November 26, 2007

இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட நான்கு வன்னிய இளம்பெண்கள்!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பசுபதிகோயில் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் லோகேஸ்வரி(22), அம்பிகா(20), சர்மிளா(19), பப்பி என்கிற சங்கீதா என்ற நான்கு மகள்களும் உள்ளனர். கலைச்செல்வன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவனை பறிகொடுத்துவிட்டு நான்கு மகள்களையும் சித்ரா கஷ்டப்பட்டு வளர்த்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் மூத்த மகள் லோகேஸ்வரி சக்கராப்பள்ளியில் உள்ள ரஜயா கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தார். இந்த கிளினிக்கை டாக்டர் ரசாக் ஜானி நடத்தி வருகிறார்.

மதம் மாற்றப்பட்ட லோகேஸ்வரி, அம்பிகா, சர்மிளா ஆகியோரின் தாய் சித்ரா


லோகேஸ்வரியின் குடும்ப பின்னணியை அறிந்த டாக்டர் ரசாக் ஜானி லோகஸ்வரியை மூளை சலவை செய்து அவரின் மற்ற சகோதரிகளில் இருவரையும் தன் கிளினிக்கில் வேலைக்கு அமர்த்தி கொண்டார். என்னிடம் வேலைக்கு சேர்ந்தால் உங்கள் திருமணச் செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகூறி அவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். இவரது கிளினிக்கிற்கு வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் திட்டமிட்டு இந்தப் பெண்களை மதம் மாற்றி இருக்கிறார்கள். அய்யம்பேட்டை அருகிலுள்ள மாகாளிபுத்தைச் சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தத்தின் மகள் கலைச்செல்வியையும்(20) இவர்களது வலையில் விழ வைத்துவிட்டார்கள். இந்த கலைச்செல்வி சித்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


டாக்டர் ரசாக் ஜானி நடத்தும் ரஜயா கிளினிக்


4-11-2007 அன்று இந்த நான்கு பெண்களும் முத்துப்பேட்டைக்கு சுற்றுலா என்ற பெயரில் சென்றுள்ளனர். இவர்களோடு லோகேஸ்வரியின் கடைசி தங்கை பப்பி என்கிற சங்கீதாவையும் அழைத்துச் சென்றுள்ளனர். சங்கீதா 10 வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் அவரை இப்போதைக்கு மதம் மாற்றினால் மூளை சலவை செய்தது வெட்டவெளிச்சமாகிவிடும் என்பதால் விட்டுவிட்டார்கள். சுற்றுலா சென்ற மகள்கள் நால்வரும் வீடு திரும்பவில்லையே என்று தாய் சித்ரா தவித்துக் கொண்டிருக்கும்போது லோகேஸ்வரி தனது தாய்க்கு போன் செய்துள்ளார். மகளிடம் இருந்து போன் என்றதும் ஆசையோடு சென்ற தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் மூவரும் கலைச்செல்வியும் முஸ்லிமாக மாறிவிட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் சித்ரா கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு மெல்ல மெல்ல விஷயம் ஊர் மக்களுக்கு பரவ தங்கள் எதிர்ப்பைக் காட்டும்விதமாக கடையடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.

மதம் மாற்றத்திற்கு மூலகாரணமான டாக்டர் ரசாக் ஜானி


விஷயம் பெரிதாவதை உணர்ந்த முஸ்லிம் மதமாற்ற கும்பல் நான்கு பெண்களையும் சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இப்போது அந்த நான்கு பெண்களும் பாம்பாட்டியின் மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் சொல்வதையே கேட்கின்றனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாடகத்தையும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

மதம் மாற்றப்பட்ட கலைச்செல்வியின் தந்தை முருகானந்தம்

கணவனும் இல்லை. கஷ்டப்பட்டு வளர்த்த நான்கு பெண்களில் மூவரை மதம்மாற்றிவிட்டார்கள். இந்த அதிர்ச்சியில் இருக்கும் சித்ராவிடம் நண்பர்கள் உதவியிடன் பேசினேன். அவரிடம் இருந்து அழுகைதான் பதிலாக வருகிறது. அந்த அளவிற்கு அதிர்ந்து போயிருக்கிறது அந்த தாயுள்ளம். 10 வகுப்பு படிக்கும் பப்பி என்ற சங்கீதாவிடம் நவம்பர் 4-ம் தேதி எங்கு சென்றீர்கள் என்றேன். முத்துப்பேட்டைக்கும் அதிராம்பட்டினத்திற்கும் சென்றோம் என்றார். முத்துப்பேட்டையும், அதிராம்பட்டினமும் இஸ்லாமிய ராஜ்ஜியம் நடக்கும் ஊர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மதம் மாற்றப்பட்ட உங்கள் மகள்களின் போட்டோ இருக்கிறதா என்று கேட்டோம். நிறைய போட்டோக்கள் இருந்தது. எல்லாவற்றையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள். பள்ளிச் சான்றிதழ்கள், ரேசன் கார்டின் நகல் உள்ளிட்ட தங்களைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் அவர்கள் துடைத்து எடுத்துச் சென்று இருப்பதை சித்ரா அழுகையோடு எங்களிடம் சொன்னார். லோகேஸ்வரியின் பெயரில் வங்கியில் ரூ 17,000 இருந்திருக்கிறது. அதற்கான பாஸ் புத்தகத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

மதம் மாற்றப்பட்ட லோகேஸ்வரி, அம்பிகா, சர்மிளா ஆகியோரின் தங்கை பப்பி என்கிற சங்கீதா

நான் அவரின் கடைசி மகள் சங்கீதாவிடம் பேசினேன். அவரின் பேச்சிலிருந்து அவரும் மற்ற சகோதரிகளுடன் செல்லவே விரும்புகிறார். சங்கீதாவுக்கு இஸ்லாம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. அக்காவுடன் செல்லவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருக்கிறது. ஆனால் 18 வயது ஆகவில்லை என்பதால் அவரை விட்டு வைத்திருக்கிறார்கள். 18 வயது ஆனதும் சங்கீதாவை விட்டு வைக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் மதம் மாற்றியதைக் கண்டித்து முழு அடைப்பு நடந்தபோது அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவரான முஸ்லிம் காவல்துறையினருக்கு பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.

மதம் மாற்றத்திற்கு மூலகாரணமான டாக்டர் ரசாக் ஜானி தஞ்சையில் உள்ள ரோகிணி மருத்துவமனை என்னும் பிரபல மருத்துவமனையிலும் பங்குதாரராக இருக்கிறார். ரோகிணி மருத்துவமனையிலும் இதுபோன்ற மதம் மாற்றம் நடந்திருக்க / நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்துப்பெயரில் இருப்பதால் ஏமாந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


மதம் மாற்றப்பட்ட இந்த நான்கு பெண்களும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இன்று பசுபதிகோயில் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழை வன்னியத் தாய் அழுகிறாள். நாளை எத்தனை தாய் மகளை பறிகொடுத்துவிட்டு அழப்போகிறார்களோ. இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உங்கள் அன்பு மகள் உங்களுக்கு எதிரியாக மாறிவிடுவாள்.

November 19, 2007

இது அன்னதானம் அல்ல.

இது அன்னதானம் அல்ல. நந்திகிராமில் மார்க்கிஸ்ட் குண்டர்களால் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்பட்ட மக்களுக்கான நிவாரண முகாமின் ஒரு காட்சி. சொந்த நாட்டிலேயே ஆளும் கட்சியினரால் அகதிகளாக்கப்பட்ட காட்சி இது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக கிராம மக்களை விரட்டியடித்த மார்க்கிஸ்ட் குண்டர்களை யார் மன்னிப்பது? மார்க்ஸ் மன்னிப்பாரா?



WITHOUT COMMENTS





முஸ்லிம் நாட்டின் தூதரகம் நடத்திய ராமாயண நாடகம்!

ராமர் என்று ஒருவரே இல்லை என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஆனால் சென்னை காமராஜர் அரங்கில் 18-11-2007 அன்று இந்தோனேசிய நடன குழுவினர் ராமாயணத்தை நாடகமாக நடித்துக் காட்டினார்கள். ராமர் அவதாரமெடுத்து வாழ்ந்து வழிகாட்டிய இம்மண்ணை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ராமரை வஞ்சித்துக் கொண்டிருக்க இஸ்லாமிய நாடான இந்தோனேசிய தூதரகம் ராமாயண நாடகத்தை நடத்தி உள்ளது கவனித்தக்கது.

ராமர் தான் என் உயிரை காப்பாற்றினார் என்று கருணாநிதியிடம் கூறுகிறார் கிருஷ்ணசாமி



கருணாநிதி ராமர் இல்லை என்று சொன்ன பிறகு அவருக்கு பல இடங்களில் ராமர் காட்சி தந்து வருகிறார். மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை கருணாநிதி பார்க்கச் சென்றார். அப்போது கிருஷ்ணசாமி நான் அணிந்திருந்த ராமர் உருவம் பொறித்த டாலர் தான் எண் மீது வேல் பாயாமல் தடுத்தது. ராமர்தான் என் உயிரை காப்பாற்றினார் என்று பக்தி பெருக்கோடு கூறினார்.


இப்போது இந்தோனேசிய தூதரகம் மூலம் சென்னை காமராஜர் அரங்கில் ராமர் காட்சி தந்திருக்கிறார். கருணாநிதியை தமிழக எல்லைக்கு வெளியே யாருக்கும் தெரியாது. ஆனால் ராமர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பிறகும் உலக மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த உண்மையை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் துறவிகள் மாநாடு!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான சங்கராலயத்தில் தென்பாரத துறவியர்களின் மாநாடு நடைபெற்றது. 17-11-2007 அன்று நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடாகா போன்ற தென்மாநிலங்களில் இருந்து துறவியர்களும், மடாதிபதிகளும் பங்கேற்றனர். ராமர் பாலத்தை இடிக்காமல் காப்பாற்றுவதற்கான போராட்டத்தை வலுப்படுத்த இராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்தால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.



பெஜாவர் சுவாமிகள் பேசுகிறார்



நவம்பர் 30 ம் தேதியிலிருந்து ராமர் பாலத்திலிருந்து எடுக்கப்பட்ட மிதக்கும் கல் ரத யாத்திரையாக நாடு முழுவதும் மக்கள் தரிசனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

டிசம்பர் 30ம் தேதி புதுடெல்லி போட் கிளப்பில் 15 லட்சம் ராம பக்தர்கள் பங்கேற்கும் டில்லி சலோ மாநாடு நடத்தப்டும்.

என்ற இரு அறிவிப்புகள் இந்த மாநாட்டிலும் மாநாட்டின் இடையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளியிடப்பட்டன.


ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் சுப்பிரமணிய சுவாமிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம், பொதுச் செயலாளர் டாக்டர் பிரவின்பாய் தொகாடியா, மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன், ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்தின் அகிலபாரதத் தலைவர் டாக்டர் எஸ்.கல்யாணராமன், செயலாளர் டி.குப்புராமு, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, சந்திரலேகா, ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்பாரத அமைப்பாளர் சேதுமாதவன், தினமலர் உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், உடுப்பி பெஜாவர் சுவாமிகள், ஹரித்வார் ஹம்ஸ்தாஸ் சுவாமிகள், பேரூர் இளைய பட்டம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ஷ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம் சாக்தஷ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சதுர்வேதி சுவாமிகள், காஞ்சி ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஷ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், சிரவை ஆதினம் ஷ்ரீமத் குமரகுருபர சுவாமிகளுடன் உரையாடும் காட்சி



மாநாட்டில் பிரவின்பாய் தொகாடியா பேசுகிறார்


இந்த மாநாடு முதல் தளத்தில் நடந்து கொண்டிருக்கும்போது இரண்டாவது தளத்தில் பிரஸ் மீட் நடந்தது. இதில் வேதாந்தம், எஸ்.கல்யாணராமன், பிரவின் பாய் தொகாடியா, மருதாச்சல அடிகளார், ஹரித்வார் ஹம்ஸ்தாஸ் சுவாமிகள், உடுப்பி பெஜாவர் சுவாமிகள், ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். உடுப்பி பெஜாவர் சுவாமிகள், ஹரித்வார் ஹம்ஸ்தாஸ் சுவாமிகள் ஆகியோரின் இந்தி பேச்சை பிரவின் பாய் தொகாடியா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். பிரஸ் மீட்டில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்த மருதாச்சல அடிகளாரும் ஆங்கிலத்தில் பேசினார். அவரிடம் தொகாடியா தமிழில் பேசும்மாறு கேட்டுக் கொண்டார்.
எல்லோரும் பேசி முடித்ததும் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று தொகாடியா கேட்டார்.


சேது சமுத்திர திட்டத்திற்கும் அதன் இப்போதைய வழித்தடத்திற்கும் பா.ஜ.க அரசு தானே அனுமதி அளித்தது. அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்?

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும் என்று அரசு கூறிகிறதே?

என்று வழக்கமாக கேட்கும் கேள்விகளையே கேட்டார்கள். ஒரு பெண் நிருபர் மட்டும் தமிழகத்தில் நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவில்லையே என்று பொருள்படும்படியாக ஒரு கேள்வியை சுற்றி வளைத்து கேட்டார். (இதே பெண் நிருபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்த பிரஸ் மீட்டிலும் இதே கேள்வியை கேட்டார்)

பிரஸ் மீட்



ராமர் பாலத்தில் உள்ள மிதக்கும் கல்


ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒரு கல் செய்தியாளர் சந்திப்பில் மிதக்க வைத்து காண்பித்தார்கள். மாநாடு மாலை வரை நடைபெற்றது.

November 13, 2007

தஞ்சையில் நான்கு ஹிந்து இளம் பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டனர்

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கராப்பள்ளி ஒரு இஸ்லாமிய கிராமம். 1,500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயத்தைத் தவிர அங்கு ஹிந்துக்களுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள வேறு எதுவும் இல்லை. நான் காவிரி டெல்டாவில் இஸ்லாமிய ஆதிக்கம் பற்றி அறிவதற்காக சென்றபோது சக்கராப்பள்ளிக்கும் சென்றேன். அங்குள்ள மிக நீண்ட அக்ரஹாரம் முழுக்க முஸ்லிம்கள்தான் வாழ்கின்றனர். ஒரு சில வீடுகள் பழமை மாறாமல் அப்படியே இருக்கின்றன. 1,500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயத்தின் நுழைவுவாயிலை படம் எடுத்தபோது அந்த வாயில் வழியாக இரண்டு பர்தா பெண்கள் வருவதுபோன்ற காட்சி படத்தில் வந்திருந்தது. விஜயபாரதத்தில் அந்த படத்தைதான் அட்டைப் படமாக போட்டிருந்தோம்.

இப்படிப்பட்ட சக்கராப்பள்ளியில் அப்துல் ரசாக் ஜானி என்பவர் ரஜ்யா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் பாபநாசம் அருகே உள்ள பசுபதி கோவில் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் - சித்ரா தம்பதியரின் மகள்கள் லோகேஸ்வரி(22), அம்பிகா(20), ஷர்மிளா(19) மற்றும் அய்யம்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தத்தின் மகள் கலைச்செல்வி(20) ஆகிய நான்கு இளம் பெண்கள் வேலை பார்த்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்த நான்கு இளம்பெண்களும் நாங்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டோம் என்று கூற அவர்களது பெற்றோர்களும், ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த துயரத்தை தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அய்யம்பேட்டையில் கடையடைப்பு நடத்தி ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இதனால் பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் அந்த நான்கு இளம் பெண்களையும் சென்னை மண்ணடியில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். நேற்று(13-11-2007) இந்த நான்கு பெண்களின் பெயரையும் சுபையா(லோகேஸ்வரி), அப்ரிதா(அம்பிகா), சாமிளா(ஷர்மிளா), சாகிரா(கலைச்செல்வி) என மாற்றி பர்தா அணிவித்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுக்க வைத்துள்ளனர்.

நாங்கள் 18 வயதை கடந்து விட்டோம். பிளஸ் டூ வரை படித்துள்ளோம். எங்கள் விருப்பப்படி வாழ எங்களுக்கு உரிமை உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கல்வியை கற்பதற்காக நாங்கள் சென்னை வந்துள்ளோம். நாங்கள் முஸ்லிம் வாலிபர்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றிய செய்திகளை நான் சேகரித்து வருகிறேன். கிடைத்ததும் முழு விரங்களை இங்கே வெளியிடுகிறேன்.

சக்கராப்பள்ளில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் கோயில் நுழைவு வாயில்

தஞ்சை பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் நிலைபெற்று இருப்பதால் இந்து பெண்களை வசியப்படுத்தி முஸ்லிமாக மாற்றும் செயல் அதிகரித்து வருகிறது. நிறம் மாறும் தமிழகம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைத் தொகுப்பில் இது போன்ற சில சம்பவங்களை குறிப்பிட்டிருந்தேன். இதுபோல பல சம்பவங்கள் நடந்தாலும் ஒரு சில மட்டுமே வெளி உலகத்திற்கு வருகிறது. அப்படி வந்த ஒரு சம்பவமே இது.

குமுதம் இதழில் படித்ததும் கிழித்ததும் என்ற தலைப்பில் எழுதி வரும் பாமரன் கோவையில் இந்து - முஸ்லிம் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருவதாக மகிழ்ச்சியுடன் எழுதி உள்ளார். இதனால் நாம் கோவையில் ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

இந்த நான்கு பெண்களும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கல்வியை கற்பதற்காகத்தான் சென்னை வந்துள்ளோம் என்று கூறி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். இதன் மூலம் அவர்கள் மதம் மாறவில்லை மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. ஹிந்துப் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது ஒன்றுதான் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இப்போதைக்கு உள்ள ஒரே வழி.

இஸ்லாமிய மயமாகி வரும் கவிரி டெல்டா பற்றி எனது பதிவில் உள்ள கட்டுரைகளுக்கான லிங்க்

http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_6398.html

http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_3606.html

http://puduvaisaravanan.blogspot.com/2006/12/blog-post_1764.html

November 02, 2007

தம்மம்பட்டி போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட சிலரின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்!

தம்மம்பட்டியில் நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தடியடிக்கு பிறகு போலீசார் 500க்கும் அதிகமான பொதுமக்கள் மீது சட்டப் பிரிவு 307(கொலை முயற்சி) உள்ளிட்ட பல பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் 150க்கும் அதிகமானவர்களை இரவோடு இரவாக கைது செய்தனர். இவர்களை சமீபத்தில் நாங்கள் சந்தித்தோம். போலீசாரால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் இந்தச் சம்பவத்திற்கு துளியும் சம்மந்தம் இல்லாதவர்கள். என்ன நடந்தது என்பதை இதுவரைகூட அறிய முடியாத அப்பாவிகள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

தம்மம்படடியைச் சேர்ந்த பலர் ஆத்தூரில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வருகின்றனர். எந்தத் தவறும் செய்யாத அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த தம்மம்பட்டிக்கு செல்ல முடியாமல் 15 கி.மீ தொலைவில் உள்ள ஆத்தூரில் தங்கியிருக்கின்றனர். இவர்களில் பலர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவபர்கள். மாணவர்களைக்கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. இரண்டு பிளஸ்-டூ மாணவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.

இதோ அவர்களில் சிலரின் வாக்குமூலங்கள். கேட்கும்போதே அதிர்ச்சியை வரவழைக்கிறது.

வி.பாலாஜி, தனியார் நிறுவன ஊழியர்


நான் என்ன பாவம் செய்தேன்?

"எனது சொந்த ஊர் தம்மம்பட்டி. புதுச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஓர் ஆண்டாக நான் தம்மம்பட்டிக்கு வரவே இல்லை. விநாயகர் சதுர்த்தி சம்பவங்கள் தொடர்பாக அங்கே பிரச்சினைகள் நடந்தபோதும் நான் தம்மம்பட்டியில் இல்லை. ஆனால் என் மீது 307 உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் இப்போது நான் ஆயிரக்கணக்கில் செலவு செய்து முன் ஜாமீன் பெற்றுள்ளேன். வேலைக்கும் செல்ல முடியவில்லை. நான் என்ன பாவம் செய்தேன். என்னை ஏன் இப்படி வதைக்கிறார்கள்?"

சி.துரை, வைத்தியர்


இப்படி கூட கொடுமை நடக்குங்களா?

"நான் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியைச் சேர்ந்தவன். அங்கு `கிருஷ்ணா எலும்பு முறிவு வைத்திய சாலை' என்ற பெயரில் எலும்பு முறிவு வைத்தியசாலை வைத்துள்ளேன். 17-09-2007 தம்மம்பட்டிக்கு எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க வந்தபோது என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். எதற்காக கைது செய்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வீட்டிற்குகூட தகவல் சொல்ல முடியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே. ஆண்டவா இது போன்ற துயரத்தை யாருக்கும் கொடுத்து விடாதே. இப்போதுகூட நான் வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆத்தூரில் தங்கி போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட்டு வருகிறேன். இப்படி கூட கொடுமை நடக்குங்களா?"

ஜி.ஜெயக்குமார், காய்கறி வியபாரி



நான் யார கொல செஞ்சேன்?

"ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டிதான் எனது சொந்த ஊர். விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி பயிரிட்டு வருகிறேன். சம்பவத்தன்று தக்காளி விற்பதற்காக சைக்கிளில் தம்மம்பட்டி வந்தபோது போலீசார் என்னையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள். என்ன ஏது விசாரிக்ககூட அனுமதிக்க வில்லை. ஏருடா நாயே என்று ஆபாசமாத திட்டினார்கள். இப்போ என் மீது கொல கேசு என்கிறார்கள். நான் யார கொல செஞ்சேன்? என் மீது எதுக்கு கேசு. என்ன அநியாயம் சார்?"

பி.முனியப்பன், கட்டட மேஸ்திரி




என்ன நடக்குது இங்கே?


"நான் கட்ட மேஸ்திரி. செப்.17ந் தேதி கட்டடம் கட்டும் வேலைக்காக வந்தபோது என்னையும் கைது செய்து விட்டார்கள். என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் எனக்கு புரியவில்லை. இப்போ எனக்கு வருமானமும் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம்."

விஸ்வநாதன், 76 வயது முதியவர்.




நாம சனநாயக நாட்லதான் இருக்கோமா சார்?

தம்மம்பட்டி கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு எதிரே கடந்த 5 ஆண்டுகளாக விநாயகர் சிலை வைத்து வரும் நாகராஜனின் தந்தை விஸ்வநாதனுக்கு 76 வயதாகி விட்டது. நடப்பதே கடினம். அவரையும் போலீஸ் விட்டுவைக்கவில்லை. நாகராஜனுக்கு நவம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாகராஜன் மசூதிக்கு எதிரே ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார். இவரது கடையில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று மசூதி ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


"எனக்கு 76 வயசாகுது. மூட்டு வலி. நடக்கறதே கஷ்டம். 17ந் தேதி வீட்டில் இருந்த போது என் மகன் நாகராஜனை விசாரிச்சுகிட்டு சில போலீஸ்காரங்க வந்தாங்க. அவன் வீட்ல இல்ல கல்யான வேலையை போயிருக்கான்னு சொன்னேன். அப்ப நீ வாடான்னு சொல்லி என்னை இழுத்துகிட்டு போயி போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள். அப்புறம்தான் என்னை கைது செஞ்சுட்டதா சொன்னாங்க. என் மவன் நாகராஜனுக்கு வர்ற மாசம் கல்யாணம். ஆனா நான் ஊருக்குள் நுழையக் கூடாதாம். இப்போ ஆத்தூரில் தங்கிட்டு தினமும் கையெழுத்து போட்டு வர்றேன். நடக்கவே முடியாத என் மேல கொல கேசு. நாம சனநாயக நாட்லதான் இருக்கோமா சார்?"


சி.சுகுமார், சி.சுரேஷ், சலவைத் தொழிலாளி எஸ்.சின்னையாவின் மகன்கள்



என்னடி உன் பையன்களுக்கு ரெண்டு ........ இருக்கா?

" எங்கப்பா சலவைத் தொழில் செய்யறார். எங்களுக்கும் அந்த வேலதான். தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல ஏட்டா இருக்கற அப்துல் கரீம் எங்கட்டதான் துணி வெளுக்க கொடுப்பாரு. ஆனா காசு கொடுக்க மாட்டாரு. கேட்டா ஏண்டா என்கிட்டயே காசு கேட்கிறியான்னு திட்டுவாரு. அதனால எங்கப்பா பயந்துட்டு கேட்க மாட்டாரு. ஆனா நாங்க ரெண்டு பேரும் கேட்போம். 17ம் தேதி அப்துல் துணி வாங்க வந்தாரு. காசு கேட்டோம். என்னடா கொழுப்பா? எங்கிட்டேயே காசு கேட்கிறீங்களா? உங்கள ஒரு கை பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அதன் பிறகு எங்க வீட்டுக்கு போலீஸ் வந்து எங்க ரெண்டு பேரையும் கேட்டுருங்காங்க. நாங்க இல்லைன்னதும் எங்கப்பாவை கூட்டிட்டுப்போய் உள்ள தள்ளிட்டாங்க. இப்போ எங்க மேலயும் கொல கேசு போட்டிருங்காங்க. இப்ப நாங்க வேலையும் செய்ய முடியல. தம்மம்மட்டி போலீஸ் ஸ்டேஷன்ல ஏட்ட இருக்கிற சுந்தரமும், அப்துல் கரீமும் எங்க வீட்ல போயி எங்கம்மா கிட்ட என்னடி உன் பையன்களுக்கு ரெண்டு ........ இருக்கான்னு ஆபாசமா பேசியிருக்காங்க. நாங்க வீட்டுக்கு போன் பண்ணுனா அம்மா இத சொல்லி அழறாங்க சார்?"


ஷ்ரீராம், புரோகிதர்




எஸ்.பியே கொன்னுடுவேன்னு மிரட்டினா நாங்க என்ன பண்ண முடியும் சார்?

"நாங்க தம்மம்பட்டியில புரோகிதம் செஞ்சுட்டு வர்றோம். நாமக்கல் எஸ்.பி நிக்கல்சனும். சேலம் எஸ்.பி பாஸ்கரும் என்ன கூப்பிட்டு விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய சொன்னார். ஊர் கட்டுப்பாடு சார் பண்ண முடியாதுன்னு சொன்னேன். ஒழுங்கா பூஜ பண்ணு. இல்லைன்னா என்கவுன்டர்ல போட்டுருவேன்னு மிரட்டினார். "விநாயகர் சிலை வைத்தவர்கள் எல்லாம் தலைமறைவாகி விட்டார்கள். எனவே தம்மம்பட்டி கடை வீதியில் இருக்கும் நாங்கள் முறைப்படி பூஜைகள் செய்து விசர்ஜனம் செய்தோம்" அப்படின்னு எழுதி கையெழுத்து வாங்கிட்டார். எஸ்.பியே கொன்னுடுவேன்னு மிரட்டினா நாங்க என்ன பண்ண முடியும் சார்?"

ஆர். பூபாலசுந்தர், பூஜாரி



ஏறுடா நாயே?


"எங்கப்பா கந்தையா 13 வருஷமா தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற விநாயகர் கோயில்ல பூஜ பண்ணிகிட்டு வர்றார். நானும் பூஜை செய்வேன். ஆவணி கடைசில அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்க இருந்தது. அதுக்கு பொருட்கள் வாங்க நான் கட வீதிக்கு வந்தப்போ என்னையும் புடிச்சு உள்ள தள்ளிட்டாங்க. அய்யா நான் போலீஸ் ஸ்டேஷன் கோயில் பூஜாரின்னு சொல்லியும் கேட்காமா வாயா மூடுடா நாயேன்னு சொல்லி என் மேலயும் கொல கேசு போட்டுட்டாங்க சார்"

அசோக்குமார், மளிகைக் கடைக்காரர்

500ல் ஒருவனாக வேண்டுமா?

நாங்கள் தனம் மளிகை என்ற பெயரில் தம்மம்ப்ங்டடியில் மளிகை கடை நடத்துகிறோம். ஏட்டு அப்துல் கரீம் எங்கள் கடையில் ரூ 20,000க்கும் அதிகமாக மளிகை சாமான்கள் வாங்கினார். ஆனால் பணம் கொடுக்கவில்லை. பணம் கேட்டபோது 500ல் ஒருவனாக வேண்டுமா? என மிரட்டினார்.(போலீசார் 500 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்) அதன் பிறகு காலைக் கதிர் நாளிதழில் மளிகை கடைக்கு பணம் தராமல் போலீசார் மிரட்டுவது பற்றி செய்தி வந்தது. நீ தான் செய்தி கொடுத்தாயா? என்ற எல்லா கடைக்காரர்களையும் மிரட்டி வருகின்றனர்.


சண்முகம், வீடியோ கடை உரிமையாளர்




எஸ்.பியே வரம்பு மீறி நடக்கலாமா?


நான் தம்மம்பட்டியில் வீடியோ கடை வைத்துள்ளேன். தம்மம்பட்டியில் செப்டம்பர் 15 முதல் 17ம் தேதி நடந்த எல்லாவற்றையும் என் வீடியோ கேமராவில் பதிவு செய்து வந்தேன். ஊர் பெரியவர்கள் எல்லாவற்றையும் ரெக்கார்டு பண்ண சொன்னதால் நான் என் தொழிலை செய்தேன். இதில் போலீசாரின் அராஜகங்கள் முழுக்க பதிவாகி இருந்தது. 17ம் தேதி நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கசல்சன் என்னிடம் வீடியோ கேசட்டை கொடு ஒரு காப்பி போட்டுவிட்டு தருகிறேன் என்றார். சார் என்னிடம் கம்ப்பியூட்டர் உள்ளது. உங்களுக்கு நானே ஒரு காப்பி தருகிறேன் என்றேன். இல்லை நான் போட்டுக் கொள்கிறேன். கேசட்டைக் கொடு என்று ஊனமுற்றவனான என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக கேசட்டை பறித்துக் கொண்டார். ஒரு எஸ்.பியே வரம்பு மீறி நடக்கலாமா?


அப்பாவி இளைஞர்களை அடித்து துவைத்த போலீசார்

ஒரு மாதத்திற்கு பிறகும் வடியாமல் இருக்கும் வீக்கத்தை காட்டுகிறார் கே.ஜீவானந்தம்

போலீசாரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட கே. ஜீவானந்தம் மற்றும் கே.என்.சரவணன்

போலீசார் பல எதற்காக எங்களை கைது செய்தீர்கள் என்று கேட்ட பல இளைஞர்களை அடித்து துவைத்திருக்கிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை ஆத்தூரில் சந்தித்து உரையாடியபோது மீன் கடை வைத்திருக்கும் கே. ஜீவானந்தம், டிரைவராக இருக்கும் கே.என். சண்முகம் ஆகியோர் போலீசார் தாக்கி ஒரு மாதத்திற்கு பிறகும் மறையாமல் இருக்கும் தடித்து வீங்கியிருக்கும் பகுதியை காட்டினார்கள். இத்தனைக்கும் இவர்களுக்கு அன்று என்ன நடந்தது என்பதே தெரியாது. தான் உண்டு வேலை உண்டு இருந்தவர்களுக்கு தான் இந்த கதி. போலீசாரின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு சிறந்த உதாரணம் தம்மம்பட்டி. ஆனால் இதற்கு எந்த மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை இல்லை என்று தீர்மானம் போட்டு விட்டார்களா?