தம்மம்பட்டி : தடியடிக்காக நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் நடத்திய நாடகம்!
தம்மம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் அமானுல்லாகான் என்பவர் ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரில் அசைவ ஹோட்டல் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து ஒருவரிடம் இருந்து இந்த ஹோட்டலை வாங்கிய அமானுல்லாகான் பெயரை மட்டும் மாற்றவில்லை. அதோடு இந்த ஹோட்டலின் கல்லாபெட்டிக்கு பின்பு திருப்பதி வெங்கடாஜலபதி படமும் உள்ளது. ஆனாலும் இதனை ஊள்ளூர் ஹிந்துக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தம்மம்பட்டியில் விநாயகர் சதுர்த்திக்கு(15-09-2007) இரு வாரங்களுக்கு முன்புதான் `தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்'(த.மு.மு.க) ஆரம்பிக்கப்பட்டது. ஷ்ரீ வெங்கடேஸ்வரா ஹோட்டலின் உரிமையாளர் அமானுல்லாகானின் மகன் சம்சுதீன் தான் தம்மம்பட்டி த.மு.மு.க கிளையின் தலைவர்.
தம்மம்பட்டி கன்னிகாபரமேஸ்வரி வாசவி மஹாலுக்கு எதிரே விநாயகர் சிலையை நாகரஜன் என்பவர் வைத்தபோது மசூதியில் இருந்து மண்வெட்டி வாங்கிதான் சிலை வைக்கும் இடத்தை சீரமைத்திருக்கிறார். அந்த அளவுக்கு இணக்கமாக இருந்த முஸ்லிம்களை தூண்டிவிட்டு பிரச்சினை செய்தவர்களில் சம்சுதீன் முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் தம்மம்பட்டி ஜாமியா மஸ்ஜித்தின் முன்னாள் முத்தவல்லியுமான கே.ஏ.ஜப்பாரின் மகன் ஜாபர் சாதிக் அலியும், சம்சுதீனும்தான் மசூதி ஒலிபெருக்கியில் இருந்து, "மானமுள்ள முஸ்லிம்களே வீதிக்கு வாருங்கள்..." என்று அழைப்பு விடுத்தவர்கள். ஜாபர் சாதிக் அலி தம்மம்பட்டி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார்.
கன்னிகாபரமேஸ்வரி கோவிலையொட்டி கட்டப்பட்டுள்ள மசூதி( கோயில் 300 ஆண்டுகள் பழமையானது, மசூதி 50 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது)
விநாயகர் சிலையைப் பார்த்தால் வயிறு எரிகிறது
விநாயகர் சிலையை அகற்றக்கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் செய்ததும் ஹிந்து - முஸ்லிம் இரு தரப்பினருக்கிடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் த.மு.மு.க தலைவர் சம்சுதீனும், தம்மம்பட்டி கூட்டுறவு வீடுகட்டும் சங்கத்தின் செயலாளர் ஜாபர் சாதிக் அலியும் பங்கேற்றனர். இவ்விருவரும்தான் "நாங்கள் தொழுகை முடித்து வரும்போது விநாயகர் சிலையை பார்த்தால் வயிறு எரிகிறது" என்று கூறியிருக்கிறார்கள். விநாயகர் சிலையை பார்த்தால் வயிறு எரிகிறது என்று கூறுபவர் எதற்காக தனது அசைவ ஹோட்டலுக்கு எதற்காக ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்று ஹிந்து பெயரை வைக்க வேண்டும்? பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் ஹிந்து கடவுள் வேண்டும். மற்றபடி ஹிந்து கடவுள்களைப் பார்ததால் வயிறு எரிகிறதா? ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஹிந்துக்கள் அவர்களிடம் கொதிப்புடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 16-09-2007 அன்று நடந்த 36 ஜாதி சங்கங்களின் பிரதிநிதிகள் பங்றே்ற கூட்டத்திலும் ஷ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரை மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னிகாபரமேஸ்வரி கோவிலும், மசூதியும் அமைந்துள்ள வண்ணாரத் தெரு. (நீண்ட மசூதியின் மேற்கு முனையில் இருந்து எடுக்கப்பட்ட படம். இந்த முனையில்தான் ஓராண்டுக்கு முன்பு மசூதியின் வாயில் இருந்தது)
17-09-2007 அன்று உண்ணாவிரதம் ஹிந்து இளைஞர்களிடம் தம்மம்பட்டி சப் - இன்ஸ்பெக்டர் பழனிவேல் "இதுதான் சரியான சந்தர்ப்பம். ஷ்ரீ வெங்கடேஸ்வரா ஹோட்டல் பெயர்பலகையை அகற்றி விடுங்கள்" என்று உசுப்பி விட்டிருக்கிறார். சப் - இன்ஸ்பெக்டர் இப்படி சொன்னதும் அதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் கூட்டமாக ஷ்ரீ வெங்கடேஸ்வரா ஹோட்டலை நோக்கி ஓடியிருக்கிறார்கள். இதனால் கூட்டத்தில்
திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே இதற்காவே காத்திருந்த கிறிஸ்தவரான நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் தடியடி நடத்த உத்திரவிட்டார். உடனே போலீசார் வெறிபிடித்தவர்களைப்போல ஹிந்துக்களை அடித்து நொருக்கினார்கள். இதில் கர்ப்பிணி பெண்கள் உட்பட பல பெண்கள் பலத்த காயமடைந்தனர்.
போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்த தமிழரசி( சுருட்டு சுற்றி பிழைக்கும் இவருக்கு வயதுக்கு வந்த பெண் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்)
தம்மம்பட்டியைச்சேர்ந்த ரவி என்பவரின் மனைவி தமிழரசியை போலீசார் அடித்து நொருக்கியதில் அவருக்கு முதுகு மற்றும் விலா பகுதிகளில் பலமான உட்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்றார். தமிழரசி சுருட்டு சுற்றி பிழைப்பு நடத்தி வருபவர். தமிழரசி மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் முன் ஜாமீன் பெற்று ஆத்தூரில் தங்கி அங்குள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்துப்போட்டு வருகிறார். தமிழரசிக்கு வயதுக்கு வந்த ஒரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தமிழரசியின் கணவர் மாலத்தீவில் இருக்கிறார். இதனால் இவரது குழந்தைகள் மூவரும் தாய், தந்தையைப் பார்க்க முடியாமல் தனியாய் தவித்து வருகின்றனர். ஹிந்துக்கள் மீது தடியடி நடத்த வேண்டும் என்பதற்காக நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் சப் - இன்ஸ்பெக்டர் பழனிவேல் மூலம் நடத்திய நாடகம் தான் இது. ஜான் நிக்கல்சனின் ஆலோசணையின்படிதான் எஸ்.ஐ பழனிவேல் ஹிந்து இளைஞர்களைத் தூண்டி விட்டார்.
கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு அருகில் ஓராண்டுக்கு முன்பு மாற்றப்பட்ட மசூதியின் நுழைவு வாயில்.
போலீசார் தடியடி நடத்தி முடிந்ததும் விநாயகர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த தகர தடுப்பை அகற்றச் சென்ற கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்கு வந்தார். அவரிடம் காரணமில்லாமல் போலீசார் தடியடி நடத்தி கர்ப்பிணி பெண்களை தாக்கியது பற்றி புகார் தெரிவித்தனர். இந்த தடியடிக்கு காரணமானவர்கள் மீது புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். இதனால் நம்பிக்கையோடு ஹிந்துக்கள் புகார் மனு எழுதி கொடுத்தனர். ஆனால் அதன்பிறகு போலீசாரின் நடவடிக்கை மோசமாக அமைந்தது. தாங்கள் காரணமில்லாமல் நடத்திய தடியடிக்கு காரணம்தேடி அலைந்தார்கள். தம்மம்பட்டியில் கண்ணுக்கு தென்பட்டவர்களை எல்லாம் கைது செய்தார்கள். சேலத்தில் இருந்த பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைத்து நள்ளிரவில் சட்டப்பிரிவின் 307( கொலை முயற்சி) கீழ் கைது செய்தனர். 500க்கும் அதிகமானோர் மீது 307 பிரிவின் கீழ் வழக்குத் தொடுத்தனர்.
1 comment:
புதுவை சரவணன் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை ஆவணப்படுத்தும் சேவை மகத்தானது. இந்து சமுதாயமும் வரும்தலைமுறையும் தங்களுக்கு கடன்பட்டுள்ளது. வாழ்க உங்கள் மனதிண்மையும் நேர்மையும் தொலைநோக்கு பார்வையும். வணக்கங்கள்.
Post a Comment