October 19, 2007

தம்மம்பட்டியில் 1989-ல் நடந்தது என்ன?

தம்மம்பட்டியில் மண்மலை முருகன் கோயில் என்ற புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்தப் பங்குனி உத்திரத் திருவிழாவின் இரண்டாவது நாள் நடக்கும் காவடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி ஏந்திச் செல்வார்கள். இந்த ஊர்வலம் பல நூறு ஆண்டுகளாக கன்னிகாபரமேஸ்வரி கோயில் அமைந்துள்ள வண்ணாரத்தெரு வழியாகத்தான் உற்சாகத்தோடு பவனி வரும். அங்கு மசூதி வந்தபிறகும் அந்த வழியாகத்தான் ஊர்வலம் மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தது. 22-03-1989ல் காவடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றபோது, மசூதி வழியாக செல்லக் கூடாது என்று முஸ்லிம்கள் பிரச்சினை செய்தார்கள். ஆனாலும் காவடி ஊர்வலம் மசூதி வழியாகச் சென்றது. முஸ்லிம்கள் தடுத்து நிறுத்த முயற்சித்த போதும் அந்தத் தடுப்பு முயற்சிகளை எல்லாம் முறியடித்துவிட்டு காவடி ஊர்வலம் மேளதாளத்துடன் மசூதியைக் கடந்துச் சென்றது.

அப்போது தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் உற்சாகம் அடைந்த முஸ்லிம்கள் காவடி ஊர்வலம் முடிந்ததும் ஹிந்துக்களின்மீது குற்றம் சாட்டி போலீசில் புகார் செய்தனர். இதனால் அப்போது மிகப்பெரிய அளவில் பதட்டம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டது. "நாங்கள் கோயில் அருகில் பெருந்தன்மையாக மசூதி கட்ட அனுமதித்தோம். ஆனால் இன்று அந்த மசூதியைக் காரணம் காட்டி எங்கள் ஊர்வலம் வரக்கூடாது என்பதா?" என்று ஹிந்துக்கள் கொதித்துப் போனார்கள். ஹிந்துக்கள் போராட்டத்தில் குதித்தார்கள். கடைகள் அடைக்கப்பட்டன.

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு தயாரானதும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஹிந்துக்கள் சத்தாபரணம் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு வரமுடியும் என்று கூறிவிட்டனர். காவடி ஊர்வலம் முடிந்ததும் முருகன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். இந்நிகழ்ச்சிக்கு சத்தாபரணம் என்று பெயர். சத்தாபரண நிகழ்ச்சியின் போதும் சுவாமி மசூதி உள்ள தெரு வழியாகத்தான் வீதி உலா வருவார். அப்படி சுவாமி வீதி உலா வரும்போது மசூதி முன்பு மேளம் வாசிக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் பிரச்சினை செய்தனர். இதனால் தம்மம்பட்டி மீண்டும் பதட்டமான சூழ்நிலைக்கு திரும்பியது.
ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டெண்டு பாலசுப்பிரமணியம் தலைமையில் தம்மம்பட்டி காவல்நிலையத்தில் ஹிந்து - முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஆடிட்டர் வி.ரமேஷ், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முழுநேர ஊழியர் ஜெகதீசன், மண்மலை முருகன் கோயிலின் தர்மகர்த்தா கந்தசாமி போன்றவர்கள் ஹிந்துக்களின் சார்பில் பங்கேற்றனர். தம்மம்பட்டியில் திராவிடர் கழகத்தினர் விநாயகர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றனர். இதற்கு தம்மம்பட்டியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் பெரிதும் துணை புரிந்தார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் முடிவில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் பிரமுகரை ஒரு மாதத்திற்குள் தம்மம்பட்டியில் இருந்து வெளியேற்றி விடுவதாக ஜமாத் உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த முஸ்லிம் நபர் ஊரைவிட்டு வெளியேற்றப் படவில்லை.பேச்சுவார்த்தை ஆரம்பமானதும் இந்தப் பிரச்சினையை எழுப்பி ஜமாத் அளித்த உறுதிமொழிப்படி அந்த முஸ்லிம் நபர் ஏன் வெளியேற்றப்படவில்லை என்று ஹிந்துப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினார்கள். "இது பற்றி நான் விசாரிக்கிறேன். ஆனால் மசூதி முன்பு மேளம் அடிக்காமல் ஊர்வலம் செல்லுங்கள்" என்று டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் கூறினார்.

"முன்பு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்தபோது மசூதிக்கு முன்பு பேண்டு வாத்தியம் வாசிக்கக் கூடாது என்றீர்கள். பிறகு இதனையே காரணம் காட்டி விநாயகர் ஊர்வலத்தின்போதும் மேளம் வாசிக்கக் கூடாது என்று தடை விதித்தீர்கள். `இம்முறை மட்டும் மேளம் அடித்துச் செல்ல வேண்டாம். அடுத்த முறை மேளம் அடித்துச் செல்லலாம்' என்று ஒவ்வொரு வருடமும் இதனையே சொல்கிறீர்கள். அதனால் இந்த முறை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். முஸ்லிம்கள்தான் விட்டுக் கொடுக்க வேண்டும்" என்று மண்மலை முருகன் கோயிலின் தர்மகர்த்தா கந்தசாமி பேசினார். மசூதி முன்பு மேளம் வாசித்துச் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்துள்ளது என்று அந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி வாத்திய இசையுடன் ஊர்வலம் செல்ல அனுமதிக்குமாறு ஆடிட்டர் ரமேஷ் போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் படித்து விவரம் அறிவதற்கு காலஅவகாசம் தேவை என்று டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இதற்கு பதிலளித்தார்.

முஸ்லிம்கள் தொழுகை நடக்காத ஒரு நேரத்தைக் குறிப்பிட்டால் அந்த நேரத்தில் நாங்கள் ஊர்வலம் சென்று விடுகிறோம் என்று பிரச்சினைக்குத் தற்காலிகமான தீர்வு ஒன்றைச் சொன்னார் ஆடிட்டர் ரமேஷ். ஆனால் இதனையும் ஏற்க மறுத்த முஸ்லிம்கள், `24 மணி நேரமும் தொழுகை நேரம்தான். எனவே கால அவகாசம் தரமுடியாது' என்று மறுத்து விட்டனர். முஸ்லிம்களின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை இப்படி நீண்டு கொண்டிருப்பதைக் கண்ட டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண 01-04-2007 தேதி உதவி கலெக்டர், தாசில்தார் தலைமையில் அமைதிக் கூட்டம் நடக்கும். அதில் ஒரு முடிவு காணப்படும் என்று அறிவித்தார். மேளம் அடிக்காமல் ஊர்வலம் செல்வதாக இருந்தால் நான் இப்போதே அனுமதி அளிக்கிறேன். இல்லையெனில் சட்டப் பிரிவு 30(2)ன் கீழ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் அறிவித்தார். சட்டப் பிரிவு 30(2) மத ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என்பதை ஜெகதீசன் எடுத்துக் கூறியும் டி.எஸ்.பி அதனை ஏற்காமல் நிராகரித்ததால் ஹிந்துப் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். டி.எஸ்.பி வெளிநடப்பு செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தியதால் பொதுமக்களிடம் பேசி அவர்களின் கருத்தை அறிந்து கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு ஹிந்துப் பிரதிநிதிகள் வெளியேறினார்கள்.

பிறகு ஹிந்துப் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மூன்று விதமான முடிவுகள் சொல்லப்பட்டு அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டது.

அவை.

1. உதவி கலெக்டர், தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் 01-04-1989 வரை ஊர்வலத்தை ஒத்திவைத்து பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஊர்வலம் நடத்துவது.

2. இன்றைக்கே(23-03-1989) மசூதி முன்பு மேளதாளத்துடன் ஊர்வலம் செல்வது. தடுக்கப்பட்டால் அதே இடத்தில் சப்பரத்தை விட்டுவிட்டு வந்துவிடுவது

3. இன்றைக்கே(23-03-1989) மசூதி முன்பு மேளம் அடிக்காமல் ஊர்வலம் நடத்துவது.

இதில் இரண்டாவது முடிவை பொதுமக்கள் ஏற்று இன்றைக்கே மேளதாளத்துடன் ஊர்வலம் நடத்துவோம். தடுத்தால் சப்பரத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்று முடிவு செய்தனர். பொதுமக்கள் தம்மம்பட்டி காவல்நிலைய்ததிற்கு வந்து இந்த முடிவை டி.எஸ்.பியிடம் தெரிவித்தனர். ஆனால் டி.எஸ்.பி இன்று ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்று மறுத்தார். ஆனால் பொதுமக்கள் அனைவரும் ஒரே குரலில் இன்று மசூதி முன்பு மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்தே தீரும் என்று கூறிவிட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். உடனே ஆடிட்டர் ரமேஷ் அவர்களும், ஜெகதீஷ் அவர்களும் ஊர்வலம் துவங்கும் மண்மேடு பகுதிக்கு வந்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷிடம், "நீங்கள் இருவரும் தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் தலையிடுகிறீர்கள். உள்ளூர் மக்கள் ஒத்துக் கொண்டாலும் நீங்கள் தூண்டி விடுகிறீர்கள். எனவே உங்கள் இருவரையும் கைது செய்யப் போகிறோம்" என்று மிரட்டல் விடுத்தனர். போலீஸ் அதிகாரிகள் இருவரையும் மிரட்டுவதைக் கண்ட பொதுமக்கள் இது நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. இதற்காக அவர்களைக் கைது செய்யக் கூடாது என்று ஒரே குரலில் கோஷமிட்டனர்.
ஆனால் பொதுமக்கள் கூறியதைக் கண்டுகொள்ளாத காவல்துறையினர் ஊர்வலம் துவங்கினால் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரையும் கைது செய்வோம் என்றனர். "நாங்கள் இருவரும் இந்தப் பிரச்சினைக்காகப் போராடி வருகிறோம். இதற்காக கைது செய்யப்பட்டால் மிகவும் பெருமை அடைவோம்" என்று இருவரும் கூற, போலீஸ் அதிகாரிகள் இருவரின் முகவரிகளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்துச் சென்றனர். திட்டமிட்டபடி 23-03-1989 அன்று சத்தாபரண ஊர்வலம் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் இரவு 9.30 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் எழுப்பிய"அரோகரா" "அரோகரா" என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. ஊர்வலம் துவங்கும்போது சுமார் 700 பேர் இருந்தனர். நேரம் செல்லச் செல்ல 2,000க்கும் அதிகமானோர் ஊர்வலத்தைப் பின்தொடர்ந்தனர். பஸ்நிலையம் அருகே சாலை மறிக்கப்பட்டு போலீஸ் ஜீப்புகள் நிறுத்தப்பட்டன. ஊர்வலம் நெருங்க நெருங்க தடுப்புகள் நீக்கப்பட்டு ஜீப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஊர்வலம் குறுகலான ஒரு தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிகளுடனும், தடிகளுடனும் போலீசார் வழிமறித்தனர். அவர்களுக்கு முன் டி.எஸ்.பி, தாசில்தார், தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் முன் அணியில் வந்து கொண்டிருந்த ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு டி.எஸ்.பி அழைத்தார். இருவரிடமும் என்ன செய்யப் போகிறீர்கள் என்று தாசில்தார் கேட்டார். " ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்" என்றார் ஆடிட்டர் ரமேஷ். மசூதி முன்பு மேளம் அடிக்காமல் சென்றால் அனுமதிக்கிறேன். இல்லையெனில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று தாசில்தார் மிரட்டினார்.

"மக்களிடம் உணர்ச்சி பொங்கும் இந்த நேரத்தில் எங்களுடன் ஒத்துழையுங்கள். இந்த நேரத்தில் மேளம் அடிக்காமல் செல்லுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் வைப்பது சாத்தியமல்ல. வேண்டுமானால் எங்களில் 10 பேரை கைது செய்யுங்கள். ஊர்வலத்தை ரத்து செய்து விடுகிறோம்" என்று ஆடிட்டர் ரமேஷ் கூறினார். இதனைக் கேட்ட டி.எஸ்.பி, "நாங்கள் உங்களை கைது செய்ய வரவில்லை. சுட வந்திருக்கிறோம்" என்றார். "அப்படியானால் சுடுங்கள். அதனை சந்தோஷமாக ஏற்கிறோம்" என்றார் ஜெகதீசன். அப்போது தாசில்தார் ஆடிட்டர் ரமேஷிடம், "உங்களில் 10 பேரை கைது செய்தால் ஊர்வலத்திற்கு வந்திருப்பவர்களை திரும்பிப் போகச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். முடியும் என்று கூறி கூட்டத்தினரை நோக்கி ஊர்வலத்தை விட்டு கலைந்துச் செல்லுமாறு வெண்டுகோள் விடுக்க முயற்சிக்கும்போது ஆடிட்டர் ரமேஷ், ஜெகதீஷ் இருவரையும் போலீசார் கீழே தள்ளி தடியால் அடித்தனர்.
ஆடிட்டர் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரையும் போலீசார் அடிப்பதைக் கண்ட ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் செல்வராஜ், பொதுமக்களை போலீசார் அடிக்காமல் தடுப்பதற்காக போலீசார் முன்பாக வந்து நின்றார். அப்போது தம்மம்பட்டி காவல்நிலையத்தில் எழுத்தராக இருக்கும் முஸ்லிம் போலீஸ்காரர் துப்பாக்கியின் முனையில் இருக்கும் கத்தியால் செல்வராஜின் வயிற்றில் குத்திக் குடலை உருவினார். துடித்துக் கொண்டிருந்த செல்வராஜ் பிழைத்துக் கொண்டுவிடுவோரா என்று அவரது நெஞ்சில் சுட்டார் அந்த முஸ்லிம் எழுத்தர். செல்வராஜ் துடிதுடித்து உயிர் துறந்தார். செல்வராஜைக் கொன்றதோடு அந்த முஸ்லிம் எழுத்தரின் வெறி அடங்கவில்லை பழனிச்சாமி என்பவரையும் அவர் சுட்டுக் கொன்றார். இந்தச் சமயத்தில் போலீசார் ஊர்வலத்தில் திரண்டிருந்த ஹிந்துக்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். மக்களைத் துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த நேரத்தில் போலீசாரால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 5 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேரின் உடல்களை போலீசார் ரகசியமாக அப்புறப்படுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.(30-03-1989ல் சட்டப்பேரவையில் பேசிய ஷ்ரீரங்கம் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வர தீட்சிதர் 5 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்) போலீசார் தாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக தங்கள் ஜீப் கண்ணாடியை தாங்களாகவே உடைத்துக் கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.


அத்தோடு போலீசாரின் வெறி அடங்கவில்லை. அன்று நள்ளிரவு வீடுவீடாகச் சென்று ஹிந்துக்களை மிரட்டி கைது செய்தனர். யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதும், பலர் படுகாயம் அடைந்ததும், பலர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டதும் தம்மம்பட்டி ஹிந்துக்கள் கொதித்துப் போனார்கள். உடனே அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றுகூடி முஸ்லிம்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்தனர். அவர்களுக்கு பால் உட்பட எந்தப் பொருளும் விற்பதில்லை. அவர்களிடம் இருந்து எந்தப் பொருளையும் வாங்குவதில்லை என்று முடிவு செய்தனர். முஸ்லிம்களுக்கு சவரம் செய்ய எந்த சவரத் தொழிலாளியும் முன்வரவில்லை. துணி வெளுக்க, சலவை செய்ய சலவைத் தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். ஊரே முஸ்லிம்களைப் புறக்கணிக்க முடிவு செய்து அதனைச் செயல்படுத்த ஆரம்பித்ததும் அரசு நிர்வாகம் பணிந்தது. பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

தம்மம்பட்டி ஹிந்துக்கள் முஸ்லிம்களை புறக்கணித்த ஆரம்பித்ததும் சேலம் ஆர்.டி.ஓ ஜக்மோகன் சிங் ராஜூ இரு தரப்பினரிடையே அமைதியை எற்படுத்தப் போகிறேன் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்த ஆர்.டி.ஓ ஜக்மோகன் சிங் ராஜூவை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள். இனி எக்காலத்திலும் சுவாமி ஊர்வலம் மேளதாளத்துடன் மசூதி வழியாகச் செல்லலாம் என்று எழுத்து மூலமாக அவரிடம் உறுதி அளித்தனர். முஸ்லிம்கள் எழுத்து மூலமாக உறுதி மொழி அளித்ததால் இப்பிரச்சினை அப்போது முடிவுக்கு வந்தது.

இந்தப் பிரச்சினையில் ஆடிட்டர் ரமேஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் முழுநேர ஊழியர் ஜெகதீசன், மண்மலை முருகன்கோயில் தர்மகர்த்தா கந்தசாமி உட்பட 22 பேர் போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த 22 பேரையும் விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். "ஹிந்துக்களின் மத சம்பிரதாயப்படி மேளதாளத்துடன் தாரை தப்பட்டை முழங்க மத ஊர்வலங்கள் நடப்பதை போலீசார் தடை செய்ய முடியாது. அப்படி மத சம்பிரதாயங்களுடன் ஊர்வலங்கள் நடப்பதற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இப்படி நடக்கும் ஊர்வலத்தை தடுப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 22 பேர் மீது போலீசார் தொடுத்த பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதும், அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பும் ஹிந்துக்களின் நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

1 comment:

ஜயராமன் said...

சரவணன் ஐயா,

உண்மை நிலையை உணரத்தந்ததற்கு மிக்க நன்றி. பழயதை மறந்தால் மீண்டும் விசனப்படுவோம் என்பதால் இந்த வரலாற்றை நாம் எப்போதும் நினைவுவைத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். இரு மதங்களின் தொழுகை இடங்கள் அருகருகே அமைந்தால் அவற்றை சமரசமாக பேணி விட்டுக்கொடுத்து போக வேண்டியது இரு மதங்களின் கடமை. பெருந்தன்மையாகவோ, அல்லது பின்விளைவுகளை முற்றும் அறியாமலோ மசூதிகளுக்கு கோயில் அருகில் அனுமதி தந்து பல இடங்களில் தேவையற்ற பிரச்சனைகள் கிளம்புகின்றன. முஸ்லிம்களின் "விட்டுக்கொடுக்கும் தன்மை" என்பது பெரும்பாலும் - முடிந்தால் கழுத்தை பிடி, காரியம் மிஞ்சினால் பின் காலைப்பிடி - என்றே இருக்கின்றன என்பது முஸ்லிம் தரப்பின் காலங்கடந்த ஒப்புதல் காட்டுகிறது.

தங்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி

ஜயராமன்