சொர்ணத் தேவரின் பேட்டி
இஸ்லாமிய வெறியர்களால் தன் நான்கு மகன்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சோகத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்த சொர்ணத் தேவரை தென்காசியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். தன் மகன்கள் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் கண் அறுவை சிகிச்சை செய்திருந்தார். வெட்டி சாய்க்கப்பட்ட மூன்று மகன்களின் உடலையும் ஒரே நேரத்தில் பார்த்து அவர் கதறி அழுது அழுது அறுவை சிகிச்சை செய்த கண் புண்ணாகிப் போனாதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பியிருந்தார். இனி அவருடனான சந்திப்பிலிருந்து....
அன்று(14-08-2007) என்னதான் நடந்தது...?
14-8-07 அன்று காரில் சென்று கொண்டிருந்த எனது இளைய மகன் செந்திலை இஸ்லாமிய வெறிக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துத் தாக்கியுள்ளது. இதனைக் கேள்விப்பட்டு எனது மகன்களான சுரேஷ், சேகர் இருவரும் தம்பியைக் காப்பாற்ற சென்றனர். அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் என் மகன்கள் மூவரையும் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த கோரமான படுகொலைக்கு என்ன காரணம்?
இந்து முன்னணி நகரத் தலைவராக இருந்த எனது மகன் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்துப் போராடி வந்தான். டிசம்பர் 6-ம் தேதி முஸ்லிம்கள் கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய பேனரை வைத்து அட்டகாசம் செய்தனர். இதனையும் என் மகன் எதிர்த்தான். இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் என் மகன் குமார் பாண்டியனை 17-12-2006 அன்று வெட்டிக் கொன்றார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல்லா, அனீபா ஆகியோர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். குமார் பாண்டியன் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(த.மு.மு.க) திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான் சில மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். முஸ்லிம்களின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அவர் வெட்டப்பட்டார் என போலீசார் கூறினார்கள். ஆனால் சில நாட்களில் இந்த வழக்கில் எனது இளைய மகன் செந்திலை போலீசார் கைது செய்தனர். செந்திலுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல்லா, அனீபாவும் மைதீன்சேட்கான் வெட்டப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற செந்திலும் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்துல்லா அனீபா தரப்பினர் எப்போதும் ஆயுதங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். சோதனையின்போது போலீசார் இதனைக் கண்டுபிடித்தும் சாதாரணமாக விட்டுவிட்டார்கள். இந்த நிலையில்தான் என் மகன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குமார் பாண்டியன் சகோதரர்கள் வசிக்கும் வீடு
போலீசார் இந்தப் படுகொலைகளுக்கு குடும்ப முன்விரோதமே காரணம் என்று கூறுகிறார்களே?
இது அப்பட்டமான பொய். எங்கள் குடும்பத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. நான் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தென்காசி நகரத் தலைவராக இருந்திருக்கிறேன். இப்போதும் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி
மேற்கு மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறேன். இதனால் எனக்கு பல முஸ்லிம்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். கோயில் இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதை என் மகன்கள் எதிர்த்ததால்தான் கொல்லப்பட்டனர். இதுதான் உண்மை.
கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவதை குமார் பாண்டியன்தான் எதிர்த்தார். உங்கள் மற்ற மகன்களும் எதிர்த்தார்களா?
குமார் பாண்டியன் இந்து முன்னணி நகரத் தலைவராக இருந்தார். அவர் கொல்லப்பட்ட பிறகு எனது மற்றொரு மகன் சக்தி பாண்டியன் இந்து முன்னணி நகரத் தலைவராக பொறுப்பேற்றார். இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள்தான் இந்தக் கொலையை செய்துள்ளனர். குமார் பாண்டியனை வெட்டி விட்டு சிறைக்குச் சென்ற முஸ்லிம்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே "ஜாமீனில் வந்து மீண்டும் பலரை வெட்டுவோம்" என சட்டைக் காலரை தூக்கிவிட்டு சபதம் செய்துள்ளனர். இதனை பொதுமக்கள் பலர் பார்த்துள்ளனர். எனவே மதத்திற்காகத்தான் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளது. குமார் பாண்டியனை கொன்றவர்கள் ஜாமீனில் வந்த போது முஸ்லிம்கள் தினமும் அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளனர். ஹிந்துக்களை வெறுப்பேற்றுவதற்காக தினசரி அவர்கள் ஜாமீனில் வெளிவந்ததை ஒரு விழாபோல கொண்டாடி உள்ளனர்.
உங்கள் மகன்கள்தான் முதலில் தாக்கியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதே?
முஸ்லிம்கள் தரப்பில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் ஹிந்துக்கள் தரப்பில் என் மகன்கள் மூவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். என் மகன்கள் திட்டமிட்டு தாக்கியிருந்தால் மூவராக செல்வார்களா? முஸ்லிம்கள்தான் திட்டமிட்டு தாக்கியுள்ளனர். திட்டமிடாமல் பத்துக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் எப்படி ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திரள முடியும்? திட்டமிட்டு எங்கள் குடும்பத்தை குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.
உங்கள் குடும்பத்தை குறிவைக்க என்ன காரணம்?
என் மகன் குமார் பாண்டியன் கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்ததும், குமார் பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு எனது மற்றொரு மகன் சக்தி பாண்டியன் இந்து முன்னணி நகரத் தலைவராக பொறுப்பேற்றதும்தான் இந்தக் கொலைக்கு காரணம். தென்காசியில் முஸ்லிம்கள் மதத்திற்காக படுகொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்துவது புதிதல்ல. 1925லிருந்து முஸ்லிம்கள் பிரச்சினை செய்து வருகிறார்கள். இந்துக்களை இழிவுபடுத்தி முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலத்தை நான்தான் தடுத்து நிறுத்தினேன். இதனால் என் குடும்பத்தை குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.
சொர்ணத் தேவரின் வீடு அமைந்துள்ள மலையான் தெரு
பிரச்சினைக்குரிய இடத்தில் ஏற்கனவே பள்ளிவாசல் இருந்ததா?
ஏற்கனவே பள்ளிவாசல் இருந்ததாகவும் அதை விரிவுபடுத்தி கட்டுவதில்தான் பிரச்சினை என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதில் உண்மை இல்லை. இப்போது முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கும் இடம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது. இதற்கான ஆதாரங்கள் உள்ளது. எனக்கு தெரிந்து அந்த இடத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இருந்தது. அப்போது அந்தப் பள்ளியில் படித்தவர்களும், அங்கு வேலை பார்த்த ஆசிரியர்களில் சிலரும் இன்னமும் இருக்கிறார்கள்.
சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டப் பிறகு அந்தப் பள்ளி இடம் மாறியது. அதன்பிறகு அந்த இடத்தில் முஸ்லிம் ஒருவர் குத்தகைக்கு எடுத்து ஐஸ் பேக்டரி வைத்தார். அதன்பிறகு அந்த இடத்தை முஸ்லிம்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகள் தென்காசி கடைத்தெருவில் உள்ள முஸ்லிம்களின் சிறுநீர் கழிக்கும் இடமாகத்தான் அது இருந்தது. இது எல்லோரும் அறிந்த உண்மை. தாங்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் திடீரென தென்காசி பஜார் தொழுகை பள்ளிவாசல் என்ற பெயர்ப் பலகை வைத்து தொழுகை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
சொர்ணத் தேவர் போராட்டம் நடத்திய தென்காசி மலையான் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயில்
அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
ஹிந்துக்கள் கண்டுகொள்ளமால் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. இதனால் தைரியமடைந்த முஸ்லிம்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக தனவேல் என்பவர் இருந்தபோது பள்ளிவாசல் அனுமதி கோரி அவரை சந்தித்தனர். தென்காசி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அந்த நகலை எனக்கு அனுப்பினால் அனுமதி தருவதாக அவர் கூறினார். அதன்படியே முஸ்லிம்கள் தங்கள் பணபலத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வைத்துவிட்டனர். கலெக்டர் தனவேலும் பள்ளிவாசல் கட்ட அனுமதித்து விட்டார். உடனே முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட ஆயத்தமானார்கள். செங்கல், ஜல்லி, மணல் எல்லாம் வந்து இறங்கியது. அந்த நேரத்தில்தான் என் மகன் குமார் பாண்டியன் உள்ளூரில் ஹிந்துக்களைத் திரட்டி கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினான்.
எதிர்ப்பு அதிகமாகவே பள்ளிவாசல் கட்டும் வேலை நின்றது. இது நடந்தது தி.மு.க ஆட்சியில். அதன் பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தது. கலெக்டரும் மாறினார். அதன்பிறகு வந்த கலெக்டர் எதிர்ப்புகள் இருப்பதால் பள்ளிவாசல் கட்ட தற்காலிக தடை விதித்தார். அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் அமைதியாக இருந்தார்கள். கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். மீண்டும் என் மகன் எதிர்த்தான். இதனால்தான் என் மகன் குமார் பாண்டியனை வெட்டிக் கொன்றார்கள். தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை செய்து தங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்கிறார்கள்
உங்கள் மகன் சக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளாரே?
குமார் பாண்டியன் கொல்லப்பட்ட பிறது துணிவுடன் தம்பி வகித்த இந்து முன்னணி நகரத் தலைவர் பதவியை ஏற்றவர் சக்தி பாண்டியன். சக்தி பாண்டியனுக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் ஒரு போலீஸ்காரர் அவர் கூடவே இருக்கிறார். அப்படி இருந்தும் அவரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இதுபற்றி கேட்டபோது அவர்மீது முஸ்லிம்கள் புகார் கொடுத்துள்ளனர். அதனால் கைது செய்துள்ளோம் என்கிறார்கள்.
என் மகன் குமார் பாண்டியன் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது வீட்டிற்கு, பிரபல முஸ்லிம் தொழிலதிபர் வி.டி.எஸ் ரகுமான் பாட்சாவின் தம்பி சென்றுள்ளார். பள்ளிவாசல் கட்டுவதை எதிர்க்காதீர்கள். எதிர்ப்பைக் கைவிட்டால் உனக்கு ரூ. 12 லட்சம் தருகிறோம். பள்ளிவாசல் கட்டிய பிறகு அதில் ஒரு கடையும் தருகிறோம். அதற்கு உன் ஆயுள் முழுவதும் வாடகை தரவேண்டாம் என்று ஆசை காட்டியுள்ளனர். அவருக்கு பதிலளித்த என் மகன், " உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நான் பள்ளிவாசல் கட்ட அனுமதித்து விடலாம். நீங்களும் கட்டிவிடலாம். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு பிறாகாவது ஹிந்துக்கள் அதை இடிப்பார்கள். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட பாபர் சமாதி பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு இடிக்கப்பட்டதைப் போல தென்காசியில் இடிக்கப்படலாம். அப்படி நடந்தால் தென்காசியில் பெரிய அளவில் கலவரம் எற்படும். தென்காசி எப்போதும் அமைதியான நகரமாக இருக்க வேண்டுமானால் கோயில் இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதை அனுமதிக்க முடியாது" என்று உறுதிபட கூறியுள்ளார். இது நடந்து ஒரு மாதத்திற்கு பிறகுதான் என் மகன் குமார் பாண்டியன் கொல்லப்பட்டார்.
எனவே வி.டி.எஸ் ரகுமான் பாட்சாவுக்கு தெரியாமல் குமார் பாண்டியன் கொலை நடந்திருக்காது என்பதால் அவர்மீது நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால் அவரை போலீஸ் கைது செய்யவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை கண்டுகொள்ளாத போலீசார் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததும் என் மகன் சக்தி பாண்டியனை கைது செய்துள்ளனர். போலீசார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதையே இது காட்டுகிறது.
முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக்குளம்
வி.டி.எஸ் ரகுமான் பாட்சாவுக்கும் உங்கள் மகனை கொன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா?
20 ஆண்டுகளுக்கு முன்பு வி.டி.எஸ் ரகுமான் பாட்சா தென்காசியில் உள்ள கனி அன் கோ பலசரக்குக் கடையில் மாதம் ரூ. 800க்கு வேலை பார்த்தவர். அவரின் தந்தை பக்கீன் மைதீன் ராவுத்தர் காய்கறி வைத்திருந்தார். அவர் ரூ. 800 சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே மிகப்பெரிய வீடு கட்டி அதன் திறப்பு விழாவிற்கு தனது முதலாளியை அழைத்திருந்தார். தன்னிடம் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் சாதாரண தொழிலாளி மிகப்பெரிய வீடு கட்டி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கனி அன் கோ உரிமையாளர் அன்றே ரகுமான் பாட்சாவை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். அதன் பிறகு ரகுமான் பாட்சா புதிதாக ஒரு பலசரக்குக் கடையை ஆரம்பித்தார்.
சாதாரண பலசரக்குக் கடை நடத்தி வரும் வி.டி.எஸ் ரகுமான் பாட்சாவுக்கு இன்று பல நூறு கோடி சொத்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஹவாலா மோசடியில் அவர் ஈடுபட்டு வருவதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது. வி.டி.எஸ் ரகுமான் பாட்சா பொருளாதாரம் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தோம். இவரும் இவரது தம்பியும் குமார் பாண்டியனை பலமுறை மிரட்டியிருக்கிறார்கள். எனவே என் மகன்களின் படுகொலையில் அவருக்கு தொடர்பில்லாமல் இருக்க முடியாது. வி.டி.எஸ் ரகுமான் பாட்சா மீது வழக்கு பதிவு செய்திருந்தும் போலீசார் அவரை கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் போலீசாரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக செய்தி வந்ததே?
என் மகன்கள் மூன்று பேரும் கொல்லப்பட்ட பிறகு போலீஸ் உயர் அதிகாரிகள் என்னிடம் வந்து பேசினார்கள். நாங்கள் மூன்று மகன்களின் உடல்களையும் வாங்க மறுத்து விட்டோம். தென்காசி நகரம் அமைதியாக இருக்க வேண்டும். மீண்டும் கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் இருந்து நேரிடையாக சுடுகாட்டிற்குச் சென்று பிணத்தைத் தகனம் செய்தோம். நான் நினைத்திருந்தால் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த என் மகன்களின் உடலை தென்காசிக்கு கொண்டு வந்திருக்க முடியும். அப்படி கொண்டு வந்திருந்தால் தென்காசி பற்றி எரிந்திருக்கும். ஆனால் அமைதியை விரும்பி போலீசாருடன் ஒத்துழைத்தோம்.
ஆனால் காவல் துறையினர் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அப்பாவி ஹிந்துக்கள்மீது வழக்கு போட்டு உள்ளே தள்ள ஆரம்பித்து விட்டார்கள். நள்ளிரவு நேரத்தில் எங்கள் வீடு அமைந்துள்ள மலையான் தெருவுக்குள் நுழைந்த போலீசார், குடும்பப் பெண்களையும் இளம்பெண்களையும் மிரட்டி உள்ளனர். போலீசாரின் இந்த அராஜகத்தைத் தடுப்பதற்காக சுமார் 50 பெண்களுடன் எங்கள் தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினோம். அதன்பிறகுதான் போலீசாரின் நள்ளிரவு சோதனை நின்றது.
முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்யும் வி. டி. எஸ். ரகுமான் பாட்சாவின் கடை
யாருமே நினைத்துப் பார்க்காத ஒரு கொடூரம் நடந்திருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?
நான் காந்தியவாதி. சுதந்திரத்திற்காக 6 வயதில் போலீசாரிடம் அடி வாங்கியிருக்கிறேன். இப்போதும் வாங்கிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். ஆனால் இந்தப் படுகொலைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும் என்று தோன்றவில்லை. முஸ்லிம்கள் இந்த நாட்டை நேசிக்கவில்லை. அப்படி நேசித்தால் ஒரு பள்ளிவாசலுக்காக இத்தனை உயிர்களை பலி கொடுப்பார்களா?
பள்ளிவாசல் தான் பிரச்சினை என்றால் ஹிந்துக்கள் விட்டுக் கொடுத்துவிட்டால் ஒரு தீர்வு ஏற்பட்டும் அல்லவா?
முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கும் இடம் பலநூறு ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடம். அதுவும் அம்பாள் சன்னிதிக்கு நேர் எதிரே, 100 மீட்டர் தூரத்திற்குள் இந்த இடம் உள்ளது. இந்த இடத்தில்தான் கார்த்திகை தீபத்தின் போது சொக்கப்பனை கொளுத்துவார்கள். அப்போது வீதி உலா வரும் அம்பாள் அந்த இடத்தில்தான் எழுந்தருளி அருள்பாலிப்பாள். இங்கு பள்ளிவாசல் வந்தால் இந்த விழாக்கள் நடத்த முடியாது. முஸ்லிம்கள் பள்ளிவாசல் முன்பு மேளம் அடிக்கக்கூடாது என்று பிரச்சினை செய்வார்கள். அங்கு பள்ளிவாசல் கட்டினால் தென்காசி நகரின் அமைதியே குலைந்து போகும். ஒரு மசூதி அல்லது மதரஸாவின் முன்பு விநாயகர் கோயில் கட்ட முயற்சித்தால் முஸ்லிம்கள் விடுவார்களா?
நீங்கள் காங்கிரஸ் கட்சியின் தென்காசி நகரத் தலைவராக இருந்ததாகச் சொன்னீர்கள். இப்போதும் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறீர்கள். நான்கு மகன்களை இழந்து தவிக்கும் உங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாராவது ஆறுதல் கூறினார்களா?
இல்லை. அவர்களுக்கு முஸ்லிம்கள் ஓட்டுதான் முக்கியம். தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர் மைதீன்கான் இறந்துபோன, காயமடைந்த முஸ்லிம்களை வந்து சந்தித்துள்ளார். ஆனால் எங்களை வந்து பார்க்கவில்லை. என் மகன்களைக் கொன்ற கொலையாளிகளை மைதீன்கான் பாளையங்கோட்டை சிறையில் சந்தித்துள்ளார். சிறையில் சோதனை என்ற பெயரில் அமைச்சர் கொலையாளிகளைச் சந்தித்துள்ளார். முஸ்லிம் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் மைதீன்கான் மறைமுகமாக உதவி செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
இப்போது உங்கள் மனநிலை எப்படி உள்ளது?
நானும் எங்கள் குடும்பமும் பயந்துபோய் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் மீதமுள்ள மற்றவர்களையும் கொன்று விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளோம்.
சந்திப்பு : புதுவை சரவணன்
1 comment:
Muslims enjoy enormous support due to their votebank politics. Hindus should learn to use their vote to defeat the partisan politicians.
Sridhar.
Post a Comment