December 13, 2007

நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 6-ம் ஆண்டு நினைவுஞ்சலி : வீரர்களின் உறவினர்கள் புறக்கணிப்பு

6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(13-12-2001) நமது நாடாளுமன்றம் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் இருந்து நாடாளுமன்றத்தையும் அங்கிருந்த தலைவர்களையும் காப்பாற்றுவதற்காக நமது ராணுவ வீரர்களும் டில்லி போலீசாரும் தீவிரமாக போராடினார்கள். இதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தாக்குதலுக்குக் காரணமான முஸ்லிம் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் இருந்து நாடாளுமன்றத்தைக் காக்கப் போராடி உயிரிழந்த வீரர்களின் குடும்பதினர் இத்தீர்ப்பை வரவேற்றனர்.



அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து அவனது குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் குரல் கொடுத்தன. இந்நிலையில் இன்று(13-12-2007) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உயிரிழந்த வீரர்களின் குடும்பதினர் புறக்கணித்தனர். "சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். அப்சல் குரு விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது" என உயிரிழந்த வீரர்களின் குடும்பதினர் வேதனை தெரிவித்துள்ளனர்.



அப்சல் குருவை தூக்கிலிடக்கோரி பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியினர் அதன் தலைவர் எம்.எஸ்.பிட்டா தலைமையில் நேற்று(12-12-2007) டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஏற்கனவே உயிரிழந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை ஜனாதிபதியிடம் திரும்ப ஒப்படைத்தனர். இதைவிட ஒரு அரசுக்கு கேவலம் இருக்க முடியாது. ஆனாலும் முஸ்லிம்களின் ஓட்டுக்காக அப்சல் குருவுக்கு இத்தாலி சோனியாவின் பிடியில் இருக்கும் அரசு கருணை காட்டி வருகிறது. இப்போது அஞ்சலி நிகழ்ச்சியை புறக்கணித்து மீண்டும் மத்திய அரசிற்கு தங்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். சூடு சொரணையை சோனியாவிடம் அடகு வைத்துள்ள மன்மோகன் சிங் அரசுக்கு இதெல்லாம் உறைக்காது. என்ன செய்வது நம் நாட்டின் தலைவிதி இது.

1 comment:

Anonymous said...

ஐயா,

பரம்வீர் சக்ரா பெற்ற இந்திய வீரர் ஒருவருக்கு இந்த அரசாங்கம் வழங்கும் உதவித்தொகை மாதம் 150/- ரூபாய்கள்.

ஆனால், கொஞ்ச நாள் காஷ்மீரில் செயல்முறை இஸ்லாமியராக (தீவிரவாதி என புரிந்துகொள்ளவும்) இருந்து மற்ற தீவிரவாதிகளுக்கு கைகால் பிடித்துவிட்ட முஸ்லீம்கள், அரசாங்கத்திடம் தங்களிடம் இருந்த உளுத்துப்போன துப்பாக்கியை கொடுத்துவிட்டு திருந்தியதாகச் சொன்னால் அவர்களுக்கு இதே அரசாங்கம் மாதா மாதம் தரும் உதவித்தொகை 3000 ரூபாய்கள்.

அரசாங்கமே வன்முறையை ஆதரிக்கும்போது, வன்முறையை தற்காப்பிற்காவது வளர்த்துக்கொள்ளாதவர்கள் அழிவார்கள்.