தென்காசி படுகொலை : போலீசாரின் கட்டுக்கதையும் உண்மையும்
தென்காசியில் நடந்த படுகொலைகள் மதமோதல் அல்ல. இரு குடும்பங்களுக்கிடையேயான குழு மோதல் என்று காவல்துறையும் மீடியாவும் திரும்ப திரும்ப கூறி வருகின்றன. தென்காசி படுகொலை தொடர்பாக நான் எழுதிய பதிவில் பின்னூட்டம் இட்ட பலரும் இதை எப்படி மதமோதல் என்று சொல்ல முடியும் என்று வினா எழுப்பி இருக்கிறார்கள். எனது பதிவிலேயே இதற்கான பதில் இருந்தாலும் தொடர்ந்து திட்டமிட்டு சில சக்திகளால் குழு மோதல், குடும்ப மோதல் என்ற செய்தி பரப்பப்படுவதால் இதற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
தென்காசி படுகொலையில் ஹிந்துக்கள் தரப்பில் கொல்லப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அன்று இரு குடும்பங்கள் மட்டும் மோதிக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தரப்பில் மூவரை வெட்டிக் கொன்றவர்கள் மதத்தின் பெயரில் கொலை செய்ய கூடியவர்கள். இது குழு மோதல் அல்ல. மதமோதல் என்பதற்கு இது ஒன்றே போதும்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல்லா இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவன். நண்பனாக இருந்த குமார் பாண்டியனை இஸ்லாத்திற்காக கொன்றவன். அப்துல்லா முருகேசனாக ஹிந்துவாக இருந்திருந்தால் குமார் பாண்டியனை கொன்றிருக்க மாட்டான். இஸ்லாம்தான் அவனை கொலைவெறியனாக மாற்றியிருக்கிறது.
குமார் பாண்டியன் கொலையின் தொடர்ச்சியாகத்தான் இந்தக் படுகொலைகள் நடந்துள்ளது. குமார் பாண்டியன் கோயில் நிலத்தில் மசூதி கட்டப்படுவதை எதிர்த்ததால்தான் கொல்லப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கோயில் நிலத்தை காப்பாற்ற போராடிய ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இதனை குழு மோதல் என்று எப்படி கூற முடியும்?
குமார் பாண்டியன் கொல்லப்பட்டபோது அதற்கு காரணமானவர் என்று ஹிந்துக்களால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல முஸ்லிம் தொழிலதிபர்கள் வி.டி.எஸ் ரகுமான் பாட்சா, மற்றொரு பிரபல தொழிலதிபர் ஹாஜி மூசா அதிபர் ஆகியோர் மீது போலீசார் எஃப். ஐ.ஆர் போட்டுள்ளனர். இது குடும்ப மோதல் என்ற திரும்ப திரும்ப சொல்லும் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு என்ன காரணம்? இதில் ரகுமான் பாட்சா கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே முன் ஜாமீன் பெற்றுள்ளார். எந்த வழக்கும் தன் மீது இல்லாத ஒருவர், போலீசாரால் தேடப்படாத ஒருவர் ஏன் முன் ஜாமீன் பெற வேண்டும்? ஆகஸ்டு 14ம் தேதி கொலை நடக்கப்போவது அவருக்கு முன்னமே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார் என்று தொன்காசியில் சாதாரணமாகவே மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.ஆகஸ்டு 14-ம் தேதி படுகொலை நடந்த பிறகு ரகுமான் பாட்சாவும் ஹாஜி மூசா அதிபரும் தலைமறைவாகி இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.
இது மத மோதல் அல்ல. குடும்ப மோதல் என்று கூறிவரும் போலீசார் குமார் பாண்டியன் சகோதரர்கள்தான் முதலில் தாக்கினார்கள் என்று மற்றொரு பொய் மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். கொலை நடப்பதற்கு முன்பு ரகுமான் பாட்சா முன் ஜாமீன் பெற்றது. கொலைக்குப் பிறகு அவரும் ஹாஜி மூசா அதிபரும் தலைமறைவானது, போலீசார் மீது அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது போன்ற சம்பவங்கள் இந்த கொலையை முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்தி இருப்பதை உறுதி செய்கிறது.
முஸ்லிம் தரப்பில் மூவர் இறந்திருப்பதோடு 7 பேர் காயமடைந்திருப்பது அவர்கள் தரப்பில் 10க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்திருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் ஆயுதத் தாக்குதலில் ஈடுபட வேண்டுமானால் திட்டமிடாமல் சாத்தியமா? ஆனால் ஹிந்துக்கள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். யாரும் காயமடையவில்லை. ஹிந்துக்கள் தரப்பில் கூட்டமாக சென்று தாக்கியிருந்தால் பலர் காயமடைந்திருக்க வேண்டும். குமார் பாண்டியனின் கசோதரர்கள் கொலை திட்டம் தீட்டி இருந்தால் சகோதரர்கள் மூவறாக நிச்சயம் சென்றிருக்க மாட்டார்கள். ஒரு குழுவாகத்தான் சென்றிருப்பார்கள். மூவர் மட்டுமே சென்றால் மூவருமே இறந்துவிட்டால் குடும்பம் என்னவாகும் என்று யோசிக்க மாட்டார்களா? இவையெல்லாம் இந்த படுகொலை முஸ்லிம் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்கள்.
பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை பலர் சுட்டி காட்டி இருக்கிறார்கள். பொதுவாக கொலை வழக்கு பற்றி செய்திகளை வெளியிடும்போடு பத்திரிகைகள் போலீசார் என்ன செய்தி கொடுக்கிறார்களே அதை அப்படியே வெளியிட்டு விடுவார்கள். ஆகஸ்டு 14 படுகொலை சம்பவத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஆகஸ்டு 14ம் தேதி மாலை மலரில் முஸ்லிம்கள் தான் முதலில் தாக்குதல் நடத்திய செய்தி வந்துள்ளது கவனிக்கத் தக்கது. இதை அரவிந்தன் நீலகண்டன் தன் பதிவில் ஆவணப்படுத்தி உள்ளார். இது கொலை நடந்த உடனே வெளியான செய்தி. தொன்காசி நகரம்போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துபிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. போலீசார் சக்தி பாண்டியனோடு சேர்த்து நீதியையும் நேர்மையையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
குமார் பாண்டினை கொன்ற கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்திருந்தால் இந்த படுகொலைகள் நடந்திருக்காது. கொடூர கொலை குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வரும்போது ஆயுதங்களோடு வந்திருக்கிறார்கள். இதனை போலீசார் கண்டுபிடித்தபோதும் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். இதுபோன்ற போலீசாரின் அலட்சியங்களே இந்தப் படுகொலைக்கு காரணம்.
போலீசார் தங்கள் எஜமான் கருணாநிதியை திருப்திப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்தி படுத்திக் கொண்டிருக்கிறார். ஆக எலோரும் சேர்ந்து ஹிந்துக்களை சுடுகாட்டுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் எப்போது விடிவுகாலம் பொறக்கும்?
1 comment:
சரவணன்,
ஆட்சியாளரின் அனுகூலத்திற்காக உண்மைகளை போலிசார் திரித்தல் என்பது இறுதியில் போலிசாருக்கே ஆபத்தாக முடியும் என்பதனை கோவை செல்வராஜ் கொலைக்கு பின்னரும் உணராதது அதிசயமாக இருக்கிறது. சென்னிமலை படுகொலை முயற்சியிலும் போலிஸ் இதே விதமாக மூடி மறைக்க முயற்சித்துள்ளது. இது குறித்து ஒரு ரிப்போர்ட் தமிழன் எக்ஸ்பிரஸில் (23-8-2007) வெளியாகியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது அல்-உம்மா/மனித நீதி பாசறை-விடியல்வெள்ளி/தமுமுக-தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளிடமிருந்து தமிழ்நாட்டை யார் காப்பாற்ற போகிறார்கள் தெரியவில்லை.
Post a Comment