December 31, 2006

சொர்ணத்தேவரின் மகன் தமிழன் இல்லையா?


இராக்கின் அதிபராய் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து உலகத்தையே வியக்க வைத்த சதாம் உசேனை பக்ரீத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு தூக்கிலிட்டு குர்பானி பிரியாணியாக சமைத்து போட்டுள்ளார் ஜார்ஜ் புஷ். சதாம் உசேன் தூக்கலிடப்பட்டதற்கு ஈராக்கில் எதிர்ப்பைவிட ஆதரவே அதிகம். ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி உட்பட பலர் சதாமின் பக்தர்களாகவே மாறி விட்டனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மாறன் சிலைக்கு அருகில் மாவீரன் சதாமுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சதாமுக்காக இரக்கப்பட்டு அறிக்கை விட்ட தமிழினத் தலைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன் குடும்பத்திற்கு இதுவரை ஆறுதலும் கூறவில்லை. தான் முதல்வராக இருக்கும்போது நடந்த இந்த படுகொலையை கண்டிக்கவும் இல்லை. ஒருவேளை தென்காசி சொர்ணத் தேரின் மகன் தமிழன் இல்லை என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து விட்டாரா? சொர்ணத்தேவரின் மகன் தமிழனா? சதாம் உசேன் தமிழனா? தன்னை உலக தமிழர்களின் தலைவர் என்ற கூறிக்கொள்ளும் கருணாநிதிதான் பதில் சொல்ல வேண்டும்.

நட்பா? மதமா?

தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த டிசம்பர் 17ம் தேதி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். குமார் பாண்டியனை கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளில் ஹனிபா, அப்துல்லா என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருமே குமார் பாண்டியனுக்கு நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்துல்லா சமீபத்தில்தான் முஸ்லிமாக மதம் மாறியுள்ளான். தென்காசி அச்சன்புதூரில் உள்ள அவனது தந்தை கருப்பையா பிள்ளையும், தாயார் மாரியம்மாளும் மகன் மதம் மாறியதோடு, கொலையாளியாகவும் மாறி இருப்பது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். "மதம் மாறிட்டான்னு தெரிஞ்சதுமே என் வாசப்படி ஏறாதடா நாயேனு விரட்டிட்டேன். கோவை, மண்ணடினு கூட்டிப்போய் அவனை பயங்கரவாதியாய், கொலை வெறியனாய் மாத்திருக்கான் அந்தப் படுபாவி ஹனிபா" என்று இடிந்துபோய் கதறுகிறார் அப்துல்லாவாக மாறிய முருகேசனின் தந்தை கருப்பையா பிள்ளை.
"குமார் பாண்டியனுக்கு நீ நண்பன்தானே.. நண்பனையே எப்படிக் கொலை செய்ய மனசு வந்தது?" என்று போலீ்ஸ் கேட்டபோது எந்த குற்ற உணர்ச்சியும் காட்டாமல் "நட்மா? மதமா? என்று வரும்போது மதம்தான் எனக்கு முக்கியம். அதனால்தான் நண்பராக இருந்தும் குமார் பாண்டியனை கொலை செய்தோம்" என்று சர்வத சாதாரணமாக சொல்லியிருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் பேராசிரியர் பரமசிவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அவர் ஒரு இஸ்லாமிய மாணவரை தன் சொந்த செலவில் படிக்க வைத்தார். கடைசியில் அந்த மாணவனே பேராசிரியர் பரமசிவத்தை வெட்டி கொலைசெய்தான். அன்று குருவா? மதமா? என்றபோது மதம்தான் முக்கியம் என்று கொலை செய்தான் முஸ்லிம் இளைஞன். இன்று நட்பா? மதமா? என்றபோது மதம்தான் முக்கியம் என்று நண்பனையே கொலை செய்திருக்கிறான் ஹனிபா. இந்த செய்தியை வெளியிட்டிருப்பது தினமலரோ, துக்ளக்கோ அல்ல. நக்கீரன் 3-1-2007 இதழில்தான் இந்த செய்தி வந்துள்ளது.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? முஸ்லிம்களோடு எங்களுக்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது என்று மேடைதோறும் முழங்கும் கழக கண்மணிகளும், முஸ்லிம்களிடம் நட்பாக இருப்பவர்களும் ஏன் முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுபவர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

December 28, 2006

விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்!

மயிலாடுதுறையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நீடூரில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மிக பிரம்மாண்டமான மசூதிகள் உள்ளன. நீடூர் மெயின்ரோட்டில் உள்ள பிரம்மாண்டமான மசூதிக்கு அருகில் ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு அருகில் கறிக்கடை ஒன்றை முஸ்லிம்கள் திறந்தனர். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் தட்டிக் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது. தாசில்தார் முன்னிலையில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள், விநாயகர் கோயிலை விலைக்கு தந்து விடுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறோம்' என்று விநாயகருக்கு விலை பேசியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த ஹிந்துக்கள்( சில அரசு அதிகாரிகளும்) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்துவிடுகிறோம். உங்கள் மசூதியை விலைக்கு தந்து விடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதன் பிறகே விநாயகரை விலைக்கு கேட்ட முஸ்லிம்கள் அடங்கினார்கள்.

புதிய அவதாரம்!

முஸ்லிம்கள் மக்களிடம் நல்லவர்கள்போல் காட்டிக் கொள்வதற்காக இப்போது புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு அவதாரம்தான் சேவை. ஜமாத் பெயரிலேயே இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தியவர்கள் இதற்காக ஊருக்கு ஊர் புதிய அமைப்புகளைத் தொடங்கி இருக்கிறார்கள். மயிலாடுதுறையில் MISWA( Myladudurai Islamic Welfare Association), கும்பகோணத்தில் KISWA (Kumbakonam Islamic Welfare Association) என்ற பெயரில் அமைப்புகளைத் தொடங்கி தங்களை மென்மையானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக முயற்சித்து வருகிறார்கள். முஸ்லிம் கடைகளில் யாராவது சென்று நன்கொடைகள் கேட்டால் நாங்கள் MISWA, KISWA மூலம்தான் கொடுப்போம் என்கிறார்கள்.

முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது அக்ரஹாரங்களில் நாங்கள் கண்ட காட்சிகள்தான். அக்ரஹாரங்களில் கோயில்கள் எல்லாம் இடிந்த மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. பர்தா அணிந்த பெண்களும், குல்லா, லுங்கி அணிந்த தாடி வளர்த்த ஆண்களும்தான் அங்கு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வீக மணம் கமழும் தஞ்சை மண்டலத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகூர், திருவாரூர் போன்ற முக்கியமான நகரங்களில் உள்ள அக்ரஹாரங்கள் இஸ்லாமிய மயமாகிவிட்டன. தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகிலுள்ள சக்கராபள்ளியில் அக்ரஹாரம் இன்று ஹாஜியார் தெருவாகவும், காயிதே மில்லத் தெருவாகவும் மாறிவிட்டன.
இங்குள்ள அக்ரஹாரத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் நடமாட முடியாதாம்.
இந்த சக்கராப்பள்ளிக்கு அருகில் ராஜகிரியில் மிகப்பெரிய அக்ரஹாரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மற்ற ஊர்களில் அக்ரஹாரங்களில் கோயில்களாவது எஞ்சியிருக்கின்றன. ஆனால் இங்கு கோயிலும் இல்லை. அக்ரஹார தெருக்களில் ஜின்னா தெரு, காயிதே மில்லத் தெரு, ஹாஜியார் தெரு என்ற பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. உள்ளூர் நபர்கள் சிலரிடம் விசாரித்தபோது ஹிந்துக்கள் அக்ரஹாரத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி விட்டார்கள். இங்கிருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு முஸ்லிம்கள் மசூதி கட்டிவிட்டதாகக் கூறினார்கள்.
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்திலும், அடியக்கமங்கலத்திலும் அக்ரஹாரங்கள் அடியோடு மாறிவிட்டன. இங்குள்ள மசூதிகள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களே அங்கு கோயில் இருந்தது என்பதற்கான சாட்சி. அடியக்கமங்கலத்தில் பாப்பாரக் குளம் என்று அழைக்கப்படும் குளத்தையொட்டி மிகப்பெரிய மசூதி உள்ளது. இங்கு ஒரு அக்ரஹாரம் இருந்திருக்கிறது. அந்த அக்ரஹார ஹிந்துக்கள் பயன்படுத்தி வந்த குளமே பாப்பாரக் குளம் என்று அடியக்கமங்கலத்தில் கட்டிட வேலை செய்யும் ஒருவர் நம்மிடம் கூறினார். மயிலாடுதுறை அருகிலுள்ள நீடூரில் நிலைமை படுமோசம். இங்கு அக்ரஹாரத்திலுள்ள எல்லா வீடுகளையும் முஸ்லிம்கள் வாங்கி விட்டனர். அக்ரஹாரத்தின் முகப்பில் உள்ள பெருமாள் கோயில் இடிந்து போய் கிடக்கிறது. இந்தப் பெருமாள் கோயில் குளத்தை முஸ்லிம்கள் மதரஸா குளம் என்று அழைக்கிறார்கள்.
பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளம் அக்ரஹாரத்தின் ஈசானிய மூலையில் உள்ள விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த விஸ்வநாதர் கோயில் மூலஸ்தானத்தில் மிகப்பெரிய அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் கோயில் இடிந்து கற்குவியலாக மாறிவிட்டது. மூலஸ்தானத்தின் இரு பக்கங்களிலும் அரசு மரத்தின் வேர்கள் தூண்கள் போல நிற்கிறது. இந்தக் கோயிலில் இருந்த விலை மதிப்பற்ற விக்கிரகங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை. இந்தக் கோயில் இப்போது ஒரு முஸ்லிமின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அக்ரஹாரங்கள் எப்படி முஸ்லிம் மயமாகியது? சில அக்ரஹார பெரியவர்களிடமே கேட்டோம். முதலில் அக்ரஹாரத்தில் அதிக விலை கொடுத்து ஒரு வீட்டை முஸ்லிம்கள் வாங்கி விடுகிறார்கள். பிறகு அந்த வீட்டின் வாசலிலேயே ஆட்டை அறுப்பார்கள். மீனைக் கழுவி பக்கத்து வீட்டில் ஊற்றுவார்கள். அக்ரஹார பெண்களிடம் கலாட்டா செய்வார்கள். இந்தச் சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் திராவிடர் கழகம் செல்வாக்கோடு இருந்ததால் முஸ்லிம்கள் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பல அட்டூழியங்களைச் செய்தார்கள். இதனைச் சகிக்க முடியாத ஹிந்துக்கள் ஒவ்வொருவராக வீட்டை அவர்களுக்கே விற்றுவிட்டு, நாட்டின் பல பகுதிகளில் குடியேறி விட்டார்கள் என்று வேதனையோடு கூறினார்கள்.
தங்களது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை பார்ப்பதற்கு இப்போது யாராவது வருகிறார்களா?' என்று நீடூரில் ஒருவரிடம் கேட்டோம். "பலர் அதுபோல வருகிறார்கள். பலரால் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டைக் காண முடிவதில்லை. தங்கள் வீட்டைக் கண்டுபிடித்த சிலரும் அங்கு முஸ்லிம்கள் வசிப்பதை வேதனையோடு பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். சமீபத்தில் மும்பையிலிருந்து வந்த ஒருவர் அக்ரஹாரம் முஸ்லிம்மயமாகி இருப்பதைப் பார்த்துவிட்டு இந்த குளக்கரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்" என்றார் அந்தப் பெரியவர். இதைச் சொல்லும்போது அவரின் கண்கள் கலங்கியது. அக்ரஹாரங்கள் எல்லாம் இன்று அரேபியாவாக மாறிக் கொண்டிருக்கின்றன. வேத மந்திரங்கள் ஒலித்த அக்ரஹாரங்களில் அரபி வசனங்கள் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.

December 26, 2006

பாகிஸ்தானாகி வரும் காவிரி படுகை


கலைகள் பல பிறந்த இடம். காவியங்கள் பலவற்றின் களம். நாயன்மார்களும், ஆழ்வார்களும் அவதரித்த புண்ணிய பூமி. ராஜாதிராஜன் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த பிரதேசம். உலகம் வியக்கும் ஆலயங்கள் நிறைந்த பகுதி - இப்படி தஞ்சைத் தரணியின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இத்தனைச் சிறப்புகள் மிக்க தஞ்சைத் தரணி இப்போது மெல்ல மெல்ல இஸ்லாமிய மயமாகிக் கொண்டே வருகிறது.
தஞ்சைத் தரணியில் எங்களுக்கு பல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருப்பது தெரியாமல், நாங்கள் தமிழக அரசுக்குச் சொந்தமான விரைவுப் பேருந்தில் ஒரு வியாழக்கிழமை காலை நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தோம். நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வரை குறுக்கும் நெடுக்குமாக பேருந்திலும், காரிலும், ஆட்டோவிலும், இரு சக்கர வாகனங்களிலும் நாங்கள் 10 நாட்கள் இடைவிடாது பயணித்தோம்.
காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் பார்த்த, கேட்ட, படித்த செய்திகள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான காவிரி பாயும் தஞ்சைத் தரணியில், இன்று அரபி மொழியின் ஆதிக்கம் எங்கும் பரவியுள்ளது. சிறு கிராமங்களில்கூட மிகப்பெரிய அரபிக் கல்லூரிகளும், மதரஸாக்களும் இருக்கின்றன.
8நாள் பயணத்தில் பூச்சூடி, குங்குமம் வைத்த மங்களகரமான பெண்களை எங்களால் அரிதாகவே பார்க்க முடிந்தது. கண்கள் மட்டுமே வெளியே தெரியும் அளவிற்கு ஆடையணிந்த பர்தா பெண்களும், தாடி, குல்லா, லுங்கி அணிந்த ஆண்களும்தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். வானுயர கோபுரங்களுடன் கூடிய கோயில்கள் நிறைந்த தஞ்சைத் தரணியில், இன்று உயர்ந்த மினார்களுடன் கூடிய மசூதிகள் நூற்றுக்கணக்கில் கட்டப்பட்டுள்ளன. ஹிந்து ஆலயங்கள் பல இடங்களில் பாழடைந்த மண்டபங்களாக மிக அற்புதமான ஹிந்து பூமியின் எச்சங்களாகக் காட்சி தருகின்றன. பல இடங்களில் ஹிந்து ஆலயங்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி அக்ரஹாரம், பசுபதிநாதர் கோயில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலத்துறை, சுந்தரபெருமாள் கோயில், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் 80 சதவீதத்திற்கும்
அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இது தவிர தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், சோழபுரம், பட்டுக் கோட்டை, அதிராம் பட்டினம், மல்லிப் பட்டினம், மதுக்கூர், மீமீசல், கட்டுமாவடி, கோட்டைப் பட்டினம், பந்தர்பட்டினம், மானக்கோரை, கல்யாணபுரம், ஆவணியாபுரம், திருப்பனந்தாள், சேதுபுவசத்திரம், ஆடுதுறை, முருக்கங்குடி, நாச்சியார்கோயில், ஒரத்தநாடு போன்ற பல ஊர்களில் இஸ்லாமிய ராஜ்ஜியம்தான் நடக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், ஆழியூர், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், குடவாசல், அபிவிருத்தீஸ்வரம், அடவங்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம், தேதியூர், விஷ்ணுபுரம் போன்ற பல ஊர்களில் முஸ்லிம்களை மீறி எதுவும் செய்ய முடியாது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர், தரங்கம்பாடி, கோடியக்கரை, கரியாப்பட்டினம், தேத்தாக்குடி, பூம்புகார், மயிலாடுதுறை, கிளியனூர், வடகரை, மணமந்தல், நீடூர், கடலங்குடி, குத்தாலம், வானாதி ராஜபுரம், தேரழுந்தூர், திருவாவடுதுறை, திருவலாங்காடு, சீர்காழி, தைக்கால், மேலச்சாலை, பொறையார் என பெரும்பாலான சிறு நகரங்கள், குக்கிராமங்களில்கூட முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் அனைத்து ஊர்களிலும் முஸ்லிம்கள் 20 சதவீதத்தைத் தொட்டுவிட்டார்கள். நாங்கள் மேலே ஒரு சில ஊர்களைத்தான் பட்டியலிட்டுள்ளோம். இந்த ஊர்களில் முஸ்லிம்கள்தான் மெஜாரிட்டியாக இருக்கின்றனர். இதில் சில ஊர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். 100 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கும் கிராமங்கள்கூட எங்கள் பட்டியலில் இருந்து தப்பியிருக்கலாம்.
முஸ்லிம்களும் நம்மவர்கள்தானே அவர்கள் இருந்துவிட்டு போகட்டுமே என்று செக்யூலர் சிங்கங்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு தெரியுமா? முஸ்லிம்கள் அதிகமாக உள்ள இடங்களில் அக்ரஹாரங்களையும், கோயில்களையும் குறிவைத்து அடையாளம் தெரியாதபடி செய்து விடுகிறார்கள். முற்றிலுமாக ஹிந்துக்களை டெல்டா மாவட்டங்களிலிருந்து விரட்டிவிட்டு, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை வெளிப்படையாகவே சில முஸ்லிம் அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. கோயில்களுக்கு அருகில், கோயிலுக்கு சொந்தமான இடத்திலேயே திட்டமிட்டு மசூதி கட்டுகிறார்கள்.

நாகை மாவட்டம் கடலங்குடியில் பெருமாள் கோயிலுக்குச் அருகில் மசூதி கட்ட பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
முஸ்லிம்களே இல்லாத ஊர்களில்கூட மதரஸாக்களைக் கட்டுகிறார்கள். திருநள்ளாறு அருகில் உள்ள சேத்தூரில் ஹிந்துக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனாலும் இங்கு மதரஸா கட்ட திட்டமிட்டு, அடிக்கல் நாட்டு விழாவிற்கு புதுவை முதல்வர் ரங்கசாமியை அழைத்துள்ளனர். ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முதல்வர் வர மறுத்துவிட்டார். மதரஸா கட்டுவதும் தடுக்கப்பட்டது.


தஞ்சைத் தரணி, காவிரி பாயும் வளமான பகுதி. அதோடு இங்கு இயற்கை எரிவாயுவும், பெட்ரோலிய பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் முஸ்லிம்கள் டெல்டா மாவட்டங்களைக் குறிவைத்து அபகரித்து வருகிறார்கள். தஞ்சைத் தரணி கடலோரப் பகுதி என்பதால் இங்கு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகுவது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். மசூதிகள் பயங்கரவாதிகள் பதுங்கும் இடமாக உள்ளது. மசூதிக்குள் ஏராளமான ஆயதக் குவியல்கள் இருக்கலாம் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மசூதிகளில் வைத்து பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், மனித நீதி பாசறை போன்ற இஸ்லாமிய அமைப்புகள் வலுவாக உள்ளன. இந்த அமைப்புகள் இருக்கும் இடங்களில் தி.மு.க, அ.தி.மு.க கூட இருக்க முடியாது. முஸ்லிம்கள் அதிகமானால் மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள்கூட இருக்க முடியாது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தஞ்சைத் தரணி நம்மை விட்டுச் சென்று கொண்டிருக்கிறது.யாராவது பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினால் பாஸ்போர்ட், விசா எடுத்து பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியதில்லை. தஞ்சை, திருவாரூர். நாகை மாவட்டங்களுக்கு ஒரு விசிட் அடித்தால் போதும். பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவத்தை உணர்வீர்கள்.
l

நாடார்களின் மளிகை கடை இல்லாத தஞ்சை தமிழ் மண்!


தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நாடார்கள் மற்றும் செட்டியார்களின் மளிகைக் கடைகளைப் பார்க்கலாம். கடும் உழைப்பால் வியாபாரத்தில் உச்சத்தை அடைந்தவர்கள் அவர்கள். ஆனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் மட்டும் நாடார்கள் மற்றும் செட்டியார்களின் கடைகளை அபூர்வமாகவே பார்க்க முடியும். இங்கு மட்டும் ஏன் இந்த நிலை?
வியாபாரத்தைப் பிடிப்பதும் நாட்டைப் பிடிப்பதும் ஒன்றுதான். சில நூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட வெள்ளையர்கள்கூட வியாபாரிகள் வேடத்தில்தான் ஆரம்பத்தில் நுழைந்தனர். தஞ்சை மண்டலத்தை மெல்ல மெல்ல கைப்பற்றி வரும் இஸ்லாமியர்கள் மளிகை, ஜவுளி, காய்கறிகள், ஜூவல்லர்ஸ், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் என்று எல்லா வியாபாரங்களையும் தன்வசப் படுத்தி வருகின்றனர்.

ஒரு நகரை அல்லது கிராமத்தைக் குறிவைக்கும் முஸ்லிம்கள் அங்கு முதலில் ஒரு மளிகைக் கடையை ஆரம்பிக்கிறார்கள். அந்தக் கடையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலையை மட்டும் குறைத்து விடுகிறார்கள். இதனால் ஹிந்துக்களின் கடைகளில் வியாபாரம் குறைந்து விடுகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலையை குறைப்பவர்கள் மற்ற பொருட்களின் விலையை உயர்த்தி லாபம் பார்த்துவிடுகிறார்கள். முஸ்லிம்களின் இந்த தந்திரம் மக்களுக்குத் தெரிவதில்லை. இவர்களோடு போட்டி போட முடியாமல்தான் நாடார்களும் செட்டியார்களும் கடையை மூடிவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள்.
ஹிந்துக்கள் கடையை மூடிவிட்டுச் சென்ற பிறகு அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள். நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். வெற்றிலைக்கு பெயர் பெற்றது கும்பகோணம். ஆனால் கும்பகோணத்தில் இன்று வெற்றிலை வாங்க வேண்டுமானால், முஸ்லிம் கடைகளில்தான் வாங்க வேண்டும்.

சக்ரபாணி கோயில், ராமசாமி கோயில் போன்ற நீண்ட கோயில் தெருக்களில் பெரும்பான்மையான கடைகள் முஸ்லிம்களுடையது. காஞ்சி மடம் அமைந்துள்ள மடத்துத் தெருவில் ஹிந்துக்களின் கடையைப் பார்ப்பது அபூர்வம். கும்பகோணத்தில் முஸ்லிம் வியாபாரிகள் ஹிந்துக்களின் கடையில் விற்பதைவிட மிகக் குறைந்த விலைக்கு விற்பதால் ஹிந்துக்கள் தங்களின் கடையை மூடுகிற அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. கும்பகோணம் வியாபாரிகள் சங்கத்தில் இப்பிரச்சினை நீண்ட நாட்களாக உள்ளது. கும்பகோணத்தில் சுமார் 80 சதவீத வியாபாரம் முஸ்லிம்கள் வசம் சென்றுவிட்டதாக வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலரே எங்களிடம் ஒப்புக் கொண்டார்கள்.
நாகப்பட்டினம், நாகூர், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் என எல்லா முக்கிய நகரங்களிலும், கிராமங்களிலும் வியாபாரங்கள் முஸ்லிம்கள் பிடிக்குள் வந்துவிட்டது. வியாபாரிகள் சங்கத்திலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஹிந்துக்களின் இடத்தில் வாடகைக்கு கடை வைக்கும் முஸ்லிம்கள், அந்த இடத்தை மீண்டும் கேட்டால் கொடுப்பதில்லை. எங்களுக்கே விற்று விடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். முத்துப்பேட்டை, காரைக்கால் போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு கடையை வாடகைக்குக் கொடுத்துவிட்டு சொத்துக்களை பலர் இழந்துள்ளனர். திருவாரூரில் காய்கறி மார்க்கெட் முழுவதும் முஸ்லிம்களின் பிடியில் உள்ளது.
`தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்று போற்றப்படும் தஞ்சையில் நெல் கொள்முதல் செய்வது முஸ்லிம்கள்தான். ஹிந்து விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் வீடுகளையும், நிலங்களையும் முஸ்லிம்கள் வாங்கிக் குவிக்கின்றனர். பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் முஸ்லிம்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த மாவட்டங்களில் ஹிந்துக்கள் நன்கொடைகள் கேட்டால், முஸ்லிம் வியாபாரிகள் கொடுப்பதில்லை. முஸ்லிம் அமைப்புகளுக்கே நன்கொடை கொடுப்போம் என்று கறாராகச் சொல்லி விடுகிறார்கள். சோழமண்டலத்தில் வியாபாரம் முழுக்க முழுக்க முஸ்லிம்களிடம் சென்று கொண்டிருப்பதால், ஹிந்துக்கள் அங்கிருந்து சென்னை போன்ற நகரங்களில் குடியேறுகிறார்கள். இதைத்தான் முஸ்ஸிம்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசிவரை முஸ்லிம்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது நம் கலாசார பூமியைக் காக்க போராட போகிறோமா?

முஸ்லிம்களின் கீழ்த்தரமான மதமாற்ற முயற்சிகள்!

கும்பகோணத்திலுள்ள மனித நீதி பாசறையின் (எம்.என்.பி) அலுவலகத்திலிருந்து விடுமுறை நாட்களில் ஒரு டெம்போ டிராவலர் வாகனம் புறப்படுகிறது. இந்த வாகனத்தில் பயணிக்கும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் அரிஜன காலனியில் இறங்குகிறார்கள். அங்குள்ள கோயில் அல்லது பள்ளிக்கூடத்தில் மக்களை அமர வைக்கிறார்கள்.
40 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெரியவர் ஒருவர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே பேசுகிறார். "நீங்கள் அரிஜனங்கள். நீங்கள் ஒடுக்கப்பட்டவர்கள். உங்களை ஹிந்து மதத்தில் உள்ள மற்ற சாதியினர் ஒதுக்குகிறார்கள். என்னதான் அரசாங்கத்தில் இருந்து சலுகைகள் கிடைத்தாலும் உங்களுக்கு சமூகத்தில் மரியாதை இல்லை. உங்களுக்கு அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இஸ்ஸாம் மதத்திற்கு மாற வேண்டும்" என்கிறார்.
அவரைத் தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எழுந்து, "நான் முஸ்லிமாக மதம் மாறியவன். முஸ்லிமாக மாறிய பிறகு என்னை எல்லோரும் `பாய்' என்று மரியாதையோடு அழைக்கிறார்கள். அதனால் நீங்களும் முஸ்லிமாக மாறுங்கள்" என்கிறார். "ஒரு அரிஜன் பேண்ட் அணிந்து கொண்டு சென்றாலும் ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு முஸ்லிம் கோவணம் கட்டிக்கொண்டு சென்றாலும் `பாய் போகிறார்' என்று மரியாதையோடு சொல்கிறார்கள். எனவே நீங்கள் இஸ்லாத்திற்கு மாறினால் மரியாதை கிடைக்கும்" என்கிறார் மற்றொருவர்.
உடனே ஓரிருவரை அமர வைத்து சில அரபி வசனங்களைக் கூறி, அதனை மீண்டும் சொல்ல சொல்கிறார்கள். பின் அவருக்கு ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டி, `இனி இதுதான் உன் பெயர். இனி நீ முஸ்லிம்' என்று அறிவிக்கிறார்கள். இது சினிமாவில் வரும் ஒரு காட்சியல்ல. கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இந்தக் காட்சி தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தாங்கள் மதமாற்றும் காட்சியை சி.டியாக தயாரித்து முஸ்லிம் நாடுகளில் போட்டுக் காட்டி கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்து வருகிறது எம்.என்.பி. அவர்கள் வெளியிட்ட ஒரு சி. டி நமக்கும் கிடைத்தது. இந்த சி.டியை கும்பகோணத்திலுள்ள ஹிந்து இயக்கப் பிரமுகர்கள் போலீசிடம் ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எம்.என்.பி தவிர மற்ற பல இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு வழிகளில் அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி வருகிறது. திருவாரூர் அழகிரி காலனியில் உள்ள அரிஜனங்களை மதம் மாற்றிய முஸ்லிம்கள், அவர்களின் பெயர்களை மட்டும் மாற்றவில்லை. ஹிந்துப் பெயரில் இருக்கும் இந்த மதம் மாற்றப்பட்ட அரிஜனங்கள் மூலம் பல சமூக விரோத காரியங்களை முஸ்லிம் அமைப்புகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் டெல்டா மாவட்டங்களில் திடீர் திடீரென குடிசை வீடுகள் பற்றி எரிந்தன. இதற்கு இந்த மதம் மாறிய ஹிந்துக்களையே அம்பாகப் பயன்படுத்தி உள்ளனர். அழகிரி காலனியில் மதம் மாற்றப்பட்ட அரிஜனங்கள் `தமிழர் தன்மானப் பேரவை' என்ற அமைப்பின் போர்வையில் இந்தக் காரியங்களைச் செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

முஸ்லிமாக மதம் மாறியவர்கள் சுன்னத் செய்துகொள்ள ரூ.20,000 கொடுக்கிறார்கள். முஸ்லிம்கள் நடத்தும் மருத்துவமனையில் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு இலவசமாகவே சுன்னத் செய்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் ...புலிகள் பெயரில் ஒரு அமைப்பை நடத்திவரும் ஒரு அரிஜன பிரமுகர் மதமாற்ற ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு பிரபலமான ஹிந்து பிரமுகர்களுக்கு குரான் அனுப்பி வைத்து அதன் மூலம் மதமாற்ற முயற்சித்து வருவதாக கும்பகோணத்தில் பலர் எங்களிடம் தெரிவித்தார்கள். ஓர் ஊரில் எந்த சமூகம் செல்வாக்கோடு உள்ளதோ, அந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளை முஸ்லிமாக மாற்றவும் திட்டமிட்டு வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மதம் மாற்றுவதற்காக ஹிந்துப் பெண்களுக்கு காதல் வலையும் விரிக்கிறார்கள் (இதுபற்றி தனிக்கட்டுரை வெளியாகியுள்ளது). விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களையும் குறிவைத்து மதம் மாற்றி வருகிறார்கள்.
பல இடங்களில் முஸ்லிம்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள். தங்களிடம் பஞ்சாயத்திற்கு வருபவர்களை மிரட்டி மதம் மாற்றுகிறார்கள். எப்படியாவது காவிரி டெல்டா மாவட்டங்களை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தோடு முஸ்லிம் அமைப்புகள் காய் நகர்த்தி வருகின்றன. இனியாவது ஹிந்துக்கள் விழித்துக் கொள்ளப் போகிறார்களா? அல்லது தஞ்சைத் தரணி ஒரு காஷ்மீராக மாறும்வரை காத்திருக்கப் போகிறார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஹிந்து பெண்களுக்கு காதல் வலை!

சம்பவம் : 1
கழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ள திருவாவடுதுறையில் இருந்து ஒரு ஹிந்துப் பெண் தினமும் கும்பகோணத்திற்கு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் மிகவும் அழகாக இருப்பாள். வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலிருக்கும் திருவலாங்காட்டிற்கு நடந்து சென்றுதான் கும்பகோணத்திற்கு பஸ் பிடிக்க வேண்டும். சக மாணவிகளோடு நடந்து செல்லும் அந்த மாணவி, ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களின் கண்ணில் பட்டுவிட்டாள்.
மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காத, வேலை வெட்டி இல்லாத ஒரு முஸ்லிம் இளைஞனை அழைத்து, அந்த ஹிந்து மாணவியை காதலித்துத் திருமணம் செய்யுமாறு பணித்தது அந்த முஸ்லிம் அமைப்பு. அன்றிலிருந்து அந்த முஸ்லிம் இளைஞன் ஹிந்து மாணவியைத் துரத்த ஆரம்பித்தான். சில முஸ்லிம் மாணவிகளும் அவனுக்கு உதவினார்கள். அவள் அவனை அருவருப்பாக பார்த்தாள். வீட்டில் சொன்னால் படிப்புக்கு முழுக்கு போட வேண்டி வரும் என்பதால், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாள். எறும்பு ஊற பாறையும் தேயும் என்பதுபோல அவளது மனமும் மெல்ல மெல்ல கரைந்தது.
அந்த முஸ்லிம் இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
அவள் காதலிப்பது உறுதியானதும் முஸ்லிம் அமைப்பினர் களத்தில் குதித்தனர். அந்த அழகான ஹிந்துப் பெண்ணை ஒருநாள் அதிரடியாக கடத்தி முஸ்லிமாக மதம் மாற்றி முஸ்லிம் இளைஞனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பெண் நம்மை மீறி ஒருத்தனை மணந்துவிட்டாள் என்பதைவிட, முஸ்லிமாக மாறிவிட்டாள் என்பதை ஜீரணிக்க முடியாத அந்த ஆச்சாரமான ஹிந்து குடும்பம் அந்த ஊரைவிட்டு இடம் பெயர்ந்தது.
சம்பவம் : 2
திருவாரூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் மகள், அக்ரஹாரத்திலிருந்து தினமும் கும்பகோணத்திற்கு கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். இந்தப் பெண்ணை ஒரு முஸ்லிம் இளைஞன் துரத்தி துரத்திக் காதலித்தான். ஒருநாள் அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டான் அந்த முஸ்லிம் இளைஞன். அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர் குடும்பம், இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திருவாரூரை விட்டு ஓடிப் போனது. இன்று அந்தப் பெண் ஒரு முஸ்லிமாக திருவாரூருக்கு அருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

சம்பவம் : 3

கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு இரண்டு மனைவிகள். காதல் திருமணம் செய்த இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள்.வழக்கறிஞரின் இந்த இரண்டாவது மனைவியை ஒரு முஸ்லிம் இளைஞன் எப்படியோ தன் பிடிக்குள் ெகாண்டு வந்துவிட்டான். இந்த முஸ்லிம் இளைஞன் `தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்' என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவன்.
ஒருநாள் நாச்சியார் கோயிலைச் சேர்ந்த தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் இரண்டு குழந்தைகளோடு வழக்கறிஞரின் மனைவியைக் கடத்திச் சென்று முஸ்லிமாக மதம் மாற்றி முஸ்லிம் இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர், பிரபலமான ஒரு தலித் கட்சியின் உதவியை நாடினார். அந்த பிரபல தலித் கட்சியினர் தவ்ஹித் ஜமாத் அமைப்பினரோடு பேசியபோது வழக்கறிஞரும் முஸ்லிமாக மாறுவதாக இருந்தால் அவரது மனைவியை ஒப்படைத்து விடுகிறோம் என்று பேரம் பேசியிருக்கின்றனர். மதம் மாறுவதற்கு விரும்பாத அரிஜன சமுதாயத்தைச் சேர்ந்த அந்த வழக்கறிஞர், தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு சோகத்தோடு வீடு திரும்பியிருக்கிறார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சைத் தரணிக்குள் சென்றால் இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை ஏதோ சினிமா கதைபோல சொல்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களின் எண்ணிக்கையைப் பெருக்க, ஹிந்துப் பெண்களைக் காதலிக்குமாறு சில முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டுகிறார்கள். காதல் உறுதியானால் அதிரடியாக அந்தப் பெண்ணைக் கடத்தி சென்று முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பெண்ணின் பெற்றோர்கள் கேட்டால் குடும்பத்தோடு மதம் மாறுவதாக இருந்தால் பெண்ணை ஒப்படைத்து விடுகிறோம் என்று பேரம் பேசுகிறார்கள். பெண்களைக் காதல் வலை விரித்து மதம் மாற்றுவது ஒரு பக்கம் நடந்துவரும் வேளையில், திருமணமான ஹிந்து தம்பதிகளையும் பிரிக்கிறார்கள்.
தஞ்சைத் தரணியில் சுமார் 80 சதவீத வியாபாரம் முஸ்லிம்களின் வசம் இருப்பதால் பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் முஸ்லிம்களின் கடைகளில் பணிபுரிகிறார்கள். நாங்கள் தஞ்சைத் தரணியில் சுற்றுப்பயணம் செய்த 8 நாட்களில் முஸ்லிம் பெண்கள் கடைகளில் வேலை செய்வதை எங்குமே பார்க்க முடியவில்லை. தேரழுந்தூரில் முஸ்லிமுக்குச் சொந்தமான ஒரு எஸ்.டி.டி பூத்தில் 18 வயதான ஹிந்துப் பெண் வேலை செய்வதையும், அந்த பெண்ணைச் சுற்றி ஐந்தாறு முஸ்லிம் இளைஞர்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் எங்களால் பார்க்க முடிந்தது. கற்புக்கரசியைப் பற்றி காவியம் படைத்த கம்பர் பிறந்த தேரழுந்தூரில், ஹிந்துப் பெண்களின் கற்புக்கு இன்று பேராபத்து ஏற்பட்டுள்ளது. தேரழுந்தூர் மட்டுமல்ல, காவிரி பாயும் தஞ்சை மண்டலம் முழுவதும் இதே நிலைதான்.
ஒரு பெண்ணை எப்படியாவது மதம் மாற்றிவிட்டால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அந்தக் குடும்பத்தையே மதம் மாற்றிவிடலாம் என்ற பெரிய சதித்திட்டத்தோடு முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலேயே படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதிய நபரோ, இளைஞர்களோ பேச்சுக் கொடுத்தால் உடனடியாக வீட்டில் சொல்லும்படி அறிவுறுத்த வேண்டும். நமது ஹிந்து மதத்தின் சிறப்புகளை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இல்லையெனில் ஆசை ஆசையாய் வளர்க்கும் அருமை மகள், ஒருநாள் குடும்பத்தை விட்டு மாயமாய் மறைந்து விடுவாள். அப்பொழுது அழுது பலனில்லை. இப்போதே விழித்துக் கொள்ள வேண்டியது தான்.

காரைக்கால் : பயங்கரவாதிகளின் கூடாரம்


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு முக்கிய மாவட்டமான காரைக்காலில் மதுக்கடைகளுக்கு இணையாக மசூதிகள் உள்ளன. 10 வருடங்களுக்கு முன்பு சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த முஸ்லிம்கள் பலர் கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். முஸ்லிம் தெருக்களில் புதிது புதிதாக வாகனங்கள் பவனி வருகிறது. புதிய ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. தமிழக பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இங்கு ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். தமிழகத்தில் குடியிருக்கும் முஸ்லிம்கள் பலருக்கு காரைக்காலில் ரேசன் கார்டு உள்ளதாம். ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் கலந்து கொண்ட மூன்று நாள் `தப்ளீக் மாநாடு' காரைக்காலில் உள்ள நிரவியில் நடந்திருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதாக `ஜூனியர் விகடன்' 6-1-2002 இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. 2002ம் ஆண்டிலேயே விலை உயர்ந்த செல்போன்கள் காரைக்காலில் தாராளமாக புழங்கியிருக்கிறது. சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்த இஸ்லாமிய பயங்கரவாதி இமாம் அலி காரைக்காலில் 10 மாதம் தங்கி ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளான்.
காரைக்காலில் மாசிமக விழா மிகச்சிறப்பாக நடைபெறும். திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலிலிருந்து சீனிவாசப் பெருமாள் ஊர்வலமாகப் புறப்பட, அருகருகில் உள்ள கோயில்களின் பெருமாள்களும் ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்கள். இந்த உற்சவர்கள் கடற்கரையில் தீர்த்தவாரி முடிந்து கோயிலுக்குத் திரும்பிச் செல்லும் அழகே அழகு. காரைக்கால் மக்களின் முக்கிய விழாவான இந்தத் தீர்த்தவாரி விழா முஸ்லிம்களின் தலையீட்டால் 1918ல் நின்றுபோனது.
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகள் வலுப்பெற்ற பிறகு 60 ஆண்டுகள் நடக்காமல்போன தீர்த்தவாரி 1986லிருந்து நடக்க ஆரம்பித்தது. இந்த தீர்த்தவாரியை சீர்குலைக்க முஸ்லிம்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
காரைக்காலில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளில் ஆகஸ்டு 14ம் தேதியே சுதந்திர தினத்தைக் கொண்டாடி விடுகிறார்கள். காரைக்கால் வட்டாரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் ஜம்மு- காஷ்மீர் மாணவர்கள் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட தினத்தன்று பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.(6-1-2002 `ஜூனியர் விகடன்' செய்தி). காரைக்காலில் உள்ள பெண்கள் கல்வி நிறுவனம் ஒன்றில் மர்மமான காரியங்கள் நடப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. காரைக்கால் வட்டாரத்தில் உள்ள அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கங்குடியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

காரைக்காலில் கடல் அலை மோதும் இடத்தில் அண்டர் கிரவுண்ட் மசூதி கட்ட முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்து முன்னணியின் எதிர்ப்பால் இது முறியடிக்கப்பட்டது. இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால் புதுச்சேரி அறநிலையத் துறை கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியது. நேரு நகரில் வீட்டுவசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் எட்டு வீடுகளை காலி செய்துவிட்டு மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர். தஞ்சைத் தரணியின் மற்ற நகரங்களைப் போலவே காரைக்காலிலும் 70 சதவீத வியாபாரம் முஸ்லிம்களிடம் உள்ளது. மொத்தத்தில் காரைக்கால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இருக்கிறது தொக்காலிக்காடு என்ற சின்னஞ்சிறு கிராமம். அதிராம்பட்டினத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காவிரியின் கடைமடைப் பகுதியான இந்தக் கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவீதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லிம்களால் கடந்த 7 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக் கொடுமைகளைக் கேட்டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியின் துணைத்தலைவராக இருப்பவர் எம்.எம்.எஸ். அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலுக்கு அருகில் சர்வே எண் 153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பிணத்தைத் தகனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவதுதான் தொக்காலிக்காடு கிராம மக்களின் வழக்கம்.
இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது. தொக்காலிக்காடு ஊராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஷ்ரீ முனீஸ்வரர் கோயில் உறுத்தியது. ஒதிய மரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாதிருந்த முனீஸ்வரர் கோயிலை 5-5-1999 அன்று இரவோடு இரவாக அப்புறப்படுத்தினார் அப்துல் வஹாப்.
மறுநாள் கோயில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததைப் பார்த்த அவர்களின் மனம் கொதித்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், தி.மு.கவின் மாவட்டப் பிரதிநிதியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 6-5-1999 அன்று ஷ்ரீமுனீஸ்வரர் கோயிலை அப்புறப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டக் கோரியும் போலீசில் புகார் செய்தனர்.


அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். அதிகாரிகள் மத்தியில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. கோயிலைப் பெரிதாகக் கட்டக் கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமர்சையாகக் கொண்டாடக் கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக் கூடாது என்று முஸ்லிம்கள் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதித்தனர். எங்கே கோயில் நம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் கோயிலை முன்பிருந்தபடியே பராமரிக்கிறோம் என்று தொக்காலிக்காடு கிராம மக்கள் உறுதியளித்தனர். அதன்படியே ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலைக் கட்டி, சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.
கோயில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கு என்றாவது ஒருநாள் ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லிம்கள், ஒவ்வொரு வருடமும் திருவிழா நேரத்தில் பிரச்சினை செய்தனர். பணபலத்தால் அதிகார வர்க்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரப்பாளர்கள் போலீசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில் தொக்காலிக்காடு கிராமத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான போலீசார் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அடித்துத் துவைத்தனர். அடித்துத் துன்புறுத்தி 50க்கும் மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தினார்கள்.
தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வருகை தந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் முனீஸ்வரர் கோயிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதம் இருங்கள் என்று ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபாலின் மனைவியும், தொக்காலிக்காடு ஊராட்சித் தலைவருமான திருமதி செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச் சென்றனர். அவர்களைக் கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும் வாகனங்களுடனும் காத்திருந்தனர்.


போலீசார் செல்வராணி உள்ளிட்ட நான்கு பெண்களையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்றப் போராடியவர்களைக் கைது செய்தனர்.
தொக்காலிக்காடு ஊராட்சித் தலைவரான செல்வராணி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12-12-2005அன்று மீட்கப் போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்குச் சொந்தமான மரம் என்பதற்கு அடையாளமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையைச் செய்த பஞ்சாயத்துத் தலைவர் செல்வராணியைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை முயற்சி(307) உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ. இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள் சிறைபட்டுக் கிடக்க, அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் பொங்கல் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள்போல தவித்தனர்.
செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லிம் பெண், `முஸ்லிம்களையா எதிர்க்கிறாய்?' என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராவதற்காக அரசு வேலையை ராஜினாமா செய்த செல்வராணி, சிறையில் கழிவறையை சுத்தம் செய்யும் கொடுமையையும் அனுபவித்துள்ளார்.

தங்கள் பஞ்சாயத்திற்குச் சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சி உறுப்பினர் புஷ்பவள்ளியும் 45 நாட்கள் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கடைசியில் திருச்சியில் தினமும் தங்கி கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அவர்கள் ஜாமீனில் வர முடிந்தது.
பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லிம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூழியங்களை தொக்காலிக்காடு கிராம மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஷ்ரீ முனீஸ்வரர் கோயிலையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டே தீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோயிலை மட்டுமல்ல, அயோத்தியில் ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.
(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999லிருந்து 7 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லிம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)

தமிழகத்தின் காஷ்மீர் முத்துப்பேட்டை

தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்களிடம் தமிழகத்தின் காஷ்மீர் எது என்று கேட்டால் சட்டென்று முத்துப்பேட்டை என்று சொல்லி விடுவார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியான முத்துப்பேட்டை, எப்போதும் போர்க்களம் போல் இருக்கிறது. முத்துப்பேட்டை, காஷ்மீர் என்றால் அதற்கு அருகில் உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி ஜம்மு போல இருக்கிறது. இரண்டு ஊரையும் பிரிக்கும் கோரையாறு இந்தப் போர்க்களத்திற்குச் சாட்சியாக மெல்ல சலசலத்துக் கொண்டிருக்கிறது. முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் மிகப்பெரிய தர்கா உள்ளது. நாகூர், ஏர்வாடிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தர்கா இதுதானாம். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் சந்தனக்கூடு விழா, அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இந்த சந்தனக்கூடு ஊர்வலமும், முஸ்லிம்களின் சுன்னத் ஊர்வலமும் ஹிந்துக்களின் கோயில் வழியாகவும், ஹிந்துக்களின் தெரு வழியாகவும் சர்வசாதாரணமாய் செல்கிறது. முத்துப்பேட்டையில் மிகப்பெரிய 13 மசூதிகள் உள்ளன. இந்த மசூதிகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹிந்துக்களால் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட சொத்துக்கள் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இங்கும் சுன்னத் ஊர்வலம் உள்ளிட்ட முஸ்லிம்களின் மத ஊர்வலங்கள், ஹிந்துக்களின் கோயில்கள் மற்றும் தெருக்களின் வழியாகச் செல்கிறது. ஹிந்துக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடையில் ஹிந்துக்களின் வீட்டில் விசேஷம் என்றால் முஸ்லிம் சமையல்காரர்களைக் கொண்டே அசைவம் சமைக்கிறார்கள். முஸ்லிம் சமையல்காரர்கள் சமைக்கவில்லை என்றால், அவர்கள் சாப்பிட மாட்டார்களாம். முத்துப்பேட்டை லயன்ஸ் கிளப்பில் ஓரிரு முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஓரிருவருக்காக லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் சமையல்காரரைக் கொண்டுதான் சமைக்கிறார்கள்.
இப்படி ஹிந்துக்கள் எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், முஸ்லிம்கள் ஹிந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகின்றனர். 1990ல் இங்கு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் காலூன்றியவுடன் ஹிந்துக்களின் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. அதன் பிறகுதான் ஹிந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாகக் கொண்டாட ஆரம்பித்தனர். முஸ்லிம்களின் ஊர்வலங்கள் ஹிந்துக்களின் கோயில்கள் வழியாக தடையின்றிச் செல்கிறது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் தடுக்கின்றனர். காவல்துறையும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே ஒவ்வொரு வருடமும் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் உள்ளூர் இந்துக்கள்.
2002ல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கலந்து கொண்டார். அப்போது ஒரு முஸ்லிம் அரவாணியின் கைகளை முஸ்லிம்களே வெட்டி அந்த ரத்தத்தில், `ஓம் காளி, ஜெய் காளி' என்று எழுதி அந்தப் பழியை ஹிந்துக்கள்மீது போடப் பார்த்துள்ளனர். உண்மையை போலீசார் கண்டுபிடித்ததால் முஸ்லிம்களின் சதித்திட்டம் அம்பலமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை மசூதியில் சாக்கடை தோண்டியபோது மூன்று குண்டுகள் வெடித்தது. போலீசாரின் உதவியுடன் இந்தச் செய்தியை மூடிமறைத்து விட்டனர். `முத்துப் பேட்டை மசூதியில் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன' என்பதற்கு இது ஆதாரம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். முத்துப்பேட்டையில் இப் போது செருப்புக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுடன் தொடர்பிருப்பதாக சில போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.இந்த நபர் லண்டனில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர்.
ஒவ்வொரு வருடமும் கடும் போராட்டங்களுக்கிடையே, போலீஸ் படைகளுக்கு மத்தியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் நடக்கிறது. விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துவிட்டு திரும்பும்போது ஹிந்துக்களின்மீது முஸ்லிம் குண்டர்கள் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசுவது வழக்கமாக நடக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு விநாயகர் சிலைகளைக் கரைத்துவிட்டு திரும்பும்போதும் இதுபோல முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதனால் கொதித்தெழுந்த ஹிந்துக்கள் அன்றைய தினமே தாக்குதல் நடத்திய முஸ்லிம்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசிடம் ஊர்வலமாகச் சென்று புகார் மனு கொடுத்தனர்.
ஹிந்துக்களின் புகார் மனுவுக்குப் போட்டியாக, மறுநாள் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக வந்து ஹிந்துக்கள்மீது போலீசில் புகார் கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் ஹிந்து தெய்வங்கள் மற்றும் உள்ளூர் ஹிந்துப் பெரியவர்கள் பற்றி ஆபாசமாகக் கோஷமிட்டுள்ளனர்.
முத்துப்பேட்டையில் ஹிந்துக்களுக்கு எதிரான கும்பலுக்கு தலைமை வகிக்கும் பொட்டை பஷீர் என்பவன், பல நேரங்களில் எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் காரில் பகிரங்கமாக உலா வருவானாம். இந்த பொட்டை பஷீர் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொட்டை பஷீர் கைதானதால் கோபமடைந்த முஸ்லிம்கள், ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பா.ஜ.கவின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான கருப்பு என்கிற முருகானந்தத்தையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கலவரங்களைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் எத்தனை முஸ்லிம்களை கைது செய்கிறார்களோ, அதே எண்ணிக்கையில் ஹிந்துக்களையும் போலீசார் கைது செய்கின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஹிந்து இளைஞர் ஒருவரை முஸ்லிம்கள் வெட்டி விட்டனர். இதற்காக முஸ்லிம்களில் 32 பேரை கைது செய்த போலீசார், 32 ஹிந்துக்களையும் கைது செய்தனர்.
மிகப்பெரிய பயங்கரவாதியான பொட்டை பஷீரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், அப்பாவியான மகேஷ் என்ற 28 வயது இளைஞரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். எந்தத் தவறும் செய்யாத இந்த அப்பாவி இளைஞர், கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் அமைப்புகளின் போஸ்டர்களும், `உணர்வு', `மக்கள் உரிமை' போன்ற முஸ்லிம் பத்திரிகைகளின் விளம்பரப் போஸ்டர்களுமே கண்ணில் படுகின்றன. கடந்த 2005ம் ஆண்டு பொட்டை பஷீர் தலைமையில் முஸ்லிம்கள் , `12-09-05 அன்று நடக்கவிருக்கும் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த விடக்கூடாது. முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களுக்கு நிகராக ஹிந்துக்களை வாழவிடக் கூடாது. இஸ்லாமியர்களின் கொள்கை களுக்கும், நடவடிக்கைகளுக்கும் இடையூறாக இருக்கும் எந்த மதத்தினரையும் உயிருடன் வாழவிடக் கூடாது. இஸ்லாமிய இனத்தையும், மதத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு இஸ்லாமியனும் ரத்தம் சிந்தத் தயங்கக் கூடாது. இந்த நாடு துண்டானாலும் கவலை இல்லை' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அதோடு இந்த உறுதிமொழியைத் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து முஸ்லிம் களிடம் விநியோகித்துள்ளனர்.
எப்படியாவது விநாயகர் ஊர்வலத்தைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கடந்த 2005ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம் விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தைத் தடுக்க பல வழிகளில் முஸ்லிம்கள் முயன்று வருகின்றனர். விநாயகர் சிலைகளை அந்தந்த ஊரிலேயே கரைக்க வேண்டும், ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டை பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டு வாழ்க்கைப் படகை நகர்த்திக் கொண்டு வருகிறார்கள் முத்துப்பேட்டை ஹிந்துக்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் போராடி வருகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை.

கழிப்பிடமாக கம்பர் பிறந்த இடம்


கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்கள். ஆனால் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கவிச்சக்கரவர்த்தி பிறந்த தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை. கவிபாட கட்டுத்தறியும் இல்லை. கம்பர் பிறந்த இடமாக இந்தியத் தொல்லியல் துறை முள்வேலியிட்டு அடையாளப்படுத்தி உள்ள இடம் குப்பைமேடாகவும் மலம், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கம்பர் மேடு என்று அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படும் அந்த இடத்தைத் தவிர, மற்ற எல்லா இடங்களும் முஸ்லிம்கள் வசம் உள்ளது. கம்பர் பிறந்து, வாழ்ந்து, கவிதைகள் பல புனைந்த அவரது வீட்டிற்கு அருகில், மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி தவிர அந்த ஊரில் பல மசூதிகள் உள்ளன. அவற்றில் சில மிக பிரம்மாண்டமானவை.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதொழாங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் தேரழுந்தூரில் ஷ்ரீரங்கநாதனாகவும், ஷ்ரீகோவிந்தராஜனாகவும், ஷ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை ஒட்டி பிரம்மாண்டமான இரண்டடுக்கு அரபிக் கல்லூரி ஒன்று உள்ளது.
தேரழுந்தூரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருப்பதால், கம்பர் மணிமண்டபத்தை அவர்கள் பொழுதுபோக்கிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தேரழுந்தூரில் உள்ள முஸ்லிம் இளைஞர்களில் பெரும்பாலானோர் டிரைவர்களாக உள்ளனர். இவர்கள் இரவில் தங்களது வாகனத்தை மணிமண்டபத்தில் நிறுத்திவிட்டு மது அருந்துவது, விலை மாதர்களோடு சல்லாபிப்பது போன்ற இரவுக் களியாட்டங்களை தினந்தோறும் அந்தப் புனிதமான இடத்தில் அரங்கேற்றி வருகிறார்கள்.
நாங்கள் அங்கு சென்றபோது கம்பர் மணிமண்டபத்தில் திருமண மண்டபம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு இரவு காவலாளியாக பணிபுரியும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவரிடம் நாங்கள் பேச்சுக் கொடுத்தோம். "முன்பு இங்கு வாட்ச்மேன் கிடையாது. முஸ்லிம் டிரைவர்கள் இங்கு பண்ணாத அட்டூழியம் இல்லை. நான் இரவு வாட்ச்மேனாக வந்தவுடன் மணிமண்டபத்தை சுத்தம் செய்தேன். அங்கிருந்த காலி மது பாட்டில்களையும், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளையும்,பெண்களின் உள்ளாடைகளையும், அவர்கள் செய்த அசிங்கத்தையும் சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது" என்று வேதனையுடன் கூறினார்.


கம்பர் மணிமண்டபமும், அரபிக் கல்லூரியும் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவை முஸ்லிம்கள் மதரஸா தெரு என்றே அழைத்து வருகின்றனர். முஸ்லிம்கள் கடிதம் எழுதும் போதும், வீடுகளிலும் மதரஸா தெரு என்றே எழுதுகின்றனர். அதோடு தேரழுந்தூர் என்பதை தேரிழந்தூர் என்று எழுதுகின்றனர். அரபிக் கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் தேரிழந்தூர் என்றே எழுதியுள்ளனர்.
பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள அக்ரஹாரத்திலுள்ள பெரும்பான்மையான வீடுகளை முஸ்லிம்கள் வாங்கிவிட்டனர். அழகு தமிழில் கம்ப ராமாயணமும், ஆழ்வார் பாசுரங்களும் ஒலித்த வீடுகளில், அரபி மொழியில் குரான் வசனங்கள் கேட்கின்றன.
அக்ரஹாரங்கள் எப்படி முஸ்லிம்கள் வசமாகியது என்று அங்குள்ள ஒரு பெரியவரிடம் விசாரித்தோம். அக்ரஹாரத்தில் ஒரு வீட்டை வாங்கிய முஸ்லிம்கள், அந்த வீட்டில் மாமிசங்களைச் சமைத்து பக்கத்து வீட்டில் கொட்டுவார்களாம். எதிர்த்துக் கேட்டால் அடிஉதைதான். தேரழுந்தூரில் ஹிந்துக்களை அக்ரஹாரத்திலிருந்து துரத்த வேறு ஒரு மோசமான வழியையும் முஸ்லிம்கள் பின்பற்றியுள்ளனர். அக்ரஹாரத் தெருவில் பெண்கள் வெளியே வரும் நேரங்களில் முஸ்லிம் இளைஞர்கள் நிர்வாணமாக நிற்பார்களாம். முஸ்லிம்களின் இந்த அட்டூழியங்களுக்குப் பயந்து அவர்களுக்கே வீட்டை விற்றுவிட்டு வெளியூர்களில் குடியேறிவிட்டனர். இன்று பெருமாள் கோயிலில் பூஜை செய்யும் ஓரிரு குடும்பங்களைத் தவிர அக்ரஹாரத்தில் ஹிந்துக்களே இல்லை.
நாங்கள் `விஜயபாரத'த்திற்காக அங்கு சென்ற போது அக்ரஹாரத் தெருவில் பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு முஸ்லிம் வீட்டில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. அருகில் சென்றபோது அசைவ வாசனை மூக்கைத் துளைத்தது. அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவரிடம் என்ன விசேஷம் என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தோம்.அந்த வீட்டில் திருமண விருந்து நடப்பதாகக் கூறிய அவர் விருந்தில் ஆடு, மாடு, கோழி,
மீன், முட்டை என எல்லாம் உண்டு என்று பெருமையுடன் கூறினார். நாங்கள் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக நிற்கும்போதும் அசைவ வாசனை நம் நாசிகளைப் பதம் பார்த்தது.பெருமாள் கோயிலுக்கு வந்திருந்த உள்ளூர்வாசி ஒருவரிடம், "கோயிலுக்குப் பக்கத்தில் அசைவ விருந்து நடக்கிறதே, நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாதா?" என்றோம். நம்மை மேலும் கீழும் பார்த்தவர், "நீங்கள் வெளியூரா" என்று கேட்டுவிட்டு, "முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவெல்லாம் ஹிந்துக்களுக்குப் போயாச்சு. இங்கு அவர்கள்தான் மெஜாரிட்டி. அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஏன் பேசக் கூட முடியாது" என்று அடுத்த நாட்டிலிருந்து உயிர் பிழைக்க ஓடி வந்த அகதி போல புலம்ப ஆரம்பித்து விட்டார்.
இன்றும் தமிழ் செல்வாக்கோடு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் கம்பர்தான். ராமனையும், சீதையையும், அனுமனையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான். கம்பரின் சுவடு தொட்டு பாட்டெழுதாத தமிழ்ப் புலவர்களே இல்லை என்று சொல்லலாம். தமிழ், தமிழ் என முழங்கும் தமிழினத் தலைவர்களும், உலக தமிழினத் தலைவர் என போஸ்டர் அடித்துக் கொள்பவர்களும் ஒருமுறையாவது கம்பர் பிறந்த தேரழுந்தூருக்குச் சென்று அங்கு தமிழுக்கும் கம்பனுக்கும் இழைக்கப்படும் அநீதிகளையும் அவலங்களையும் பார்க்க வேண்டும்.

கம்பர் பிறந்த இடம் வருவோர் போவோர் எல்லாம் மலம், சிறுநீர் கழிக்கும் இடமாக இருப்பதற்கு ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். கம்பர் பிறந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் எழுப்பி பராமரிக்க வேண்டும். அதோடு கம்பர் வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவை மதரஸா தெரு என்று மாற்ற முயற்சிக்கும் முஸ்லிம்களின் சதித்திட்டத்தைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்த்தாய் நம்மை மன்னிக்க மாட்டாள்!