின் தொல்லையால் வெறுப்படைந்து பயங்கரவாத கூட்டத்தில் இணைந்தேன்.
அதனால்தான் பாரதத்தின் விரோதி ஆனாயா?
ஆமாம்.
உள்ளூர் நிர்வாகம் உன்னை சரியாக கவனிக்கவில்லை என்பது தான் நீ தேச விரோதி ஆனதற்கு காரணமா?
ஆமாம்.
அதனால்தான் அப்பாவி மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தாயா?
நானாக அப்பாவிகளைக் கொல்லவில்லை. மேலிட உத்தரவுப் படி கொலை செய்தேன்.
மேலிடம் என்றால் யார் உத்தரவு இடுவது?
இஷ்பாக் மஜித் வானி.
(காஷ்மீர் விடுதலை முன்னணி ஏரியா கமாண்டர் இஷ்பாக் மஜித் வானி, பயங்கரவாத இயக்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்த பரூக் அகம்மது தர்யை, எல்லைக் கோட்டுக்கு அப்பால் பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அழைத்துச் சென்று 32 நாட்கள் பயிற்சி அளித்துள்ளான். பாகிஸ்தானியர்கள் யாரையும் நம்புவதில்லை. இவர்களின் கண்களைக் கட்டியே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்)
ஆக, அவர்கள் உங்களை நம்புவதில்லை. உங்களை எங்கு அழைத்துச் சென்றாலும் கண்களைக் கட்டித்தான் அழைத்துச் செல்வார்கள். அப்படித்தானே?
என்னை மட்டுமல்ல, எல்லாரையும் அப்படித்தான் அழைத்துச் செல்வார்கள்.
உங்களை துளியும் நம்பாத அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?
அப்படியல்ல. காஷ்மீரைப் பிரித்து விடுவோம்; காஷ்மீருக்கு விடுதலை கிடைக்கும் என்றே நம்பினோம். அப்படித்தான் எங்களுக்கு சொல்லப்பட்டது.
எப்போது கொலை செய்தாலும் இஷ்பாக் அகமத் வானியின் கட்டளைப்படி மட்டும்தான் கொலை செய்வாயா அல்லது உனது சொந்த முடிவின் அடிப்படையிலும் கொலை செய்வாயா?
இல்லை. மேலிடத்தின் உத்தரவுப் படியே கொலை செய்வேன். நானாக யாரையும் எப்போதும் கொன்றது இல்லை.
ஆக உத்தரவுப் படி யாரை வேண்டுமானாலும் கொலை செய்வாய்?
ஆமாம்.
யாராக இருந்தாலும் என்றால் சொந்த சகோதரனைக் கூடவா?
ஆம்... உடன் பிறந்த சகோதரன் என்றாலும் கொன்றிருப்பேன்.
உன் அம்மாவையே கொல்லச் சொன்னாலும் கொன்றிருப்பாயா?
ஆமாம், அம்மாவை கொல்லும் படி கட்டளை வந்தாலும் கொன்றிருப்பேன்.
இது கொத்தடிமைத்தனத்தை விட கேவலமானது இல்லையா?
கொத்தடிமைத்தனமெல்லாம் இல்லை. அமைப்பில், யார் சேர்ந்தாலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். என்னென்ன பணியென்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறி விடலாம்.
(காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு வேலை செய்யும் பரூக் அகம்மது தர்க்கு மதப் பற்றும் பாக்.பாசமும் தேச விரோத உணர்ச்சிகளும் கண்ணை மறைத்து விட்டன; அதனால் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு அவனுக்கு தயக்கமே இல்லை.)
கொல்லப்படும் நபர் பாவியா, அப்பாவியா என்று உனக்கு எப்படி உறுதியாகத் தெரியும்?
தெரியாது.
படுகொலைக்கு கட்டளை வரும்; நீ கொல்வாய், அப்படித்தானே?
ஆமாம்.
எத்தனை பேரை கொன்றிருப்பாய்?
நினைவில் இல்லை.
ஆக, நினைவுபடுத்திச் சொல்ல முடியாத எண்ணிக்கையில் ஏராளமானோரைக் கொன்று குவித்திருக்கிறாய் அப்படித்தானே...?
10 - 12 இருக்கலாம்.
10-12 ஆ அல்லது 20 ஆ?
20 என்றும் சொல்லலாம்.
இவர்கள் அனைவரும் காஷ்மீர் பண்டிதர்களா? இல்லை, ஒரு சில முஸ்லிம்களும் உண்டா?
ஒரு சில முஸ்லிம்களும் உண்டு.
எத்தனை முஸ்லிம்கள்? எத்தனை பண்டிதர்கள்?
(மௌனம்...)
பண்டிதர்கள்தான் அதிகமா?
ஆமாம்.
ஏன்?
கட்டளை அப்படி.
நீ முதன்முதலில் கொலை செய்த நபர் யார்?
(மௌனம்; நீண்ட யோசனை)
முதலில் செய்த கொலை எப்போது?
கொஞ்சம் பொறுங்கள் யோசிக்கிறேன். சதீஷ் என்பவரை நான் முதலில் கொன்றேன்.
சதீஷ் யார்?
சதீஷ் குமார் டிக்கு.
யார் இந்த சதீஷ் குமார்?
மேலிடத்து உத்தரவு. கொலை செய்தேன்.
சதீஷ் யாரு?
காஷ்மீர் பண்டிதர்.
காஷ்மீர் பண்டிதர் என்பதால்தான் கொலை செய்தாயா?
ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
அதனால் என்ன? ஆர்.எஸ்.எஸ் இருப்பது குற்றமா? ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர் என்றால் நீ கொன்றுவிடுவாயா?
நான் முன்பே சொன்னது போல மேலிடத்துக் கட்டளைப்படி குறிப்பிட்ட நபரைக் கொலை செய்வேன். வேறு யாருக்கு இந்தக் கட்டளை கிடைத்தாலும் செய்திருப்பார்.
எந்த ஆயுதத்தால் கொன்றாய்?
கைத்துப்பாக்கியால்.
எப்போதும் கைத்துப்பாக்கிதானா? ஏ.கே. 47ம் உண்டா?
ஏ.கே. 47 ஆல் பாதுகாப்பு வீரர்களைத் தாக்குவோம்.
அப்படின்னா, தனிநபரை கொல்ல கைத்துப்பாக்கியா?
ஆமாம்.
தனியாகவே சென்று கொலை செய்வாயா? அல்லது துணைக்கு சிலபேரை வைத்துக் கொள்வாயா?
பொதுவாக தனி ஆளாகச் செல்வேன்.
முகமூடி அணிவதுண்டா?
இல்லை; முகமூடி அணிவதில்லை.
அப்படியென்றால், நீ கொலை செய்வதை பொதுமக்கள் பார்த்ததுண்டா?
ஆமாம்.
அப்ப மக்கள் உன்னை அடையாளம் கண்டிருக்கலாம்?
ஆமாம்.
அப்படின்னா, அவர்கள் உன்னை போலீஸிடம் ஒப்படைக்கவில்லையா?
இல்லை. அப்போதெல்லாம் எங்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது.
யாரையாவது கொல்ல முயன்று தோற்றது உண்டா?
இல்லை.

ஒவ்வொரு முறையும் கொலை முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாய்?
ஆமாம்; குறிதப்பாது கச்சிதமாக கொலை செய்து முடித்திருக்கிறேன்.
எப்படி முடிந்தது? ஆச்சர்யமாக இருக்கிறது?
உடல் பலத்தைப் பொறுத்தது. கைத்துப்பாக்கியால் சுடுவது கடினமானது; புஜபலம் தேவை.
குறைந்த இடைவெளியில் நின்று சுடுவாயா?
இல்லை, சற்று தொலைவிலிருந்துதான்.

எவ்வளவு தொலைவு?
30 கெஜ தூரம்.
அவ்வளவு தொலைவில் இருந்து கைத்துப்பாக்கியால் சுடமுடிந்ததா?
ஆமாம்.
எங்கு குறி வைப்பாய்? தலையையா, மார்பையா?
பெரும்பாலும் தலையையோ, மார்பையோ குறிவைப்பேன்.
மக்கள் செத்து விழும்போதோ, அல்லது கண்முன்னால் குண்டடிப்பட்டுத் துடிக்கும்போதோ வருத்தப்பட்டதுண்டா? நம்மைப் போன்ற ஒரு மனிதனின் உயிரைக் குடிக்கிறோமே என்று நினைத்ததுண்டா?
ஆரம்பத்தில் நினைத்ததுண்டு; பிறகு அப்படியேதும் இல்லை.
(பரூக் அகம்மது தர் பின்தொடர்ந்த இஷ்பாக் வானி, தான் முன்பு பலபேருக்கு இழைத்த கொடூரம் போலவே தானும் கொடூரமான முறையில் உயிரிழந்தான்.)
இஷ்வாக் மஜித் இறந்தது எப்படி?
ஒரு நேரடி சண்டையில் இறந்தான்.
நேரடி சண்டையிலா?
ஆமாம்.
உண்மையில் நேரடி சண்டையிலா?
உண்மையான நேரடி சண்டையில்தான்.
அவன் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டபோதா?
இல்லை; சண்டையில் அரணாக நின்று கொண்டிருந்தபோது.
அப்படியென்றால், வீரர்களோடு சண்டையிட்ட போதா?
மற்ற பையன்கள் சண்டையிட்டனர். இவன் கைகுண்டை தூக்கியெறிய முயன்றான். அப்போது சுடப்பட்டான்.
(கடந்த காலத்தை நினைக்கும்போது பாகிஸ்தான் தங்களை ஏமாற்றி விட்டதாக பரூக் அகம்மது தர் நினைக்கிறான்)
1988-ல் பயிற்சி எடுத்தபோது, காஷ்மீர் மாநிலத்தில் வேலை செய், மக்கள் உனக்கு ஆதரவு தருவார்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் தரப்பு சொன்னது.
அப்படின்னா என்ன அர்த்தம்?
பாரதத்தை பாகிஸ்தான் தாக்கும் என்று அர்த்தம்.
அப்படி நடக்கவில்லையே?
அப்படி நடக்கவில்லை.
எப்படி உணர்ந்தாய்?
மிகவும் வருத்தப்பட்டேன்.
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தாயா?
ஆமாம், அப்பட்டமாக ஏமாற்றப்பட்டோம்.
இப்படிப்பட்ட ஆயுதம் ஏந்துவது, அப்பாவி ஜனங்களைக் கொல்வது, குண்டு எறிவது போன்ற உனது நடவடிக்கை பயங்கரவாதிகள் செல்லும் வழி.
பாரதத்தைத் துண்டாடி, காஷ்மீரைப் பிரித்தெடுக்க உதவுமா?
கஷ்டம் என்று நினைக்கிறேன்.
கஷ்டமா? இல்லை சாத்தியமில்லையா?
சாத்தியமில்லாத கடினமான விஷயம்.
உங்கள் கனவு நிறைவேறாது என்றால் இன்னும் அந்த வழியில் செல்வது ஏன்?
பயங்கரவாதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தணும், கொள்ளையும் கற்பழிப்பும் தொடர்கிறது.
என்ன நடக்கிறது?
கற்பழிப்பு நடக்கிறது.
யாரை?
பெண்களை.
யார் செய்கிறார்கள்?
தெரியாது. ஆனால் நடக்கிறது. கொள்ளை, கத்திமுனையில் பணப்பறிப்பு, இன்னும் இதேபோல பல அக்கிரமங்கள்.
பயங்கரவாதிகளா செய்கிறார்கள்?
ஆமாம், பயங்கரவாதிகள்தான்.
கூடவே பயங்கரவாதிகள் பெண்களையும் கற்பழிக்கின்றனரா?
ஆமாம், பயங்கரவாதிகள்தான் இதை செய்கிறார்கள்.
தாங்கள் குறிப்பிடும் நபருக்கு, பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனரா?
அது தெரியாது.
ஆனால் பயங்கரவாதிகள் பெண்களைக் கற்பழிக்கின்றனர் என்பது உனக்குத் தெரியும்?
ஆம். நிச்சயமாகத் தெரியும்.
துப்பாக்கி முனையில் பணம் பறிப்பதும் தெரியுமா?
தெரியும்.
பெருமளவில் பயங்கரவாதிகள் சரண் அடைவது பற்றி பிட்டாவின் கருத்து என்ன?
சரண் அடையும் பயங்கரவாதிகள் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
அது சரியான முடிவு என்கிறாயா?
ஆமாம், சரியான முடிவு.
ஆனால் போராடும் மற்ற பயங்கரவாதிகள் இதை அனுமதிப்பார்களா?
அவர்களும் சரணடைய வேண்டும்.
சரணடைய வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் என்ன நடக்கும்?
புரியவில்லை. என்ன கேட்கிறீர்கள்?
3,000த்துக்கும் மேலான பயங்கரவாதிகள் சரண் அடைவார்களா?
இல்லை.
அப்ப உண்மையில் என்ன நடக்கும்?
நான் சொன்னது மாதிரி சர்வநாசம்.
உனக்கு என்ன தண்டனை கிடைக்கும்?
என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
தண்டனை என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?
ஆயுள்தண்டனை கிடைக்கும் என நினைக்கிறேன். ஒருவேளை தூக்கில் இடப்படலாம்.
இரண்டில் எதற்கு அதிக வாய்ப்பு?
தூக்கிலிட்டு சாகடிக்கப்படலாம்.
அதை ஏற்றுக்கொள்கிறாயா?
ஏற்றுக் கொள்கிறேன்.
- சர்வ சாதாரணமாக கொலைத் தொழில் புரியும் இந்த நபர், தானும் அதற்கே பலியாவதைத் தெரிந்து வைத்திருக்கிறான். பெற்ற தாயையே கொலை செய்யத் தயங்காத இழிசெயலைத் தூண்டும் கொள்கை என்ன கொள்கையோ?

2 comments:

Anonymous said...

nice interview

Anonymous said...

Very, very useful interview. This clearly shows that what is islam(Enia Margam Islam), what it teaches and how to attain "Mukthi"(be peace upon Him).

kannan
kumbakonam.