October 22, 2007

நேற்று ஓமலூர்! இன்று கடலூர் ! நாளை?ஓமலூர் மாணவி சுகன்யா படுகொலை - முழு விவரம்

ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா பாதிரிகளால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். அதுபற்றி 8-12-2006 அன்று விஜபாரதத்தில் நான் எழுதிய கட்டுரை.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கிறது கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி. கடந்த நவம்பர் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா இப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தாள். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள்தான் சுகன்யா. ஓமலூர் பாத்திமா பள்ளி விடுதியில் தங்கி, அங்கு படித்துவந்த சுகன்யாவின் மர்ம மரணம் கிறிஸ்தவப் பாதிரிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டி யிருக்கிறது.

கற்பழித்துக் கொல்லப்பட்ட மாணவி 12-ம் வகுப்பு மாணவி சுகன்யா


பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாக செய்தி பரவியதை அடுத்து, பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகுதான் இந்தக் கொடூரம் வெளியில் வந்திருக்கிறது.

இந்தப் பள்ளியில் மாணவிகள் இறப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள், அதுவும் அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் என்று ஓமலூரில் மக்கள் சாதாரண மாகப் பேசிக்கொள்கிறார்கள். "இந்தப் பள்ளியில் பல மாணவிகள் இறந்ததாகப் பேசிக்கொள்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் பல வருடங்களுக்கு முன்னாடி சின்னம்மா..அப்புறம் இந்திரா, காவேரி, இப்ப சுகன்யான்னு நாலு மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருக்காங்க. இதே ஸ்கூலில் படிக்கும் எம் பொண்ணு, தேவையில்லாத ஆண்கள், ஸ்கூலுக்கு வந்து போறதா சொல்லியிருக்கா. இனி என் மகளை இந்தஸ்கூலுக்கு அனுப்பறதா இல்லை" என்று பத்திரிகையாளர்களிடம் கோபத்துடன் பொங்கி யிருக்கிறார் அபிராமி என்ற பெண்மணி(`நக்கீரன்' 25-11-06).

"15 வருஷத்துக்கு முன்ன எங்க மகள் சின்னம்மா அங்க படிச்சிக்கிட்டு இருந்தா. அவளை ஸ்கூல்ல ஒரு ரூமில் போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு ஓடினோம். கடைசியில் ஏரியில் பிணமாதான் கிடைச்சா. போலீஸில் அப்ப புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்கிறார் 15 வருடங்களுக்கு முன்பு இதே பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி சின்னம்மாவின் தாயார் பழனியம்மாள். இதேபோலவே கடந்த ஜூலை 29ம் தேதி காவேரி என்ற மாணவி தூக்கில் தொங்கினாள். "எந்தப் பிரச்சினையும் இல்லீங்க. திடீர்னு உங்க மகள் செத்துட்டான்னு சொன்னா எப்படி இருக்கும்? என்ன நடந்துச்சுன்னே தெரியலை. எங்க மகளை இழந்துட்டோம்" என கண்ணீருடன் பெருமூச்சு விட்டார் காவேரியின் அம்மா வளர்மதி.
நவம்பர் 16ம் தேதி வரை ஸ்கூலுக்கு வந்த சுகன்யா, அன்று மாலை ஹாஸ்டலுக்கு வரவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவள் ஹாஸ்டலுக்கு வரவில்லை என்ற தகவலை தோளூரில் உள்ள சுகன்யாவின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு என்ன நடந்ததோ? ஸ்கூலுக்குப் பின்புறம் உள்ள கிணற்றில் சுகன்யாவின் உடல் மிதக்கறதா சொல்றாங்க என்கிறார்கள் பாத்திமா பள்ளி மாணவிகள்.

ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிரோத் மற்றும் பீர் பாட்டில்கள்

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்கூலுக்குள் இருக்கும் சர்ச்சில் பிரேயர் நடக்கும். அதில் வெளியிலிருந்து பல பாதிரிகள் வருவார்கள். பாதிரிகளுக்கு சேவை செய்தால் கடவுளின் கிருபை கிடைக்கும் என்று சிஸ்டர்ஸ்(கன்னியாஸ்திரிகள்) சொல்வாங்க. அதனால் அவங்களுக்கு டீ.,காபி டிபனெல்லாம் பரிமாறுவோம் என்கிறார்கள் மாணவிகள் அப்பாவியாக!
நவம்பர் 20ம் தேதி ஓமலூர் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய 8ம் வகுப்பு மாணவி கிரிஜா, "ஒரு நாள் எங்க வகுப்பறை சுவர் முழுக்க ரத்தக்கறையும் பூவும் இருந்தது. அந்தக் கறையை மாணவிகளான எங்களைக் கழுவி சுத்தம் பண்ண வச்சு, அதுக்கு காசும் கொடுத்தாங்க" என்ற `பகீர்' குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பூட்டினாள்.

நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு பேட்டு அளிக்கும் அபிராமி

இவ்வளவு நடந்த பிறகும், `இது தற்கொலைதான். கொலை அல்ல. பெருச்சாளி எலியை கடித்ததால் ஏற்பட்டது தான் அந்த ரத்தக் கறை' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார் சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன். கொலையை மறைக்க பல முயற்சிகளைப் பாதிரிகள் செய்து வருகின்றனர். இதற்காக போலீஸாரின் உதவியுடன் மாணவி சுகன்யாவின் உடலை சட்டத்திற்கு விரோதமாக எரிக்க வைத்துள்ளனர். `பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளியை வளர்க்க எங்கள் பள்ளிமீது அவதூறு பரப்புகிறார்' என ஆசிரியைகள்மூலம் வதந்தியைப்பரப்பி விட்டுள்ளனர்பாதிரிகள். "எங்கள்பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி. அவர்களது சாதாரண பள்ளி. நான் எதற்கு அந்தப் பள்ளியை போட்டியாகக் கருதுகிறேன்" என்று இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பா.ம.க எம்.எல்.ஏ தமிழரசு.
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் நவம்பர் 23ம் தேதி இந்தக் கொடூரத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாகஅறிவித்தார். ஆனால் சதாம் உசேனை விடுவிக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்குக் கூட அனுமதி தரும் போலீசார், இதற்கு அனுமதி தரவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடவும் அனுமதிக்க வில்லை.போலீசார் பாதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதையே இது காட்டுகிறது.
இப்போது ஆளும் கட்சி உதவியுடன் தப்பித்துக் கொள்ளபாதிரிகள் திட்டமிடுவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாதிரிகளுக்கு சாதகமாகவே வந்துள்ளது. மாணவி சுகன்யாவுக்குநீதி கிடைக்குமா? நீதி தேவதைக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(குறிப்பு: மாணவி சுகன்யா ஹிந்துவாகப் பிறந்த குற்றத்தினால் அவருக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்க வில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவுமில்லை)


கன்னியாஸ்திரிகளுடன் பாதிரிகள் உல்லாசம்!

ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் தங்கும் அறைகளில் வெளிநாட்டு மது பாட்டில்களும், காண்டம்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இந்தப் பள்ளியில், வெளிமாநிலங்களிலிருந்து பாதிரிகள் வந்து வெள்ளிக்கிழமை இரவிலிருந்து சில நாட்களுக்கு தங்குவது வழக்கம். அந்த நேரத்தில் பாதிரிகள் கன்னியாஸ்திரிகளுடன் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பார்களாம். இப்படி உல்லாசமாக இருக்கும் பாதிரிகளுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் விடுதியில் தங்கிப் படிக்கும் அழகான மாணவிகள்தான் உணவு உள்ளிட்ட பொருட்களை (?) எடுத்துச் சென்று பரிமாறுவார்களாம்.

பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள்?

பிளஸ் 1-ல் மாணவி சுகன்யா மூன்றாவது ரேங்க் எடுத்துள்ளார். ஆனால் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் சுகன்யா சரியாக படிக்கமாட்டார் என்று பேட்டி அளித்துள்ளார். சிங்கராயன் ஏன் பொய் சொல்கிறார்?

மாணவி சுகன்யாவின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வரை பேரம் பேசியதாக செய்தி வந்துள்ளது. ஏற்கனவே மர்மமான முறையில் இறந்த மாணவிகளின் பெற்றோருக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மர்ம மரணம் என்றால் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் புதைப்பதுதான் வழக்கம். ஆனால் மாணவி சுகன்யாவின் உடலை போலீசார் எரித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்?
பாத்திமா பள்ளியில் படிக்கும் மாணவிகள் பூ வைக்கவும், வளையல் அணியவும் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் பெண்கள் பள்ளி என்றால் பூ, வளையல் இருக்கத்தான் செய்யும் என்று பாதிரி சிங்கராயன் பேட்டி அளித்துள்ளார். அவர் ஏன் உண்மையை மறைக்கிறார்?

ஓமலூர் பாத்திமா பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளில் 15 மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
அழகான மாணவிகள் மட்டும் இறப்பது ஏன் என்று மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகம், போலீசாரின் பதில் என்ன?

240 மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்கு வெளி மாநிலங்களிலிருந்து வந்து பாதிரிகள் பலர் இரவு தங்குகிறார்களே எதற்காக? இது சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இது அரசுப் பள்ளி அல்ல. அதனால் இங்கு பணியிலிருக்கும் 86 பேரையும் மாற்றமுடியாது என்று சேலம் மறைமாவட்ட பிஷப் ஆணவமாக பேட்டி அளித்துள்ளார். எந்த தைரியத்தில் பிஷப் இப்படி பேசுகிறார்?

பொதுவாக குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளி எனக் கருதப்படுவோரை தங்க போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கற்பழிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதிரிகள், சம்பந்தப்பட்ட பாத்திமா பள்ளியிலேயே தங்கியுள்ளனரே ஏன்?

மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளை இருதய நோயாளிகள் என்பதற்காக கைது செய்யவில்லை என்று சேலம் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இருதய நோயாளிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் விட்டுவிடுவார்களா? இல்லை கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு மட்டும் இந்த சலுகையா?

பா.ஜ.க தவிர மற்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றனரே ஏன்? கிறிஸ்தவர்களின் ஓட்டுகளுக்காக ஹிந்து மாணவி கற்பழிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்களா?

மாணவியர் விடுதியில் `கோஹினூர்' காண்டம், `மார்கோபோலோ' பீர் பாட்டில்

கிறிஸ்தவப் பாதிரிகளால் மாணவி சுகன்யா கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஓமலூர் பாத்திமா மேல்நிலைப் பள்ளி விடுதியில் ஏராளமான கோஹினூர் `காண்டம்'களும், `மார்கோபோலா' பீர் பாட்டில் உட்பட வெளிநாட்டு மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆங்காங்கே பீர்பாட்டில்களும் காலி வெளிநாட்டு மது பாட்டில்களும் குவியல் குவியலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கன்னியாஸ்திரிகளுடன் பேட்டி அளிக்கும் பிஷப் சிங்கராயன்

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்...

மாணவி சுகன்யா மட்டுமல்ல 15-க்கும் மேற்பட்ட அழகான மாணவிகள் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

அரசு உதவியுடன் நடந்து வரும் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். அங்கு ஜெபம் என்ற பெயரில் நடக்கும் மதமாற்றத்தையும் தடுக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இறந்துபோன 15-க்கும் மேற்பட்ட மாணவிகளின் மர்ம மரணம் பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளி வரவழைக்க வேண்டும்.

இது கிறிஸ்தவப் பள்ளி. ஆசிரியர்களை இடமாற்றம் செய்யமுடியாது என்று ஆணவமாகப் பேசிய சேலம் மாவட்ட பிஷப் சிங்கராயன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டில்லியில் பிரியதர்ஷிணி மட்டூவை கற்பழித்து கொலை செய்ததற்காக வழக்கறிஞர் சந்தோஷ் சிங்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதுபோல மாணவிகளைக் கற்பழித்து கொன்றதாகக் கூறப்படும் பாதிரிகளுக்கும் விசாரணை நடத்தி மரண தண்டனை விதிக்க வேண்டும்.

நாடுமுழுவதும் கிறிஸ்தவப் பாதிரிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன. எனவே நாடுமுழுவதும் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முழுமையாக ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர் உதவியுடன் பாதிரிகள் இந்த விஷயத்தை அமுக்கப் பார்ப்பதாக செய்திகள் வருகிறது. அதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

No comments: