October 13, 2007

தம்மம்பட்டியில் நடந்தது என்ன?

15.09.2007 அன்று வாசவி மஹால் அருகே வழக்கம்போல விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

15.09.2007 காலை பத்துமணிக்கு தம்மம்பட்டி மசூதியில் இருந்து, "மானமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக ரோட்டிற்கு வரவேண்டும். ஹிந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.


மசூதி ஒலிபெருக்கியில் இருந்து அழைப்பு வந்ததும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15.09.2007 மாலை 3 மணிக்கு 3,000க்கும் அதிகமான ஹிந்துக்கள் தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் குவிந்தனர். யாரும் அழைப்பு விடுக்காத நிலையில் தாங்களாகவே ஹிந்துக்கள் அனைவரும் கடையடைப்பு நடத்தினார்கள்.

15.09.2007 இரவு 7 மணிக்கு கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி செண்பகராமன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தம்மம்பட்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ஜாபர் சாதிக் அலி ஹிந்துப் பெரியவர்களை நோக்கி "உங்கள் நாடு நேபாளம். அங்கு சென்று பிழைத்துக்கொள்ளுங்கள். நேபாளத்திற்கு சென்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளுங்கள்" என்று பேசினார். இதனால் பேச்சுவார்த்தை முறிந்தது.

15.09.2007 இரவு 9 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பா.ஜ.கமாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி, பா.ஜ.க மாவட்டப் பொறுப்பாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட 10 பேர் ஹிந்துக்கள் தரப்பில் பங்கேற்றனர். ஹிந்துப் பிரதிநிதிகள் வன்முறையைத் தவிர்ப்பதற்காக விநாயகர் சிலைக்கு முன்பு திரைச்சீலை அமைக்க வேண்டும். தொழுகை நேரத்தில் பூஜை கூடாது போன்ற போலீசாரின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டனர். இதனை பொதுமக்கள் ஏற்கவில்லை.

16.09.2007 அன்று 36 ஜாதிகளைச் சேர்ந்த 135 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 8 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊர்க் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மறுநாள் 17.09.2007 அன்று பஸ்நிலையத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

அமைதியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்மீது நாமக்கல் எஸ்.பி.நிக்கல்சன் தடியடி நடத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்று நடந்த தடியடியில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் தாங்கள் நடத்திய தடியடிக்குக் காரணம் காட்டுவதற்காக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உட்பட 500 க்கும் அதிகமான அப்பாவி ஹிந்துக்கள்மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற கடுமையான பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.ராஜேந்திரன் தம்மம்பட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். அதன் பிறகு தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜகந்நாதன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்பவர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

1 comment:

Anonymous said...

இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறது. ஆனால் ஒரு சேனல்கூட இதைப்பற்றிச் சொல்லவில்லை.

____ ஜாபர் சாதிக் அலி ஹிந்துப் பெரியவர்களை நோக்கி "உங்கள் நாடு நேபாளம். அங்கு சென்று பிழைத்துக் கொள்ளுங்கள். நேபாளத்திற்குச் சென்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளுங்கள்" என்று பேசியிருக்கிறார்.____

இதுதான் இந்தியாவில் உள்ள அத்தணை இஸ்லாமியர்களின் மனநிலையும். அவர்கள் போராடிக்கொண்டிருப்பது மொகலாய சாம்ராஜ்யத்தை மீண்டும் கொண்டு வருவதற்குத்தான்.