October 13, 2007

தம்மம்பட்டி ஹிந்துக்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள்!

தம்மம்பட்டி ரெட்டியார் மண்டபத்தில் 36 ஜாதிகளைச் சேர்ந்த 135க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக எட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் சுருக்கம்.

தம்மம்பட்டி வாசவி மஹால் அருகில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மறைத்து முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகளால் வைக்கப்பட்டுள்ள திரைச்சீலையையும், தகரத் தடுப்பையும் உடனடியாக அகற்ற வேண்டும். அது வரை தம்மம்பட்டி நகரத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளையும் விசர்ஜனம் செய்யப் போவதில்லை.

15.09.2007 அன்று கமிஷனர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தம்மம்பட்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ஜாபர் சாதிக் அலி ஹிந்துப் பெரியவர்களை நோக்கி "உங்கள் நாடு நேபாளம். அங்கு சென்று பிழைத்துக் கொள்ளுங்கள். நேபாளத்திற்குச் சென்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளுங்கள்" என்று பேசியிருக்கிறார். அரசு ஊழியரான ஜாபர் சாதிக் அலியின் இந்தப் பேச்சை, இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் அரசு பணியாற்ற தகுதியற்றவர்.

வாசவி மஹால் அருகில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரத் தடுப்பினை உடனடியாக அகற்றாவிட்டால் கடையடைப்பு, உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். 17.09.2007 காலை 8 மணிக்கு பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரதம் நடைபெறும்.

மைனாரிட்டி மக்களுக்காக பெரும்பான்மை ஹிந்து சமுதாயத்தைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை அவர்களிடம் இருந்து உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் நிலையத்தின் முன்பு வெங்கடேஸ்வரா ஹோட்டல் என்ற பெயரில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டல் நடத்துவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்தப் பெயரை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விநாயகர் சிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரத் தடுப்பு அகற்றப்படாவிட்டால் ஹிந்துக்களாகிய நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றி நமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும்.

வாசவி மஹால் அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு தினசரி பூஜைகள் சிறப்பாக நடத்தப்படும். ஹிந்துக்கள் தங்களால் இயன்றவரை பிரசாதங்கள் வினியோகம் செய்து விநாயகரை வழிபட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2 comments:

Anonymous said...

Sir.. i am living in namakkal, and what you described seems to be another coimbatore.. please update the news in your blog..

Anonymous said...

ji.. you have done a good job.. i read all your posts only today. Will continue to read in future also..

-- sevashram ponnusamy, coimbatore