June 15, 2007

விளக்கு எரியுமா வேங்கடரமணர் ஆலயத்தில்?

ராஜா கோட்டை என்றழைக்கப்படும் ராஜகிரி கோட்டையின் கீழ்தளத்திற்கு வெளியே பாண்டிச்சேரி வாயிலின் அருகில் தெற்கு பக்கமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வேங்கடரமணர் ஆலயம். ராஜகிரி கோட்டையின் மேலிருந்தும், கிருஷ்ணகிரி கோட்டையின் மேலிருந்தும் பார்க்கும்போது உயர்ந்த ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோயிலின் வடிவமைப்பு நம்மை பிரமிப்படையச் செய்கிறது. கி.பி. 1540க்கும் 1550க்கும் இடைப்பட்ட காலத்தில் முத்தையாலு நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில் தேவியருக்கும், ஆண்டாளுக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கோயிலின் உள்ளே உள்ள இரண்டு பெரிய பிரகாரங்களின் வழியே செல்லும்போது தென்படும் கல்யாண மண்டபமும், உற்சவ மண்டபமும், பாறைகற்களால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட யாகசாலையும், அழகிய சிற்பத் தூண்களுடன்கூடிய மண்டபமும், பாறை கற்களால் கட்டப்பட்ட பாதாள கஜானாவும் ஹிந்து மன்னர்களின் கலை ஆர்வத்தையும், அக்கால கலைஞர்களின் படைப்புத் திறனையும் பறைசாற்றுகின்றன. இக்கோயிலுக்கு வெளியே நான்கு ஒற்றைச் சிற்பத்தூண்களுடனும், சிறிய அழகிய கோபுரத்துடனும் கட்டப்பட்ட சிறுசிறு ஆலயங்கள் வேங்கடரமணர் ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.
ஆனால் இந்தச் சிற்பங்களும், மண்டபங்களும் முஸ்லிம் அரக்கர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள காட்சி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. சுவாமி விக்கிரகங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டதால் மூலஸ்தானங்கள் வெற்று மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. ராஜகோபுரத்தைத் தாங்குவதற்காக அதன் உள்ளே அமைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற தேக்கு மரத்தூண்கள் முஸ்லிம்களால் கொள்ளையடிக்கப்பட்டதால் ராஜகோபுரம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. செஞ்சிக்கோட்டை சிறிதுகாலம் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஃபிரெஞ்சுக்காரர்களால் வேங்கடரமணர் ஆலயத்திலிருந்து ஏராளமான சிற்பத் தூண்கள் பாண்டிச்சேரிக்கு கடத்தப்பட்டன. இந்தச் சிற்பத்தூண்கள் ஃபிரெஞ்சு ஆட்சியின்போது பாண்டிச்சேரி கவர்னராக இருந்த துய்ப்லெக்ஸின் சிலையை சுற்றி நிறுவப்பட்டுள்ளன. (பாண்டிச்சேரியில் இருந்த புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு ஜென்மாக்ரனி மாதா ஆலயம் என்ற பெயரில் சர்ச் கட்டியவர் இந்த துய்ப்லெக்ஸ்தான்) இச்சிலையையும், சிற்பத்தூண்களையும் இன்றும் நாம் பாண்டிச்சேரி கடற்கரையில் காணலாம். தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இந்து முன்னணி நடத்திய போராட்டத்தின் விளைவாக சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதுபோன்றே தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டை அடிவாரத்திலுள்ள வேங்கடரமணர் ஆலயத்திற்கும் விமோசனம் பிறக்கும் என்று செஞ்சி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக் கிறார்கள்.

3 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான கட்டுரைகள் அழகிய புகைப்படங்கள். நெஞ்சில் இரத்தத்தை வரவழைக்கிறீர்கள். இந்துக்கள் ஒன்றுபட்டால் ஒவ்வொரு இந்துவும் ஒரு தேசிங்கு ராஜனாக மாறினால் வேங்கடரமணர் ஆலயத்தில் நிச்சயம் விளக்கெரியும். விஜயபாரதம் போன்ற பத்திரிகைகளில் இது குறித்து நீங்கள் கட்டாயம் எழுதவேண்டும். அருமையான தகவல்களை உணர்ச்சி பூர்வமாக களத்தில் இறங்கி சேகரிக்கும் உங்கள் உத்தமமான சேவைக்கும் இந்து சமுதாயமும் இனி வரும் இந்து தலைமுறையும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. வாழ்க உங்கள் தொண்டு.

புதுவை சரவணன் said...

அரவிந்தன் நீலகண்டன்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி! இப்போதெல்லாம் தமிழகத்தில் எங்கு பயணம் செய்தாலும் நாம் காணும் காட்சிகள் கண்ணீரைத்தான் வரவழைக்கிறது. எவ்விதமான குற்ற உணர்வும் இல்லாமல் ஏதோ காலை கடன் முடிப்பதைப்போல இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது பாரம்பரிய பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஆலயங்கள் அழிந்து கொண்டு வருவதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். செஞ்சி கோட்டை அடிவாரத்தில் உள்ள வேங்கடரமணர் ஆலயத்தின் அமைப்பைக் கண்டு நான் வியந்து போனேன். நான் அங்கு சென்றபோது அங்கிருந்த காவலாளியிடம் பேச்சு கொடுத்தேன். அவர் தொல்பெருள்துறையினரால் வேலைக்கு அமர்த்தப்பட்டவரல்ல. தொல்பொருள் துறை சார்பில் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு இரண்டு இலக்கங்களில் சம்பளம் கிடைக்கிறது. ஆனாலும் அவர்கள் பணிக்கு வராமல் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளத்திற்கு ஒருவரை நியமித்து விடுகிறார்கள். அவர்கள் சம்பளம் வாங்குவதற்காவும், சம்பளம் கொடுப்பதற்காவும் மட்டுமே வருகிறார்கள். அப்படி இரண்டாயிரம் சம்பளம் பெறும் உள்ளூர்வாசியான காவலாளியிடம் நான் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இங்கு தான் அஜீத் நடித்த அமர்க்களம் படமும், இம்சை அரசன் 22ம் புலிகேசி படமும் எடுத்ததாகச் சொன்னார். அந்த ஆலயத்தைப் பற்றி நான் கேட்ட கேள்விகள் அவருக்கு ஒருவித ஆர்வத்தை தோற்றுவித்தது என்று நினைக்கிறேன். அதனால் என்னிடம் அவர் ஆர்வமாக பேசினார்.
நான் போன நேரத்தில் வேங்கடரமணர் ஆலயத்தில் என்னைத்தவிர வேறு யாரும் இல்லாததால் இங்கு மக்கள் அதிகமாக வருவதில்லையா என்றேன். விடுமுறை நாட்களில் சிலர் வருகிறார்கள். மற்ற நாட்களில் ஓரிருவர்தான் வருகிறார்கள் என்று பதிலளித்தார். எங்களின் பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும்போதே ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். ஆனால் அவர்களிடத்தில் ஜோடிப்பொருத்தம் இல்லை. அந்த பொருத்தமில்லாத ஜோடி உள்ளே நுழைந்ததும் என்னோடு பேசிக்கொண்டிருந்த காவலாளி அவர்களைத் பின்தொடர்ந்தார். 10 நிமிடத்திற்குள் வந்து விட்டார். எனக்கு விஷயம் புரிந்தது. மீண்டும் நான் ஆலயத்திற்குள் செல்வதை தடுக்கும் வகையில் என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். சற்று நேரத்திற்குள் அவரே ஒப்புக் கொண்டார். இரண்டாயிரம் சம்பளத்திற்கு நாள் முழுக்க காத்திருக்க வேண்டும். இப்படி ஒதுங்குபவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் 50, 100 கொடுப்பார்கள் என்றார். எனக்கு பேரதிர்ச்சி. வேங்கடரமணர் ஆலயத்தில் மட்டுமல்ல செஞ்சி கோட்டையின் எல்லா பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளையும், காலி மது பாட்டில்களையும், சிகரெட் துண்டுகளையும் பார்க்க முடிகிறது. அது அறிவிக்கப்படாத சிவப்பு விளக்கு பகுதியாக, சோனாலி கஞ்ச்சாக, ஜி.பி ரோடாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ராணி கோட்டையில் எற்பட்ட அனுபம் படு சுவாரஷ்யம்.
அதை பிறகு எழுதுகிறேன்.

ஜடாயு said...

ஒரு 12-13 வருடங்கள் முன்னால் செஞ்சிக் கோட்டைக்குச் சென்றிருக்கிறேன். இந்தப் பதிவுகளைப் பார்த்ததும் அதெல்லாம் மங்கலாக நினைவில் வந்தது.

அருமையான புகைப்படங்களுடன் செஞ்சிக் கோட்டையில் பழம்பெருமையையும், இன்றைய நிலையையும் பற்றி நேரடி பதிவுகள் அளித்திருக்கிறீர்கள் சரவணன். மிக்க நன்றி.

கர்னாடகத்தின் ஹம்பி போல, மகாராஷ்டிரத்தின் தௌலதாபாத் என்றழைக்கப் படும் தேவகிரி கோட்டை போல, தமிழ்நாட்டில் முஸ்லீம் படைகள் ஏற்படுத்திய சிலை உடைப்பு சேதத்தின் ஆவணமாக இந்தக் கோட்டை இருக்கிறது. அதனால் இதை பாதுகாத்து பராமரிப்பது அவசியம். பள்ளி மாணவர்கள் இங்கு சுற்றுலா வருகையில் இந்த விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு சரியான முறையில் விளக்கப் பட வேண்டும்.