September 13, 2007

இதற்கு பெயர்தான் மதநல்லிணக்கமா?

நம் நாட்டில் சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ற பெயரில் ஒரு வாரியம் இருக்கிறது என்பதே விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் திருநாளின்போதுதான் தெரிகிறது. அதுவும் விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் இந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு மாதத்திற்கு முன்பே சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விடுகிறது. களிமண்ணால்தான் சிலை செய்ய வேண்டும். 5 அடிக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிசால் என்னென்ன தீமைகள் எற்படும் என்றெல்லாம் இத்துறை அதிகாரிகள் நட்சத்திர ஹோட்டல்களில் பிரஸ்மீட் வைத்து முழங்க ஆரம்பித்து விடுகிறார்கள். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இதுபோன்ற தடைகள் எதுவும் இல்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் முஸ்லிம்கள் ராஜ்ஜியம் நடக்கும் ஹைதராபாத்தில்கூட 50 அடி உயரத்தில் சிலை வைக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள்கூட 20 அடி 30 அடி உயரத்தில் துர்கா பூஜையின்போது துர்கா சிலை வைக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடல்மாசுபடும் என்கிறார்கள்.

கடல்மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை இருந்தால் கூவம் நதி சுமந்து வரும் லட்சக்கணக்கான மக்களின் கழிவுகளை கடலில் கலக்காமல் தடுக்க வேண்டும். தீபாவளி வந்துவிட்டால் மாசுகட்டுப்பாட்டு வாரியம் பத்திரிகையாளர்களை கூட்டி இத்தனை டெசிபிள் ஒலி எழுப்பும் பட்டாசுகளைதான் வெடிக்க வேண்டும். காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைதான் வெடிக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகளும், கிறிஸ்தவ பள்ளிகளும் குழந்தை தொழிலாளர்களை வைத்துதான் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கிறார்கள். எனவே பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என இந்து குழந்தைகளை நடுரோட்டிற்கு அழைத்து வந்து ஊர்வலம் நடத்துகிறார்கள். பொங்கல் வந்துவிட்டால் போகி பண்டிகையின்போது அதை கொளுத்தக்கூடாது இதை கொளுத்தக்கூடாது என பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது.

எப்படியாவது இந்து பண்டிகைகளின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும். பண்டிகைகளின் மூலம் இந்துக்களின் மத உணர்வு நிலைத்துவிடக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவர்கள் அதிகார வர்க்கத்தை வளைத்து நடத்தும் நாடகங்கள்தான் இவை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ள போகிறோமோ தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் இந்துக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கி வருவதால் அதற்கு தனி கவனம் கொடுத்து இடையூறு செய்கிறார்கள். இதற்கு காவல்துறையும் துணை போகிறது. காவல் துறையால் குண்டு வைக்கும் முஸ்லிம்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் விநாயகர் சிலை வைக்கும் அப்பாவி இளைஞர்களை மிரட்டுகிறது.

மதுரை மாநகரில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் கமிஷனர் நந்தபாலன் முஸ்லிம் ஜமாத்தார்களை அழைத்து ஒரு கூட்டம் நட்ததியுள்ளார். இந்த கூட்டத்தில் மேலமாசி வீதி, தெற்குமாசி வீதியில் உள்ள முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள், டவுன் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த செய்தியை மதுரை தினமலர்(14-09-2007) வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடக்க வேண்டும் என்று முஸ்லிம் ஜமாத்தார்களை அழைத்து பேசினால் என்ன அர்த்தம்? பேச்சு நடத்தாவிட்டால் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை காவல்துறையே ஒத்துக் கொள்கிறதா? அல்லது பாவம் ஹிந்துக்கள் ஏதோ ஊர்வலம் நடத்த ஆசைப்படுகிறார்கள். நடத்திவிட்டு போகட்டும். கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று காவல்துறை முஸ்லிம்களிடம் கெஞ்சுகிறதா?இன்று முஸ்லிம் ஜமாத்தார்களை அழைத்துபேசியதைப்போல கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டு வைப்பவர்கள் அனைவரையும் அழைத்து நகரம் அமைதியாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொள்வாரா? இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில் ஊர்வலம் நடத்த முஸ்லிம்களின் அனுமதியை காவல் துறையே கேட்டுபெறும் கொடுமையை எங்காவது கேள்விபட்டுள்ளீர்களா? நாளை முகரம் ஊர்வலத்தின்போதும், சந்தனக்கூடு ஊர்வலத்தின்போதும் இந்துக்களை அழைத்து இப்படி பேசுவார்களா? ஒரு மதத்தினரின் ஊர்வலத்தின்போதும் மற்ற மதத்தின் பிரநிதிகளை அழைத்து கலவரம் செய்யாமல் ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்வதற்கு பெயர்தான் மதநல்லிணக்கமா?

எத்தனை இடையூறுகள் வந்தாலும் எல்லாவற்றையும் மீறி விநாயகர் சதுர்த்தி விழா வருடம்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சென்னை அருகிலுள்ள எர்ணாவூரில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளைப் பாருங்கள்.














September 11, 2007

தென்காசி வண்டிப்பேட்டை தெப்பக்குளம் காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சொந்தமானது. தீர்ப்பளித்த முஸ்லிம் நீதிபதி

தென்காசி படுகொலைகள் பற்றி என் வலைப்பதிவில் நீங்கள் படித்திருப்பீர்கள். தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பள்ளிவாசல் கட்ட முயற்சித்ததே இந்த படுகொலைகளுக்கு முக்கிய காரணம். கோயில் இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்காக முஸ்லிம்கள் நடத்திய படுகொலைகள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் நான் விரிவாக எழுதியிருந்தேன்.


முஸ்லிம்கள் தென்காசியில் 1925-ம் ஆண்டிலிருந்தே பிரச்சினை செய்து வருகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. 1925-ல் காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக்குளத்தை முஸ்லிம்களை ஆக்கிரமிப்புச் செய்து அது தங்களுக்குதான் என சொந்தம் கொண்டாடினார்கள். இந்த தெப்பக்குளம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த வழக்கு சம்பந்தமான குறிப்புகள் 2003ல் கோயில் நிர்வாகம் வெளியிட்ட தலவரலாறு புத்தகத்தில் உள்ளன. `தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு' என்ற அந்த புத்தகத்தில்

பக்கம் 69ல்


தெப்பக் குள வழக்கு

திருக்கோயில்களை, அரசு எடுப்பதற்கு முந்திய காலம். காசி விசுவநாதர் திருக்கோயிலின் தெப்பக்குளம் பற்றிய பிரச்சினை எழுந்தது. தெப்பக்குளத்தை முகமதிய சமுதாயத்தார் தங்களுக்குச் சொந்தம் என்றனர். திருக்கோயிலார் தங்களுக்குச் சொந்தம் என்றனர். வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி முகமதிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். தீர்ப்புக் கூறும் நாளும் வந்தது. திருக்கோயிலார் மனம் கசிந்தனர். என்ன ஆகுமோ என்று ஏங்கினர்.


தீர்ப்புக்கு முந்திய நாள் இரண்டு பெண் குழந்தைகள் இரவில் நீதிபதியின் வீட்டிற்குச் சென்றனர். ஒரு குழந்தையின் கையில் சூலம். அடுத்த குழந்தையின் கையில் தாமரைப் பூ. அது லோகநாயகி இருவரும் நீதிபதியின் கனவில் தோன்றி சான்றுகளைக்கூறி நீதி கூறும்படிக் கூறிட நீதிபதி விழித்தார். குழந்தைகளைக் காணவில்லை. விழிந்தெழுந்தவர் வழக்குகள் அனைத்தையும் ஆராய்ந்து நடுநிலையோடு செயல்பட்டு, தெப்பக்குளம் திருக்கோயிலைச் சேர்ந்ததே என்று தீர்ப்புக் கூறினார். இது வரலாற்று உண்மை
.


இவ்வாறு உள்ளது.


இந்த திருக்கோயில் வரலாற்றை எழுதிய முனைவர் பேராசிரியர் ச.கணபதிராமன் தென்காசி தாலுகா அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தவர். 18க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். திருமலைக்கோவில் வரலாறு, கற்குவேல் அய்யனார் கோயில் வரலாறு ஆகியவற்றை எழுதியவர். டாக்டர் ரா.பி. சேதுபிள்ளையின் மாணவரான பேராசிரியர் ச.கணபதிராமன் தமிழக அரசின் சிறந்த பேராசிரியர் விருது பெற்றவர்.


இதிலிருந்து கோயில் தெப்பக்குளத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது உறுதியாகிறது. தெப்பக்குளம் காசிவிசுவநாதர் கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தவர் ஒரு முஸ்லிம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


காசி விஸ்வநாதர் கோயிலின் வெளி பிரகாரத்தில் உள்ள சகஸ்ர லிங்கம்


காற்று வீசும் அதிசயம் பற்றி தெரிவிக்கும் கல்வெட்டு



பாண்டிய மன்னன் பாரக்கிரம பாண்டியனால் 1467ல் கட்டப்பட்டதாகும். இக்கோயில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மனதைக் கவரும் ஏராளமான சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளது. பொதிகை மலையிலிருந்து அரியங்காவு கணவாய் வழியாக வீசும் காற்று கோபுரத்திற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பதுபோல மேற்கிலிருந்து கிழக்காக வீசுகிறது. இப்படி புகழ்பெற்ற இக்கோயிலின் இராஜகோபுரம் தீ பிடித்து எரிந்து நாசமாகி இருந்தது. தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முயற்சியால் 178 அடி உயர இராஜகோபுரம் கட்டப்பட்டு 25-6-1990 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எரிந்த கோபுரத்தை மிக பிரம்மாண்டமாக கட்டிவிட்டார்கள் என்பதை பல முஸ்லிம்களால் ஜீரணிக்க முடியவில்லை. கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த பிறகு முஸ்லிம்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள். 17-12-2006 அன்று குமார் பாண்டியனை கொலை செய்த முஸ்லிம் வெறியர்கள் சிறைக்குச் செல்லும்போது போலீஸ் உயர் அதிகாரிகளின் முன்னிலையிலேயே என்றாவது ஒரு நாள் கோபுரத்தை இடித்தே தீருவோம் என்று சபதம் செய்துள்ளனர். முஸ்லிம் எந்த அளவுக்கு வெறித்தனமாக இருக்கிறார்கள் பாருங்கள். தென்காசியின் வரலாறு இப்படி இருக்கும்போது இதற்காக நடந்த படுகொலைகளை ஒரு குடும்பங்களுக்கிடையேயான மோதல் எனகூறி ஹிந்துக்களை ஏமாற்றப் பார்க்கிறது தமிழக காவல்துறை.

September 10, 2007

சென்னையில் ஓணம் - புகைப்படத் தொகுப்பு - 2


நிகழ்ச்சி நடந்த அரங்கின் முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு


ரங்கோலி இல்லாத ஓணமா? மலர்களால் ஆன ரங்கோலி



மேடையில் எஸ்.எஸ்.மகாதேவன், இல. கணேசன், கோபாலன், திருமதி அம்புலி, பீதாம்பர மாஸ்டர்



இல.கணேசன் பேசுகிறார்




வல்சன் பேசுகிறார்




எஸ்.எஸ்.மகாதேவன் பேசுகிறார்




நடனமாடும் சிறுமி


ஆக்ரோஷமாக கோலாட்டம் ஆடும் சிறுமிகள்


பங்கேற்பாளர்கள்



கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் சிறுமிகள்



நிகழ்ச்சிக்கு வந்த தந்தையும், தனையனும்


பங்கேற்பாளர்கள்



நிகழ்ச்சி நடந்த அரங்கில் புக் ஸ்டால்

September 09, 2007

சென்னையில் ஓணம் - புகைப்படத் தொகுப்பு - 1

பாரதம் முழுவதும் எண்ணற்ற பண்டிகைகள் இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்தவரும் ஒரு பண்டிகையை விசேஷமாக கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் பொங்கல் திருநாளை விசேஷமாக கொண்டாடுகிறார்கள். (கிராமச் சூழல் குறைந்த பிறகு தீபாவளி பண்டிகையைதான் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் பத்திரிகைகள் பொங்கல் சிறப்பிதழ்களை வெளியிடுவதில்லை. தீபாவளி சிறப்பிதழைதான் வெளியிடுகிறார்கள்) யுகாதி வருடப்பிறப்பை தெலுங்கு பேசும் மக்கள் பிரதான விழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அதுபோல மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் ஓணம் பண்டிகையை வெகுசிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மலையாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும் என்கிறார்கள். இதனால் சென்னையிலும் ஓணத்தின் உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. சென்னையில் மட்டும் 35க்கும் அதிகமான மலையாள அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் ஓணம் பண்டிகையை ஒட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி விடுகிறார்கள். இதில் கேரளத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டம் களை கட்டுகிறது.
சென்னையில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடைய மலையாளிகள் ஆண்டுதோறும் குடும்பத்துடன் கூடி ஓணம் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சென்னை சேத்துப்பட்டிலுள்ள மலையாளி கிளப்பில் இவர்கள் ஓணம் கொண்டாடினார்கள். இதற்கு எனக்கும் அழைப்பு வரவே நானும் சென்றிருந்தேன். பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில பொறுப்பாளர் எஸ்.எஸ்.மகாதேவன், பிரபல மலையாள பாடகி திருமதி அம்புலி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், ஆர்.எஸ்.எஸ்ஸின் கேரள மாநில பொறுப்பாளர் வல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மகாதேவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர் தமிழில் பேசினார்கள். இல.கணேசன் தமிழிலும், மலையாளத்திலும் பேசினார். கேரளாவின் கண்ணூரில் இருந்து வந்திருந்த வல்சன் கிட்டச்தட்ட ஓன்றரை மணி நேரம் மலையாளத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சென்னையில் பாலகோகுலம் என்ற குழந்தைகள் அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளும், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவிகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை உற்சாகம் குறையாமல் இருந்தது. நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நான் எடுத்த சில புகைப்படங்களை பாருங்கள்.

நிகழ்ச்சி நடந்த சேத்துப்பட்டு மலையாளி கிளப்

பூந்தமல்லி ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவிகள் மலையாள தேசபக்தி பாடல் ஒன்றை பாடுகின்றனர்



விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசுகிறார். சில காட்சிகள்..




கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகள்


நடனமாடும் பூந்தமல்லி ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவிகள்


பங்கேற்பாளர்கள்


மலையாள கவிதை ஒன்றை தன் நடிப்பால் புரிய வைக்கிறார் பூந்தமல்லியில் ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவர்


நாட்டியமாடும் சிறுமிகள்...





September 07, 2007

ராமேஸ்வரம் கோயிலில் தி.மு.க தொழிற்சங்கம்!


தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுளர்களையும் இழிவுபடுத்துபவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளர்கள் தி.மு.க சார்பில் `அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்' என்ற பெயரில் சங்கம் ஆரம்பித்துள்ளனர்.


தாங்கள் தொழிற்சங்கம் ஆரம்பித்தற்கு அடையாளமாக கிழக்கு கோபுர வாசலுக்கு அருகில் ஒரு விளம்பர பலகை வைத்துள்ளனர். அதில் சிவலிங்கத்தைப் பார்த்து கருணாநிதி புன்னகைக்கிறார்.இதில் தி.மு.க நிர்வாகிகளின் பெயர்களுடன் சில கோயில் குருக்களின் பெயர்களும் உள்ளன. தி.மு.கவினர் பக்தர்களை ஈர்ப்பதற்காக தொழிற்சங்கம் ஆரம்பித்தார்களா? அல்லது ஆளும் கட்சியின் தயவு வேண்டும் என்பதற்காக கோயில் பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்தார்களா? அல்லது தி.மு.கவினர் கோயில் பணியாளர்களுடன் சேர்ந்து கூட்டு கொள்ளை அடிப்பதற்காக இப்படி ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளார்களா? தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி மர்மமாகவே உள்ளது.


அதுசரி, ஈ.வே.ராவின் சீடர் கருணாநிதி இதற்கு என்ன சொல்ல போகிறார்?