தென்காசி வண்டிப்பேட்டை தெப்பக்குளம் காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சொந்தமானது. தீர்ப்பளித்த முஸ்லிம் நீதிபதி
தென்காசி படுகொலைகள் பற்றி என் வலைப்பதிவில் நீங்கள் படித்திருப்பீர்கள். தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிவாசல் கட்ட முயற்சித்ததே இந்த படுகொலைகளுக்கு முக்கிய காரணம். கோயில் இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்காக முஸ்லிம்கள் நடத்திய படுகொலைகள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் நான் விரிவாக எழுதியிருந்தேன்.
முஸ்லிம்கள் தென்காசியில் 1925-ம் ஆண்டிலிருந்தே பிரச்சினை செய்து வருகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. 1925-ல் காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக்குளத்தை முஸ்லிம்களை ஆக்கிரமிப்புச் செய்து அது தங்களுக்குதான் என சொந்தம் கொண்டாடினார்கள். இந்த தெப்பக்குளம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த வழக்கு சம்பந்தமான குறிப்புகள் 2003ல் கோயில் நிர்வாகம் வெளியிட்ட தலவரலாறு புத்தகத்தில் உள்ளன. `தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு' என்ற அந்த புத்தகத்தில்
தெப்பக் குள வழக்கு
தீர்ப்புக்கு முந்திய நாள் இரண்டு பெண் குழந்தைகள் இரவில் நீதிபதியின் வீட்டிற்குச் சென்றனர். ஒரு குழந்தையின் கையில் சூலம். அடுத்த குழந்தையின் கையில் தாமரைப் பூ. அது லோகநாயகி இருவரும் நீதிபதியின் கனவில் தோன்றி சான்றுகளைக்கூறி நீதி கூறும்படிக் கூறிட நீதிபதி விழித்தார். குழந்தைகளைக் காணவில்லை. விழிந்தெழுந்தவர் வழக்குகள் அனைத்தையும் ஆராய்ந்து நடுநிலையோடு செயல்பட்டு, தெப்பக்குளம் திருக்கோயிலைச் சேர்ந்ததே என்று தீர்ப்புக் கூறினார். இது வரலாற்று உண்மை.
இவ்வாறு உள்ளது.
இந்த திருக்கோயில் வரலாற்றை எழுதிய முனைவர் பேராசிரியர் ச.கணபதிராமன் தென்காசி தாலுகா அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தவர். 18க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். திருமலைக்கோவில் வரலாறு, கற்குவேல் அய்யனார் கோயில் வரலாறு ஆகியவற்றை எழுதியவர். டாக்டர் ரா.பி. சேதுபிள்ளையின் மாணவரான பேராசிரியர் ச.கணபதிராமன் தமிழக அரசின் சிறந்த பேராசிரியர் விருது பெற்றவர்.
இதிலிருந்து கோயில் தெப்பக்குளத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது உறுதியாகிறது. தெப்பக்குளம் காசிவிசுவநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தவர் ஒரு முஸ்லிம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காசி விஸ்வநாதர் கோயிலின் வெளி பிரகாரத்தில் உள்ள சகஸ்ர லிங்கம்
காற்று வீசும் அதிசயம் பற்றி தெரிவிக்கும் கல்வெட்டு
பாண்டிய மன்னன் பாரக்கிரம பாண்டியனால் 1467ல் கட்டப்பட்டதாகும். இக்கோயில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மனதைக் கவரும் ஏராளமான சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளது. பொதிகை மலையிலிருந்து அரியங்காவு கணவாய் வழியாக வீசும் காற்று கோபுரத்திற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பதுபோல மேற்கிலிருந்து கிழக்காக வீசுகிறது. இப்படி புகழ்பெற்ற இக்கோயிலின் இராஜகோபுரம் தீ பிடித்து எரிந்து நாசமாகி இருந்தது. தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முயற்சியால் 178 அடி உயர இராஜகோபுரம் கட்டப்பட்டு 25-6-1990 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எரிந்த கோபுரத்தை மிக பிரம்மாண்டமாக கட்டிவிட்டார்கள் என்பதை பல முஸ்லிம்களால் ஜீரணிக்க முடியவில்லை. கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த பிறகு முஸ்லிம்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள். 17-12-2006 அன்று குமார் பாண்டியனை கொலை செய்த முஸ்லிம் வெறியர்கள் சிறைக்குச் செல்லும்போது போலீஸ் உயர் அதிகாரிகளின் முன்னிலையிலேயே என்றாவது ஒரு நாள் கோபுரத்தை இடித்தே தீருவோம் என்று சபதம் செய்துள்ளனர். முஸ்லிம் எந்த அளவுக்கு வெறித்தனமாக இருக்கிறார்கள் பாருங்கள். தென்காசியின் வரலாறு இப்படி இருக்கும்போது இதற்காக நடந்த படுகொலைகளை ஒரு குடும்பங்களுக்கிடையேயான மோதல் எனகூறி ஹிந்துக்களை ஏமாற்றப் பார்க்கிறது தமிழக காவல்துறை.
1 comment:
அதெல்லாம் 1925லதான் நைனா நடக்கும்.
இப்பல்லாம் இந்துக்களே நீதிபதியானாலும் ஒண்ணும் பண்ண முடியாது. கொஞ்சம் மனசாட்சி இருந்தால் "காசி விஸ்வனாதர் கோயிலிலிருந்து வரும் காற்றை இந்துக்கள் சுவாசிக்க எந்தத் தடையுமில்லை, மற்றபடி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கோயிலின் சுற்றுவீதிகளில் இந்துக்கள் நடந்து செல்வதே செக்யூலரிசத்திற்கு எதிரானது" என்று தீர்ப்பு வழங்குவார்கள்.
இந்துக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவிரும்பாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றிருக்கிறார்கள். அரசாங்கமோ பெட்ரோல் டாலருக்கு சேவகம் செய்கிறது.
"சுபாவத்தாலே இந்துக்கள் கோழைகள். முகம்மதியர்கள் முரடர்கள்" என்று மோகன் தாஸ் காந்தி சொன்னது சரிதான்.
முரடர்களுக்கும் கோழைகளுக்கும் நடக்கும் பிரச்சினையில் முரடர்கள் மட்டும்தான் வெல்லுவார்கள்.
இந்துக்களின் மனோபாவமோ வேறு யாராவது போராடட்டும் என்றுதானிருக்கிறது. கோயிலை விற்றால் லாபம் கிடைக்கும் எனில் இந்துக்கள் லாபத்தில் பங்கு கேட்பார்கள். மற்றபடி, இந்துத்துவம் உள்ள குமாரபாண்டியர்களை முட்டாள்கள் என்றுகூட இந்த இந்துப் பெயர்தாங்கிகள் எண்ணக்கூடும்.
தர்மம் வெல்லும் என்று நம்புகிறோம். பார்க்கலாம்.
Post a Comment