1925-லிருந்து தொடரும் அவலங்கள்
தென்காசியில் நடந்த படுகொலைகள் பற்றி ஒரு தரப்புச் செய்திகள் மட்டுமே வெளி வந்துள்ளன. இந்த படுகொலைகளை `இரு குடும்பங்களுக்கு இடையேயான மோதல்' என்று ஏ.டி.ஜி.பி விஜயகுமார், டி.ஐ.ஜி கண்ணப்பன், எஸ்.பி ஷ்ரீதர் உள்ளிட்ட காவல்துறையினர் அடிக்கடி கூறி வருகின்றனர். இதனை மீடியாக்களும் பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. ஹிந்து எழுச்சிக்கு பாடுபட்டு வந்ததால்தான் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் 17-12-2006 அன்று இரவு 10 மணிக்கு வெட்டிக் கொல்லப்பட்டார். ஹிந்து மக்கள் பிரதிநிதியின் இந்த உயிர் தியாகம் ஏதோ ஒரு புதிய சம்பவம் அல்ல. 1925ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியே இந்த சம்பவம். அது பற்றிய விபரங்கள் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
1. 1925ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள வண்டிப் பேட்டை என்ற இடத்தை பட்டா போட்டு கொடுக்குமாறு முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்க்க வழக்கறிஞர் வெங்கட்ரமணன்(தென்காசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர்) என்பவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டிஷ் கலெக்டர் இடத்தை நேரில் பார்வையிட வந்தபோது, முஸ்லிம்கள் இரவோடு இரவாக அங்குக் குடியேறி சமையல் செய்து கொண்டிருந்தனர். கலெக்டரிடம் `நாங்கள் இங்கு நீண்ட காலமாக குடியிருந்து வருகிறோம்' எனப் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டனர். ஆனால் வெங்கட்ரமணனின் தந்தை அவர்கள் `நேற்று தான் இங்கு குடியேறினார்கள். அனைவரது வீட்டு சமையல் பாத்திரங்களைப் பாருங்கள். அனைத்தும் புதிதாக உள்ளன. பல ஆண்டுகளாக சமைத்த பாத்திரங்கள் என்றால் கரி பிடித்திருக்கும். இங்கு உங்களை ஏமாற்றுவதற்காக ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டுக் குடியேறியுள்ளனர்' என்றார். உண்மையை உணர்ந்த கலெக்டர் அவர்களுக்கு பட்டா வழங்க மறுத்து விட்டார்.
2. 1952ஆம் ஆண்டு அருள்மிகு காசி விஸ்வநாதர் அலுப்பு மண்டபம் வழியாக மொகரம் சப்பரம் செல்வதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அலுப்பு மண்டபம் வழியாக மொகரம் சப்பரம் செல்வதை கடுமையாக எதிர்த்த கொழும்பு சங்கரன் பிள்ளை முஸ்லிம்களின் கொலை வெறிக்குப் பயந்து ஊரை விட்டே ஓடிவிட்டார்.
3. வாய்க்கால் பாலம் அருகிலுள்ள கொடிமரம் பகுதியில் முஸ்லிம்கள் மிலாது நபி கொண்டாடி வந்தனர்.1972ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் அலுப்பு மண்டபம் முன்பு திருக்கார்த்திகை அன்று சுவாமி எழுந்தருளும் இடத்தை "ஹமீதியா திடல்" என்று பெயர் சூட்டி மிலாது நபி விழா நடத்தினார்கள். ஹிந்துப் பெரியவர்கள் இதனை முறியடிக்கும் விதமாக அந்த இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.இந்த விநாயகர் சிலைக்கு மேலே போடப்பட்டிருந்த பந்தலுக்கு முஸ்லிம்கள் தீ வைத்தனர். அப்போது பெரிய அளவில் கலவரம் வெடித்தது. ஹிந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹிந்துக்கள் விநாயகர் சிலை வைத்ததற்கு போட்டியாக முஸ்லிம்கள் வாய்க்கால் பாலம் கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மௌல்வி அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி திடீர் கொட்டகை போட்டு பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். தென்காசி நகராட்சிக்கு செந்தமான இந்த இடத்தில்தான் குடிநீர் தொட்டி கட்ட பெருந் தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஹிந்துக்கள் விநாயகர் சிலையை அகற்றினால் நாங்கள் பள்ளிவாசல் கட்டமாட்டோம் என்றார்கள். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டார்கள். விநாயகர் சிலையை அகற்றுவதற்காக முஸ்லிம்கள் நடத்திய நாடகத்திற்கு வெற்றி கிடைத்தது. விநாயகர் சிலையை அரசு அகற்றியது. ஆனால் இப்போதும் அந்த இடத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்று கூறி அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.
4. 1980ல் தென்காசிக்கு அருகில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்கள் நடத்திய மதமாற்றம் நாட்டையே உலுக்கியது.
5. 1982-ல் இந்து முன்னணி கூட்டம் இராம.கோபாலன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல ஹிந்துக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பல ஆண்டுகள் அலைக்கழித்தனர்.
6. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையின்போது ஹிந்துக்களைக் கிண்டல் செய்வது போன்ற நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நடத்தி வந்தனர். 1986ஆம் ஆண்டு மொகரம் சப்பரம் தெற்கு மாசி வீதி வழியாக வந்தபோது தியாகி ராமநாத அய்யர் மீதும், அப்போதைய தென்காசி எம்.எல்.ஏ வெங்கட்ரமணன் மீதும் முஸ்லிம்கள் செருப்பு, கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். முஸ்லிம்களின் இந்த அட்டூழியத்தை துணிவுடன் எதிர்த்து போராடியவர் குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர். ஹிந்துக்களைக் கிண்டல் செய்வதற்காக முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலம் அன்றோடு நின்று போனது. அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில்தான் குமார் பாண்டியனும் அவரது சகோகதரர்களும் கொல்லப்பட்டனர் என்ற சந்தேகம் தென்காசி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
7. 1987ஆம் ஆண்டில் பக்ரீத் பண்டிகை அன்று மாலை 6 மணி அளவில் தெற்கு மாசி வீதியில் இந்து முன்னணி தலைவர் பாரதி சுப்ரமணியம் கத்தியால் குத்தப்பட்டார். அவரை குத்தியவர்கள் இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
8. திருக்கார்த்திகை தீபத்திற்கு சுவாமி எழுந்தருளும் இடத்தில் பள்ளிவாசல் கட்ட முஸ்லிம்கள் முயற்சித்து வருகின்றனர்.27-12-1990-ல் தென்காசி நகராட்சியில் பள்ளிவாசல் கட்டுவதை பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்த்தபோதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு பல ஆண்டுகள் நடந்தது.
9. 14-12-2001 அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் முடிந்து திரும்பியவர்களை வழிமறித்து குங்குமம் வைக்கக் கூடாது என்று கூறி முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
10. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அம்மன் கோயிலில் தவசு திருவிழா நடைபெற்றது. அப்போது பலூன் விற்றுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் ஹிந்துப் பெண்களை ஆபாசமாகக் கிண்டல் செய்ய, கலவரம் மூண்டது.
தென்காசியின் உண்மை வரலாறு இப்படி இருக்க இந்த பயங்கரப் படுகொலைகளை இரு குடும்பங்களுக்கிடையேயான மோதல் என்று அப்பட்டமாக கதை அளந்து வருகின்றனர். போலீசார் உண்மையை மறைத்து முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment