October 20, 2007

தம்மம்பட்டி துப்பாக்கிச் சூடு பற்றி ஷ்ரீரங்கம் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வர தீட்சிதர் 30-03-1989 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரை

30-03-1989 அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஷ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.வெங்கடேஸ்வர தீட்சிதர் தம்மம்பட்டயில் ஹிந்துக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு பற்றி பேசி அரசின் கவனத்தை ஈர்த்தார். இந்த துப்பாக்கிச் சூடு பற்றி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி தீட்சிதர் ஆற்றிய உரை 7-4-1989 வியபாரதம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் சுருக்கம்.
"மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே! திருச்சியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்காரர்களை ஏதோ ரயிலிலோ, ஹெலிகாப்டரிலோ ஏற்றிக் கொண்டுவந்து ஆத்தூர் பக்கத்தில் உள்ள தம்மம்பட்டியில் நான் இறக்கியிருப்பதாக லத்தீப் சொல்கிறார். லத்தீப் ஒரு தரப்பாக கூறியதை நீங்கள் அனுமதித்து இருக்கிறீர்கள். நாங்கள் இரண்டு பேரும் இங்கேதான் இருக்கிறோம். நானும் பத்திரிகையில்தான் பார்த்தேன். அவரும் பத்திரிகையில் பார்த்ததுதான். அவரும் கேட்டதைதான் சொல்கிறார். நானும் கேட்டதைத்தான் சொல்கிறேன். தம்மம்பட்டியில் மொத்தம் 5 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதாவது ஹிந்துக்கள். அதை நீங்கள் உணர வேண்டும். அங்கே என்ன நடந்தது? கலவரத்திற்கு காரணம் என்ன? போலீஸ் தலையிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டுமா? இதுபோன்ற பிரச்சினைகள் இருக்க ஏதோ ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எங்கிருந்தோ வந்து இறங்கினார்கள் என்று லத்தீப் கூறுகிறார்.


"பாதுகாப்பிற்காகத்தானே போலீசார் வருகிறார்கள். பிறகு எதற்கு அடிக்கிறார்கள்? மைனாரிட்டி என்ற பெயரை வைத்துக்கொண்டு சிலபேர் லாபம் அடைகிறார்கள். எங்கெங்கோ குடியேறுகிறார்கள். அந்தப் பக்கத்தில் மேளம் அடிக்கக் கூடாது என்கிறார்கள். எங்கே வேண்டுமானாலும் குடியேறுகிறார்கள். மேளம் அடிக்காமல் இருக்க முடியுமா? பங்குனி உத்திரத் திருவிழா என்பது இன்றைக்கு ஏற்பட்ட ஒன்றா? முருகன் கோயில் ஏற்பட்டது எத்தனையோ காலத்திற்கு முன்னால். அந்த உற்சவத்தில் மேளம் அடிக்கக் கூடாது என்கிறார்கள். அப்போதும் மேளம் அடிக்காமல் போனபோது வம்பு வந்துவிட்டது. துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. முதலில் இரண்டு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஒருபத்திரிகை செய்தி வெளியிட்டது. மொத்தத்தில் ஹிந்துக்கள் இறந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருக்கிறது. அதைப் பற்றி விரிவாக இந்த அவையில் பேசுவது நமது சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகத்தான்"

No comments: