எல்லாமே ஜமாத்!
கடந்த 25 ஆண்டுகளாக மேல்விசாரத்தில் ஜூஸ் கடை வைத்திருக்கும் அம்ஜத் உசேன் என்பவரை நாங்கள் சந்தித்தோம். இவர் ஆற்காட்டில் வசிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் ஆற்காடு நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் மட்டும் இல்லையே. ஏன்? என்று கேட்டோம். `மேல்விஷாரத்தைப் பொறுத்தவரை எல்லாம் ஜமாத் தான் முடிவு செய்யும். யாரும் ஜமாத்திற்கு தெரியாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்லமாட்டார்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, `ஜமாத் யாருக்கு ஓட்டுப் போட கட்டளை பிறப்பிக்கிறதோ அவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்' என்று அவர் சொல்ல, இஸ்லாத்தின் பிடியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிபடுவதை நாங்கள் உணரமுடிந்தது.
2. மேல்விஷாரத்தில் அப்துல் ஹக்கீம் என்ஜினீயரிங் கல்லூரியும், அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியும், 5க்கும் மேற்பட்ட பள்ளிகள், மிகப்பெரிய அப்பல்லோ மருத்துவமனை, வங்கிகள் என பெரிய நகரங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் உளளன. ஆனால் காவல் நிலையம் மட்டும் இல்லை. எல்லாவற்றையும் முஸ்லிம் ஜமாத்தான் தீர்மானிக்கும்.
3. முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேஷன், நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் போன்ற பல அமைப்புகள் முஸ்லிம்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருகின்றன.
No comments:
Post a Comment