September 07, 2007

ராமேஸ்வரத்தில் ராம மஹாயக்ஞம் - சில காட்சிகள்!

26-08-2007 அன்று ராமேஸ்வரத்தில் நடந்த ராமசேது பாதுகாப்பு மாநாட்டில் மாபெறும் ராம மஹாயக்ஞம் நடைபெற்றது. தஞ்சாவூர் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 சிவாச்சாரியார்கள் 12,000 முறை ராம மந்திரம் ஜெபித்து யாகம் நடத்தினார்கள். கோ பூஜையுடன் இந்த யாகம் துவங்கியது. யாகத்தில் பூஜிக்கப்ட்ட புனித நீர் அடங்கிய 12 கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதசுவாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த யாகத்தின்போது எடுக்கப்பட்ட சில படங்களைப் பாருங்கள். இந்த யாகத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ் மாரிமுத்து, பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம்,விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பிரவின்பாய் தொகாடியா, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இளைஞரணித் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியசுவாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களின் படங்களையும் பார்க்கலாம்.













No comments: