விருப்ப வழிபாடா? விளம்பர வழிபாடா?
இந்தி நடிகர் சல்மான்கான் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகரை வழிபட்டபோது எழுந்த சர்ச்சை ஒருவழியாக இப்போதுதான் முடிந்திருக்கிறது. ஆனால் சல்மான்கான் இப்போது மும்பையில் வைக்கப்பட்டிருந்த துர்கா தேவியின் சிலையை வழிபட்டு இருக்கிறார். இது விருப்ப வழிபாடா? அல்லது விளம்பரத்திற்கான வழிபாடு என்பது தெரியவில்லை. இப்போதெல்லாம் பிரபலம் ஆவதற்கு பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அந்த வழிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சல்மான்கான் ஹிந்து கடவுளை வழிபட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராமேஸ்வரம் கோவிலுக்குள் ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி சென்ற போது ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்கள் தவிர வேறு யாரும் இதற்கு மேல் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை உதாசினப்படுத்திவிட்டு அவர் சென்றதால் இந்து அமைப்புகள் ஹசன் அலிக்கு கண்டனம் தெரிவித்தன. ஹசன் அலி பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகரை வழிபட்டிருந்தாலும் ஹிந்து அமைப்புகள் வாழ்த்து தெரிவித்திருக்கும். ஹசன் அலிக்கு கண்டனம் எழுந்தபோது அதை கண்டித்தவர்கள் இப்போது சல்மான்கானுக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கும்போது அமைதியாய் இருக்கிறார்கள்.
குமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் எழுத்தாளர் ஹெச்.சி.ரசூல் குரான் பற்றி மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இதழில் எழுதிய கட்டுரைக்காக ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். ஒரு படைப்பாளிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை பற்றி பெரிய அளவில் கண்டனம் எழவில்லை. இப்படி முஸ்லிம்கள் எதை செய்தாலும் ஆதரிக்கும் போக்கு இருப்பதால்தான் கோவையில் குண்டு வைத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தவர்களுக்குகூட விடுதலை கிடைக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இனி என்னவெல்லாம் நடக்குமோ...?
No comments:
Post a Comment