January 17, 2007

சொந்த மண்ணில் கொத்தடிமைகளாய் ஹிந்துக்கள்!

கடந்த வாரம் நாங்கள் சொர்க் கத்திற்கும், நரகத்திற்கும் சென்று வந்தோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 25,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மேல் விஷாரத் திற்கும், 10,000-க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்து புரத்திற்கும் நீங்கள் சென்றால் சொர்க்கத்திற்கும், நரகத் திற்கும் சென்றுவந்த அனு பவத்தை உணர்வீர்கள். மேல் விஷாரம் சொர்க்கம் என்றால், இராசாத்துபுரம் நரகம்.
இராசாத்துபுரத்தில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாக்கடை பாயும் தெருக்களையும், புழுதி பறக்கும் வீதிகளையும் தான் அங்கு பார்க்க முடியும். தோல் தொழிற்சாலை கழிவுநீர் இராசாத்துபுரத்து வழியாகச் சென்றுதான் பாலாற்றில் கலக்கிறது. மேல் விஷாரத்திற்கு சென்றுவிட்டு மதியம் 1 மணிவாக்கில் நாங்கள் இராசாத்துபுரத்திற்கு வந்தோம்.
ஊர் நாட்டாண்மை திரு.கோபால் கவுண்டரையும், விஸ்வ இந்து பரிஷத்தின் ஒன்றிய அமைப்பாளர் உதய குமாரையும் சந்தித்தோம். கோபால் கவுண்டர் வி.இ.பவின் வேலூர் மாவட்ட துணைத் தலை வராகவும் இருக்கிறார். `விஜயபாரத'த்திலிருந்து வந்திருப்பதாகத் தெரிந்ததும் இளைஞர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கூறியதைக் கேட்கக் கேட்க பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் இந்துக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை, இவர்களும் அனுபவித்து வருகிறார்கள் என்பது புரிந்தது.
இராசாத்துபுரத்தில் ஆண்களும் பெண்களும் பீடி சுற்றும் காட்சியை எல்லா வீடுகளிலும் பார்க்க முடிகிறது. பீடி கம்பெனி முதலாளிகள் எல்லாம் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். "நாங்கள் முஸ்லிம்களை நம்பி பிழைப்பு நடத்த வேண்டியிருப்பதால் அவர்களை எங்களால் எதிர்க்க முடியவில்லை. எங்கள் ஊரில் சுமார் 8,000 வன்னியர்கள் இருக்கிறோம். அதனால் பாட்டாளி மக்கள் கட்சி எங்களுக்கு உதவுவார்கள் என்று நினைத்து, கடந்த பல தேர்தல்களில் அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்தோம்.

ஆனால் பா.ம.கவோ முஸ்லிம் வாக்குகளுக்காக எங்களை கைவிட்டுவிட்டார்கள்" என்று வேதனையுடன் கூறினார்கள் வன்னிய இளைஞர்கள்.
"மேல்விஷாரத்தில் முன்பு நூற்றுக்கும் அதிகமான இந்துக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை பத்தாகக் குறைந்துவிட்டது. அதுபோல இராசாத்துபுரத்திலும் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து முஸ்லிம்மயமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களைத் திட்டமிட்டு குடியமர்த்தி வருகிறார்கள். திடீர், திடீரென மசூதி கட்டுகிறார்கள். எங்களை விரட்டுவதற்காக பல கொடுமைகளை எங்களுக்கு இழைத்து வருகிறார்கள்" என்று 70 வயதைக் கடந்த பல பெரியவர்கள் நம்மிடம் துக்கத்தோடு கூறினார்கள்.

"ஏழை எளியவர்களுக்காக தமிழக அரசால் ஏதாவது சலுகைகள் அறிவிக்கப்பட்டால்கூட அவைகள் இராசாத்துபுரம் இந்துக்களுக்கு கிடைக்கவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன" என்று வேதனையுடன் இராசாத்துபுரம் மக்கள் கூறுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் ஷ்ரீநகர் பகுதி முஸ்லிம்களால் ஜம்மு பகுதியில் இந்துக்கள் அனுபவிக்கும் அதே துன்பத்தை இங்கு, மேல்விஷாரம் முஸ்லிம்களால் இராசாத்துபுரம் இந்துக்கள் அனுபவிக்கின்றனர். காஷ்மீரில்கூட தேர்தல் நடக்கிறது. ஆனால் மேல்விஷாரத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தலே நடந்தது இல்லை. காஷ்மீரில் நடக்கும் செய்திகளாவது அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவருகிறது. ஆனால் இராசாத்துபுரத்திலும், மேல்விஷாரத்திலும் என்ன நடக்கிறது என்பது அருகில் உள்ள வாலாஜா, ஆற்காடு மக்களுக்குக்கூட தெரியவில்லை.
பத்திரிகையிலும் இதுவரை செய்திகள் வெளிவந்ததில்லை. வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் பணிபுரியும் பிரபல பத்திரிகைகளின் நிருபர்களிடம் நாங்கள் மேல்விஷாரத்திற்கு சென்று வந்தோம் என்றால், ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். அங்கே எப்படி சென்றீர்கள்? நாங்கள் சில விஷயங்களை அவர்களிடம் சொன்னபோது அப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அதிர்ச்சியுடன் கேட்டார்கள். மேல்விஷாரம் பற்றியும், இராசாத்துபுரம் பற்றியும் செய்திகள் வெளிவந்தால் அந்த பத்திரிகைகளை புறக்கணிக்குமாறு ஜமாத் கட்டுப்பாடு விதித்துள்ளதாம். பத்திரிகை விற்பனைக்காக அவர்களும் அதைப் பற்றி எழுதுவதில்லை.
இராசாத்துபுரம் பற்றி ஈரோட்டில் நடந்த இந்து சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பல பத்திரிகை நிருபர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு சென்று செய்தி சேகரித்திருக்கிறார்கள். (மேல்விஷாரத்திற்குள் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு யாரும் செல்லமுடியாது. பத்திரிகையாளர்கள் நகராட்சித் தலைவரை மட்டுமே சந்திக்க முடியும். அவர் சொல்வதைத்தான் எழுதிக்கொள்ள வேண்டும்.) ஆனால் எந்தப் பத்திரிகையும், தொலைக்காட்சியும் அதுபற்றி செய்தி வெளியிடவில்லை.
இராசாத்துபுரம் ஒரு தனிவருவாய் கிராமம். இந்த கிராமத்திற்கென தனியாக கிராம நிர்வாக அதிகாரியும் இருக்கிறார். மக்கள்தொகையும் 10,000க்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். இராசாத்துபுரம் தனி ஊராட்சி ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்துக் கொள்வோம். எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நாங்களே செய்துகொள்வோம். யாரிடமும் கையேந்த வேண்டி இருக்காது. இந்த முறை இராசாத்துபுரத்தை தனிஊராட்சியாக அறிவிக்க வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்று ஊரின் முகப்பில் இந்துக்கள் பேனர் வைத்துள்ளனர். அதையேதான் அவர்கள் நம்மிடமும் கூறினார்கள். இந்தத் தேர்தலுக்கு பிறகாவது அவர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்குமா? இல்லை இராசாத்துபுரமும் ஒரு மேல்விஷாரமாக மாறிவிடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments: