December 13, 2007

ராம சேது புத்தகம் வெளியீடு

சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி முரசொலியில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து `சேது' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இப்போது "ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கம்" `ராமசேது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்புத்தகம் ராமர் பாலம் மட்டுமல்ல சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய பல சந்தேகங்களுக்கு தெளிவான விடையளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் திரு.சூர்யநாரயண ராவ், `ராமேஸ்வரம் ராமசேது பாதுகாப்பு இயக்கத்'தின் அகிலபாரதத் தலைவர் டாக்டர். எஸ். கல்யாணராமன், செயலாளர் வழக்கறிஞர் டி.குப்புராமு, விஜயபாரதம் ஆசிரியர் நா.சடகோபன் ஆகியோர் உதவியுடன் அப்புத்தகத்தை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆசிய வளர்ச்சி வங்கியில் முக்கிய பொறுப்பு வகித்த சரஸ்வதி நதி ஆராய்ச்சியாளர் டாக்டர். எஸ். கல்யாணராமன் வலைப்பதிவில் எனது எழுத்துக்களை படித்துவிட்டு புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அவருக்கு என் நன்றி. இப்புத்தகம் 11-12-2007 அன்று சென்னை தி.நகர் பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் வெளியிடப்பட்டது.டாக்டர். எஸ். கல்யாணராமன் அவர்களும் வழக்கறிஞர் டி.குப்புராம் அவர்களும் புத்தகத்தை வெளியிட பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
விலை ரூ. 5/- பக்கங்கள் : 60
கிடக்கும் இடம் : 1, எம்.வி.நாயுடுத் தெரு, சேத்துப்பட்டு, சென்னை - 600031.

No comments: