December 13, 2007

மலேசியா மீது பொருளாதாரத் தடை : இராமகோபாலன் அறிக்கை

மலேசியாவில் இந்துக்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டு வரும் மலேசியாவிடமிருந்து பாமாயில் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்றும், அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

25.11.07 அன்று மலேசியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற 400 இந்து பக்தர்களை கோயில் வளாகத்திற்குள்ளேயே சுற்றி வளைத்து அடித்து 300 போலீசார் காயப்படுத்தி யிருக்கிறார்கள்.மலேசிய இந்துக்களை பயமுறுத்து வதற்காக அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் போட்டு கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.இனிமேல் இந்துக்கள் தங்கள் உரிமைக்கு போராடக்கூடாது என்பதற்காக அடக்கு முறையைக் கையாண்டு மலேசிய அரசு மிரட்டுகிறது. வழக்கம்போல் மலேசிய போலீசார், பக்தர்கள் தங்களை அடித்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டி இருக்கிறார் கள். சாதாரண இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் வாதாடுவதற்கு மலேசிய நாட்டு அட்டர்னி ஜெனரல் தாமே நீதிமன்றத்திற்கு வந்து ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடி இருக்கிறார்.

காமன்வெல்த் நாடுகளில் மலேசியா ஒரு உறுப்பு நடாக இருப்பதால் பிரிட்டன் மலேசிய அரசைக் கண்டித்து இந்திய வம்சாவளியினரான இந்துக்களை கொடுமைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.பிரிட்டனில் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள பொது மக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மலேசியாவுக்கு மூக்கணாங்கயிறு போட வேண்டும். ஐ.நா.சபையும் தனக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லி தப்ப முடியாது.இந்துக்களை அடித்து விரட்ட "பூமி புத்ர' பிரச்சாரம் நடந்து வருவது வெட்கக்கேடு பாரதத்தின் மைய அரசு குரல் எழுப்புவதன் மூலம், மலேசியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், பாரதம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை நிறுத்த வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் தான் மலேசிய நாட்டு அரசை வழிக்கு கொண்டு வர முடியும்.இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெற மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

சம உரிமை, சமநீதி, சமவாய்ப்புக் கிடைப்பது அத்தியாவசியம்.இந்துக்கள் தன்மானத்துடனும், பாதுகாப்புடனும் வாழவும், மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.இந்த பிரச்சனையில் மலேசிய நாட்டுப் பிரதமரிடம் பேசி நமது பாரதப் பிரதமர் இந்துக்கள் மீதான அடக்கு முறைகளை நிறுத்திக் கொள்ளும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

2 comments:

Anonymous said...

ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இவ்வளவு வெறி. நீங்கள் ஏன் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கேட்கவில்லை?

மலேஷியா இஸ்லாம் அனுமதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு தமிழர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது.

Anonymous said...

ஏனென்றால் இலங்கை தமிழர்கள் "இந்து" என்று மதத்தை முன்னிலைப்படுத்தி போராடவில்லை. அப்படி போராடினால் தான் நாங்கள் ஆதரவளிப்போம்.