October 25, 2007

முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ரசித்த குத்தாட்டம் : சில காட்சிகள்


முன்பெல்லாம் அரசு விழாக்ககள் தூங்கி வழியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பேசுவார்கள். வேறு வழியின்று இருந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பவர்கள் மட்டுமே அரங்கில் இருப்பார்கள். இதையெல்லாம் சினிமாவுக்கு வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதி புரிந்து கொண்டார்போலும். இப்போதெல்லாம் அரசு விழாக்களில் நடிகைகளின் குத்தாட்டத்தைப் பார்க்க முடிகிறது. 84 வயது முதல்வரும் இதையெல்லாம் ரசிப்பதால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரே கொண்டாட்டம். அதிகாரப்பூர்வமாகவே குத்தாட்டத்தை ரசிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் முதல்வரும் கவர்னரும் ரசித்த சில குத்தாட்டக் காட்சிகளை இங்கே நீங்கள் பார்க்கலாம்.

இதே குத்தாட்ட காட்சிகளை ஹோட்டலிலோ அல்லது தனி இடத்திலோ நடத்தினால் போலீசார் அவர்களை கைது செய்கிறார்கள். ஆபாச நடன அழகிகள் கைது! என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஆனால் பகிரங்கமாக சில ஆயிரம் பேர் கூடியிருக்கும் அரங்கில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் என அதிகார வர்க்கம் முழுவதும் பார்க்க நடந்தால் அது குற்றமில்லையா? இதையெல்லாம் கலைஞரிடம் கேட்டால் சூத்திரன் நடனம் பார்க்க கூடாதா? அதற்கு தானே பெரியாரும் அண்ணாவும் எங்களுக்கு பகுத்தறிவை ஊட்டினார்கள் என்பார்.
நமக்கெதற்கு இதெல்லாம்....
முதல்வரோடு குத்தாட்டத்தை ரசித்தவர்கள்





1 comment:

Anonymous said...

இதில் என்ன தவறு?

அவர் அவர் தகுதிக்கு ஏற்ற நிகழ்ச்சிகளில்தானே கலந்துகொள்ள முடியும்?

டில்லியில் யாரேனும் மிகப் பெரிய தத்துவவாதி அல்லது ஆன்மீகவாதி பேசுவார் எனில், முதல் வரிசையில் அமர்ந்து அமைதியாய் கவனிக்கக்கூடிய, அவர்களோடு கலந்துறவாடக்கூடியவராக நேருவும், இந்திராகாந்தியும் இருந்தார்கள்.

கர்நாடக, ஹிந்துஸ்தானிய கச்சேரிகளைக் கேட்பதில் அப்போதுள்ள தலைவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

இதனால் தத்துவச் சிறப்பும், இலக்கிய, இசை வளர்ச்சியும் ஏற்பட்டது.

இது போன்ற குத்தாட்டங்களை ரசிக்கும் கருணாநிதி என்றைக்காவது ஒரு கர்நாடக இசைக் கச்சேரிக்கோ, தத்துவ உரையாடல் நிகழும் இடத்திற்கோ, கிராமிய கலைகளான வில்லுப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கோ ஒரு பார்வையாளராகச் சென்றதுண்டா?

ஏனெனில் இவற்றை இவர் காணச் சென்றால் இவற்றின் புகழ் பரவி, உயர்கலைகள் உயரும்.

ஒரு இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்த கருணாநிதி கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு செல்லாவிட்டால் வேறு எந்த அரசியல்வாதி போவார்?

தமிழகத்தின் நுண்கலைகளை அழிப்பது என்பதை நாசூக்காகச் செய்யும் தமிழர் தலைவரின் ராஜதந்திரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

அதுவுமில்லாமால் குத்தாட்டம் பார்ப்பதும், குத்தாட்டம் போடுபவர்களை ரசிப்பதும் ருசிப்பதும் இளமையிலேயே ஏற்பட்டுவிட்டால் மாற்றிவிடவா முடியும் அதை?