June 11, 2007

இடைவிடாது இறைசேவை!

அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆர்.பாலாஜி என்பவர் தினமும் கரடு முரடான படிக்கட்டுகளின் வழியே ஒரு குடம் தண்ணீரைச் சுமந்து சென்று பசுபதீஸ்வரருக்கும், மரகதாம்பிகைக்கும் பூஜை செய்கிறார். மலைக்கு எதிரே உள்ள கணேஷ் பவன் ஓட்டலில் இருந்து கிடைக்கும் பொங்கலையும் படையலிடுகிறார். கடந்த இரண்டரை வருடங்களாக இவர் இடைவிடாது இப்பணியை ஒரு தவம் போல செய்து வருகிறார்.

பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம்!


அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.
அச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது. அதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் அர்த்த மண்டபம். அதனை அடுத்து நேராக மூலவர், சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழர் காலத்து திருத்தலமாகும்.
அச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதனாலேயே அந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்' என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது. அச்சிறுபாக்கம் மலை, கிராமத்தின் வலது புறத்தில் உள்ளது. இம்மலை தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது. மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது.
இம்மலை வஜ்ரகிரி என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் தோற்றத்தைப் பார்க்கும்போதே அக்கோயில் பல தாக்குதல்களையும், விஷமச் செயல்களையும் எதிர்கொண்டு நிற்பதை உணர முடியும்.
இக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பதை, அதன் அமைப்பே நமக்கு உணர்த்துகிறது. சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முதன்முதலில் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது இருந்த சிவலிங்கம், விஷமிகளின் செயலால் மலைச்சரிவில் புதையுண்டு கிடப்பதை நாம் காணலாம். நெடுங்காலத்துக்குப் பிறகு 1960களில் மௌன சித்தராஜா என்பவர் இத்திருத்தலத்தைப் பராமரித்து வந்திருக்கிறார். கோயிலைப் புனரமைக்கும் முயற்சியில் மீண்டும் சிவலிங்கத்தையும், முருகனின் திருஉருவத்தையும் அமைத்தார். அவர் இருந்த காலத்தில் மக்கள் அங்கு சென்று பிரதோஷ காலங்களிலும், வாரத்தின் முக்கிய பூஜை நாட்களிலும் வழிபட்டு வந்துள்ளனர். மலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது.
அச்சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சீதாபுரம், பள்ளிபேட்டை, நேமம் ஆகிய பகுதிமக்களுக்கு பசுபதீஸ்வரர் கோயில் குலதெய்வக் கோயிலாகும். பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள்


அச்சிறுபாக்கம் இந்துக்களின் கோரிக்கைகள்
* மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்ல, முன்னோர்களால் அமைக்கப்பட்ட பாதையை சீரமைக்க வேண்டும். இந்தப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் கிறிஸ்தவர்கள் கட்டியுள்ள அலங்கார நுழைவு வாயிலை அகற்றிவிட்டு பசுபதீஸ்வரருக்கு நுழைவு வாயில் கட்ட வேண்டும்.
* பசுபதீஸ்வரருக்குச் சொந்தமான வஜ்ரகிரி மலையை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
* வஜ்ரகிரி மலையில் உள்ள பாறைகளை உடைத்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
* இந்துக்களின் வழிபாட்டு முறையையே பின்பற்றச் செய்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும்.
* பசுபதீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளையும், மின்சார போர்டுகளையும் உடைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வஜ்ரகிரி மலையை நாங்கள் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளோம் என்று பாதிரிகள் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். இதற்கு வனத்துறையினர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

மலைக்கு வேலி!


வீட்டிற்கோ அல்லது வயல்வெளிகளுக்கோ வேலி அமைப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அச்சிறுபாக்கத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் கட்டியுள்ள மழைமலை மாதா என்ற சர்ச் உள்ள மலை முழுவதையும் ஏதோ தங்கள் குடும்ப சொத்துபோல வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்த மலைக்கு கீழ்தான் வனத்துறை அலுவலகமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்களின் பிடியில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை!


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.
அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.
தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது ஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே மு
ன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.
வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்' என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர். மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க' என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.
பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்.
எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்
ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.
அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்.
1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம். நீங்கள் எதுவும் செய்யக்கூடாது' என்று தடுத்துவிட்டனர்.
`நாங்கள் எங்கள் கோயிலை சீரமைக்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால் இதே மலையில் கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமான சர்ச் கட்டியுள்ளனரே? அதை ஏன் தடுக்கவில்லை' என்று சில துடிப்புள்ள இளைஞர்கள் கேட்டபோது, `அவர்கள் மலை
யை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர்' என்று வனத்துறையினர் கூறியதாக நம்மிடம் பேசிய சில உள்ளூர் இளைஞர்கள் கூறினார்கள். அதற்கு பிறகு மலையிலிருந்த மின்விளக்குகளையும், `சிவசிவ' மின்சார போர்டையும் இந்து விரோத சக்திகள் உடைத்து நொறுக்கிவிட்டனர். இதுபற்றி மலை உச்சிக்குச் சென்று தினமும் பூஜை செய்துவரும் ஆர்.பாலாஜி என்பவரும், ஊர்ப் பெரியவர்களும், அச்சிறுபாக்கம் காவல்துறையினர் முதல் தமிழக முதல்வரின் தனிபிரிவு வரை புகார் செய்துள்ளனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை.
கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமாக அமைத்துள்ள மழைமலை மாதா அருள்தலம் என்ற சர்ச்சை, வேளாங்கண்ணிபோல் பிரபலப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திருவண்ணாமலையில் நடப்பதுபோல் சர்ச்சை சுற்றி பௌர்ணமி தோறும் கிரிவலத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்துக்கள் தங்கள் கோயிலில் உள்ள வேப்பமரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி மஞ்சள் கயிறுகளையும், தொட்டிலையும் கட்டுவதுபோல இங்கும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி இந்துக்களின் வழிபாட்டு முறையிலேயே சென்று அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, மதமாற்றி வருகின்றனர். பள்ளிக்கூடங்கள் மற்றும் சில சேவைப்பணிகள் பெயரிலும் அப்பட்டமாக அங்கு மதமாற்றம் நடந்து வருகிறது. ஒருவர் எழுதிய புத்தகத்தைத் தழுவி வேறு ஒருவர் புத்தகம் எழுதினாலோ அல்லது ஒரு திரைப்படத்தின் சாயலில் வேறு ஒரு திரைப்படம் வந்தாலோ அது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது அதற்கு தடையும் விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை அப்படியே பின்பற்றி ஏமாற்றி மதமாற்றுபவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.

கிறிஸ்தவர்கள் அந்த மலைத்தொடரை அபகரிப்பதை பார்த்த முஸ்லிம்கள், தங்கள் பங்கிற்கு மலையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். பசுபதீஸ்வரர் கோயிலுக்கு பின்பக்கம் சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உள்ள கன்னிமார் கோயிலுக்கு அருகில் முஸ்லிம்களும் இந்துக்களை போல எட்டு செங்கலை நட்டு குங்குமப் பொட்டிட்டு பிறைகொடியை பறக்கவிட்டு ஒரு பள்ளிவாசலை அமைக்க முயற்சித்துள்ளனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது முறியடிக்கப்பட்டுள்ளது.
வஜ்ரகிரி மலைத்தொடர் முழுவதும் பசுபதீஸ்வரருக்குச் சொந்தமானது. இப்போது கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ள மலைக்குக் கீழே சித்திவிநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வழிபட்டுவிட்டுத்தான் பக்தர்கள் பசு
பதீஸ்வரரை தரிசிக்க வருவார்கள். இப்போது இடையில் சர்ச் வந்து விட்டதால் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போது 3 கோடி செலவில் ஜெபகோபுரம் ஒன்றைக் கட்டி வருகின்றனர். இதற்காக மலைப் பாறைகளை உடைத்து, அந்த ஜல்லிக் கற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுத்து வஜ்ரகிரி மலையையும், இந்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஓட்டுக்காக சிறுபான்மையினரின் காலில் விழும் தமிழக அரசுக்கு, இந்த அப்பாவி இந்துக்களின் கூக்குரல் கேட்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

January 20, 2007

மோடி வித்தை!

கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில் முதலீட்டளர்கள் உச்சி மாநாட்டில் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தொழிலபதிபர்களான ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா போன்றவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு புகழ் மாலை சூட்டினார்கள். அவற்றை இந்தியா டுடே(ஜனவரி 31,2007) வெளியிட்டுள்ளது. மீடியாவால் மதவெறியர், முஸ்லிம்களுக்கு எதிரானவர், சிறுபான்மையினருக்கு எதிரானவர், கொடுங்கோலன் என்று பாராட்டப்ட்ட நரேந்திர மோடிக்கு தொழிலதிபர்கள் வழங்கிய பாராட்டுக்களில் சில....

"தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தரப்படும் உறுதிமொழிகள் விரைவில் மறக்கப்பட்டுவிடும். ஆனால் துடிப்பான குஜராத் வித்தியாசமானது. 2003, 2005ல் நடந்த மாநாடுகளில் உறிதியளிக்கப்பட்ட திட்டங்களில் 80 சதவீதம் பூர்த்தி அடைந்து விட்டன. அல்லது பல்வேறு நிலைகளில் அமலாக்கப்பட்டுவிட்டன"
- இந்தியா டுடே(ஜனவரி 31,2007)

"இன்று குஜராத்தில் இல்லாதவர்கள் மக்குகள். மோடியின் தலைமையின் வசீகரமும், செயல்முறைகளும் எங்கள் அனைவரின் மனதையும் தொட்டது"
- கட்ச் மாவட்டத்தில் முந்த்ராவில் 4,000 மெகாவாட் மின்திட்டம் கொண்டு வருவதாய் அறிவித்த டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா.

"மோடி வியக்கத்தக்க வகையில் தெளிவாக தீர்மானமாக இருக்கிறார். அவர் குஜராத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்"
-குஜராத்திற்கு ரூ 67,000 கோடி முதலீட்டை அறிவித்த முகேஷ் அம்பானி.



"மோடி குஜராத்தின் சி.இ.ஓ"
- தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா






"குஜராத் ஒரு உன்னதமான கதை. அந்தக் கதை நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையைச் சுற்றியே உள்ளது"
- தொழிலதிபர் அனில் அம்பானி



"குஜராத் நல்ல ஆளுகையின் மாதிரி"
-எஃப் ஐசிசி ஐ சேர்மன் கோரக்கிவாலா

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் நரேந்திர மோடிக்கு புகழ் சூடியதோடு நின்று விடவில்லை. துறைமுகங்கள், மின்சாரம், ஜவுளித் துறை, விவசாயம், உயிரி தொழில் நுட்பம், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் ரூ 4.5 லட்சம் கோடி மதிப்பீட்டிலான முதலீட்டு திட்டங்ளை அறிவித்தார்கள். இதன் மூலம் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.( இதுபோன்ற அறிவிப்புகள் மற்ற மாநிலங்களைப்போல வெறும் அறிவிப்போடு நின்றுவிடுவதில்லை. கடந்த 2003 உச்சி மாநாட்டில் ரூ 65,000 கோடிக்கு 76 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ரூ.22,000 கோடி மதிப்பிலான 29 திட்டங்கள் உற்பத்தியை துவக்கி விட்டன. ரூ 39,000 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையில் உள்ளன. 2005 உச்சி மாநாட்டில் ரூ 1.06லட்சம் கோடிக்கு 227 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ரூ. 23,000 மதிப்பிலான 84 திட்டங்கள் உற்பத்தி நிலையிலும், ரூ. 65,000 கோடி மதிப்பிலான 85 திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையிலும் உள்ளன)

வழக்கம் போலவே இதனை மீடியா அதிகமாக கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளால் மட்டுமல்ல ஒட்டுமொத்த மீடியாக்களாலும் அதிகமாக இம்சிக்கப்பட்டவர் நரேந்திர மோடி. அவரைப்போல எதிர்ப்புகளைச் சந்தித்த முதல்வர் ஒருவர் இருக்கவே முடியாது. ஆனால் எல்லா எதிர்புகளையும் மீறி குஜராத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மோடி. மாநில அரசுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு குஜராத்திற்கு எந்த அளவுக்கு தொந்தரவுகள் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்து வருகிறது. முதலீட்டாளர்களை குஜராத்திற்கு செல்ல விடாமல் மத்திய அரசு எவ்வளவுதான் தடுத்தாலும் மோடி அவற்றை தவிடுபொடியாக்கி முதலீட்டாளர்களை குஜராத்தை நோக்கி படையெடுக்க வைத்து விடுகிறார். இன்று இந்தியாவிலேயே குஜராத் முதலிடத்தில் இருப்பதற்கு நரேந்திர மோடி தான் காரணம் என்பதை அவரை எதிர்த்த மீடியாவே ஒத்துக்கொண்டுள்ளது. இது நரேந்திர மோடியின் நிர்வாக திறமைக்கு கிடைத்த வெற்றி.

தூற்றுபவர் தூற்றட்டும். பாராட்டுபவர் பாராட்டட்டும் என்று தனது கடமையில் கண்ணாக இருந்து குஜராத்தை நாட்டின் முதல் மாநிலமாக மாற்றியிருக்கிறார் மோடி. அதனால்தான் மாநில முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தொழில்துறை சி.இ.ஓக்களிடம் ஒப்படைத்தால் நரேந்திர மோடி மீண்டும் தேறி விடுவார் என்று எழுதியுள்ளது இந்தியா டுடே. குஜராத்தை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

கடைசியாக ஒரு செய்தி.
நாட்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேர மின்வசதி அளித்துள்ள ஒரே மாநிலம் குஜராத்.



January 17, 2007

மேல்விசாரத்தில் நடக்கும் கொடுமைகள்!

மேல்விசாரத்தில் தமிழுக்கு விஷம்!


மேல்விஷாரத்தைப் பொறுத்தவரை உருதுமொழிக்குத்தான் முதலிடம். தமிழுக்கு இரண்டாவது இடம்தான். மேல்விசாரம் நகராட்சிக் கூட்டத்தில் தலைவரும் உறுப்பினர்களும் உருதுமொழியில்தான் விவாதிக்கின்றனர். அங்குள்ள நூலகத்திலும் உருது நூல்களும், உருது மொழி பத்திரிகைகளும்தான் அதிக அளவில் இருக்கின்றன. ஏதோ பேருக்கு ஒன்றிரண்டு தமிழ் இதழ்களை வைத்திருக்கிறார்கள். மக்கள் உருது மொழி தெரியாதவர்களிடம் மட்டுமே தமிழில் பேசுகிறார்கள்.
»மேல்விசாரத்தில் சுமார் 10 இந்துக் குடும்பங்கள் வசிக்கும் தெருவை முஸ்லிம்கள் `தமிழ் தெரு' என்றுதான் அழைக்கிறார்கள். தெருக்களின் பெயர்களும் கடைகளின் பெயர்களும் உருது மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

நகராட்சித் தலைவரை அறிவிக்கும் ஜமாத்!

nமேல்விஷாரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகள் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரத்திலும், 3,4,5,6 ஆகிய 4 வார்டுகள் இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரத்திலும் உள்ளன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை அங்கு ஊராட்சித் தேர்தலே நடந்ததில்லை. நகராட்சித் தலைவர், கவுன்சிலர்களை மேல்விசாரம் முஸ்லிம் ஜமாத்தே அறிவிக்கும். அவர்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இராசாத்துபுரத்தைச் சேர்ந்த இந்து கவுன்சிலர்கள், நகராட்சி கூட்டத்திலேயே முஸ்லிம்களால் தாக்கப்பட்டனர். அதிலிருந்து இராசாத்துபுரம் மக்கள் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவரைத்தான் நகராட்சி தலைவராக முஸ்லிம் ஜமாத் அறிவிக்கிறது. தற்போது மேல்விஷாரம் அ.தி.மு.க நகர செயலாளர் அஸ்லமின் மனைவி இர்ஃபானா அஸ்லம் நகராட்சித் தலைவராக இருக்கிறார். நகராட்சியில் இந்துக்கள் யாரும் உறுப்பினராக இல்லாததால் அங்கே என்ன நடக்கிறது, என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடப்பதில்லை. முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளில் நடக்கிறது என்று தகவல்.
nமேல்விஷாரம் நகராட்சியில் அலுவலகப் பணிகள் அனைத்திலும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டுள்ளனர். சாக்கடை சுத்தம் செய்வது, தெரு கூட்டுவது, கழிவறைகளை சுத்தம் செய்வது முதலிய வேலைகளை செய்வதற்கு மட்டும் இந்துக்களை பணியமர்த்தியுள்ளனர்.

மதமாற்றம்!

இப்போது ஆற்காடு தொகுதியில் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.ம.கவின் மாநிலத் துணைத்தலைவர் இளவழகன், இராசாத்துபுரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை லோகநாதன் இந்துக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 1991ம் ஆண்டு, `கட்சித் தகராறு' என்ற போர்வையில் அவர் குத்திக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய பிரமுகரை மேல்விஷாரத்தைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் பிரமுகர் ஒருவர் எந்த வழக்கும் இல்லாமல் காப்பாற்றி அவரை முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டார். இன்று அவர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அதே ஊரில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக இராசாத்துபுரம் மக்கள் கூறுகின்றனர்.

அரிஜன சுடுகாடு முஸ்லிம் குடியிருப்பு ஆனது!

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கான பாலாற்றுப் படுகையை ஆக்கிரமித்து 270 வீடுகளை முஸ்லிம்கள் கட்டியுள்ளனர். இந்த இடம் அரிஜன மக்களின் இடுகாடாக இருந்தது. இப்போது சட்டத்தைமீறி இந்த 270 வீடுகளுக்கும் மேல்விசாரம் நகராட்சி பட்டாவும் மின் இணைப்பும் கொடுத்துள்ளது. இந்த 270 வீடுகள் இருக்கும் இப்பகுதிக்கு `சாதிக் பாட்சா நகர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்கள் வசிக்க இடமின்றி சில இடங்களில் குடிசை போட்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு பட்டாவோ, மின் இணைப்போ இதுவரை வழங்கப் படவில்லை.

ஹிந்துக்களின் நிலங்களை அபகரிக்கும் முஸ்லிம்கள்!

இராசாத்துபுரத்தில் உள்ள இந்துக்களின் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, முஸ்லிம் தொழிலதிபர்கள் தோல் தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன. விவசாயம் செய்யமுடியாத இந்த நிலங்களை விற்றாவது பிழைத்துக் கொள்ளலாம் என்றால் ரூ. 10,000 மதிப்புள்ள 1 சென்ட் நிலத்தை முஸ்லிம்கள் ரூ.1000த்திற்கு கேட்கிறார்கள். ரூ. 1000க்கு அதிகமாக கொடுத்து யாரும் நிலம் வாங்கக் கூடாது என்று மேல்விஷாரம் முஸ்லிம் ஜமாத் கட்டளை பிறப்பித்திருப்பதாக இராசாத்துபுரம் மக்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.