தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் சகோதரர்களின் குடும்பத்தினர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்தனர்.
நன்றி : தினந்தந்தி(20-09-2007), திருநெல்வேலி
திருநெல்வேலியில் நடந்த பா.ஜ.க மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு செப்டம்பர் 19-ஆம் தேதி வருகை தந்த அத்வானி தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அங்கு அத்வானியை குமார் பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோரது குடும்பத்தினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், இந்து முன்னணி தென்காசி மாவட்ட அமைப்பாளர் ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர். அத்வானியிடம் குமார் பாண்டியன் குடும்பத்தினர் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
நன்றி : தினகரன்(20-09-2007), திருநெல்வேலி
பின்னர் நெல்லை கே.டி.சி நகர் மகராசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்குழு மேடையில் குமார் பாண்டியன் சகோதரர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் தவணையாக ரூ. 1 லட்சத்தை அத்வானி சொர்ணத் தேவரிடம் வழங்கினார். அப்போது பேசிய சொர்ணத் தேவர், " நான் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். எனது நான்கு மகன்கள் கொல்லப்பட்ட பிறகும் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். ஆனால் ராமரே இல்லை என்று சொன்ன பிறகு அந்தக் கட்சியில் இருக்க விரும்பவில்லை. இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைகிறேன்" என்று அறிவித்தார்.
அன்று மாலை பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட குமார் பாண்டியன், சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோரது படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பொதுக்கூட்ட மேடையில் குமார் பாண்டியன் குடும்பத்தினர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்தக் காட்சியை பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment