தன்னார்வத்துடன் மகிழ்ச்சியாய் சேவையாற்றும் பெண்கள்
26-08-2007 அன்று ராமேஸ்வரத்தில் நடந்த ராமசேது பாதுகாப்பு மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தில் இருந்து 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் உணவு அளிப்பதற்காக அங்கு மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஸ்வ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஓராசிரியர் பள்ளிகளை நடத்தி வருகிறது. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் இந்த ஓராசிரியர் பள்ளிகள் நடக்கிறது. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களான நூற்றுக்கணக்கான பெண்கள் உணவு தயாரிக்கும் பணிகளிலும், உணவு பரிமாறும் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். ஊட்டியைச் சேர்ந்த திருமதி ஹேமா சதீஷ் தலைமையில் இவர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் பெண்கள் ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்குச் சென்று மக்களை மாநாட்டிற்கு அழைத்துள்ளனர். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் நேரில் வந்து இவர்களை பாராட்டுவிட்டுச் சென்றார். இவர்கள் அனைவரும் சம்பளம் எதுவும் பெறாமல் தன்னார்வத்துடன் சேவை செய்ய வந்தவர்கள். அந்த காட்சியை பாருங்கள்...
No comments:
Post a Comment