September 06, 2007

அரசியல் கட்சிகளுக்கு சவால்விடும் திருமண விளம்பரங்கள்!


இப்போதெல்லாம் திருமண அழைப்பிதழ்களை விதவிதமாக அச்சடிக்கிறார்கள். சிலர் அதோடு திருப்தி அடைவதில்லை. விதம் விதமாக போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டி விடுகிறார்கள். இந்த போஸ்டர்களில் மணமகனும், மணமகளும் விதம்விதமாய் போஸ் கொடுக்கிறார்கள். டிஜிட்டல் தொழில் நூட்பம் வளர்ந்த பிறகு இந்த போஸ்டர் மோகம் அதிகரித்திருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு மிகப்பெரிய டிஜிட்டல் போர்டுகளை வைக்கிறார்கள். இவைற்றையெல்லாம் ஒரு நிமிட ரசனையோடு நாம் மறந்துவிடுகிறோம். நாம் இப்படி மறந்து விட்டல் ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிஜிட்டல் போர்டு வைத்தவர்கள் வருத்தப்பட மாட்டார்களா? அதற்காக நான் ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் மேற்கு கோபுர வாசலின் முன் வைக்கப்பட்டிருந்த ஒரு டிஜிட்டல் போர்டை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன். பார்து ரசியுங்கள்.

No comments: