December 13, 2007

மலேசியாவில் அடக்குமுறை : 5 தமிழர் தலைவர்கள் கைது

மலேசியாவில் இந்துக்களின் வாழ்வுரிமையைக் காக்க போராடிய Hindu Raghts Action Force (HINDRAF)அமைப்பின் தலைவர்களான கங்காதரன், வசந்தகுமார், உதயகுமார், மனோகரன், கணபதிராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் 5 பேரும் எங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலைக்கூட அரசு வெளியிடவில்லை. HINDRAF அமைப்பின் போரட்டத்தை முடக்குவதற்காக இதுபோன்ற அடக்குமுறைகளில் மலேசிய முஸ்லிம் அரசு இறங்கியுள்ளது.


HINDRAF அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வேதமூர்த்தி தமிழகத்திற்கு வந்து தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம்.கோபாலன் ஆகியோரைச் சந்தித்து மலேசியாவில் இந்துக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.


வேதமூர்த்தியின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக மலேசிய பிரதமர் அப்துல்லா அகம்மது படாவி தனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை தமிழகத்திற்கு இன்பச் சுற்றுலா அனுப்பியுள்ளார். இன்பச் சுற்றுலா வந்த இடத்தில் அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரைச் சந்தித்து தமிழக தலைவர்கள் HINDRAF அமைப்பின் போரட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். ராஜேந்திரன் என்பவர் தலைமையில் வந்துள்ள 34 தமிழ் எழுத்தாளர்கள் குழுவும் மலேசிய அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இவர்கள் 34 பேரும் 11-12-2207 தமிழக முதல்வரை சந்தித்தனர்.

தினமலர் நாளிதழில் வந்த செய்தி(14-12-2007)

தமிழரான மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு மலேசிய பிரதமர் அப்துல்லா அகம்மது படாவியின் கைப்பவையாக் செயல்பட்டு வருகிறார். மலேசியாவில் தமிழர்கள் எல்லாவித உரிமைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக மலேசிய அரசுக்கு ஆதரவான சிலர் விரித்த வலையில் தமிழ் நடிகர் நடிகைகள் சிக்கியிருகிறார்கள். மலேசியாவில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது சூது சொரணை உள்ள யாராவது குத்தாட்டம் போடுவார்களா? இந்த குத்தாட்டத்திற்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சொந்த சகோதரர்களுக்கு எதிராக போராடும் அவலத்தை இங்குத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.

1 comment:

ஜடாயு said...

இந்து உரிமை காக்கப் போராடும் தமிழ் வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சரவணன்.

மலேசிய அரசு செய்திருப்பது கடும் அராஜகம். நம் நாட்டில் உண்மையான தீவிரவாதிகளை ஒடுக்க வாஜ்பாய் அரசு கொண்டு வந்த பொடா சட்டத்தை எதிர்த்து அதை நீக்கவும் செய்தனர் இந்த அரசியல் புல்லுருவிகள் - முஸ்லீம் ஓட்டு வங்கியைக் கருதி.

ஆனால் இதைவிட மோசமான சட்டத்தை தங்கள் சகோதரர்கள் மீதே மலேசிய அரசு துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டு வாய்மூடி மௌனம் சாதிக்கின்றனர்.

தமிழ்த் திரைக் கலைஞர்களுக்கு கொஞ்சமாவது மானம் ரோஷம் இருந்தால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும்.. அல்லது மலேசியா சென்று வெளிப்படையாக HINDRAF போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.