September 05, 2007

நிலைகுலைந்த குமார் பாண்டியன் சகோதரர்கள் குடும்பம்

ஒட்டுமொத்த தென்காசி நகரமே மயான அமைதியில் இருக்கும் பொழுது முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு நால்வரை பலி கொடுத்திருக்கும் குமார் பாண்டியன் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய அவரது வீட்டிற்கு சென்றோம். தென்காசி மலையான் தெருவில் உள்ளது அவரது வீடு. தெருமுனையிலும் அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீடு அமைந்துள்ள மலையான் தெரு அமைதியின் உருவகமாய் காட்சி தருகிறது.
நாம் அந்த தெருவிற்குள் நுழையும்பொழுது பல வீடுகளில் மிரட்சியுடன் எட்டிப் பார்க்கிறார்கள். நாமும் சோகத்துடன் குமார் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்தோம். அங்கு குமார் பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன், குமார் பாண்டியனின் தாயார் அழகம்மாள், முஸ்லிம்களால் வெட்டிக் கொல்லப்பட்ட குமார் பாண்டியனின் மனைவி ஜெயந்தி(37), சேகரின் மனைவி மாலதி(35), சுரேஷின் மனைவி கோகிலா(24), செந்திலின் மனைவி கோமதி(26) மற்றும் அவர்களது குழந்தைகள் ஹரிஹரன்(13), புவனேஸ்வரி(11), தங்கராணி(9), சொர்ணபாலா(9), அழகுதுவாரகா(4), வேலு பிள்ளை பிரபாகரன்(1 3/4), சுவாதிகா(2 1/2), முத்துராம்(8 மாதம்) ஆகியோரை சந்தித்தோம்.

குமார் பாண்டியனின் தாய் அழகம்மாள்


குமார் பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன்

அவர்களின் முகத்தில் இருந்த அச்சமும் சோகமும் நம் கண்களில் நீரை வரவழைத்தது. குமார் பாண்டியனின் சகோதரர் சக்தி பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது அக்குடும்பத்தினரை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சக்தி பாண்டியனுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும்பொழுது அவரை கொலை வழக்கில் கைது செய்திருப்பதால் அக்குடும்பத்தினர் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.
குமார் பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் எங்களிடம் பேசினார். "உங்கள் சகோதரர்கள்தான் முதலில் சென்று தாக்கியதாக போலீஸ் கூறுகிறதே" என்றோம். "ஹிந்துக்கள் முதலில் சென்று தாக்கியதாகவோ கொலை செய்ததாகவோ இதுவரை சரித்திரம் இல்லை. முஸ்லிம்கள்தான் முதலில் எல்லாவற்றையும் ஆரம்பிக்கிறார்கள். ஆகஸ்டு 14 படுகொலையிலும் அதுதான் நடந்தது" என்றார். சகோதரர்கள் நால்வரை இழந்த சோகம் அவரது கண்களில் அப்பட்டமாக தெரிகிறது.

கொல்லப்பட்ட செந்திலின் மனைவி கோமதி(26) தனது ஒண்ணே முக்கால் வயது மகன் வேலுபிள்ளை பிரபாகரனுடன்


கொல்லப்பட்ட சுரேஷ் பாண்டியனின் மனைவி கோகிலா(24). இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. குழந்தைகள் இல்லை.


"உங்கள் சகோதரர்கள் நால்வரை இழந்துள்ளீர்கள். இதற்கு என்னதான் தீர்வு?" என்று கேட்டோம். "கோயில் நிலத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். இப்போது அந்த இடத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள். அதற்கு தடை விதிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வி.டி.எஸ்.ரகுமான் பாட்சாவுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு அவர்கள் பள்ளிவாசல் கட்டிக் கொள்ளலாம்.

ஒரே நாளில் விதவையான மாலதி, கோமதி, கோகிலா


தனது 8 மாத கைக்குழந்தையுடன் குமார் பாண்டியன் மனைவி ஜெயந்தி



குமார் பாண்டியனின் 8 மாத கைக்குழந்தை முத்துராம்




கொல்லப்பட்ட செந்தில்பாண்டியனின் ஒண்ணே முக்கால் வயது மகன் வேலுபிள்ளை பிரபாகரன்


இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு ஹிந்துக்களுக்கு உணர்வு வந்துவிடக் கூடாது என்பதற் காகவும், தேவர் இனத்தவர்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதற்காகவும் போலீசார் இந்த சம்பவத்தை குடும்ப மோதல் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பள்ளி வாசல் கட்டுவதை எதிர்த்ததாலும், இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் வாங்க முயற்சித்ததாலுமே எனது சகோதரர் குமார் பாண்டியன் கொல்லப் பட்டார். அதன் பிறகு எனது மற்றொரு சகோதரர் சக்தி பாண்டியன் இந்து முன்னணி நகர தலைவராக பொறுப்பேற்றார். இதனாலேயே எங்கள் குடும்பத்தை குறிவைத்து கொலை செய்துள்ளனர். இது குடும்ப மோதல் அல்ல. முழுக்க முழுக்க மதத்திற்காக நடந்த கொலை" என்று நா தழுதழுக்க கூறினார் ரவி பாண்டியன்.

கொல்லப்பட்ட சேகர் பாண்டியனின் மகன் ஹரிஹரன், மகள் புவனேஸ்வரி



குமார் பாண்டியனின் இரண்டு வயது பெண் குழந்தை சுவாதிகா


கொல்லப்பட்ட குமார் பாண்டியன் சகோதரர்களின் 8 குழந்தைகள் தந்தையை இழந்து தவிக்கின்றனர். இவர்களில் 5 பேர் பெண் குழந்தைகள். இவர்கள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள். 17.12.2006 அன்று குமார் பாண்டியன் கொல்லப்பட்டபோது அவரது மனைவி ஜெயந்தி நிறைமாத கர்ப்பிணி. இப்போது அவருக்கு முத்துராம் என்ற 8 மாத குழந்தை உள்ளது.
கொல்லப்பட்ட குமார் பாண்டியன், சுரேஷ், சேகர், செந்தில் ஆகியோரை நம்பிதான் அந்த குடும்பம் இருந்துள்ளது. குடும்பத்தைக் காப்பாற்றி வந்த அந்த நால்வரும் கொல்லப்பட்டதால் அந்த குடும்பம் இன்று நிலைகுலைந்துள்ளது. ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் நான்கு விதவைப் பெண்கள். ஒரே நேரத்தில் தந்தையை இழந்த 8 குழந்தைகள். எங்காவது நடக்குமா இந்த கொடுமை? எப்படி ஆறுதல் சொல்வது அந்த குடும்பத்திற்கு. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல எந்த மொழியிலாவது வார்த்தைகள் இருக்கிறதா?

No comments: