December 08, 2007

தந்தையின் வழியில் மகள்

இன்றைய (9-12-2207)செய்தித்தாள்களில் இந்தப்படம் வந்திருக்கிறது. பாதிரியார் ஜெகத் கஸ்பர் நடத்தும் `தமிழ் மையம்' என்ற அமைப்பும் `குட்வில் கம்யூனிகேஷன்' என்ற அமைப்பும் இணைந்து கிறிஸ்துமசை முன்னிட்டு `அன்பின் காலம்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்(சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சி நடந்த இடம்) 20-12-2007 முதல் 27-12-2007 வரை ஒருவார காலத்திற்கு நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சி 100 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வலம்வர இருக்கிறார்களாம். இந்த 100 கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வலம்பர இருக்கும் வண்டிக்கு `சாண்டா எக்ஸ்பிரஸ்' என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த சாண்டா எக்ஸ்பிரஸை கடவுள் இல்லை என்று சொல்லும் கருணாநிதியின் வாரிசு கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார். அதோடு பாதிரியார் ஜெகத் கஸ்பர் இந்நிகழ்ச்சிக்காக எழுதிய பாடல்கள் அடங்கிய சி.டியை கனிமொழி, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வெளியிட்டனர்.
கருணாநிதி இந்து கடவுள்களை மட்டும் விமர்சித்துக் கொண்டு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அதே பாணியை அவரது செல்ல மகளும் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார். எப்போதும் பொட்டு வைத்திருக்கும் கனிமொழி இங்கு வெறும் நெற்றியுடன் காட்சி தருகிறார். முஸ்லிம் லீக் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் கஞ்சி குடிக்க சென்றபோதும் கனிமொழி பொட்டு வைக்காமல்தான் சென்றார்.
படத்தில் கவிஞரோடு(கனிமொழிதான்) இருப்பவர்களை சத்தியமாக எனக்குத் தெரியாது.


இந்த `அன்பின் காலம்' நிகழ்ச்சியை மாஃபா நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. மாஃபா பாண்டியராஜன் பா.ஜ.கவைவிட்டு விலகி விஜயகாந்தின் தே.மு.தி.கவுக்குச் சென்ற பிறகு அவரது மனைவி திருமதி லதா ராஜன், பாதிரியார் ஜெகத் கஸ்பருடன் இணைந்து கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை நடத்துவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளை(மாஃபா பாண்டியராஜன் நடத்தும் அறக்கட்டளை) மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தியது. சுமார் 10,000 பெண்கள் கலந்து கொண்ட இவ்விழாவை பாதிரியார் ஜெகத் கஸ்பர்தான் ஒருங்கிணைத்தார்.

2 comments:

Anonymous said...

கேட்டால், "இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் அழைக்கிறார்கள். அதுபோல இந்துக்களும் அழைத்தால் கலந்துகொள்வேன்" என்று கருணாநிதி போல பதில் சொல்லலாம்.

இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருப்பதும் அவர் கட்சி மந்திரிதான் என்பதை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

ஏனெனில், அனைவருக்கும் தெரியும், கருணாநிதிக்கு அழைப்பு விடுப்பது என்பது எவ்வளவு செலவு பிடிக்கும் செயல் என்பது. இஸ்லாமியர்களாலும், கிருத்துவர்களாலும்தான் அது முடியும். பஞ்சப் பரதேசிகளாக ஆக்கப்பட்ட இந்துக்களால் அது முடியுமா?

ஜயராமன் said...

சரவணன் ஐயா,

ஆகாகா, நன்றாக கிண்டல் பண்ணி எழுதியிருக்கிறீர்களே!!!

கனிமொழி அம்மையார் வெறும் பொட்டை மட்டும் எடுத்தால் போதாது. ஒரு முக்காடும் போட்டுக்கொண்டுதான் இனி இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிக்குலர் ஆதரவாளர்களின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி