ராமேஸ்வரம் - சில காட்சிகள்!
ராமநாதசுவாமி கிழக்கு கோபுர வாசல்
ராமநாதசுவாமி கிழக்கு கோபுர வாசல்
ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுரம்
அமைதியான ராமேஸ்வரம் கடலில் படகுகள் அணிவகுத்திருக்கும் காட்சி
ராமேஸ்வரம் கடலில் தன் தாயாருக்கு பக்தி சிரத்தையுடன் புனித நீரை ஊற்றும் இளம்பெண். அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட படம்.
ராமேஸ்வரத்தில் எங்கு பார்த்தாலும் சத்திரங்கள் காணப்படுகின்றன. சத்திரங்கள் இல்லாத ராமேஸ்வரத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. எல்லா மாநிலத்தவர்களும் இங்கு தங்கள் மாநிலத்தவர்கள் வந்தால் தங்குவதற்காக சத்திரங்கள் கட்டி வைத்துள்ளனர். நேபாளி தர்மசாலாவும் இங்கு உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோபுர தரிசனம்
ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பழமையான வீடு
ராமேஸ்வரத்தில் உள்ள நேபாளி தர்மசாலா
ராமேஸ்வரத்தில் உள்ள விளாத்திக்குளம் ரெட்டி ஜனசங்க சத்திரம்
ராமேஸ்வரத்தில் உள்ள ராமேஸ்வரம் காசி மடம்
எல்லா மாநில உணவு வகைகளையும் ராமேஸ்வரத்தில் ருசிக்கலாம். மிகப்பெரிய நகரங்கள்கூட ஞாயிற்றுக்கிழமைகளில் களையிழந்துவிடும். ஆனால் ராமேஸ்வரம் 7 நாட்களும் 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ராமேஸ்வரம் தீவு மக்கள் ராமநாதசுவாமி கோயிலை நம்பிதான் இருக்கிறார்கள். மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழில் எதுவும் இல்லை. முழுக்க யாத்ரீகர்களை நம்பிதான் இந்த நகரம் உள்ளது.
ராமேஸ்வரம் கடலில் புனித நீராடும் பக்தர்கள். சில காட்சிகள்...
ராமேஸ்வரம் கடலில் நீராடிவிட்டு கோயிலின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீரீடிவிட்டு ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசிப்பதற்காக விடியற்காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கிறார்கள். நான் ராமேஸ்வரத்தில் எடுத்த சில படங்களை தரிசனம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment