September 09, 2007

சென்னையில் ஓணம் - புகைப்படத் தொகுப்பு - 1

பாரதம் முழுவதும் எண்ணற்ற பண்டிகைகள் இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்தவரும் ஒரு பண்டிகையை விசேஷமாக கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் பொங்கல் திருநாளை விசேஷமாக கொண்டாடுகிறார்கள். (கிராமச் சூழல் குறைந்த பிறகு தீபாவளி பண்டிகையைதான் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் பத்திரிகைகள் பொங்கல் சிறப்பிதழ்களை வெளியிடுவதில்லை. தீபாவளி சிறப்பிதழைதான் வெளியிடுகிறார்கள்) யுகாதி வருடப்பிறப்பை தெலுங்கு பேசும் மக்கள் பிரதான விழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அதுபோல மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் ஓணம் பண்டிகையை வெகுசிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மலையாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும் என்கிறார்கள். இதனால் சென்னையிலும் ஓணத்தின் உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது. சென்னையில் மட்டும் 35க்கும் அதிகமான மலையாள அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் ஓணம் பண்டிகையை ஒட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி விடுகிறார்கள். இதில் கேரளத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டம் களை கட்டுகிறது.
சென்னையில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தொடர்புடைய மலையாளிகள் ஆண்டுதோறும் குடும்பத்துடன் கூடி ஓணம் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சென்னை சேத்துப்பட்டிலுள்ள மலையாளி கிளப்பில் இவர்கள் ஓணம் கொண்டாடினார்கள். இதற்கு எனக்கும் அழைப்பு வரவே நானும் சென்றிருந்தேன். பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில பொறுப்பாளர் எஸ்.எஸ்.மகாதேவன், பிரபல மலையாள பாடகி திருமதி அம்புலி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், ஆர்.எஸ்.எஸ்ஸின் கேரள மாநில பொறுப்பாளர் வல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மகாதேவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர் தமிழில் பேசினார்கள். இல.கணேசன் தமிழிலும், மலையாளத்திலும் பேசினார். கேரளாவின் கண்ணூரில் இருந்து வந்திருந்த வல்சன் கிட்டச்தட்ட ஓன்றரை மணி நேரம் மலையாளத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சென்னையில் பாலகோகுலம் என்ற குழந்தைகள் அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளும், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவிகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை உற்சாகம் குறையாமல் இருந்தது. நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நான் எடுத்த சில புகைப்படங்களை பாருங்கள்.

நிகழ்ச்சி நடந்த சேத்துப்பட்டு மலையாளி கிளப்

பூந்தமல்லி ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவிகள் மலையாள தேசபக்தி பாடல் ஒன்றை பாடுகின்றனர்



விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசுகிறார். சில காட்சிகள்..




கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகள்


நடனமாடும் பூந்தமல்லி ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவிகள்


பங்கேற்பாளர்கள்


மலையாள கவிதை ஒன்றை தன் நடிப்பால் புரிய வைக்கிறார் பூந்தமல்லியில் ஷ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி மாணவர்


நாட்டியமாடும் சிறுமிகள்...





No comments: